இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறந்த சிறுவன் உயிர் பெற்றான்!

முஞ்ஞானோ ஊருக்கு அர்ச். பிலோமினம்மாளைக் கொணர்ந்த சங். லூஸியாவின் பிரான்ஸிஸ்கோ என்ற குருவின் ஒன்று விட்ட சகோதரியின் மகன் எட்டு வயதுச் சிறுவன். 

அவனுக்கு இனந்தெரியாத ஒரு நோய். என்ன சாப்பிட்டும் என்ன மருத்துவம் பார்த்தும் அவன் நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டிருந்தான். அப்படியே நோய் முற்றி இறந்தான்.

சிறுவன் இறந்ததை தாய் ஒப்புக்கொள்ள முடியாமலிருந்தாள். ஏதாவது ஒன்று நடந்து அவன் பிழைத்துக் கொள்ள மாட்டானா என்று எதிர்ப்பார்த்தாள். ஆனால் பயனில்லை. 

இறுதியில் தன் மகன் இறந்தே விட்டான் என்ற உண்மை தாய்க்குப் புலப்பட்டதும் அவள் அர்ச். பிலோமினம்மாளை ஒரு மறைந்த நம்பிக்கையுடன் நோக்கினாள். 

அவள் வீட்டின் சுவரில் வைக்கப்பட்டிருந்த பிலோமினம்மாளின் சிறு சுரூபத்தை எடுத்து இறந்த தன் மகன் சரீரத்தில் போட்டு கதறி அழுது மன்றாடினாள். 

சற்று நேரம் சென்றதும் இறந்த சிறுவனின் கண்கள் திறந்தன. அவன் நற்சுகமாய் எழுந்து தன் தாயிடம் சென்றான்.