அர்ஃபக்சாத்தின் தேவதூதர்!

(இரண்டாவது வேதபோதகக் கனவு)

ஒரு மிக உயர்ந்த மலைக்கு முன்பாக நான் இருப்பதாகத் தோன்றியது. அதன் உச்சியில் ஒரு தேவதூதர் நின்றுகொண்டிருந்தார் அவர் எவ்வளவு பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டிருந்தார் என்றால் வெகு தொலைவிலிருந்த நாடுகளும் அவரால் ஒளி பெற்றன. மலையைச் சுற்றி அறியப்படாத மக்களினங்களின் ஒரு மிகப் பரந்த இராச்சியம் இருந்தது.

சம்மனசானவர் தம் வலக்கரத்தில் மிகப் பிரகாசமான தீச்சுவாலையைப் போலச் சுடர்வீசிய ஒரு வாளை அவர் உயர்த்திப் பிடித்திருந்தார். அதே வேளையில் அவருடைய வலக்கரத்தால், சுற்றிலுமிருந்த பிரதேசங்களை அவர் எனக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். “ஆஞ்சலுஸ் அர்ஃபக்ஸாத் வோக்காத் வோஸ் அத் ப்ரோலியாண்டா பெல்லா தோமினி எத் அத் கோங்க்ரேகாந்தோஸ் போப்புலோஸ் இன் ஹோர்ரியா தோமினி - ஆண்டவரின் போர் களை நடத்தவும், மக்களினங்களை ஆண்டவரின் களஞ்சியத்தில் கொண்டு வந்து சேர்க்கவும் அர்ஃபக்ஸாதின் தேவதூதர் உன்னை அழைக்கிறார்” என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் அவருடைய வார்த்தை மற்ற சந்தர்ப்பங்களில் இருந்தது போல ஒரு கட்டளை போலத் தொனிக்கவில்லை. மாறாக அது ஓர் ஆலோசனை போல ஒலித்தது.

(அர்ஃபக்ஸாத் சேமின் மகன், நோவேயின் பேரன் (ஆதி.10: 22))

நான் பெயர் அறிந்திராத, அல்லது நினைவில் வைத்திருக்க முடியாத சம்மனசுக்களின் அற்புதமான கூட்டம் ஒன்று அவரைச் சூழ்ந்து கொண்டது. அவர்களிடையே லூயிஸ் கோல்லேயும் இருந்தார். (லூயிஸ் கோல்லே பரிசுத்தமான மரணம் அடைந்த ஒரு பரிசுத்த சிறுவன் ஆவார். இவர் டொன் போஸ்கோவுக்கு இரகசியக் காரியங் களை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி அவருக்குத் தோன்றுவது வழக்கம்.)

அவரைச் சுற்றி சிறுவர்களின் பெருங்கூட்டம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அவர் தேவ தோத்திரப் பாடல்களை அவர் களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர்களோடு சேர்ந்து அவரும் பாடினார்.

மலையைச் சுற்றி, அதன் அடிவாரத்தின் அருகிலும், அதன் சரிவுகளின் மீதும், மனிதர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது ஓர் அந்நிய மொழியாக இருந்தது. என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வானதூதர் சொன்னதை மட்டும் தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் கண்டதை விளக்கிச் சொல்ல என்னால் முடியாது. அவற்றை ஒருவன் பார்க்கலாம், புரிந்து கொள்ளலாம், ஆனால் விளக்கிச் சொல்ல முடியாது. ஒரே சமயத்தில் என்னால் அடுத்தடுத்து தனித்தனி பொருட்களைப் பார்க்க முடிந்தது. அவை எனக்கு முன்னிருந்த காட்சியைத் தொடர்ந்து மாற்றப் போகிறவையாக இருந்தன.

ஆகவே, ஒரு சமயம், அது மெசோப்போத்தாமியா சமவெளி என்று எனக்குத் தோன்றியது. வேறொரு சமயம் அது ஒரு மிக உயர்ந்த மலை என்று தோன்றியது. அர்ஃபக்ஸாதின் தேவதூதர் நின்றுகொண்டிருந்த அதே மலை, ஒவ்வொரு கணமும் ஆயிரம் விதமாக மாறிக் கொண்டேயிருந்தது. இதன் காரணமாக, அங்கே வசித்த மக்கள் அலைந்து திரியும் நிழல்களைப் போலத் தோன்றி னார்கள்.

இந்த மலைக்கு முன்னும், இந்த முழு பயணத்தின் போதும், நான் மேகங்களுக்கும் மேலாக என்பது போல மிகப் பிரமாண்ட மான உயரத்திலுள்ள ஒரு மிக விசாலமான இடத்திற்கு உயர்த்தப் பட்டிருந்ததாகத் தோன்றியது. அந்த உயரத்தை, அந்த அகலத்தை, அந்த ஒளியை, அந்தப் பிரகாசத்தை, அந்தக் காட்சியை வார்த்தை களில் எடுத்துரைக்க யாரால் முடியும்! அதை ஒருவன் அனுபவித்து மகிழலாம், ஆனால் அது விளக்கப்பட முடியாதது.

இந்தக் காட்சியிலும், மற்ற காட்சிகளிலும் என்னோடு பலர் இருந்தார்கள். தைரியம் கொள்ளும்படி அவர்கள் எனக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருந்தனர். சலேசியர்கள் வழியோரம் நின்று விடாதபடி அவர்கள் இவர்களையும் தூண்டிக் கொண்டிருந் தார்கள். நான் முன்னேறிச் செல்லும்படி ஆர்வத்தோடு என் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவர்களில் என் பிரியமுள்ள சிறுவன் லூயிஸ் கோல்லேயும், அவனைச் சூழ்ந்திருந்த சிறுவர்களின் பாடல்களை எதிரொலித்துக் கொண்டிருந்த தேவதூதர்களின் அணியினரும் அடங்கியிருந்தனர்.

அதன்பின் நான் ஆப்ரிக்காவின் மத்தியில் ஒரு மிகப் பரந்த பாலைவனத்தில் இருந்ததாகத் தோன்றியது. அங்கே தரையின்மீது பெரிய, ஊடுருவிக் காணக் கூடிய எழுத்துக்களில், “நீக்ரோக்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மத்தியில் காமின் தூதர் நின்றார். அவர் தொடர்ந்து, “செஸ்ஸாபித் மாலேதிக்தும் - சாபம் நின்றுபோகும். படைத்தவரின் ஆசீர்வாதம் ஒழுக்கமற்ற அவருடைய மக்களின்மீது இறங்கி வரும். தேனும், குங்கிலியமும் பாம்புகளின் கடிகளைக் குணமாக்கும்; அதன்பின் காமின் மக்களின் கெட்ட நடத்தை
கொண்டேயிருந்தார். அந்த மனிதர்கள் அனைவரும் நிர்வாணமா யிருந்தார்கள்.

அதன்பின் நான் ஆஸ்த்ரேலியாவில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. இங்கேயும் ஒரு தேவதூதர் நடந்து கொண்டும், மக்களைத் தெற்கு நோக்கி நடக்கச் செய்து கொண்டும் இருந்தார். ஆஸ்திரேலியா ஒரு கண்டமாக அல்ல, மாறாக, பல தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டமாக இருந்தது. அந்தத் தீவுகளில் வசித்தோர் எல்லோரும் குணத்திலும் தோற்றத்திலும் வேறுபட் டிருந்தார்கள். அங்கு வசித்த குழந்தைகளின் கூட்டமொன்று எங்களை நோக்கி வர முயன்று கொண்டிருந்தது. ஆனால் தொலை வாலும், தங்களைப் பிரித்த கடல்களாலும் அவர்கள் தடுக்கப் பட்டனர். ஆனால் அவர்கள் டொன் போஸ்கோவையும், சலேசியர் களையும் நோக்கித் தங்கள் கரங்களை நீட்டியபடி, “எங்கள் உதவிக்கு வாருங்கள்! உங்கள் தந்தையர் தொடங்கி வைத்த வேலையை நீங்கள் ஏன் முடித்து வைப்பதில்லை?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் நின்று விட்டார்கள். ஆனால் மற்றவர்கள் நம்பமுடியாத முயற்சிகளை மேற்கொண்டு வெறிகொண்ட மிருகங்களைக் கடந்து வந்து, நான் அறியாதவர்களாகிய சலேசியர்களோடு ஒன்றாக சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து, “பெனதிக்துஸ் குயி வேனித் இன் நோமினே தோமினி - ஆண்டவரின் திருப்பெயரால் வருபவர் ஆசீர்வதிக்கப்பட்டவரே” என்று பாடத் தொடங்கினர்.

சற்று தூரத்தில் எண்ணற்ற தீவுகளின் கூட்டத்தைக் காண முடிந்தது. ஆனால் அவற்றைப் பற்றிய விவரங்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. தேவ பராமரிப்பானது சலேசியர்களுக்கும், ஆனால் நிகழ்காலத்தில் அல்ல, எதிர்காலத்தில், வேதபோதகக் களங்களில் ஒரு பகுதியை சலேசியர்களுக்குத் தர சித்தம் கொண்டுள்ளது என்பதைத்தான் நான் கண்ட எல்லாமும் குறிக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அவர்களுடைய உழைப்பு பலனளிப் பதாக இருக்கும். ஏனெனில், அவருடைய நன்மைகளுக்குத் தகுதி யற்றவர்களாக அவர்கள் தங்களை ஆக்கிக் கொள்ளாத வரைக்கும், ஆண்டவருடைய கரம் இடைவிடாமல் எப்போதும் அவர்களோடு இருக்கும்.

இப்போது நம்மோடு இருக்கிற சலேசியர்களில் ஐம்பது பேருக்குத் தைலமிட்டு, அவர்களை நீண்ட காலத்திற்கு உயிரோடு வைத்திருக்க மட்டும் என்னால் முடியுமானால், நாம் தொடர்ந்து பிரமாணிக்கமுள்ளவர்களாக இருந்தால், இன்னும் 500 வருடங்களில் தேவ பராமரிப்பு சலேசியர்களுக்காக எப்படிப்பட்ட பிரமிப்புக்குரிய எதிர்காலத்தை வைத்திருக்கிறது என்பதை அவர்கள் காண்பார்கள்!!

இன்னும் 150 அல்லது 200 வருடங்களுக்குள் சலேசியர்கள் உலகத்தின் எஜமானர்களாக (அதாவது, உலகம் முழுவதிலும் வழிநடத்துபவர்களாக) இருப்பார்கள்.

தீயவர்களுக்கும் கூட நாம் எப்போதும் ஏற்புடையவர்களாக இருப்போம். ஏனெனில் நம்முடைய விசேஷ களமானது, நல்லவர்களும் கெட்டவர்களுமான அனைவரின் இரக்கத்தையும், நல்ல மனதையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. நாம் அழிக்கப்படுவதைக் காண விரும்புகிற சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களுடையது தனிமைப்படுத்தப்பட்ட முயற்சிகளாகவே இருக்கும், மற்றவர்களுடைய ஆதரவு அவற்றிற்குக் கிடைக்காது.

சலேசியர்கள் உலக சுகங்களின் மீதுள்ள ஆசையில் சிக்கிக் கொண்டு, அதனால் தங்கள் வேலையைத் தவிர்க்காமல் இருப்பது தான் நமக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையாகும். இப்போது நம் கையில் உள்ள வேலைகளை மட்டும் தொடர்ந்து செய்வதும், பேராசை என்னும் தீமைக்குத் தங்களைக் கையளிக்காமலும் இருந்தாலே, அவர்கள் ஒரு நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டை, ஓர் உத்தரவாதத்தைக் கொண்டிருப்பார்கள்.

"கிறீஸ்தவர்களின் சகாயமாகிய மாமரியின் மகன்களின்” படைப்பாகிய பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தவும், அதைப் பரப்பவும் நாம் முயற்சிகள் எடுப்போமானால், உலக ரீதியாகவும் சலேசிய சபை செழிப்புறும். இந்தக் குழந்தைகளில் சிலர் மிகவும் நல்லவர்கள்! அவர்களுடைய நிறுவனம் தங்கள் தேவ அழைத்தலின் (பிற்கால தேவ அழைத்தல்களில்) உறுதியாயிருக்கக் கூடிய வீரமிக்க சக துறவிகளை நமக்குத் தரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

டொன் போஸ்கோ அதிகத் தெளிவாகக் கண்டு, நன்கு நினைவில் வைத்திருந்ததும், முதல் தடவை விவரித்துக் கூறியதுமான காரியங்கள் இவைதான். ஆனால் பிற்காலத்தில் அவர் ஒரு வேக மான, கடந்து போகிற காட்சியில் தாம் கண்ட மிகப் பல காரியங் களை டொன் லமோய்னிடம் கூறினார். அவர் நாடுகளையும் நகரங் களையும், கடல்களையும், மக்களினங்களையும், தீவுகளையும், மக்களினங்களின் பழக்க வழக்கங்களையும், விவரிக்க முடியாத காட்சிகளையும் கண்டார். இது பூமியின் தெற்கு அரை வட்டத்தைச் சுற்றிய ஒரு சுற்றுவட்டப் பயணமாக இருந்தது.

அர்ஃபக்ஸாதின் தேவதூதர்: அர்ஃபக்ஸாத் என்பவர் நோவேயின் பேரன்களில் ஒருவர் (ஆதி. 10:22). மக்களினங்களைப் பற்றிய ஆராய்ச்சிப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, அவர் மெசப்பொத்தாமிய மக்களின் தந்தை என்று சிலர் சொல்கிறார்கள் வேறு சிலர் அதற்குப் பதிலாக, அவரை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலுள்ள மக்களினங்களின் தந்தையாகக் காண்கிறார்கள். அவர் நிச்சயமாக ஏதோ ஒரு ஆசிய மக்களினத்தின் மூதாதையராகத் தான் இருந்தார். டொன் போஸ்கோ அர்ஃபக்ஸாதின் சம்மன சானவரை சீனாவுடன் தொடர்புபடுத்தினார். இந்தக் காட்சிக்குப் பிறகு, சலேசிய வேதபோதகங்களோடு அவர் அர்ஃபக்ஸாதை அடிக்கடி தொடர்புபடுத்திப் பேசினார். இந்தக் காட்சியில் வேத போதகங்களைப் பற்றிய தமது முந்தைய கனவுகள் உறுதிப்படுத்தப் பட்டதை அவர்கண்டார்.