இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சில மறுப்புகளுக்குப் பதில்

131. இந்தப் பக்தி புதியது என்றோ முக்கியமில்லாத ஒன்று என்றோ மறுப்புக் கூற முடியாது. இது புதுப் பக்தியல்ல. ஏனென்றால் நமதாண்டவருக்குச் செய்யப்படும் இவவொப்புக் கொடுத்தலும் ஞானஸ்நான வார்த்தைப்பாடுகளைப் புதுப்பித்தலும் பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் இருப்பதாக பொதுச் சங்கங்களும், வேத பிதாக்களும், முற்கால தற்கால ஆசிரியர் பலரும் கூறுகிறார்கள், எல்லா விசுவாசிகளும் அவற்றைச் செய்யுமாறு ஆலோசனையும் தருகிறார்கள். இந்த ஒப்புக் கொடுத்தல் முக்கியமற்ற ஒன்றல்ல. ஏனென்றால் எல்லா ஒழுக்கக் கேடும் அதன் விளைவாக வரும் கிறீஸ்தவர்களின் நித்திய கேடும் இந்தப் பக்தி முயற்சியைப் பற்றிய கவலையனத்தாலும் மறதியாலும் தான் ஏற்படுகின்றன.

132. சிலர் இவ்வாறு எதிர்ப்புப் பேசக்கூடும். அதா வது, நம் எல்லா நற்செயல்களையும் செபங்களையும் பரித் தியாகங்களையும் தாமக்கிரியைகளையும் மாதாவின் கரத் தின் வழியாக நமதாண்டவருக்குக் கொடுத்துவிடும் படி இப்பக்தி முயற்சி செய்துவிடுவதால் நம் பெறறோர், நண்பர் உபகாரிகளின் ஆன்மாக்களுக்கு நாம் உதவி செய்ய முடியாதபடி ஆக்கிவிடுகிறது என்று.

இதற்கு என்னுடைய பதில்: முதலாவது நாம் நமதாண்டவருடையவும் அவர் திருத் தாயுடையவும் ஊழியத்திற்கு நம்மை முழுவதும் கையளித்து ஒப்புக் கொடுத்து அதில் ஈடுபட்டிருப்பதால் நம் நண்பர், உற வினர், உபகாரிகள் முதலானோர் ஏதாவது நஷ்டம் அடைய முடியும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா யில்லை. சேசு மரியாயின வல்லமைக்கும் நன்மைத் தனத் திறகும் இது ஒரு இழிவாக அல்லவா இருக்கும்! நம் முடைய உறவினர் நண்பர் உபகாரிகளுக்கு நம் சின்ன ஞானப் பொக்கிஷத்திலிருந்தோ அல்லது வேறு வகை யிலோ உதவி செய்ய அவர்களுக்கு நன்கு தெரியும்.

இரண்டாவது : இதில் நம்முடைய நற்செயல்களின் பலனை விநியோகிப்பது மாதாவின் விருப்பத்திற்குட் பட்டதாயிருப்பினும் இறந்த அல்லது வாழ்கின்ற மற றவர்களுக்காக நாம் வேண்டிக் கொள்வதற்கு இது தடைசெய்வதில்லை. மாறாக, நாம் அதிக நம்பிக்கை யுடன் மன்றாடச் செய்கின்றது. எதைப் போல் என்றால் ஒரு தனவந்தன் ஒரு பெரிய இளவரசனை மகிமைப்படுத் துவதற்காக தன்னிடமுள்ள யாவற்றையும் கொடுத்து விட்டான் என வைத்துக் கொண்டால், தன்னிடம உதவி தேடும் ஒரு நண்பனுக்கு உதவ இவ்விளவரசனை அதிக நம்பிக்கையுடன் கேட்க தனவந்தனுக்கு முடியு மல்லவா? அதைப் போல இளவரசனை அதிக செல்வந்தனாக் குமபடி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தன்னை வறுமைப்படுத்திக கொண்ட இத்தனவந்தனுக்குத் தன் நன்றியைக் காட்ட அவ்விளவரசன தனக்கு ஒரு சந்தர்ப் பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி கூட அடைவான். இதையே நாம தமதாண்டவரைப் பற்றியும் மரியாயைப் பற்றியும் கூறலாம். நன்றியறிதலில் யாரும் தங்களை மிஞ்சி விட அவர்கள் விடமாட்டார்கள்.

133. சிலர் சொல்லக் கூடும்: என்னுடைய செயல் களின் முழுப் பலனையும் மாதா யாருக்கு கொடுக்க விரும்புகிறார்களோ அப்படிக் கொடுக்குமாறு அவைகளை ஒப்படைத்து விட்டால் ஒருவேளை நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் நீண்டகாலம் வேதனைப்பட வேண்டியிருக் கும் என்று.

இந்த மறுப்பு சுயநலத்திலிருந்தும் கடவுளுடையவும் அவர் திரு அன்னை யுடையவும் தாராள தன்மையைப் பற்றிய அறியாமையிலிருந்தும் எழுகின்றது. எனவே இம்மறுப்பு தன்னைத் தானே அழித்து விடுகிறது. தன் காரியங்களைவிட கடவுளின் காரியங்களை அதிகமாக மதித்து, தன்னிடமுள்ள யாவற்றையும் ஒரு வரையில் லாமல் கடவுளுக்குக் கொடுத்து, தன்னிடம் கொடுப்ப தற்கு இனி எதுவுமில்லை என்ற அளவுக்குக் கொடுத்து. மரியாயின் வழியாக சேசு கிறீஸ்துவின் மகிமையையும் அரசாட்சியையுமே விரும்பி, அதற்காக தன்னைத் தானே முற்றுமாக தியாகம் செய்யும் தாராள மனமுள்ள சுய நலமற்ற ஒரு ஆன்மா, மற்றவர்களை விட அதிக தாராள மாயும் சுயநலமில்லாமலும் இருந்ததற்காக மறு உல கில் தண்டிக்கப்படுமா என்று நான் கேட்கிறேன். அல்லவே அல்ல. பின்னால் நாம் பார்க்க இருக்கிறபடி, இத்தகைய ஒரு ஆன்மாவிற்குத் தான் சேசுவும் மாதா வும் இவ்வுலகிலும் வரவிருக்கும் உலகிலும், சுபாவ முறையிலும் வரப்பிரசாத முறையிலும் மகிமையிலும் அதிக தாராளமாக தங்களைக் காண்பிப்பார்கள்.

134, இனி நாம் எவ்வளவு சுருக்கமாக முடியுமோ அவ்வளவு சுருக்கமாக

(1) இந்தப் பக்தி முயற்சியை நாம் கைக்கொள்ளத் தூண்டும் காரணங்கள்

(2) உண்மையுள்ள ஆன்மாவில் இப்பக்தி முயற்சி ஏற்படுத்தும் ஆச்சரியமான விளைவுகள்

[3) இப்பக்தி முயற்சியைக் கடைபிடிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.

விசுவாசியான கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.