இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபமாலை என்னும் வாழ்த்து விண்ணக அரசிக்குப் பொருத்தமான புகழ்!

'விண்ணுலகில் சம்மனசுக்கள் தேவ அன்னையை அருள் நிறை மந்திரத்தைச் சொல்லி வாழ்த்துகின்றனர். சத்தமாக அல்ல, ஆனால் தங்கள் சம்மனசுக்குரிய அறிவினால் சொல்கிறார்கள். ஏனென்றால், தவறி வீழ்ந்த சம்மனசுக்களின் பாவத்துக்கு இதனால் பரிகாரம் செய்யப்பட்டது என அவர்கள் நன்கு அறிவார்கள். அதனாலேயே கடவுள் மனிதனானார், உலகம் புதுப்பிக்கப்பட்டது என அவர்களுக்கு நன்கு தெரியும்' (முத் ஆலன்)

ஒரு நாள் இரவு ஜெபமாலை சபை உறுப்பினரான ஒரு மாதுக்கு மாதா தோன்றி,

'என் மகளே என்னைக் கண்டு அஞ்சாதே. நீ தினமும் தவறாமல் புகழ்ந்து போற்றும் உன் அன்புள்ள அன்னை நான் தான். இதில் நீ நீடித்து நிலைத்து நில். எனக்கு இந்த தூதனின் மங்கள மொழி எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறதென எந்த மனிதனாலும் ஒரு போதும் விளக்கிச் சொல்ல இயலாது என நீ அறிய வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்கள் (கிளெமென்ட லோபூன் - Rosario Aures 47-ம் திருவுரை)

பின்வருமாறு மாதா கூறியதை அர்ச். ஜெர்த்ருத் பெற்ற ஒரு காட்சியில் உறுதிப்படுத்திக் கூறுகிறாள். அவளுடைய காட்சிகளின் 4-புத்தகம் இரண்டாம் அத்தியாயத்தில் பின்வரும் சம்பவம் காணப்படுகிறது.

அன்று கன்னிமரியாயின் மங்கள வார்த்தை திருநாள், காலை வேளை, அர்ச். ஜெர்த்ருத் வாழ்ந்த மடத்தில் தூதனின் மங்கள வார்த்தை ஜெபம் பாடப்பட்டது. அந்நேரம் அப்புனிதை ஒரு காட்சி கண்டாள். பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்து ஆகிய இம் மூன்று தேவ ஆட்களிடமிருந்து மூன்று அருவிகள் புறப்பட்டு மாமரியின் கன்னிமை குன்றா இருதயத்துள் பாய்ந்தன. மாமரியின் இருதயத்தைத் தொட்ட கணத்திலேயே, அவை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தன,

இதிலிருந்து அர்ச். ஜெர்த்ருத் விளங்கிக் கொண்டது என்னவெனில், பரிசுத்த திரித்துவம் தேவ மாதாவுக்கு பிதாவுக்குப் பின் அதிக வல்லமையையும், சுதனுக்குப் பின் அதிக ஞானத்தையும், பரிசுத்த ஆவிக்குப் பின் அதிக அன்பையும் கொடுத்துள்ளார்கள். மேலும் தூதனின் மங்கள மொழி விசுவாசிகளால் கூறப்படும் பொழுதெல்லாம் இம்மூன்று தெய்வீக அருவிகளும் மரியாயைச் சூழ்ந்து சுழன்று வேகமுடன் அம்மாசற்ற இருதயத்துள் பாய்கின்றன. மரியாயை தெய்வீக ஆனந்தத்தால் முழுவதும் நிரப்பிய பின் அவை மீண்டும் தமத்திருத்துவத்துள்ளே சென்று சேர்கின்றன. இம்மகிழ்ச்சிப் பெருக்கில் சம்மனசுக்களும் பூமியில் இச்ஜெபத்தைச் சொல்லும் மாந்தரும் பங்கு பெறுகிறார்கள். காரணம் கடவுளின் பிள்ளைகளுடைய நலன்களுக்கெல் லாம் ஊற்றாயிருப்பது சம்மனசின் மங்கள வார்த்தையே.

தேவ அன்னையே அர்ச். ஜெர்த்ருத்திடம் கூறியவை இவை: 'அருள் நிறை மந்திரத்தைப் போன்ற அழகிய ஒன்றை எந்த மனிதனும் ஒரு போதும் இயற்றியதில்லை . பிதாவாகிய சர்வேசுரளே எனக்குக் கூறிய இவ்வழகிய கண்ணியம் நிறைந்த வார்த்தைகளை விட என் இருதயத்துக்கு விருப்பமான வேறு எந்த வாழ்த்தும் இல்லை'.

அர்ச். மெற்றில்டாவுக்கு ஒரு நாள் மாமரி இவ்வாறு உரைத்தார்கள்; நீ எனக்குக் கூறிய தூதனின் மங்கள வாழ்த்து யாவும் என் ஆடையில் ஒளியாய்ப் பதிக்கப்பட்டுள்ளன. (தன் மேலாடையின் ஒரு பகுதியைக் காட்டி), என் ஆடையின் இந்தப் பாகம் முழுவதும் அருள் நிறை மந்திரங்களால் நிறையும் போது நான் உன்னை என் அருமைக் குமாரனின் அரசில் கூட்டிச் சேர்ப்பேன்'.

தேவ அன்னை தன் மீது பக்தியுள்ள ஒருவருக்குக் காட்சியில் இவ்வாறு கூறியதாக அர்ச். டெனிஸ் (கர்த்தூசியன்) இவ்வாறு கூறியுள்ளார். தேவ கன்னி மரியாயை இருதயத்தாலும் வாயாலும் செயலாலும் வாழ்த்திப் போற்ற வேண்டும். அல்லது தேவ அன்னை நம்மை நோக்கி இவ்வாறு கூற நேரிடும்.

தவறாமல் புகழ்ந்து போற்றும் உன் அன்புள்ள அன்னை நான் தான். இதில் நீ நீடித்து நிலைத்து நில், எனக்கு இந்த தூதனின் மங்கள மொழி எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறதென எந்த மனிதனாலும் ஒரு போதும் விளக்கிச் சொல்ல இயலாது என நீ அறிய வேண்டும் என விரும்புகிறேன்' என்றார்கள் (கிளெமென்ட லோபூன் - Rosaria Aures 47-ம் திருவுரை )

பின்வருமாறு மாதா கூறியதை அர்ச். ஜெர்த்ருத் பெற்ற ஒரு காட்சியில் உறுதிப்படுத்திக் கூறுகிறாள். அவளுடைய காட்சிகளின் 4-புத்தகம் இரண்டாம் அத்தியாயத்தில் பின்வரும் சம்பவம் காணப்படுகிறது.

அன்று கன்னிமரியாயின் மங்கள வார்த்தை திருநாள். காலை வேளை, அர்ச். ஜெர்த்ருத் வாழ்ந்த மடத்தில் தூதனின் மங்கள வார்த்தை ஜெபம் பாடப்பட்டது. அந்நேரம் அப்புனிதை ஒரு காட்சி கண்டாள். பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்து ஆகிய இம் மூன்று தேவ ஆட்களிடமிருந்து மூன்று அருவிகள் புறப்பட்டு மாமரியின் கன்னிமை குன்றா இருதயத்துள் பாய்ந்தன. மாமரியின் இருதயத்தைத் தொட்ட கணத்திலேயே, அவை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தன.

இதிலிருந்து அர்ச். ஜெர்த்ருத் விளங்கிக் கொண்டது என்னவெனில், பரிசுத்த திரித்துவம் தேவ மாதாவுக்கு பிதாவுக்குப் பின் அதிக வல்லமையையும், சுதனுக்குப் பின் அதிக ஞானத்தையும், பரிசுத்த ஆவிக்குப் பின் அதிக

ஒரு காட்டில் வாழ்ந்த புனித தவசியான ஒரு வனவாசியிடம் சென்று அவருடைய ஆலோசனையைக் கேட்டனர். தங்களுக்காக அவர் கடவுளை மன்றாட வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டனர். அவரும் பாவிகளுக்காகப் பரிந்து பேசும் தேவ அன்னையை, அவர்களுக்கு உதவ வர வேண்டுமென்று வேண்டினார்.

'அப்போது நம் அன்னை அவருக்குத் தோன்றி: "இம்மக்கள் என் புகழ் பாடுவதை விட்டு விட்டனர். அதுவே அவர்களுக்கு நேரிட்டுள்ள இத்துன்பத்தின் காரணம். அவர்கள் முன்போல் என் மிகப் புனித ஜெபமாலைப் பக்தியைக் கைக்கொள்வார்களானால் என் பாதுகாவலை அடைவார்கள். ஜெபமாலையைப் பாடி வருவார்களானால் அவர்கள் ஈடேற்றத்தை நான் கவனித்துக் கொள்வேன். ஏனென்றால் இவ்வகைப் பாடலை நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

'ஆதலால் மக்கள் தேவ அன்னை கூறியபடி செய்தனர். ஜெபமாலைகளைத் தயாரித்து, தங்கள் இருதய பூர்வமாக ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்கினர்'.

அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!