இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இரட்சிப்படைய விரும்புகிறன் மாமரி மீது உறுதியான விசுவாசம் கொள்வானாக

இரட்சிப்படைய விரும்புகிற எவனும் யாவற்றிற்கும் மேலாக மாமரி மீது உறுதியான விசுவாசம் கொள்வானாக. - அர்ச். பொனவெந்தூர்.

31. சுதனாகிய சர்வேசுரன் தமது பரிசுத்த மாதாவின் வழியாக ஒவ்வொரு நாளும் தம் அங்கங்களில் தம்மையே உருவாக்கவும் அவர்களிலே ஒருவிதத்தில் மனிதாவதாரம் கொள்ளவும் ஆசிக்கிறார். இவ்வன்னையிடம் அவர் கூறுகிறார்: 'இஸ்ராயேலைச் சொந்தமாக்கிக் கொள்'' (சர்வ . 24:13) என்று. இது, சுதன் மாமரியைப் பார்த்து இவ்வாறு கூறுவது போலுள்ளது : உலகிலுள்ள எல்லா மக் களினத்தாரையும் வம்ச உரிமையாக பிதா என்னிடம் கொடுத்துள்ளார். எல்லா மனிதரையும், நல்லோரையும் தீயோரையும். முன் குறிக்கப்பட்டவர்களையும் தீர்ப்பிடப் பட்டவர்களையும் கொடுத்துள்ளார். முந்தியவர்களைத் தங்கக் கோலாலும் பிந்தியவர்களை இரும்புக் கோலாலும் ஆட்சி செய்வேன். முந்தியவர்களுக்கு நான் ஒரு தந்தையாகவும் பரிந்து பேசுகிறவராயுமிருப்பேன். பிந்தியவர்களுக்கோ நீதியுடன் தண்டிப்பவராக இருப்பேன். அவர்கள் யாவ ருக்கும் நீதிபதியாக இருப்பேன். ஆனால் என் அன்புள்ள அம்மா! உங்கள் வம்ச உரிமையாகவும் உடமையாகவும் இஸ்ராயேலால் முன்னுணரத்தப்பெற்றுள்ள முன் குறிக்கப் பட்டவர்களை மட்டுமே நீங்கள் கொண்டிருப்பீர்கள். அவர் களின் தாயாக அவர்களைப் பெற்றெடுத்து, உணவூட்டி வளர்ப்பீர்கள். அவர்களின் அரசியாக அவர்களை வழி நடத்தி ஆட்சி புரிந்து அவர்களைப் பாதுகாப்பீர்கள்...

32 இம்மனிதனும் அம்மனிதனும் சீயோனில் அவளி டத்தில் பிறந்தனர் என்று பகர்கின்றார் பரிசுத்த ஆவி (சங். 86 : 5). இதற்கு விளக்கங்கூறும் சில வேதாகம விரிவுரையாளர்களின் கருத்துப்படி, மரியாயிடமிருந்து முதலில் பிறந்த மனிதன் சேசுகிறிஸ்து என்னும் தெய்வ மனிதன். இரண்டாம் மனிதன் கடவுளுடையவும் மரியாயி னுடையவும் சுவீகாரப் பிள்ளையான வெறும் மனிதன். மனுக்குலத்தின் சிரசான சேசுகிறீஸ்து மரியாயிடத்திலிருந்து பிறந்தாரானால், இச்சிரசின் உறுப்புக்களான முன் குறிக்கப் பட்ட மக்களும் அவசியம் அத்தாயிடமிருந்துதான் பிறக்க முடியும். ஒரு தாய், மற்ற உறுப்புகள் இல்லாத வெறும் சிரசை மட்டும் அல்லது சிரசு இல்லாத மற்ற உறுப்புகளை மட்டும் பிறப்பிக்க முடியாது. இயற்கைப்படி பார்த்தால் அது ஒரு விபரீதப் பிறவியாகும். இதேபோல் வரப்பிரசாத் நிலையிலும் சிரசும் உறுப்புகளும் ஒரு தாயிடமிருந்தே வருகின்றன. கிறிஸ்துவின் ஞான சரீரத்தின் ஒரு உறுப்பின னாகிய முன் குறிக்கப்பட்டவருள் ஒருவன், சிரசாகிய கேசு வைப் பெற்றெடுத்த மாமரி தாயிடமிருந்து அல்லாமல் வேறு யாரிடமிருந்தும் பிறந்திருந்தால், அவன் முன் குறிக்கப் பட்டவனாகவோ சேசு கிறிஸ்துவின் உறுப்பாகவோ இருக்க முடியாது. அது வரப்பிரசாத நிலையில் ஒரு விபரீதப் பிறவியாகும்.

33. பரலோகமும் பூலோகமும் அனுதினமும் ஆயிரக் கணக்கான தடவை உம்முடைய திருவயிற்றின் கனி யாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவரே" என்று கூறுகிறபடி, சேசு அன்று போல் இன்றும் மரியாயின் திரு உதரக் கனி யாகவே இருக்கின்றார். இதிலிருந்து ஒரு காரியம் உறுதி யாகின்றது. அதாவது உலகம் முழுவதற்கும் சேசு மரியா யின் "கனியும் அவர்களின் வேலைப்பாடுமாயிருப்பது போலவே, அவரை உடமையாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் இருக்கிறார், இதனால் எந்த ஒரு விசு வாசியும் தன் இருதயத்தில் சேசு கிறீஸ்து உருவாக்கப் பெற்றிருப்பானாகில் அவன் இவ்வாறு தைரியமாகச் சொல்ல முடியும். மாமரிக்கு நன்றி நான் என் உடமையாகக் கொண்டிருப்பது அவ்வன்னை அவர்களின் கனியும் பொரு ளுமே. அவர்கள் இல்லாமல் இவரை (சேசுவை) நான் பெற்றிருக்க முடியாது.'' அர்ச். சின்னப்பர் தம்மைப் பற் றிக் கூறியதை விட அதிக உண்மையுடன் மாதாவைப் பற்றி இவ்வாறு கூறலாம். கிறிஸ்து உங்களில் உருவாகும் ' வரை நான் மீண்டும் பேறு கால வேதனைப்படுகிறேன் (கலா. 4:19) கடவுளின் பிள்ளைகள் அனைவரிடத்திலும் என் குமாரனாகிய சேசு கிறீஸ்து முழு நிறைவாக உருவாகும் வரையிலும் மீண்டும் நான் பேறுகால் வேதனைப்படுகிறேன்.

அர்ச். அகுஸ்தீன் என்பவர் நான் இதுவரை கூறிய யாவற்றையும் தாண்டி, தம்மையும் மீறி உரைப்பதென்ன வென்றால் : முன் குறிக்கப்பட்ட யாவரும் தேவகுமாரனின் சாயலுக்கு ஒத்தவர்களாகும் பொருட்டு இவ்வுலகிலிருக்கை யில் கன்னிமரியாயின் நெஞ்சுக்குள்ளே மறைத்து வைக்கப் படுகிறார்கள். அங்கு அவர்கள் இத்தாயினால் பாதுகாக்கப் பட்டு, உணவூட்டப் பெற்று, பேணப்பட்டு வளர்க்கப்படு கிறார்கள். திருச்சபை நீதிமான்களின் பிறந்த நாள் என்று குறிப்பிடும் மரணத்துக்குப் பின், மகிமையின் வாழ்வுக்குப் பிறக்கும் வரையிலும் அவ்வாறு இருக்கிறார்கள். ஆ! தீர்ப்பிடப்பட்டவர்களுக்குத் தெரியாததும் முன் குறிக்கப் பட்டவர்களுக்கும் கூட முழுவதும் அறியப்படாததுமான வரப்பிரசாதத்தின் பரம இரகசியமே!

34, பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் தெரிந்தெடுக்கப் பட்டவர்களை மாதாவிலும் மாதா வழியாகவும் தமக்கென தயாரிக்க விரும்பி மாதாவிடம் கூறுகிறார்: தெரிந்தெடுக்கப் பட்ட என்னுடையவர்களிடம் வேரூன்று. என் மிகுந்த அன்புக்குரியவளே! என் பதியே! உன் எல்லாப் புண்ணியங் களின் வேரையும் தெரிந்தெடுக்கப்பட்டவர்களிடம் ஊன்றுவாயாக! அதனால் அவர்கள் புண்ணியத்தின் மேல் புண்ணியத்திலும் வரப்பிரசாதத்தின் மேல் வரப்பிரசாதத் திலும் வளர்வார்களாக! மகா உந்நதமான புண்ணியங்களைச் செய்து கொண்டு நீ உலகில் வாழ்ந்த காலத்தில் உன் மீது நான் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருந்தேனென்றால், இப்பொழுதும் பரலோகத்தில் நீ உன் வாழ்வைத் துறக் காமலே உன்னைப் பூலோகத்தில் காண விரும்புகிறேன். ஆதலால், தெரிந்தெடுக்கப்பட்ட என்னுடையவர்களில் உன்னுடைய அசைக்க முடியாத விசுவாசம், ஆழ்ந்த தாழ்ச்சி, எல்லாம் தழுவிய பரித்தியாகம், உந்நத செபம். எரியும் சிநேகம், திடமான நம்பிக்கை இவற்றின் வேர்களை யும் உன் எல்லாப் புண்ணியங்களையும் நான் காணும்படி அவர்களில் நீ உன்னையே மீண்டும் பிறப்பிப்பாயாக! என்றென்றும் நீ என் பதியாயிருக்கிறாய். எப்போதும் போலவே உண்மையும் தூய்மையும் பிறப்பிக்கும் வளமும் உள்ளவளாயிருக்கிறாய். உன்னுடைய விசுவாசம் விசு வாசிகளையும், உன் தூய்மை கன்னிகைகளையும், உன் பிறப்பிக்கும் வளமை ஆலயங்களையும் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் எனக்கு அளிக்குமாக!

35, ஒரு ஆன்மாவில் மாதா வேரூன்றிய பின் அவர்களால் மட்டுமே நிகழ்த்தக்கூடிய வரப்பிரசாத அற்புதங்களை அதில் நிகழ்த்துகிறார்கள். ஏனென்றால், தூய்மையிலும் வளமையிலும் இதுவரை நிகரில்லாதவளும் இனி மேல் எப்போதும் நிகர் அற்றவளுமாகிய, பிறப்பிக்கும் வளமையுள்ள கன்னிகை மாமரியேயாம். இதுவரை இருந்தவற்றிலும் இனிமேல் இருக்கப் போகின்றவற்றிலும் மிகப் பெரிதான ஒன்றை : கடவுள் - மனிதனை'' பரிசுத்த ஆவியுடன் மாமரி தோற்றுவித்தார்கள். இதன் காரணமாக பிந்திய காலங்களில் வரவிருக்கும் மிகப் பெரிதானவற்றையும் அவர்கள் தோற்றுவிப்பார்கள். உலக முடிவில் வாழவிருக்கும் பெரிய அர்ச்சிஷ்டவர்களை உரு வாக்குதலும் பயிற்றுவித்தலும் மாதாவுக்கெனவே வைக்கப் பட்டுள்ளன. ஏனென்றால் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தோடு, தனிச்சிறந்த ஆச்சரியத்துக்குரிய இக்கன்னிகையால் மட் டுமே தனிச் சிறந்த அசாதாரண காரியங்கள் ஆற்றப்பட முடியும்.

36, ஒரு ஆன்மாவில் மரியாயைக் காண்கின்ற அவர் களின் பத்தாவாகிய பரிசுத்த ஆவி, அந்த ஆன்மாவிடம் பறந்து சென்று அதனுள் முழுவதும் புகுகின்றார். தன்னை , அந்த ஆன்மாவுக்கு ஏராளமாய்ப் பொழிந்து தருகின்றார். அந்த ஆன்மா எந்த அளவுக்கு மாதாவுக்கு இடமளிக்கின் றதோ அந்த அளவுக்குத் தன்னை அதற்குக் கொடுக்கின்றார். இக்காலத்தில் பரிசுத்த ஆவி ஆன்மாக்களில் ஏன் பளிச் சிடும் ஆச்சரியங்களைச் செய்யவில்லையென்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அவருடைய உண்மையுள்ள 'பிரிக்க முடியாத மணவாளியுடன் போதிய ஐக்கியத்தை ஆன்மாக்களில் அவர் காண முடியவில்லை. 'பிரிக்க முடியாத மணவாளி' என்று கூறுகிறேன். ஏனென்றால் பிதாவுடைய வும் சுதனுடையவும் அன்பாக இருக்கிற அவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் தலைவரான சேசு கிறீஸ்துவை அவர்களில் உருவாக்குவதற்கு, மரியாயை ஆட்கொண்ட நேர முதல், அக்கன்னிகையை அவர் ஒருபோதும் விட்டு நீங்கியதில்லை. ஏனெனில் மாதா எப்பொழுதும் பிரமா ணிக்கத்துடனும் பிறப்பிக்கும் வளத்துடனும் உள்ளார்கள்.

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.