மாபெரும் குற்றவாளிகள்

தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு முன் இருப் பவையும், அவர்கள் சாதாரணமாகத் தவிர்க்க முடியா தவையும், முறைப்படி எச்சரிக்கப்படவில்லை என்றால், அடிக்கடி அவர்கள் தவறி விழுபவையுமான ஆபத்துக் களைப் பற்றி ஏதும் தெரியாதவர்களாக வளர்க்கும் தாய் தந்தையர்தான் இன்றைய நாளின் மிகப் பெரும் குற்றவாளி களாக இருக்கிறார்கள்.

இந்தக் காரியங்களைப் பற்றியெல்லாம் தங்கள் குழந்தைகளிடம் பேசினால், அவர்களுடைய மாசற்ற தனத்தைத் தாங்களே அழிப்பது போலாகி விடும் என்றும், அதற்குத் தாங்கள் துணியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அப்படிச் செய்யும்படி அவர்களிடம் சொல்லத் துணிந்தவன் யார்?

ஆனால் மிகச் சரியாக அவர்கள் செய்வது இதைத் தான். தங்கள் குழந்தைகள் தலைகீழாக விழ வாய்ப்பிருக்கிற பெரும் படுகுழியை அவர்கள் வேண்டுமென்றே அவர்களிட மிருந்து மறைக்கிறார்கள்.

வாழ்வின் மிக அடிப்படையான, மிக அத்தியாவசிய மான உண்மைகளை, கூடிய சீக்கிரத்தில் அவர்களுக்கு எப்படியும் தெரியப் போகிற உண்மைகளை, தங்கள் பிள்ளைகள் அறியாதபடி பெற்றோர் பார்த்துக் கொள் கிறார்கள்.

இனி, இன்னும் நேரமிருக்கும்போதே விவேகத் தோடு, ஆனால் தெளிவாக இந்த உண்மைகள் குழந்தைகளுக்கு விளக்கப்படவில்லை என்றால், அவர்களுடைய மனதில் தீமை பயக்கிற ஒரு வித வினோதப்பிரியம் தூண்டப் படுகிறது. இது மற்ற பிள்ளைகளுடனும், வேலைக்காரர் களுடனும், கெட்ட நண்பர்களுடனும் அவர்கள் செய்யும் உரையாடல்களாலும், ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு களாலும், தொடுதல்களாலும் அதிகரிக்கிறது.

வெட்கங்கெட்ட பேச்சுக்கள், அசிங்கமான படங்கள், அசுத்தமான விளக்கங்கள் ஆகியவற்றின் மூலமும், கெட்ட புத்தகங்களை வாசித்தல், திரைப்படங்கள், (இன்று தொலைக்காட்சி மற்றும் வலைத்தளங்களைப்) பார்த்தல், கேளிக்கைகள் நடக்கும் இடங்களுக்குச் செல்லுதல் ஆகிய வற்றின் மூலம் இந்த ஆசை இன்னும் கூர்மையாக்கப் படுகிறது. இறுதியாக புலனின்ப உணர்வு குழந்தையின் மனதை இறுகப் பற்றிக் கொள்கிறது. அகற்றுவதற்கு மிகவும் கடினமான கெட்ட உள்ளுணர்வுகள் குழந்தையின் இருதயத்தில் உருவாகின்றன.

இனி, தாய் தகப்பன் தொடக்கத்திலிருந்தே அந்தக் குழந்தைக்குக் கற்பிக்க வேண்டியதைக் கவனமாகவும், சுத்தமாகவும், ஆனால் மிகவும் ஆணித்தரமாகவும் கற்பித்து வந்திருந்தார்கள் என்றால், இந்த எல்லா ஆபத்துக்களும் தவிர்க்கப்பட்டிருக்கும், அல்லது குறைந்த பட்சம் அவை 99% குறைக்கப்பட்டிருக்கும்.

குழந்தைகளுக்குத் தரப்படும் இத்தகைய ஞான முள்ள விளக்கங்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிப் பதற்குப் பதிலாக, தீமையின் மீது அருவருப்பைத் தூண்டி, சிறுவர், சிறுமியரின் மனங்களை அந்தத் தீமையின் பயங்கரமான விளைவுகளைப் பற்றிய ஒரு நிஜமான அச்சத்தால் நிரப்புகிறது. மேலும் ஆசாபாசம், சுய திருப்தி ஆகியவற்றின் மீதான ஏக்கங்களையும் அவை வெகுவாகத் தணித்து விடுகின்றன.

அசுத்ததனம் என்பது சம அளவில் தனி மனித னையும், குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் தாக்குகிற ஒரு தீமையாகும். நாம் ஏற்கெனவே கூறியுள்ளது போல, அது மனித குலத்தின் பெரும் சாபமாகவும், நவீன காலங்களில் பல பெரிய நாடுகளில் காணப்படும் ஒழுக்கக் கேட்டிற்கும், நாகரீகச் சிதைவிற்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது.