திவ்விய நன்மை - மாதா பக்தி!

“கடவுள் தாமே தமது தேவ பராமரிப்பின் கரத்தால், தமது மாசற்றவர்களை சிலுவைகளைக் கொண்டும், முட்களைக் கொண்டும் சுற்றிக் கட்டுகிறார். யோபுவுக்கும், சூசைக்கும், தொபியாஸுக்கும், மற்ற புனிதர்களுக்கும் அவர் இவ்வாறே செய் தருளினார். 'குய்யா ஆக்செப்துஸ் எராஸ் தேயோ, நெக்செஸ்ஸே ஃபுயித் உத் தெந்த்தாத்ஸியோ ப்ரோபாரெத் தே - ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்புடையவனாக இருந்தாய், சோதனை உன்னைப் பரீட்சிப்பது தேவையாயிருந்தது.'”

மாசற்றவர்களின் வழி தனக்கேயுரிய சோதனைகளையும், பரித்தியாகங்களையும் கொண்டுள்ளது. ஆனால் அது திவ்விய நன்மையில் தன் பலத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் அடிக்கடி திவ்விய நன்மை உட்கொள்பவன் நித்திய வாழ்வைக் கொண்டிருக்கிறான். அவன் இயேசுவில் இருக்கிறான், இயேசு அவனில் இருக் கிறார். இயேசுவைப் போலவே வாழ்பவன் இறுதிநாளில் அவரால் உயர்த்தப்படுவான். இது தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கோதுமையும், கன்னியர்களைப் பிறப்பிக்கிற திராட்சை இரசமுமா யிருக்கிறது. பாராஸ்தி இன் கொன்ஸ்பெக்த்து தூவோ மென்ஸாம் அத்வெர்சுஸ் ஏயோஸ் குயி த்ரிபுலாந்த் மே. காதெந்த் ஆலாத்தெரே தூவோ மில்லே, எத் தேச்செம் மீலியா ஆ தெக்ஸ்தெரிஸ் தூயிஸ்: அத் தே ஆவ்த்தெம் நோன் அப்ரோப்பின்குவாபுந்த் - என்னைத் துன்புறுத்துபவர்களுக்கு எதிராக நீர் உமக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தம் செய்தீர். உன் பக்கத்தில் ஆயிரம் பேர் விழுவார்கள், உன் வலப் பக்கத்தில் பத்தாயிரம் பேர் விழுவார்கள், ஆனால் அவை உன்னை அணுகாது.'”

“மேலும் அவனால் நேசிக்கப்படும் மிகுந்த இனிமையுள்ள திவ்விய கன்னிகை அவனுக்குத் தாயாராக இருக்கிறார்கள். ஏகோ மாத்தெர் புல்க்ரே திலெஷியோனிஸ் எத் திமோரிஸ் எத் ஆக்னீத்ஸியோனிஸ் எத் ஸாங்க்தே ஸ்பேயி. இன் மே க்ராத்ஸியா ஓம்னிஸ் வியே எத் வெரித்தாத்திஸ்; இன் மே ஓம்னிஸ் ஸ்பெஸ் வீத்தே எத் வீர்த்துத்திஸ். ஏகோ திலிஜெந்த்தெஸ் மே திலிஜோ. குயி எலூச்சிதாந்த் மே வீத்தாம் ஏத்தெர்னாம் ஆபேபுந்த். தெர்ரிபிலிஸ் உத் காஸ்த்ரோரும் ஆச்சியெஸ் ஓர்தினாத்தா - “”நான் அரிய நேசம், தெய்வ பயம், அறிவு, பரிசுத்த நம்பிக்கை ஆகியவற்றின் தாயா யிருக்கிறேன். நன்னெறி மற்றும் உண்மையின் சகல வரப்பிரசாதமும் என்னிடம் உண்டு. வாழ்வு மற்றும் புண்ணியத்தின் சகல நம்பிக்கையும் என்னில் உண்டு. என்னை நேசிப்பவர்களை நானும் நேசிக்கிறேன். . . என்னை மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்கள் நித்திய வாழ்வைக் கொண்டிருப்பார்கள். (நான்) போருக்கு ஆயத்தமாயிருக்கிற படையணியைப் போல அச்சம் வருத்துவிப் பவளாய் இருக்கிறேன்.”

அதன்பின் இரண்டு கன்னியர்களும் சுற்றித் திரும்பி, மெதுவாக மலைச்சரிவின்மீது ஏறிச் சென்றார்கள். அவர்களில் ஒருத்தி இப்படி வியந்து கூறினாள்: 

“நீதிமான்களின் பாதுகாவல் ஆண்டவரிடமிருந்து வருகிறது. துன்ப காலத்தில் அவரே அவர்களைப் பாதுகாப்பார். ஆண்டவர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார். அவர் பாவிகளின் கைகளினின்று அவர்களை விடுவித்து இரட்சிப்பார். ஏனெனில் அவர்கள் அவரில் நம்பிக்கை வைத்தார்கள்.”

"கடவுள் பலத்தைக் கொண்டு என் இடையை வரிந்து கட்டினார். நான் நடக்கும் பாதையைக் களங்கமற்றதாக்கினார்” என்று மற்றவள் தொடர்ந்து கூறினாள்.

இரண்டு கன்னியர்களும் அந்த அதியற்புதமான கம்பளத்தின் நடுப்பகுதிக்கு வந்தபோது, அவர்கள் திரும்பினார்கள்.

அவர்களில் ஒருத்தி உரத்த சத்தமாக, “தவத்தால் முடிசூட்டப்படும் மாசற்றதனம் புண்ணியங்களின் அரசியாக இருக்கிறது” என்றாள்.

“கற்புள்ள சந்ததி எத்துணை மகிமையும், அழகுமுள்ளதா யிருக்கிறது! அதன் நினைவு அழியாமல் நிலைத்திருக்கிறது, அது கடவுளாலும், மனிதராலும் அறியப்பட்டதாயிருக்கிறது. அது தங்கள் மத்தியில் இருக்கும்போது, மனிதர்கள் அதைக் கண்டு பாவிக்கிறார்கள், அது பரலோகத்திற்கு ஏறிச் சென்று, நித்தியத்தில் வெற்றிமுடி சூட்டப்பட்டு, தன் கற்புள்ள போராட்டங்களுக்கான வெகுமானத்தைப் பெற்றுக் கொள்ளும்போது, அவர்கள் அதை ஏங்கித் தேடுகிறார்கள்.”

“மிக அதிகமான போராட்டங்களுக்குப் பிறகு, பரலோக சேனைகளின் ஆரவாரங்களுக்கும், கீதங்களுக்கும், மகத்துவப் பேரொளிக்கும் நடுவே, பரிசுத்த ஞானஸ்நானத்தின் கழுத்துப் பட்டை மாசற்றதாகக் கடவுளிடம் சமர்ப்பிப்பது எப்பேர்ப்பட்ட வெற்றி, அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி!”

இவ்வாறு “தவத்தால் பாதுகாக்கப்படும் மாசற்றதனத்திற் கென'' ஆயத்தம் செய்யப்பட்டுள்ள வெகுமானத்தைப் பற்றி அவர்கள பேசிக் கொண்டிருக்கையில், சம்மனசுக்களின் அணிகள் தோன்றுவதை டொன் போஸ்கோ கண்டார். அவர்கள் அந்த ஒளி வீசுகிற வெண்கம்பளத்தின் மீது வந்திறங்கி, எப்போதும் அதன் மத்தியிலேயே இருந்த அந்த இரு கன்னியர்களோடு சேர்ந்து கொண்டார்கள. அவர்கள் பெருந்திரளாக இருந்தார்கள். அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:

“பெனதிக்துஸ் தேயுஸ் எத் பாத்தெர் தோமினி நோஸ்த்ரி யேசு க்றீஸ்தி குயி பெனெதீச்சித் நோஸ் ... இன் இப்ஸோ ஆந்த்தே முந்தி கொன்ஸ்தீத்தூத்ஸியோனெம், உத் எஸ்ஸேமுஸ் சாங்க்தி எத் இம்மாக்குலாத்தி இன் கொன்ஸ்பெக்த்து ஏயுஸ் இன் காரித்தாத்தே, குயி ப்ரேதெஸ்தினாவித் நோஸ் இன் அதோப்ஷியோனெம் ஃபீலியோரும் பெர் யேசும் க்றீஸ்தும் - கடவுளும், நம் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து நாதரின் பிதாவுமானவர் வாழ்த்தப் பெறுவாராக. . . உலகம் ஸ்தாபிக்கப்படுமுன்பே, தமது பார்வையில் நாம் பரிசுத்தர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருக்கும்படியாக, இவரில் பிதாவானவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அவரே இயேசுக்கிறீஸ்துவின் வழியாக நாம் அவருடைய சுவீகாரப் பிள்ளைகளாயிருக்கும்படியாக நம்மை முன்குறித்து வைத்துள்ளார்.”