இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிந்திய காலங்களின் அப்போஸ்தலர்கள்

55. ஆசீர்வதிக்கப் பெற்ற தம் அன்னை இதுவரையில் இருந்ததை விட அதிகமாக அறியப்பட வேண்டும், அதிக மாக நேசிக்கப்பட வேண்டும், அதிகமாக மதிக்கப்பட வேண்டும், என கடவுள் விரும்புகிறார். நான் பின்னால் கூறப்போகும் அந்தரங்க உத்தமமான பயிற்சியை, பரிசுத்த ஆவியின் அருளுடனும் ஒளியுடனும் முன் குறிக்கப்பட்டவர்கள் செய்யப் புகுவார்களானால் கடவுளின் இவ்விருப்பம் நிச்சயம் நடைபெறும். 

அப்போது அவர்கள் அந்த அழகு மிக்க சமுத்திர நட்சத்திரத்தை விசுவாசம் அனுமதிக்கும் அளவிற்கு தெளிவுறக் காண்பார்கள். அவ்வன்னையின் வழிநடத்துதலால் புயலுக்கும் கடற் கொள்ளைக்காரருக்கும் தப்பி பத்திரமாகத் துறை வந்து சேருவார்கள். இவ்வரசியின் வியத்தகும் சிறப்புக்களைக் காண்பார்கள். கண்டு அவர்களுடைய பிரஜைகளாகவும் அன்பின் அடிமைகளாகவும் தங்களை முழுவதும் அவர்களுக்கு அர்ப்பணிப்பார்கள், அவர்களின் இனிமையையும் தாயன்பையும் சுவைப்பார்கள். மிகவும் அன்புள்ள குழந்தைகளைப் போல அவர்களைக் கனிவுடன் நேசிப்பார்கள். 

இவ்வன்னையின் இரக்க நிறைவை அவர்கள் ஏற்றுக் கொண்டு அவர்களின் உதவி தங்களுக்குத் தேவை என்பதை உணர்வார்கள். எல்லாவற்றிலும் தங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் நடுவில் இவ்வன்னையை மத்தி யஸ்தியாகவும் அன்புடன் பரிந்து பேசுகிறவளாகவும் கொண்டு அவர்களின் உதவியை நாடி வருவார்கள், சேசுகிறிஸ்துவிடம் செல்ல மிக எளிதான, மிக உத்தம், மிகக் குறுகிய வழி இத்தாய்தான் என்பதை அவர்கள் உணர்ந்து, தாங்கள் சேசுக்கிறிஸ்துவுக்கு முழுச் சொந்தமாகும்படி தங்களை முழுவதும் எவ்வித மறுப்புமின்றி ஆன்மா சரீரம் யாவற்றையும் இவ்வன்னைக்கு முழுச் சரணாகத் தந்து விடுவார்கள்.

56. ஆனால் மரியாயின் இவ்வூழியர்கள் யார்? மாதா வின் இவ் அடிமைகள் யார்? கன்னித்தாயின் இக்குழந்தைகள் யார்?

இவர்கள் எரியும் நெருப்பாக இருப்பார்கள். (''எரியும் நெருப்பே உம் ஊழியர்" - சங். 103 : 4.) ஆண்ட வரின் ஊழியரான இவர்கள் தேவ சிநேகமெனும் நெருப்பை எங்கும் மூட்டுவார்கள்.

மாதா தன் எதிரிகளை ஊடுருவும் கூரிய அம்பாக ( சங். 126:4) அவர்களின் வலிமை மிகுந்த கரத்தில் இவர்கள் இருப் பார்கள்,

பெரும் துன்பமெனும் நெருப்பால் சுத்தமாக்கப்பட்டு ஆண்டவருடன் நெருங்கிய ஐக்கியமாக்கப்பட்ட லேவியின் புத்திரராக (உபா . 10:15.) இருப்பார்கள். இவர்கள் தங்கள் இருதயங் களில் அன்பென்னும் பொன்னையும் தங்கள் மனதில் ஜெப் மென்னும் தூபத்தையும் தங்கள் சரீரத்தில் ஒறுத்தல் என்னும் மீறையையும் சுமந்து வருவார்கள். எல்லா இடங் களிலும் எளியவர்க்கும் சிறியோருக்கும் சேசு கிறிஸ்துவின் நல்ல வாசனையையும், வலியாருக்கும் செல்வந்தருக்கும் ஆங்காரிகளான உலகத்தவர்க்கும் மரணத்தின் நாற்றத்தை யும் கொண்டு வருவார்கள்.

57. பரிசுத்த ஆவியின் மிக மெல்லிய சுவாசத்தினால் இவர்கள் ஆகாயத்தில் இடி முழங்கும் மேகங்களாகப் பறந்து செல்வார்கள். எப்பொருளின் மீதும் பற்றற்றவர்களாய், எதைக் கண்டும் ஆச்சரியப்படாதவர்களாய், எதனாலும் குழப்பமடையாதவர்களாய் கடவுளின் வார்த்தையெனும் மழையையும் நித்திய வாழ்வெனும் மாரியையும் பொழிவார் கள். பாவத்தை எதிர்த்து முழங்குவார்கள். உலகத்தைப் புயலென எதிர்ப்பார்கள். சாத்தானையும் அவன் சகாக்களையும் கீழே வீழ்த்துவார்கள். தேவனுக்குப் பதிலாட் களாய் யாரிடம் அனுப்பப்படுகிறார்களோ அவர்களைக் கடவுளின் வார்த்தை எனும் இருபுறமும் கருக்குள்ள வாளி னால் முழுவதும் ஊடுருவச் செய்வார்கள்.

58. பிந்திய காலங்களின் அப்போஸ்தலர்களாக அவர் கள் இருப்பார்கள். சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கு வாக்கு வன்மையையும் பலத்தையும் அருள்வார். அவற்றால் அவர்கள் இறைவனின் எதிரிகளிடமிருந்து மகிமையான கொள்ளைப் பொருள்களைக் கொண்டு செல்வார்கள். மற்றக் குருக்கள், திருச்சபை அதிகாரிகள், தேவ ஊழியர்கள் நடுவில் பொன் வெள்ளி எதுவும் இல்லாமல் அவர்கள் அயர்ந்து உறங்குவார்கள். அதைவிட சிறப்பாக கவலை யின்றி ஓய்வு கொள்வார்கள். ஆயினும் சர்வேசுரனின் மகிமை, ஆன்மாக்களின் ஈடேற்றம் என்னும் ஒரே தூய எண்ணத்தால் நிரப்பப்பட்டு பரிசுத்த ஆவி அவர்களை எங்கெங்கு அழைக்கிறாரோ அங்கெல்லாம் செல்வதற்கு ஏற்ற வெள்ளியினாலான புறாவின் இறக்கைகளைக் கொண்டி ருப்பார்கள். வேதப்பிரமாணத்தின் முழு நிறைவேற்ற மாகிய பரம அன்பு என்னும் பொன்னை அவர்கள் போதித்த இடங்களிலெல்லாம் விட்டுச் செல்வார்கள்.

59. சேசு கிறிஸ்துவின் தரித்திரம், தாழ்ச்சி, உலக வெறுப்பு, அன்பு என்னும் அவரின் அடிச்சுவட்டில் நடக்கும் அவருடைய பிரமாணிக்கமுள்ள சீடராக அவர்கள் இருப்பார்கள். சுத்தமான உண்மையுடன், உலக மேற் கோள்படியல்லாமல் பரிசுத்த சுவிசேஷத்திற்கு ஏற்புடைய கடவுளின் நேரான பாதையைக் கற்பிப்பார்கள். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் : யாருக்கும் சலுகை காட்டாமல், எந்த ஒரு மனிதனுக்கும் அவன் எவ்வளவு பலம் பொருந்திய வனாயினும் அஞ்சாமல், யாரையும் சட்டை பண்ணாமல், விட்டு வைக்காமல் அவர்கள் கடவுளின் நேர் பாதையை படிப்பிப்பார்கள். அவர்களுடைய வாயில் இறைவனின் வார்த்தை என்னும் இருபுறமும் கூர்மையுள்ள வாள் இருக்கும். அவர்களுடைய தோளில் சிலுவை என்னும் இரத்தம் தோய்ந்த சின்னம் இருக்கும். அவர்களுடைய வலது கரத்தில் பாடுபட்ட சிலுவை இருக்கும். அவர்கள் இடது கரம் ஜெபமாலையைப் பிடித்திருக்கும். அவர்கள் இருதயங்களில் சேசு மரியே என்னும் திருநாமங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவர்களுடைய நடை யு டை பாவனையிலெல்லாம் சேசு கிறிஸ்துவின் ஒழுக்கமும் பரித் தியாகமும் இருக்கும்.

கடவுளற்ற மனிதரிடையிலும் விக்கிரக ஆராதனைக் காரர்... மத்தியிலும், கடவுளின் இராச்சியத்தை விரிவுபடுத்த உந்தரின் ஆணை பெற்று மாதாவால் உருவாக்கப்பட்டு வரவிருப்பவர்கள் இத்தகையோராயிருப்பார்கள். ஆனால் இது எப்போது நடைபெறும்? எவ்வாறு நடைபெறும்? சர்வேசுரன் ஒருவரே அறிவார். நம்முடைய பாகத்தில் நாம் செய்ய வேண்டியது மவுனமாயிருந்து, செபித்து, பெருமூச்சு விட்டுக் காத்திருப்பதேயாகும். மிகுந்த ஆவ லோடு காத்திருந்தேன்'' (சங். 39:2).

கன்னியில் உத்தம கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.