இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களையும் பொக்கிஷங்களையும் காப்பாற்றுவது நமக்கு மிகவும் கடினமாகும்

87. நம்முடைய நலிவு பலவீனத்தினிமித்தம், கடவு ளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களை யும் பொக்கிஷங்களையும் நம்மில் பாதுகாப்பது மிகவும் கடினமாயிருக்கிறது.

காரணம் (1) : வானத்தையும் பூமியையும் விட அதிக விலையுயர்ந்த இந்தத் திரவியத்தை நாம் பலமற்ற பாத்திரங்களில் கொண்டிருக்கிறோம். அதாவது ஒரு வெறும் ஒன்றுமற்ற காரியத்தால்கூட கலங்கி சலிப்ப டைந்து விடக்கூடிய அழிவுக்குரிய உடலிலும், பலவீன மும் தடுமாற்றமும் கொண்ட ஆன்மாவிலும் இத்திரவி யங்களை நாம் தாங்கியுள்ளோம்.

88. காரணம் (2): நமக்குத் தெரியாமலே நம்மைத் திடீரெனக் கொள்ளையடித்து பறித்துக் கொள்வதில் கைதேர்ந்த திருடர்களான பசாசுக்கள் தகுந்த தருணத்திற்காக இரவும் பகலும் காவல் காக்கின்றன. நாம் பல ஆண்டுகளாகச் சம்பாதித்த அருளையும் பேறு பலனையும் ஒரு பாவத்தால் ஒரு நொடியில் நம்மிடமிருந்து பறித்துக்கொள்ளும்படி இடைவிடாமல் நம்மை விழுங்கத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. இப் பசாசுக்களின் வஞ்சகம். அனுபவம், தந்திரம் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றையும், நம்மைவிட அதிக வரப்பிரசாதங்களால் நிறைந்தவர்களும் நம்மைவிட புண்ணி யத்தில் அதிக செல்வந்தர்களும் நம்மைவிட அதிக அனுபவம் பெற்றவர்களும் அதிகப் புனிதத்தை அடைந்தவர்களும் பரிதாபமாய்த் திடீரெனத் தாக்கப்பட்டு. கொள்ளையடிக்கப்பட்டு அழிவுற்றதையும் நினைக்கும் போது, இத்துர்ப்பாக்கியம் நமக்கும் நேரிட்டு விடாதபடி நாம் பயத்துடன் இருத்தல் வேண்டும். ஆ! எத்தனை லீபானின் கேதுரு மரங்கள், எத்தனை வானின் தாரகைகள் பரிதாபமாய் விழுந்துள்ளதாக அறிந்திருக்கிறோம்! அவைகளின் உயர்வும் ஒளியும் எவ்வளவு சிறிய காலத்தில் இழக்கப்பட்டன! இந்த விபரீதமான நிலைமாற்றம் எதனால் வந்தது? உதவி வரப்பிரசாதக் குறைவினால் இது நேரிடவில்லை அது யாருக்குமே குறைபடுவதில்லை. இது நேர்ந்த காரணம் தாழ்ச்சிக் குறைவே. தங்களிடம் இருந்த பலத்தை விட தாங்கள் அதிக பல முடையவர்கள் என்றும், தங்களிடம் இருந்த நிறைவை விட தாங்கள் அதிக நிறைவுடையவர்கள் என்றும் அவர்கள் எண்ணினார்கன். தங்கள் திரவியங்களை வைத்துக் காப்பாற் றிக்கொள்ள தங்களால் கூடும் என்று நினைத்தார்கள். விலை மதிப்புள்ள பொக்கிஷமான தேவ வரப் பிரசாதத்தைப் பாதுகாத்துக்கொள்ள தங்கள் திரவியப் பேழை போதிய வலிமையுடையது என்றும் தங்கள் உறைவிடம் போதிய பாதுகாப்புடையது என்றும் கருதினார்கள் (தங்கள் பார் வையில் அவர்கள் கடவுளின் உதவியில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்ததாக அவர்களுக்குத் தோன்றிய போதிலும்). வெளியில் புலப்படாத அவர்களுடைய சுய பல நம்பிக்கையினால்தான் உத்தம நீதிபரரான ஆண்டவர் அவர்களை அந்நிலையிலேயே விட்டு, அவர்கள் கொள்ளையடிக்கப்படும்படி அனுமதித்தார். பாவம்! நான் இங்கே கூறப்போகிற ஆச்சரியமான பக்தி முயற்சியை மட்டும் அவர்கள் அறிந்திருப்பார்களானால், அவர்கள் தங்கள் செல்வத்தை சக்தியும் பிரமாணிக்கமுள்ள கன்னி கையிடம் ஒப்படைத்திருப்பார்கள். இக்கன்னி கையும் அதைத் தன் உடமை போலக் கருதி காப்பாற்றி வைத்திருப் பார்கள். அதை நீதியின்படி ஏற்பட்ட கடமையாகக் கூட எண்ணிச் செய்திருப்பார்கள்.

89. காரணம் (3) : உலகத்தின் ஒருவித மோசமான கேட்டின் காரணமாக நீதி வழியில் நீடித்து நிலைப்பது கடினமாக இருக்கிறது. உலகம் இப்பொழுது எவ்வ ளவு கெட்டுவிட்டதென்றால், தெய்வ நோக்கமுள்ள இருதயங்கள் அதன் சக்தியால் கறைபடாவிட்டாலும். அதன் தூசியாலாவது கறைப்படுவது ஏறக் குறைய தடுக்கப்பட முடியாததாக இருக்கிறது. இது எவ்வளவிற்கென்றால் வேகமுடன் ஓடும் இந் நீரோட் டத்தின் நடுவில் அதனால் அடித்துச் செல்லப்படாமல் உறுதியுடன் நிற்பதும், புயலால் கொந்தளிக்கும் இந் தக் கடலின் நடுவே அமிழ்ந்திப் போகாமலும் கடல் திருடர்களாலும் கப்பல் சோரர்களாலும் கொள்ளையடிக் கப்படாமலிருப்பதும், இந்த விஷக்காற்றின் நடுவே அதனால் தாக்கப்படாமலிருப்பதும் ஒரு தனி வகையான புதுமை என்றே சொல்லவேண்டும். நரகப் பாம்புக் குத் தன்னிடம் எவ்வகையிலும் எதுவுமில்லாத சிறந்த பிரமாணிக்கமுள்ள கன்னிகை மட்டுமே, தன்னை உண் மையாக நேசிப்பவர்களுக்காக இந்தப் புதுமையைச் செய்கிறார்கள்.

சக்தியுடைத்தான கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.