இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தூய அன்பெனும் வரம்

215. அரிய நேசத்தினுடைய இம்மாதா (சர்வ. 24, 24) உன் இருதயத்திலிருந்து எல்லா வீண் சந்தேகங்களை யும் தேவையற்ற அடிமைப் பயத்தையும் அகற்றுவார்கள். தன் குமாரனின் கட்டளைகளின் வழிகளில் நீ விரைந்து செல்லும்படியாக கடவுளின் பிள்ளைகளுக்குரிய புனித விடுதலையைத் தந்து, உன் இருதயத்தைத் திறந்து பெரி தாக்குவார்கள். தூய அன்பால் உன் இருதயத்தை நிரப்புவார்கள். அவ்வன்பின் திரவியசாலை அவர்களிடமே உள்ளது. (எண். 169). இதனால், அன்பாக இருக்கும் கடவுள் மீது அச்சத்தோடு நீ காரியங்களைச் செய்து வந்துள்ளது போல் அல்ல, ஆனால் இனி தூய அன்போடே அவற்றைச் செய்வாய், கடவுளை நீ உன் அன்புள்ள தகப் பனாக நோக்குவாய். அவரை எப்பொழுதும் பிரியப் படுத்த முயற்சிப்பாய். ஒரு குழந்தை தன் தந்தையிடம் பேசுவது போல் நீ அவரிடம் நம்பிக்கையுடன் பேசி உரையாடுவாய். அவரை நோகச் செய்யும் துர்ப்பாக்கி யம் நேரிட்டுவிட்டால் உடனே அவர் முன்பாக உன் னைத் தாழ்த்தி தாழ்ச்சியுடன் அவரிடம் மன்னிப்புக் கேட்பாய். குழந்தைத் தன்மையுடன் உன் கரங்களை அவரை நோக்கி நீட்டுவாய். உன் பாவத்திலிருந்து எழு வாய். உன் இருதயம் நிறைந்த அன்போடு, குழப்பமோ கலக்கமோ அடையாமல் மனத்தளர்வின்றி அவரை நோக்கிச் செல்லும் பாதையில் தொடருவாய்.