இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அநியாயச் சட்டம்

பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு சாரார் எழும்பி தங்கள் தப்பறையான கொள்கை களைப் பரப்பினர். கத்தோலிக்க சபை விசுவசித்துப் போதிப்பதை அநேகர் விசுவசிக்க மறுத்தனர். இந்த சாரார் ஆல்பிஜென்ஸ் என்னும் பேரால் அழைக்கப் பட்டார்கள். பின்னர் புனித சுவாமிநாதர் ஜெப மாலைப் பத்தியின் வழியாய் அவர்களில் அநேகரை மனந்திருப்பினார்.

ஜெபப்பூசை செய்வது தவறு என ஆல்பிஜென்ஸ் குழுவினர் போதித்தார்கள். இது பெரும் தவறான கொள்கை. பூசையானது பாட்டுப் பூசையாயிருந்த போதிலும் ஜெபப்பூசையாயிருந்தாலும் அது புதிய ஏற்பாட்டின் பலி! அளவற்ற பலனுள்ளது. பலியில் குருவானவர் ஒரு பொருளைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறார். கடவுளே சகலத்தையும் சிருஷ்டித் தவர், சகலத்துக்கும் கர்த்தர் என பலியிடுவதனால் அங்கீகரிக்கிறோம். பலியானது கடவுளுக்கு அள வற்ற ஆராதனையும் நன்றியும் பாவப்பரிகாரமும் சமர்ப்பிக்கிறது; அதன் வழியாய் நாம் கேட்பதைக் கடவுளிடமிருந்து பெறுகிறோம். உலகிலுள்ள சகல மக்களின் ஜெபங்களையும் ஒன்றாய்ச் சேர்த்தாலும் ஒரு பூசைப்பலியின் வல்லமைக்குச் சமமாகாது.

ஜேம்ஸ் சுவாமியாருக்கு இதெல்லாம் தெரியும். பூசையென்றால் அவருக்கு உயிர். வேத விரோதிகளின் தடையுத்தரவை அவர் பொருட்படுத்தவில்லை. தம் கோவிலில் வழக்கம்போல் ஜெபப் பூசை செய்து, கடவுளுக்கு அளவற்ற மகிமையைச் செலுத்தி வந் தார். இதையறிந்த வேத விரோதிகள் அவரைக் கைது செய்து, தங்கள் நடுவர்களிடம் அவரை அழைத்துப்போய் நிறுத்தினார்கள்.

"ஜெபப்பூசை செய்யலாகாதென்று ஒரு சட்டம் இருக்கிறதல்லவா? இதை நீ அறிந்திருந்தும் எவ்விதம் அதை மீறத் துணிந்தாய்?'' என நடுவன் ஒருவன் கேட்டான்.

“அந்த அநியாயச் சட்டத்தை நான் அறிவேன். அதை நான் சட்டைபண்ணப் போவதில்லை. அதன் காரணத்தை அறிய வேண்டுமா? அப்போஸ்தலர்கள் சொன்ன வார்த்தைகளையே நானும் சொல்கிறேன். கிறிஸ்துநாதர் பேரால் போதிக்கலாகாதென்று விரோதிகள் தடைசெய்தார்கள். அப்பொழுது அப் போஸ்தலர்கள், 'மனிதருக்கல்ல, ஆனால் கடவுளுக்கு நாங்கள் கீழ்ப்படியக் கடமைப்பட்டவர்கள்' என்றார் கள்'' என ஜேம்ஸ் சுவாமியார் பதிலளித்தார்.

இதைக் கேட்டதும் நடுவர்களுக்கு கோபாவேசம் பொங்கியது. குருவானவரது நாக்கை அறுக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள். பெரிய கூட்டத் தின் முன் அவரது நாக்கை இழுத்து அறுத்தார்கள்.

அவர் சொல்லொண்ணா வேதனைப்பட்டார். வாயி லிருந்து இரத்தம் ஏராளமாக வடிந்தது. அவர் நேரே கோவிலுக்குப்போய், சற்று முன் பூசைப்பலி நிறைவேற்றிய பீடத்தின் முன் முழந்தாளிட்டார். கரங்களை நீட்டி தம் துயரத்தையெல்லாம் கடவுளிடமும் அவருடைய திருமாதாவிடமும் எடுத்துரைத் தார். தம் நாக்கைச் சுகமாக்கும்படி தாழ்ச்சியுட னும் நம்பிக்கையுடனும் பிரார்த்தித்தார்.

உடனே தேவதாய் வெகு அழகுடன் அவர்முன் தோன்றினாள். அவரது நாக்கைச் சுகமாக்கியதுடன், “உந்நத கடவுளின் குருவே, நீர் பூசைசெய்து சகலத்தையும் சிருஷ்டித்த கர்த்தரான கடவுளையும் என்னை யும் மகிமைப்படுத்தியமையால் உம் நாக்கை உமக்கு திரும்பத் தருகிறேன். என் மகனே, அந்த ஆராதனைக்குரிய பலியைத் தொடர்ந்து ஒப்புக்கொடுத்த உம் நாக்கை கடவுளுக்காகப் பயன்படுத்தும் " என்றாள்.

ஜேம்ஸ் சுவாமியார் தேவதாய்க்கு இதயப்பூர்வ மான நன்றி செலுத்தினார். நடுவர்களை அணுகி தேவ தாய் செய்த புதுமையை எடுத்துக்கூறி, அந்த அன்னை பூசைப்பலியை நேசிக்கிறாள் என எண்பித் தார்.