இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுள் மீதும் மாதா மீதும் பெரும் நம்பிக்கை

[4] நம்தாய் கடவுள் மீதும் தன் மீதும் பெரும் நம்பிக்கையால் உன்னை நிரப்புவார்கள்.

[1] ஏனென்றால், இனிமேல் எப்போதும் நீ இந்த அன்புத் தாயின் வழியாக அன்றி நீயாக சேசுகிறீஸ்துவை அணுகிச் செல்லமாட்டாய்.

[2] ஏனென்றால், நீ உன்னுடைய எல்லா பேறு பலன்கள், வரப்பிரசாதங்கள், பரிகாரங்கள் யாவற்றை யும் மாதா தன் விருப்பப்படி உபயோகித்துக் கொள்ளு மாறு கொடுத்து விட்டதால், அவர்கள் தன்னுடைய புண் ணியங்களை உனக்குத் தந்து, தன்னுடைய பேறுபலன் களால் உன்னை உடுத்துவிப்பார்கள். இதனால் நீ கட வுளை நோக்கி, "இதோ மரியாயென்னும் உமது அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்'' என்று நம்பிக்கையுடன் கூறலாம் - (எண் 179). பா

[3] ஏனென்றால், நீ உன்னை முழுவதும் மாதாவிடம் கொடுத்து விட்டாய்தானே? உன் சரீரத்தையும் ஆத்து மத்தையும் ஒப்படைத்து விட்டாயல்லவா? தாராள குண முள்ளவர்களுக்குத் தாராளமாயும் மிகவும் சிறந்த தாரா ளமுள்ளவர்களையும் விட அதிக தாராள குணம் உடை யவர்களுமான மாதா தன்னையும் ஒரு அதிசயமான ஆனால் உண்மையான முறையில் உன்னிடம் ஒப்படைப் பார்கள். இதனால் நீ அவர்களிடம் தைரியமாக “நான் உம்முடையவனாக இருக்கிறேன், என்னைக் காப்பாற்றும் (சங். 118, 

[4] -ஓ மரியாயே நான் உங்களுடையவன். என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கூற முடியும், அல்லது நான் முன்பு கூறியுள்ளபடி சேசுவால் நேசிக்கப்பட்ட அப்போஸ்தலரைப் போல் : உங்களை என் இல்லத்தில் என் எல்லாமாக ஏற்றுக்கொண்டேன் அம்மா என்று கூறலாம். மேலும் அர்ச். பொனவெந்தூர் என்பவருடன் சேர்ந்து : ''என்னை இரட்சிப்பவளான என் தலைவியே! நான் திடமுடன் இருப்பேன். பயப்பட மாட்டேன். ஏனென்றால், ஆண்டவரிடம் என் பலமும் என் புகழ்ச் சியும் நீரே!'' என்றும் நீ கூறலாம். இன்னொரு இடத் தில் இப் புனிதர் கூறுவது போல் : "நான் உமக்குச் சொந்தம். உம்முடையவை யாவும் எனக்குச் சொந்தம். ஓ மகிமை பொருந்திய கன்னிகையே! எல்லாருக்கும் மேலாக ஆசீர்வதிக்கப் பட்டவளே! ஏனென்றால் உம தன்பு மரணத்தைப் போல் வலிமை உள்ளதாயிருக்கிறது. எனவே என் இருதயத்தின் மீது உம்மை ஒரு முத்திரை போலப் பதிப்பேனாக!'' என்று கூறலாம். மேலும் நீ தீர்க்கதரிசியின் உணர்வோடு (சங். 130, 1-2) கடவுளை நோக்கி இவ்வாறு சொல்லலாம்: "ஆண்டவரே என் இருதயம் இறுமாப்புக் கொள்ளவில்லை. என் பார்வை மேட்டிமையோடு விளங்கவில்லை. பெரிய காரியங்களையோ என் ஆற்றலுக்கு மிஞ்சின காரியங்களையோ நான் தேட வில்லை. ஆயினும் இதிலும் நான் தாழ்ச்சியுடையவனா யில்லை. ஆனால் நான் என் ஆன்மாவை உயர்த்தி அதை ஊக்கப்படுத்தினேன். தாயின் மடியில் குழந்தை இருப் பது போல், உலக இன்பங்கள் மறக்கடிக்கப் பட்டு அன் னையின் மார்பில் ஓய்வு கொள்கிறேன். அங்கிருந்து தான் எல்லா நலன்களும் எனக்கு வருகின்றன''.

(4) மரியாயின் மீது உன் நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் ஒன்றுள்ளது. நீ உன்னிடமுள்ள நன்மை யாவற்றையும் மரியாயை நம்பி அவர்களிடம் கொடுத்து விட்டாய். அவர்கள் தன் விருப்பப்படி அவற்றைச் செலவிடவோ வைத்திருக்கவோ விட்டு விட் டாய். நீ உன்னிடம் கொண்டுள்ள நம்பிக்கையை விட அதிக நம்பிக்கையை இவ்வன்னை மீது கொண்டிருக்கிறாய்! அவர்களே உன் திரவிய சாலையாக இருக்கிறார்கள். "கடவுள் தனது மிகப் பெரும் செல்வமாக மதிக்கிற வைகளை எந்தத் திரவிய பேழைக்குள் வைத்துள்ளாரோ அதுவே என்னுடைய திரவிய பேழையுமாக இருக்கிறது. என்று சொல்லக் கூடிய ஒரு ஆன்மாவின் நம்பிக்கை யும் ஆறுதலும் எத்தகையதாயிருக்கிறது! புனிதவான் ஒருவர்: "இவளே ஆண்டவரின் திரவிய பேழையாக இருக்கிறாள்" என உரைக்கிறார். (Idiota-in Contemplatione B. M. V.).