இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா மீது பக்தி கொண்டிருப்பது இரட்சண்யம் அடைய எல்லோருக்கும் தேவையானது.

40. சேசு சபையைச் சேர்ந்த பக்தியுள்ள கற்றறிவாளர் சூவாரெஸ் என்பவரும், பக்தி விநயமும் கல்வித் தேர்ச்சியும் பெற்றவருமான லூவென்நகர் டாக்டர் யுஸ்துஸ் லிப்ளியுஸ் என்பவரும் இன்னும் பலரும் மாதா மீது பக்தி கொண்டி ருப்பது இரட்சண்யத்திற்குத் தேவையானது என்பதை வாதத்திற்கிடமின்றி நிச்சயித்திருக்கிறார்கள். 

திருச்சபையின் வேதபாரகர்களின் போதனையிலிருந்து இதை அவர்கள் நிரூபிக்கிறார்கள். இவர்களுள் அர்ச். அகுஸ்தீன், எடெஸா நகர் தியாக்கோனான அர்ச். எப்ரேம், ஜெருசலேம் அர்ச். சிரில், கான்ஸ்தாந்திநோபிள் அர்ச். தாம்சன் அருளப்பர், அர்ச். ஆன் செலம், அர்ச். பெர்னார்ட், அர்ச். பெர்னார்டின், அர்ச், தோமாஸ், அர்ச். பொன வெந்தூர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

மேலும் மாதா மீது மரியாதையும் அன்பும் இல்லாதிருப்பது தீர்ப்பிடப்படுவதின் நிச்சயமான அடையாளமென்றும், மாதாமேல் உண்மையாகவும் முழுவ தும் பக்தி பூண்டிருப்பது முன் குறிக்கப்படுவதன் நிச்சயமான அடையாளமென்றும் பதிதர்களாயிருந்த ஒகோலம் பாதி யுஸ்ம் பிறரும் கூட கருத்துக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் எண்பிக்கின்றனர்.

41. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படும் மாதிரிகளும் வசனங்களும் இதை நிரூபிக்கின் றன. அர்ச்சிஷ்டவர்களின் அபிப்பிராயங்களும் உதாரணங் களும் இதை உறுதிப்படுத்துகின்றன. அறிவும் அனுபவ மும் அதைக் கற்பித்து விளக்கம் செய்கின்றன. சாத்தானும் அவனுடைய கெட்ட தூதர்களும் கூட உண்மையின் பலத்தால் உந்தப்பட்டு தங்கள் விருப்பத்துக்கும் மாறாக பல தடவைகளில் இதை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட டுள்ளனர். இவ்வுண்மைக்கு ஆதரவாக திருச்சபையின் வேதபாரகருடையவும் பிதாக்களுடையவும் உரைகளிலி ருந்து நான் சேகரித்தவற்றுள், விரியுமென்றஞ்சி, ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு எடுத்துக் கூறுகிறேன்:

'ஓ ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே! சர்வேசுரன் யார் யாரை இரட்சிக்க விரும்புகிறாரோ, அவர்களுக்குக் கொடுக்கும் மீட்பின் படைக்கலமே உம்மீது அவர்கள் கொள்ளும் பக்தி '' என்று உரைக்கிறார் அர்ச். தாமசின் அருளப்பர்.

42. இவ்வுண்மையை நிரூபிக்கும் அநேக சம்பவங்களை இங்கு நான் கூறமுடியும். அவற்றுள் ஒன்று அர்ச். பிரான் சிஸின் வாழ்க்கைக் குறிப்பில் காணப்படுகிறது.

(1) அவர் பரவசமாயிருக்கையில் ஓர் பெரிய ஏணி பரலோகம் வரை எட்டக்கூடியதாகத் தோன்றியது. அதன் உச்சியில் தேவ அன்னை அமர்ந்திருந்தார்கள். இவ்வன்னை வழியாகவே நாம் பரலோகத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட்டது.

(2) இன்னொரு சம்பவம் அர்ச். சாமிநாதரின் வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அவர் கார்கசோன் என்ற இடத்திற்கருகே ஜெபமாலையைப் பற்றிப் பிரசங்கித் துக்கொண்டு வந்தார். அங்கு ஒரு பரிதாபத்துக்குரிய பதிதன் இருந்தான். அவனை பதினையாயிரம் பேய்கள் பிடித்திருந்தன. 

இந்தப் பசாசுக்கள் மரியாயின் பக்தி பற்றிய அநேக ஆறுதலான உண்மைகளை மாதாவின் கட்டளையினிமித்தம் மிக வெறுப்பு வேதனையுடன் வெளி யிட்டன. அவை எவ்வளவு தீர்க்கமாகவும் தெளிவாகவும் அவ்வுண்மைகளைக் கூறின வென்றால் மாதா மீது நமக்கு ஏதாவது பக்தி இருக்குமானால் இந்த உண்மைச் சம்பவத்தை யும், மன வெறுப்புடன் சாத்தான் மரியாயின் பக்திக்குச் . செலுத்திய மரியாதையையும் வாசித்து ஆனந்தக் கண்ணீர் விடாமல் இருக்க முடியாது.