உண்மைகள், உண்மைகள், உண்மைகள்!

ஒவ்வொரு சிறுவர் சிறுமியருக்கும் தெளிவாகவும், முழுமையாகவும் விளக்கப்பட வேண்டிய உண்மைகள் இதோ:

வெறும் சிந்தனையில்தான் என்றாலும் கூட அசுத்தப் பாவப் பழக்கங்களுக்கு அடிமைகளாகி விட்ட ஆண்களும் பெண்களும் தங்களுடைய எல்லா மேன்மை யையும், சுய கட்டுப்பாட்டையும், சித்தத்தின் பலத்தையும் இழந்து விடுகிறார்கள் என்று கத்தோலிக்க, அல்லது கத்தோலிக்கரல்லாத மிகத் திறமையான மருத்துவர்கள் தயங்காமல் சொல்கிறார்கள். (இன்று தங்களிலேயே சாவான பாவங்களாயிருக்கிற இந்த மோக சிந்தனைகளும், அசுத்த தனிமைப் பாவங்களும் “இயல்பானவைதான்'' என்று சொல்லும் அளவுக்கு உலகம் தரந்தாழ்ந்து விட்டது.)

அவர்களுடைய மேன்மையுணர்வும், கடமை யுணர்வும் மறைந்து போகின்றன. புலனின்பத்தை விரும்பும் ஆணும் பெண்ணும் மிகவும் கீழ்த்தரமான துரோகங்களைத் துணிந்து செய்யக்கூடியவர்களாகவும், இதன் காரணமாக, நம் நம்பிக்கைக்குத் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதை விட மோசமான முறையில், மிக மோசமான மனச்சோர்வு நிலை, காரணமேயில்லாத, தொடர்ச்சியான பயங்களையும், கவலைகளையும் தருகிற மனநோய், அதையும் விட மோசமான புத்தி பேதலிப்பு நிலை ஆகியவற்றிற்கு, இந்தக் கேவலமான பாவப் பழக்கமே காரணமாக இருக்கிறது என்று புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

நம்மைக் கடும் அச்சத்தால் நிரப்பப் போதுமானவை யாக இருக்கிற இந்த மன நோய்கள் மட்டுமின்றி, இந்த வெறுப்புக்குரிய பாவம் மிகவும் அருவருப்புக்குரிய சரீர நோயையும் பெற்றெடுக்கிறது. இந்த அச்சத்துக்குரிய வையும், அளவுக்கு மீறிய வேதனையும் அருவருப்பும் தருபவையுமான நோய்களுக்கென்றே செயல்பட்டு வருகிற மருத்துவமனை ஒன்றுக்குச் சென்று அங்கு நடப்பவை களைப் பார்ப்பது, மிகச் சிறந்த, பயனுள்ள பாடங்களை நமக்குக் கற்றுத் தரும். அங்கு நாம் காணும் காட்சிகள் மிகக் கடுமையான பயங்கர உணர்வுக்கு நம்மை ஆளாக்கி, இந்தப் பாவத்தை வெறுத்துத் தள்ள நமக்கு உதவும். 

இனி, சில நாடுகளில், ஆயிரம் பேருக்கு 750 குடிமக்கள் இந்த அச்சத்திற்குரிய நோய்களுக்கு ஆளாகி யிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்குத் திகைப்பும், அச்சமும் ஊட்டுவதாக இருக்கிறது. இவர்கள் ஒழுக்கங் கெட்டவர்களாகவும், உடல் திறனும், சக்தியும், உயிரோட் டமும் இழந்தவர்களாகவும், முற்றிலுமாகச் சீரழிந்து போனவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்தப் பாவத்திற்கு அடிமைகளாயிருக்கிற, ஒழுக்கங்கெட்ட 750 பேரும் கணவர்களாகவும், மகன்களாகவும் , வணிகர்களாகவும், தொழில்துறை சார்ந்த மனிதர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுடைய அசுத்தமான கருத்துக்களும், முன்மாதிரிகையும் மீதமுள்ள 250 ஆரோக்கியமான மனதுள்ளவர்களையும் வெகுவாக பாதிக்கின்றன.

இந்த மனிதர்கள் நல்ல குணநலன்கள் எதுவும் இல்லாதவர்கள், பலவீனமானவர்கள், நிலையற்றவர்கள், ஒழுக்க ரீதியாக சமூகத்தோடு இணைந்து வாழத் தகுதியற்ற மனிதர்கள் என்பது மேற்கூறிய உண்மைகளிலிருந்து நமக்குத் தெளிவாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட நாடுகளில், ஒரு நாட்டின் நலத்திற்கும் வளத்திற்கும் முற்றிலும் அத்தியாவசியமான தேசபக்தி, சுய பரித்தியாகம், நல்லொழுக்க நேர்மை ஆகியவற்றின் உணர்வுகளால் நிரம்பிய, ஆரோக்கியமான ஆட்சியாளர்களைக் காண்பது கடினமானதாக இருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இந்தப் பாவத்திற்கு எதிராகக் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் நாடுகளில் அதற்கு அடிமைப்பட்டிருப்பவர்களின் சதவீதம் ஆயிரத் துக்கு ஒன்று ஆகும். என்ன ஒரு வித்தியாசம், 1000-க்கு 750 என்பதும், 1000-க்கு 1 என்பதும்! 

சில நாடுகளை இயக்குகிற அற்புதமான மனச் செயல்பாடுகளுக்கும், மிகச் சிறந்த நல்லொழுக்கத்திற்கும், மற்ற நாடுகளில் மேலோங்கியிருக்கும் ஒழுக்கச் சிதைவுக்கு மான காரணத்தை இது நன்கு விளக்குகிறது.