இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறைவனின் இரக்கம்

கடவுளுக்குச் சேவை செய்ய நான் கடமைப்பட்டவன் பயத்தால் மாத்திரமே ஏவப்பட்டு அவரைச் சேவிப்பது ஞானி செய்யும் காரியமல்ல. மோட்சத்தை இழந்து போவேனோ, அல்லது நரகத்தில் விழுந்து விடுவேனோ என்று மாத்திரம் பயந்து கடவுளுக்குச் சேவை செய்பவர்கள் ஞானிகளல்ல. தேவ பயம் நல். லது. பிள்ளைக்குரிய பயம் கொண்டிருத்தல் நல்லது. அது என்னிடம் இருக்கவேண்டும். என்றாலும் பயத் தால் மாத்திரம் ஏவப்பட்டு கடவுளுக்கு நான் சேவை செய்யப்போவதில்லை. அன்பால் தூண்டப்பட்டு அவ ரைச் சேவிப்பேன். என் நேசத்தைக் கடவுள் விரும்பி தேடுகிறார். சில சமயங்களில் அவர் பயமுறுத்தவேண் டும், சில சமயங்களில் தண்டிக்க வேண்டும்; எனினும் எப்பொழுதும் அவர் தம் நேசத்தைக் காண்பித்து என் நேசத்தைக் கேட்கிறார்.

இரட்சகரது வாழ்க்கை வரலாற்றை நான் சிந் தித்துப் பார்ப்பேனானால், அவரது சொற்களிலும், செய்கைகளிலும் அவரது இரக்கமும் அநுதாபமும் எவ்விதம் துலங்குகின்றன என அறிந்து கொள்வேன். அவர் அன்பே உருவானவர்; அவரது நேசத்துக்கு நான் பதில் நேசம் காட்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறார். அவர் போன இடமெல்லாம் நன்மை செய்து கொண்டு போனார். நோயாளிகளைக் குணப் படுத்தினார், குருடருக்குப் பார்வையளித்தார், துன்பப் பட்டோரைத் தேற்றினார். துயரத்தால் உள்ளம் நொறுங்கிய ஒரு தாயைத் தேற்றும்படி இறந்த அவ ளுடைய மகனுக்கு உயிரளித்தார். மார்த்தா , மரி இவர்களோடு அழுது, இறந்த அவர்களுடைய சகோ தரனை உயிர்ப்பித்துக் கொடுத்தார். வீட்டுக்குச் செல் லும் வழியில் யாரும் பலவீனத்தாலும், பசியாலும் சோர்ந்து விழாதபடி காட்டில் அப்பங்களைப் பலுகச் செய்தார். இவ்விதம் அவர் எங்கும் நன்மை செய்து கொண்டு சென்றார்.

பாவிகள் மீது அவரது இரக்கமும் அனுதாபமும் எல்லையற்றதாயிருந்தது என்று சொல்லலாம். விபசார குற்றத்தில் அகப்பட்ட பெண்மீது அவர் காட்டிய இரக்கத்தைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கவிரும்பு கிறேன். யூத சட்டப்பிரகாரம் இப்பேர்ப்பட்ட பெண் கல் எறிந்து கொல்லப்படவேண்டும். ஆதலின் வேத பாரகரும் பரிசேயரும் அவளை அவரிடம் கொண்டு வந்தார்கள். அவள் அவரது பாதத்தடியில் துயரத்து டனும், வெட்கத்துடனும் ஒடுங்கி நின்றாள். "உங்க ளில் பாவமில்லாதவன் எவனோ, அவன் அவள் மீது முதற் கல்லை எறியட்டும்” என அவர் கூறினார். அவள் மீது குற்றம் சாட்டியவர்களை நோக்கி இவ்விதம் சொல்லிவிட்டு அவர் குனிந்து தரையில் தம் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சற்றுப்பின அவர் அவளை நோக்கி, "உன் மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாவது உனக்குத் தீர்ப்பிடவில்லையா?" என்றார். “ இல்லை ஆண்டவரே'' என அவள் சொன்ன தும், தம் இரக்கத்தின் ஆச்சரியத்துக்குரிய சொற் களை அவர் உரைத்தார். “நானும் உனக்குத் தீர்ப்புக் கூறமாட்டேன், போ, இனி பாவம் செய்யாதே'' என்றார். மன்னிக்கும், அன்புநிறை அந்த சொற்கள் எவ்வளவோ இனிமையானவை!

மரி மதலேனாளது வரலாறு வெகு ஆறுதல் தரக் கூடியது. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் இடமெல் லாம் அந்த வரலாறும் போதிக்கப்படும் என இரட்ச கர் அறிவித்திருக்கிறார். மரி மதலேனாள் பாவி, பகி ரங்க பாவி, இரட்சகரது ஒரு பார்வை அவளது உள் ளத்தை துயரத்தாலும் வெறுப்பாலும் நிரப்பியது. தன் பாவ வாழ்க்கைக்காக அவள் துயரப்பட்டாள். அந்த வாழ்க்கையை அவள் அருவருத்தாள். உடனே அவள் அவரைத் தேடலானாள். பரிசேயனான சீமோன் என்பவனது வீட்டில் அவர் உணவருந்து கிறார் என அவள் கேள்விப்பட்டு அங்கு விரைந்து சென்றாள். அவர் பாதத்தடியில் வீழ்ந்து அந்தப் பாதங்களை முத்தமிட்டாள். மனஸ்தாபமும் நேச மும் நிறை தன் கண்ணீர்த் துளிகளால் அவரது பாதங்களைக் கழுவினாள். தன் சிரசின் ரோமத் தால் அப்பாதங்களைத் துடைத்து. அவற்றின் மீது பரிமள தைலத்தைப் பூசினாள். இரட்சகரை விருந்துக் கழைத்த பரிசேயன் இதைக்கண்டு “இவர் தீர்க்க தரிசியாயிருந்தால், தம்மை தொடுகிற பெண் யாரென் றும் எப்படிக் கொத்தவளென்றும் சந்தேகமற அறிந் திருப்பாரே! அவள் பாவியல்லவா?” என்று தனக் குள்ளே சொல்லிக் கொண்டான். உண்மையாகவே இரட்சகர் தீர்க்கதரிசி, அவருக்கு எல்லாம் தெரியும். அவர் கடவுள். சீமோனின் நினைவுகளையும் அவர் அறிந்திருந்தார். மேலும் அந்தப் பெண் தன் வாழ்க் கையை நினைத்து வருந்துகிறாள், மனஸ்தாபப்படுகி றாள், என்றும் அவர் அறிந்திருந்தார். இனி பாவம் செய்வதில்லை என அவள் தீர்மானித்திருந்த தையும் அவர் அறிவார். சீமோன் செய்யத் தவறி யதை அந்தப் பெண் செய்ததாக இரட்சகர் சீமோனி டம் தெரிவித்தார். “நான் இந்த வீட்டுக்கு வந்தேன். நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை. இவளோ தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவி தன் கூந்த லால் துடைத்தாள். நான் இங்கே வந்தது முதல் ஓயாமல் என் பாதங்களை முத்தமிட்டாள். பரிமள தைலத்தால் என் பாதங்களைப் பூசினாள். ஆகையால் நான் சொல்கிறேன், இவள் மிகவும் சிநேகித்ததினால் இவளுக்கு மிகுந்த பாவங்கள் பொறுக்கப்படுகின்றன எவனுக்கு கொஞ்சம் பொறுக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் சிநேகிக்கிறான் என்று சொல்லி அந்தப் பெண்ணைப் பார்த்து “உன் பாவங்கள் உனக்கு மன் னிக்கப்படுகின்றன. உன் விசுவாசம் உன்னை இரட் சித்தது. நீ சமாதானத்தோடே போ'' என்றார். (லூக். 7/36-50) இப்பேர்ப்பட்ட நிகழ்ச்சியைப்படிக்கும் நான் இரட்சகரின் இரக்கத்தைப் பற்றி சந்தே கப்படலாமா?

பின் இரட்சகர் பட்ட கொடிய பாடுகளையும், யும், மரணத்தையும் பற்றி நான் சிந்திக்கிறேன். கடவுளது இரக்கம் எவ்வளவு பெரிதென்றால், என்னை நரகத்தினின்று காப்பாற்றுவதற்காக, நான் மோட்ச பாக்கியத்தைச் சுகிக்கச்செய்யும்படி கடவுள் சிலுவையில் உயிர் விடுகிறார். ஜெபமாலையின் துக்க தேவ இரகசியங்களில் ஒவ்வொன்றையும் பற்றி நான் சிந்திக்கிறேன். பூங்காவனத்தில் இரட்சகர் பட்ட மரண அவஸ்தை, கற்றூணில் கட்டியடிக்கப்பட்டது, முள்முடி சூட்டப்பட்டது, சிலுவை சுமந்து சென் றது, சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டது. என் பாவங்களை அவர் தம் தலைமேற் போட்டுக் கொண்டு அவற்றிற்காக பரம பிதாவுக்கு பரிகாரம் செய்தார். குருத் துரோகியான யூதாஸ் முத்தமிட்டு அவரைக் காட்டிக் கொடுக்கையில் அவர் அன்புடன் நோக்கி, ''நண்பா !'' என அவனை உருக்கத்துடன் அழைக்கிறார். தம் நட்பையும் பொறுத்தலையும் அவ னுக்குத் தருகிறார். துரோகி யூதாஸ் மனஸ்தாபப் பட்டிருந்தால், இராயப்பரை மன்னித்தது போல் யூதாஸையும் மகிழ்ச்சியுடன் உடனே யேசு மன்னித் திருப்பார். அவருடன் சிலுவையில் அறையப்பட்டி ருந்த திருடர்களில் ஒருவன், தன் வாழ்நாளின் பாவங் களை நினைத்து வருந்தி அவரை நோக்கி, "சுவாமி, தேவரீர் உம் இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்று விண்ணப்பம் பண்ணினான். யேசு உடனே கடவுளுக்குரிய அள வற்ற இரக்கத்துடன் அவனை நோக்கி, "இன்றே நீ என்னோடுகூடப் பரகதியிலிருப்பாயென்று மெய் யாகவே உனக்குச்சொல்லுகிறேன்'' என்றார். ஒருவன் எவ்வளவு பெரிய பாவியாயிருந்தாலும், மனஸ்தாபத் தோடும், தாழ்ச்சியுடனும் கடவுள் பக்கமாய்த் திரும்பி, “என் யேசுவே, இரக்கமாயிரும்'' என்பானா னால், உடனே அவர் அவனுக்கு மன்னிப்பளிப்பார். என் இரட்சகர் ஆத்துமங்களை நினைத்து ஏங்குகிறார். அவர்கள் எப்பொழுதும் வருவார்களெனத் தாகமாயி ருக்கிறார். சிலுவையில் தொங்கும் போதும் அதே தாகம். கடவுளின் இரக்கம் அவரது விலையேறப் பெற்ற இரத்தம் என்னும் பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கிறது. இதை நான் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன். அவர் எனக்குத் தீர்ப் பிடும்படி நான் ஒரு போதும் விடமாட்டேன். அவரைப் புறக்கணித்த எருசலேம் மீது அவர் கண்ணீர் விட்டழுதது போல், என்னை நினைத்து அவர் கண்ணீர் வடிக்க விடமாட்டேன். “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து உன் னிடமாய் அனுப்பப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்கிறாயே, கோழியானது தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளுக்குள்ளே அனைத்துக் கொள்கிறது போல், எத்தனையோ முறை நானும் உன் குமாரர்களை அணைத் துக்கொள்ள விரும்பினேன். உனக்கு மனமில்லாமற் போயிற்றே !" (மத். 23 | 37) என யேசு கூறினார்.

தேவ பயமானது ஒரு புண்ணியம். அது வெகு பயனுள்ளது என நான் அறிகிறேன்: என்றாலும் சிநேகம் அதிக பயனுள்ளது. தேவ சிநேகத்தை அது நம் இருதயங்களில் நுழைக்க தன்னாலானதெல்லாம் செய்கிறது. பட்டு நூற்கரையையும், தங்க இழைகளை யும் கொண்ட உடையை ஒரு பெண் தயாரிக்கிறாள். அந்தப் பொருள்கள் மிக விலையுயர்ந்தவை என்றாலும், அவற்றைத் தத்தம் இடங்களில் வைக்கும்படி அவள் ஒரு சாதாரண கூரிய ஊசியையே பயன்படுத்துகிறாள். அதேபோல் தேவசிநேகம் என்னும் மிக விலையுயர்ந்த தங்கப் புண்ணியத்தை நம் ஆத்துமங்களில் நுழைக் கும்படி தேவ பயம் என்னும் கூரிய ஊசியை பயன் படுத்துகிறோம்.

கடவுளின் இரக்கத்தைக் காட்டும் சொற்களால் வேத புத்தகம் நிறைந்திருக்கிறது. அவற்றில் சிலவற் றைப் பற்றி சிந்திப்பேன். "ஆண்டவருடைய கிருபா கடாட்சங்களை என்றென்றைக்கும் பாடுவேன்.'' (சங். 88/1) ''சகல ஜாதிகளே, கர்த்த ரைப் புகழுங்கள், சகல ஜனங்களே, அவரைத் துதியுங்கள். ஏனெனில் அவ ரது இரக்கம் நம்மீது ஸ்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய உண்மை என்றென்றைக்கும் நிலைத் திருக்கும்.'' (சங்.116) "ஆண்ட வர் இரக்கமும் தயை யும் பொறுமையும் மிகுந்த கிருபையும் உள்ளவரா யிருக்கிறார். ஆண்டவர் எல்லோருக்கும் தயையுள்ளவராயிருக்கிறார். அவருடைய இரக்கங்கள் அவருடைய சகல சிருஷ்டிகள் மேலும் உள்ளது.'' (சங்.144) ''சகலர் மீதும் இரக்கமாயிருக்கிறீர், ஏனெனில் சகல மும் உம்மாற் கூடும். மனிதருடைய பாவங்களை மனஸ்தாபத்தை முன்னிட்டுப் பாராட்டாதிருக்கி றீர்.'' (பழ. 11/28) "சுவாமி தயையுள்ள வர், அவரிடம் இரட்சணியம் ஏராளமாயிருக்கிறது.'' (சங். 1297) "மன்னிக்க அவர் மிகு தயையுள்ளவராயிருக்கிறார்.'' (இசை. 55/7) இவ்வித வாக்கியங்களால் வேதபுத்தகம் நிறைந்திருக்கிறது.

ஊதாரிப் பிள்ளையின் உவமையைப் பற்றி நான் சிந்திக்கப்போகிறேன். அது மிகவும் ஆறுதல் தரும் உவமை. கடவுள் நல்ல தகப்பன். இரக்கம் நிறைந்த தந்தையாக அவரை நாம் கருத வேண்டும் என இரட் சகர் அதில் கற்பிக்கிறார். ஊதாரிப்பிள்ளை தன் தந்தை யின் இல்லத்தைவிட்டு வெளியேறினான். தன் தந்தை யின் வீட்டில் பெற்றோருக்கு அடங்கி நடக்கவேண் டும். வெளியே கிளம்பினால் கட்டுப்பாடு கிடையாது. உலக இன்பங்களை அனுபவிக்கலாம் என அவன் நினைத்தான். விடு தலைபெற வேண்டும் என விரும்பி னான். தந்தையை அணுகி தன் பங்குச் சொத்தைக் கேட்டான். அவனது நன்றியின்மையைக் கண்ட தந்தை மனம் நொந்து வாடியிருக்க வேண்டும். என் றாலும் அவன் கேட்டபடியே அவர் கொடுத்தார். அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்கும்படி அவர் இவ் விதம் செய்தார் போலும். தன் பங்குக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டான். தொடக்கத்தில் அவன் தன் வீட்டை விட்டு வெகு தூரம் போகவில்லை. மரியாதையுடன் நடந்திருக்க வேண்டும். சீக்கிரம் அவன் வெகுதூரமான இடத் துக்குச் சென்றான். ஜெபிப்பதை விட்டுவிட்டான். கட்டளைகளை அனுசரிக்க வேண்டுமே என அவன் கவலைப்படவில்லை. ப பின் அவன் தன் மனம் போன போக்கில் நடந்து தன் பணத்தையெல்லாம் நாசமாக்கினான். பணத்தை இழந்ததுடன் தன் பேர் கீர்த்தியையும் இழந்தான். வெட்கத்துக்குரிய பாவங்களைக் கட்டிக் கொண் டான். தன் பரலோக தந்தையின் வீட்டை விட்டு அலைந்து திரியும் நிர்ப்பாக்கிய பாவியும் இவ்விதமே செய்கிறான். தேவ இஷ்டப்பிரசாதத்தை இழக் கிறான். பரலோக உரிமை போகிறது. முன்னாள் சம்பாதித்த பேறு பலன்கள் மறைகின்றன. இளவய திலும் புது நன்மை வாங்கின நாளிலும் அவனிட. மிருந்த மாசற்றதனம் ஒழிகிறது. கிறிஸ்தவ இல்லத் தில் தான் பெற்ற பயிற்சியை மறக்கிறான். மன அமைதியையும் விசுவாசத்தையும் இழக்கிறான்.

தூரநாட்டில் அந்நியர்கள் மத்தியில் ஊதாரிப் பிள்ளை எதைக் கண்டடைந்தான்? அவனுடைய மனச்சாட்சி அவனை உபாதிக்கத் தொடங்கியது. அந்நாட்டில் பெரிய பஞ்சம் வந்தது. அவனுடைய கெட்ட சிநேகிதர்கள் அவனை விட்டகன்றார்கள். அவ னிடம் பணம் இல்லை என்று கண்டதும் அவர்களுக்கு அவனிடம் என்ன வேலை? ஊதாரிப்பிள்ளையிடம் அருந்த ஒன்றுமில்லை. ஈவு இரக்கமற்ற மனிதன் ஒருவனிடம் போய் வேலை கேட்டான். அவன் தன் பன்றிகளை மேய்க்கும் தாழ்ந்த, கேவலமான வேலையை அவனுக்குக் கொடுத்தான். பன்றிகள் சாப்பிட்ட உணவு முதலாய் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசி யால் அவன் வாடினான். நிர்ப்பாக்கிய பாவியின் நிலை யும் இவ்விதமே. அவன் ஜெபிப்பதில்லை, தேவ திரவிய அனுமானங்களை நாடுவதில்லை, ஆறுதல் கிடையாது, அவனிடம் உதவி பெற்ற துஷ்ட சிநேகி தர் அவனை விட்டு அகல்கின்றனர். தன் தந்தையின் இல்லத்தின் நுகத்தடியின் கட்டுப்பாட்டையும், இல குவான சுமையையும் தாங்க முடியாது என்று கூறிய வன், இப்பொழுது குரூர எஜமானனான பசாசால் நிஷ்டூரமாக நடத்தப்பட்டு, வெட்கத்துக்குரிய பாவச் சகதியில் இழுத்துச் செல்லப்படுகிறான். மிருகத்தை விடக் கேவலமாக நடத்தப்படுகிறான். தன் நிர்ப் பாக்கியத்தை உணர்கிறான். பன்றிகள் தங்கள் பிரியம் போல் சாப்பிடுகின்றன. தானும் அப்படி மிருகத் தைப் போல் இருந்தால் நலமாயிருக்குமே என பாவி உணர்கிறான். நிர்ப்பாக்கிய பாவியின் நிலை இவ்வளவு பரிதாபமானது.

பின் ஊதாரிப் பிள்ளை தனக்குள் சிந்திக்கத் தொடங்குகிறான் : முன்னரே அவன் தனக்குள் சிந் தித்திருந்தால் தன் தந்தையின் இல்லத்தைவிட்டு ஒருபோதும் கிளம்பியிருக்க மாட்டான். அறிவின்றி தான் விட்டுவந்த ஆனந்தம் நிறைந்த இல்லம் அவன் நினைவுக்கு வருகிறது. “என் தந்தை செல்வந்தர். என் தந்தையின் வீட்டில் வேலைக்காரர்கள் முதலாய் செல் வமாய் வாழ்கிறார்கள். நானோ இங்கு பன்றிகளை மேய்த்து பசியால் வாடுகிறேன், தூரநாட்டில் எவ் வளவு துன்பம்! என் தந்தை அன்பு நிறைந்தவர். நன்றியின்றி நான் அவரிடம் நடந்துகொண்டேன். இவ்விதம் சிந்தித்துப் பார்த்ததுன், அவன் ஒரு தீர் மானத்துக்கு வருகிறான். எல்லாவற்றையும் விட்டு உடனே தன் தந்தையிடம் போகவேண்டும். அவர் நல்லவர் என்பதற்குச் சந்தேகமில்லை. உறுதியான தீர்மானம் செய்தபின் அதன்படி நடக்க உறுதி செய் தான். எல்லோரும் என்னைக் கேலி செய்வார்களே; என்னிடம் கெட்ட வழக்கங்கள் இருக்கின்றனவே, நான் கந்தைகளையல்லவா அணிந்திருக்கிறேன்; தந் தையின் வீடு வெகு தொலைவிலல்லவா இருக்கிறது. இந்த விக்கினங்களையெல்லாம் அவன் பொருட்படுத்த வில்லை. தன் பிரதிக்கினையின்படி அவன் உடனே நடக்கத் தீர்மானித்தான். பின்னர் பார்த்துக்கொள் வோம் என காலத்தைக் கடத்தவில்லை. தன் பாவங் களுக்காக உண்மையாகவே விசனிக்கிறான். “பர லோகத்துக்கு விரோதமாகவும், உமது சமுகத்திலும் பாவம் செய்தேன்'' என அவன் தந்தையிடம் சொல் லப்போகிறான், ஆம். அவன் தன் பாவங்களைப் பகி ரங்கமாகச் சொல்லத் தயார். தன்னை மிகத் தாழ்த்தி வெட்கத்துக்குள்ளாக்க அவன் தயாராயிருக்கிறான். இவ்விதமே பாவியும். கடவுளது வரப்பிரசாதம் அவன் இருதயத்தைத் தொடுகிறது. தனக்குள் அவன் சிந்திக்கத் தொடங்குகிறான். இதுவரை தான் நடத்தி வந்த வாழ்க்கையைப்பற்றி அவன் சிந்திக்கிறான். அந்த வாழ்க்கை தன்னை எங்கே கொண்டு விடும் என் றும் அவன் நினைத்துப் பார்க்கிறான். முன்னரே அவன் தனக்குள் ஆழ்ந்து சிந்தித்திருப்பானானால், ஜெபித்திருப்பானானால், அவன் தன் தந்தையின் வீட்டை விட்டு அகன்றிருக்க மாட்டான். இப் பொழுது அவன் தன் பரலோக தந்தையின் நன்மைத் தனத்தைப்பற்றி சிந்திக்கிறான். எப்பொழுதும் மன் னிக்க அவர் தயாராய்க் காத்திருப்பவர் என்று அவன் அறிவான். தன் பாவ வாழ்க்கையினால் கைகண்ட பலன் என்ன என்று தன்னையே அவன் கேட்கிறான். தன்னைச் சோதித்தவன் தருவதாக வாக்களித்தவை களில் ஒன்றும் தன்னிடம் இப்பொழுது இல்லை என அவன் கண்டுணர்கிறான். அவனிடம் இருப்பதெல் லாம் என்ன? மன உபாதையும், கொடிய துயரமும், ஏமாற்றமுமே. மன இருளின் மத்தியில் அவன் இருந்தபோதிலும், "கடவுள் இன்னும் என் தந்தையே: நான் நன்றி கெட்டவனாய் நடந்தபோதி லும், கீழ்ப்படியாத மகவாயிருந்தாலும் இன்னும் அவர் என் தந்தையே'' என அவன் அறிவான். மற்ற வர்கள் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத் தாமல் அவன் பாவசங்கீர்த்தனம் செய்யப் போவான். எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்வான். அவனிடம் எவ்வளவு கெட்ட பழக்க வழக்கங்கள் இருந்தாலும் சரி, அவனுடைய ஆத்துமம் பாவம் என்னும் கந்தைத் துணிகளைத் தரித்திருந்தபோதிலும் அவன் பாவசங் கீர்த்தனம் என்னும் தேவ திரவிய அனுமானத்தை நாடுவான். அது கடினம், என்றாலும், அவன் அதைச் செய்து முடிக்கத் தீர்மானித்து விட்டான். இதுவே அவனது தீர்மானம். இன்று மாலை பார்த் துக்கொள்ளலாம், நாளை குருவானவரை அணுகலாம் என அவன் காலத்தைக் கடத்தவில்லை. தான் செய் யத் தீர்மானித்ததை உடனே செய்யத் தீவிரிக்கிறான். சர்வ வல்லப கடவுளுக்கு விரோதமாக தான் பாவம் செய்து விட்டதாக அவன் அந்த இடத்திலேயே ஏற் றுக் கொள்கிறான். கடவுளுடைய பிரதிநிதியாகிய குருவிடம் உடனே போய், மனஸ்தாபத்துடனும் பாவத்தின் மீது வெறுப்புடனும் இனி பாவம் செய்ய மாட்டேன் என்ற பிரதிக்கினையுடனும் தன் பாவங் களை வெளியிடத் தீர்மானித்து விட்டான்.

இப்பொழுது தந்தையின் இரக்கத்தை நாம் பார்க்கிறோம். இந்த இரக்கத்தையே உவமையில் இரட்சகர் வற்புறுத்த விரும்புகிறார். இந்த தந்தை யின் இரக்கமானது நம் நல்ல கடவுளது அளவற்ற இரக்கத்தின் பிரதிபிம்பம். மகன் இன்னும் வெகு தொலைவில் வரும்போதே தந்தை அவனைப் பார்த்தார். அவன் தன் மகனே என அறிந்துகொண்டார். ஒவ்வொரு நாளும் அவர் தம் வீட்டின் மேன் மாடிக் குப் போய் தான் வெகுவாய் நேசித்த மகன் வருகி றானா என அவர் ஆசையோடு பார்த்து வந்திருக்க வேண்டும். நெடுநாளாக தான் இழந்திருந்த மகன், கந்தைத் துணி தரித்து, அழகை இழந்து, உருக் குலைந்து வருவதை அவர்கண்டார். அவனைச் சந்திக் கும்படி அவர் தீவிரிக்கிறார். ஆசையோடு கூ விய ழைத்து, அவனை வரவேற்கிறார். அவனைக் கட்டிய ணைத்து அன்புடன் முத்தமிடுகிறார். இந்த அணை கடந்த அன்பைக் கண்ட மகன் அதிசயித்து, தன் தந் தையின் அணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முயல் கிறான். "பிதாவே, நான் பரலோகத்துக்கு விரோத மாகவும், உமது சமூகத்திலும் பாவம் செய்தேன். இனி உம்முடைய பிள்ளை என்றழைக்கப்படுவதற்கு நான் பாத்திரவானல்ல'' என்கிறான். ''உம்முடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளும்'' என்று சொல்ல அவன் தீர்மானித்திருந்தான். அவற் றைச் சொல்ல அவனுடைய தந்தை விடவில்லை. தந்தை உடனே தம் வேலையாட்களை அழைத்தார். வீட்டிலிருந்த முதல் தரமான உடைகளைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். அவற்றை அவன் தரிக் கச் செய்தார். ''என் மகன் கையில் மோதிரத்தைத் தரிப்பியுங்கள், என் மகன் கால்களுக்கு பாதரட்சை களைத் தரிப்பியுங்கள்'' என்கிறார். விருந்து தயாரிக் கும்படி உத்தரவிடுகிறார். எல்லோரும் உண்டும், குடித்தும் மகிழ்ச்சி கொண்டாடினார்கள். ஆடல் பாடல்களும் இருந்தன. அன்று ஒரு பெரும் நாள். ஊதாரி மகன் திரும்பி வந்த நாள். எல்லாம் மன்னிக் கப்பட்டது, மறக்கப்பட்டது. திரும்பி வந்த இந்த மகனைப்பற்றி அன்று அதிக மகிழ்ச்சி. எப்போதும் தகப்பனுக்குப் பிரமாணிக்கமாய் இருந்த மகனால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட இன்று அதிக மகிழ்ச்சி.

ஒருபோதுமே தந்தையின் வீட்டை விட்டு அகலாத மகனால் ஏற்பட்ட ஆனந்தத்தைவிட, போய்த் திரும் பிய மகனால் அதிக ஆனந்தம். இவ்விதமே நிர்ப்பாக் கியனாயிருந்த பாவி திரும்பிவருகையிலும் நடக்கிறது. நல்ல தகப்பனாகிய கடவுள் இரக்கம் நிறைந்தவர். பாவி எப்பொழுது திரும்புவான், திரும்புவான் என அவர் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறார். பாவி கொஞ்சம் நல்ல மனது காட்டியதும் கடவுள் தீவிரித்துவருகிறார். அவன் திரும்பிவருவதற்கானதை யெல்லாம் அவனுக்கு எளிதாக்குகிறார். தாழ்ச்சியுட னும், நேர்மையுடனும், மனத் துயரத்துடனும் அவன் பாவசங்கீர்த்தனம் செய்வானானால் அவர் திருப்தியடைகிறார். குருவானவர் வழியாக பாவிக்கு தம் ஆசீர்வாதத்தை அளிக்கிறார். தம் பிரதிநிதியா கிய குருவிடம் பாவி தன் குற்றச்சாட்டுகளை அறிவித் ததும், அவன் ஆத்துமத்துக் கடவுள் தேவ இஷ்டப் பிரசாதம் என்னும் அழகிய உடையை அளிக்கிறார்; தம் நட்பு என்னும் மோதிரத்தை அவன் விரலில் போடுகிறார்; அவன் பாதங்களுக்கு பாதரட்சைகளை அளிக்கிறார்; அதாவது, கடவுளுடைய கட்டளைகள் என்னும் பாதையில் அவன் எளிதாய் நடந்து செல் லக்கூடியவனாகும்படி, மனஸ்தாபப்படும் பாவிக்கு விசேஷ வரப்பிரசாத உதவிகளைக் கடவுள் தருகிறார். சுத்திகரிக்கப்பட்ட ஆத்துமத்துக்கென்று ஓரு விசேஷ விருந்தை, அதாவது திவ்விய சற்பிரசாத விருந்தை தயாரிக்கிறார். பரகதியிலும், பூமியிலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் கடவுளின் குடும்பம் அனைத்தும் அகமகிழ்கிறது. ஏனெனில் வீட்டை விட்டுப் பிரிந்தவன் திரும்பிவந்திருக்கிறான்; காணாமற்போன ஆடு திரும்பக் கிடைத்தது.

ஊதாரிப்பிள்ளையைப் பற்றிய சுவிசேஷ வரலாற் மில் அவனுடைய தாயைப் பற்றி ஒன்றும் சொல்லப் படவில்லை. அவனுடைய தாய் உயிருடனிருந்திருந்தால் அவள் தன் மகன் திரும்பியதைப் பற்றி எவ் வளவு மகிழ்ந்திருப்பாள்! பரிசுத்த தாயாகிய திருச் சபை பூமியில் பாவியின் தாய். அந்தத் தாய் வழி யாகவே ஞானஸ்நானத்தின் அவன் புத்துயிர் பெற் றான். ஞான ஸ்நானத்தில் பெற்ற மாசற்ற தனத்தை இழந்த அவன் திரும்பவும் கடவுளது வரப்பிரசாதத் தைப் பெற்றதும் திருச்சபை என்னும் தாய் மகிழ்கி றாள். பரலோகத்திலும் அவனுக்கு ஒரு தாய் உண்டு அந்தத் தாய் இரக்கத்தின் மாதா, பாவிகளின் அடைக்கலம். அவளது அடைக்கலத்தைத் தேடிய எவனாவது கைவிடப்பட்டதாக ஒரு போதும் உலகில் கேள்விப்பட்டதில்லை.

ஊதாரிப்பிள்ளையின் வரலாறு புனித லூக்காஸ் எழுதிய பரிசுத்த சுவிசேஷத்தின் பதினைந்தாம் அதி காரத்தில் தரப்பட்டிருக்கிறது. அதை நான் வாசிக் கப்போகிறேன். நிறுத்தி தியானித்து வாசிக்கப் போகிறேன் (லூக். 15 | 11-32)

மீண்டும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: பிதாவே, ஆஸ்தியில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகத்தை எனக்குத் தரவேண்டும் என்றான். ஆதலால் அவன் அவர்களுக் குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.

அப்படியிருக்க சில நாட்களுக்குப் பின் அந்த இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்தெடுத்துக் கொண்டு தூரதேசத்துக்குப் புறப்பட்டுப் போய், அங்கே துர்ச்சனனாய்த் திரிந்து, தன் ஆஸ்தியை நாச மாக்கினான்: எல்லாவற்றையுஞ் செலவழித்த பின் அந்தத் தேசத்திலே கடின பஞ்சம் உண்டாகவே, அவன் வறுமைப்படத் தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒண்டினான். அந்தக் குடியானவன் தன் பன்றிகளை மேய்க்கும்படி அவனைத் தன் கிராமத்துக்கு அனுப்பினான். அங்கே பன்றிகள் தின்னும் கோதுமைகளால் அவன் தன் வயிற்றை நிரப்ப விரும்பினாலும் அதை அவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை. அப்பொழுது அவன் புத்தி தெளிந்து, தனக்குள்ளே யோசித்துச் சொல்லு வான்: என் தகப்பனார் வீட்டில் எத்தனையோ கூலி யாட்களுக்கு ஏராளமான சாப்பாடு கிடைக்கிறது. நானோ இங்கே பசியால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனாரிடத்தில் போய், “பிதாவே, பரலோகத் துக்கு விரோதமாகவும். உமக்கு முன்பாகவும் நான் பாவஞ் செய்தேன். இனி உம்முடைய பிள்ளை என்று அழைக்கப்பட நான் பாத்திரவானல்ல, உம்முடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள் ளும்'' என்பேன் என்று சொல்லி, உடனே எழுந்து. தகப்பனிடத்திற்கு வந்தான். அவன் இன்னும் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவ னைக்கண்டு, மன துருகி ஓடிவந்து அவன் கழுத்தில் தாவி விழுந்து அவனை முத்தமிட்டான்.

மகன் தகப்பனை நோக்கி, “பிதாவே, நான் பர லோகத்துக்கு விரோதமாதவும், உமது சமுகத்திலும் பாவம் செய்தேன். இனி உம்முடைய பிள்ளை யென்று அழைக்கப்படுவதற்கு நான் பாத்திரனல்ல'' என்றான்.

ஆனால் தகப்பன் ஊழியரை நோக்கி, “நீங்கள் சீக்கிரமாய் முதல் தரமான வஸ்திரத்தைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள். இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள், கொழுத்த கன்றையுங் கொண்டுவந்து அடியுங்கள்; உண்டு விருந்தாடுவோமாக; ஏனென் றால் என் குமாரனாகிய இவன் இறந்து போய் மறுபடி யும் உயிர்த்தான். காணாமற்போய் மறுபடியும் காணப்பட்டான்'' என்றான்.

ஆகையால் அவர்கள் விருந்தாடத் தொடங்கினார் கள். அப்பொழுது அவனுடைய மூத்த குமாரன் வயலிலிருந்தான். அவன் வீட்டுக்குச் சமீபித்து வரு கையில் ஆடல் பாடல்களைக் கேட்டு, பணிவிடைக் காரரில் ஒருவனை அழைத்து, இதென்ன என்று விசா ரித்தான். அதற்கு அவன்: உம்முடைய தம்பி வந் திருக்கிறார், அவர் சுகத்தோடு வந்து சேர்ந்ததைப் பற்றி உம்முடைய தகப்பனார் கொழுத்த கன்றை அடிப்பித்தார்'' என்றான்.

அப்பொழுது அவன் எரிச்சல் கொண்டு, உள்ளே பிரவேசிக்க மனதில்லா திருந்தான், ஆதலால் அவ னுடைய தகப்பன் வெளியே வந்து அவனை வருந்தி அழைக்கத்தொடங்கினான். அவனோ தகப்பனைப் பார்த்து மாறுத்தாரமாக: ''இதோ இத்தனை வருட காலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, உம் கட் டளையை ஒருக்காலும் மீறாதிருந்தும், என் சிநேகித ரோடுகூட நான் விருந்தாடும்படிக்கு ஒரு வெள்ளாட் டுக் குட்டியையாவது நீர் எனக்கு ஒருபோதுந் தந்த தில்லை. ஆனால் வேசிகளோடு தன் ஆஸ்தியை விழுங் கிவிட்ட உம்முடைய மகனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை அடிப்பித்தீரே'' என்றான்.

அதற்கு அவன்: “மகனே, நீ எந்நாளும் என்னோடு கூட இருக்கிறாய். எனக்குள்ள யாவும் உன்னுடைய தாயிருக்கிறது. ஆனால் உன் தம்பியாகிய இவன் செத்துப் பிழைத்ததற்கும், காணாமற்போய் காணப் பட்டதற்கும் நான் விருந்தாடிச் சந்தோஷங் கொண் டாட வேண்டுமே'' என்று அவனுக்குச் சொன்னான் என்றார்.