இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபத்தின் நிபந்தனைகள்

 ஜெபத்தின் நிபந்தனைகளைப் பற்றி சிந்திப்போம். பலர் ஜெபிக்கிறார்கள், ஆனால் தாங்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தாங்கள் ஜெபிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் ஜெபிப்பதில்லை. ""நீங்கள் கேட்டும், அடையாமல் போகிறீர்கள். ஏனெனில் உங்கள் இச்சைகளுக்குத் திருப்தியாக வேண்டுமென்று ஆகாதவிதமாய்க் கேட்கிறீர்கள்'' (யாக.4:3). நன்றாக ஜெபிப்பதற்கு, முதலாவதாக, தாழ்ச்சியுடன் ஜெபிப்பது அவசியமாகிறது. ""கடவுள் ஆங்காரிகளை எதிர்க்கிறார், தாழ்ச்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதங்களைத் தருகிறார்'' (யாக.4:6). கடவுள் ஆங்காரிகளின் விண்ணப்பங்களை நிராகரிக்கிறார், ஆனால் தாழ்ச்சியுள்ளவர்களின் அனைத்து ஜெபங்களுக்கும் பதிலளிக்காமல் அவர் அவர்களைப் போக விடுவதில்லை. ""தன்னைத் தாழ்த்துகிறவனுடைய வேண்டுதல் மேகங்களை ஊடுருவிப்போகும்; சேருகிறவரைக்கும் ஆறுதல் அடையாது; உந்நத கடவுள் பார்க்கிறவரையிலும் திரும்பிப் போகாது'' (சீராக்.35:21). அவர்கள் இது வரை பாவிகளாய் இருந்திருந்தாலும் இது மாறுவதில்லை. ""மனஸ்தாபத்தினாலே நொறுங்கித் தாழ்ச்சியுள்ள இருதயத்தை நீர் புறக்கணிக்க மாட்டீரே சுவாமி!'' (சங்.50:17). இரண்டாவதாக, நம்பிக்கையோடு ஜெபிப்பது அவசியம். ""ஆண்டவரை நம்பின எவனும் கலங்கினதில்லை'' (சீராக்.2:11). கடவுளின் வரப்பிரசாதங்களுக்காக நாம் செய்யும் மன்றாட்டுக்களில், ஒரு குழந்தை தன் தந்தையிடம் கொண்டுள்ள அதே நம்பிக்கையோடு நாம் ஜெபிக்கும்படி செய்வதற்காக, கடவுளை வேறு எந்தப் பெயரையும் அன்றி, பிதாவே என்னும் பெயரைச் சொல்லியே அழைத்து அவரிடம் ஜெபிக்கும்படியாக சேசுநாதர் நமக்குக் கற்பித்திருக்கிறார். ஆகவே நம்பிக்கையோடு ஜெபிப்பவன் ஒவ்வொரு வரப்பிரசாதத்தையும் பெற்றுக் கொள்கிறான். ""ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும்போது கேட்கிறதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவசியுங்கள். அவைகள் உங்களுக்குச் சம்பவிக்குமென்று உங்களுக்குச் சொல்கிறேன்'' (மாற்கு.11:24). சத்தியமாகவே இருக்கிற கடவுளின் வாக்குறுதிகள் மீறப்படக் கூடும் என்று யார் அஞ்ச முடியும் என்று அர்ச். அகுஸ்தினார் கேட்கிறார். கடவுள், வாக்களித்தபின், ஏமாற்றும் எண்ணத்தினாலோ, அல்லது தங்கள் மனங்களை மாற்றிக் கொள்வதாலோ, தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாதிருக்கும் மனிதர்களைப் போன்றவர் அல்லர் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது:""கடவுள் மனிதனைப் போலப் பொய் சொல்பவருமல்ல, மனித புத்திரனைப் போல் மாறுபடுகிறவரும் அல்ல. அவர் சொன்னதைச் செய்யாதிருப்பாரோ?'' (எண்.23:19). அர்ச். அகுஸ்தினார் இதன் தொடர்ச்சியாக, ஆண்டவர் தம் வரப்பிரசாதங்களை நம்மீது பொழிய விரும்பவில்லை என்றால், அவற்றைக் கேட்கும்படி மிகுந்த ஆர்வத்தோடு அவர் நமக்கு அறிவுறுத்துவாரா? தமது வாக்குறுதிகளால், நாம் அவரிடம் கேட்கும் வரப்பிரசாதங்களைத் தருவதை அவர் தமது கடமையாக்கிக் கொள்கிறார் என்கிறார். ""வாக்களிப்பதன் மூலம், அவர் தம்மைக் கடனாளியாக ஆக்கியிருக்கிறார்'' என்று அவர் கூறுகிறார்.வாக்குறுதிகள் மீறப்படக் கூடும் என்று யார் அஞ்ச முடியும் என்று அர்ச். அகுஸ்தினார் கேட்கிறார். கடவுள், வாக்களித்தபின், ஏமாற்றும் எண்ணத்தினாலோ, அல்லது தங்கள் மனங்களை மாற்றிக் கொள்வதாலோ, தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாதிருக்கும் மனிதர்களைப் போன்றவர் அல்லர் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது:""கடவுள் மனிதனைப் போலப் பொய் சொல்பவருமல்ல, மனித புத்திரனைப் போல் மாறுபடுகிறவரும் அல்ல. அவர் சொன்னதைச் செய்யாதிருப்பாரோ?'' (எண்.23:19). அர்ச். அகுஸ்தினார் இதன் தொடர்ச்சியாக, ஆண்டவர் தம் வரப்பிரசாதங்களை நம்மீது பொழிய விரும்பவில்லை என்றால், அவற்றைக் கேட்கும்படி மிகுந்த ஆர்வத்தோடு அவர் நமக்கு அறிவுறுத்துவாரா? தமது வாக்குறுதிகளால், நாம் அவரிடம் கேட்கும் வரப்பிரசாதங்களைத் தருவதை அவர் தமது கடமையாக்கிக் கொள்கிறார் என்கிறார். ""வாக்களிப்பதன் மூலம், அவர் தம்மைக் கடனாளியாக ஆக்கியிருக்கிறார்'' என்று அவர் கூறுகிறார்.

ஆனால், நான் ஒரு பாவி, ஆகவே என் ஜெபம் கேட்கப்பட நான் தகுதியற்றவன் என்று சிலர் சொல்வார்கள். வரப்பிரசாதங்களைப் பெற ஜெபம் கொண்டுள்ள பலனுள்ள தன்மை நம் பேறுபலன்களில் அல்ல, மாறாக தேவ இரக்கத்தையே சார்ந்துள்ளது என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் இதற்குப் பதிலளிக்கிறார். ""கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்'' என்று சேசுநாதர் கூறுகிறார் (மத்.7:8). அதாவது, நீதிமானாயிருந்தாலும் பாவியாயிருந்தாலும், ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான். ஆனால், ""மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: என் நாமத்தினால் நீங்கள் எதையாவது என் பிதாவிடத்தில் கேட்டால், அவர் அதை உங்களுக்குத் தந்தருள்வார்'' என்று இரட்சகர் சொல்லும்போது, அவரே எல்லா அச்சத்தையும் நம்மிடமிருந்து போக்கி விடுகிறார். பாவிகளே, நீங்கள் பேறுபலன்களின்றி இருக்கிறீர்கள் என்றால், நான் என் பிதாவுக்கு முன்பாக பேறுபலன்களைக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என் பெயரால் கேளுங்கள், நீங்கள் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நான் வாக்களிக்கிறேன் என்று அவர் சொன்னது போலாயிற்று. ஆனாலும், இந்த வாக்குறுதி உடல் நலம், செல்வங்கள் என்பன போன்ற உலக நன்மைகளுக்குப் பொருந்தாது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். இந்த உலக வரப்பிரசாதங்கள் நம் இரட்சணியத்திற்கு ஆபத்தாக இருக்கும் என்று அவர் காண்பதால், நீதியுள்ள முறையில், இந்த வரப்பிரசாதங்களைத் தர அவர் அடிக்கடி மறுக்கிறார். ""எது பயனுள்ளது என்று நோயாளியை விட மருத்துவன் நன்றாக அறிந்திருக்கிறான்'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார். அவரே மேலும் தொடர்ந்து, கடவுள் தமது இரக்கத்தின் காரணமாக சிலருக்குத் தர மறுப்பதை, தாம் கோபமாயிருப்பதன் காரணமாக மற்றவர்களுக்குத் தருகிறார் என்று கூறுகிறார். இதன் காரணமாக, உலக ஆசீர்வாதங்கள் ஆத்துமத்திற்கு ஆதாயமானவையாக இருக்கும் என்ற நிபந்தனையின் பேரிலேயே நாம் அவற்றைக் கேட்க வேண்டும். ஆனால் பாவ மன்னிப்பு, நிலைமை வரம், தேவசிநேகம் என்பன போன்ற ஞான வரப்பிரசாதங்கள் முழுமையாகவும், அவற்றைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையோடும் கேட்கப்படவேண்டும். ""நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, உங்கள் பரம பிதா தம்மை வேண்டிக் கொள்கிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார்'' (லூக்.11:13) என்று சேசுநாதர் கூறுகிறார்.

ஓ என் அன்புள்ள இரட்சகரே, உம்முடைய உதவியின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உம்மிடம் நாங்கள் கேட்கும் எல்லாவற்றையும் தந்தருள்வதாக நீர் வாக்களித்திருக்கிறீர். ஆகவே, என் பிரியமுள்ள சேசுவே, உமது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, என் எல்லாப் பாவங்களுக்கும் நான் மன்னிப்பை வேண்டுகிறேன்; பரிசுத்த நிலைமை வரத்தை நான் கேட்கிறேன்; ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, உமது பரிசுத்த அன்பு என்னும் கொடையை நான் கேட்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெபத்தில் நிலையாயிருத்தல் அவசியம். அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் 11-ம் அதிகாரத்தைப் பற்றிய தமது விளக்கவுரையில் கொர்னேலியுஸ் ஆ லாப்பிதே இது பற்றி, ""ஓயாமல் நச்சரிக்கும் அளவுக்கும் கூட நாம் ஜெபத்தில் நிலையாக இருக்க வேண்டுமென்று நம் ஆண்டவர் விரும்புகிறார்'' என்று சொல்கிறார். ""நாம் எப்போதும் ஜெபிக்க வேண்டும்'' (லூக்.21:36); ""இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்'' (1 தெச.5:17); ""ஆகையால் எந்நேரமும் விழிப்பாயிருந்து ஜெபம் பண்ணுங்கள்'' என்ற வேதாகம வாக்கியங்களிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், ""கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், கண்டடைவீர்கள், தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்'' என்று நம் ஆண்டவர் மீண்டும் மீண்டும் ஜெபிக்கும்படி நமக்கு அறிவுறுத்துவதிலிருந்தும் இதை நாம் புரிந்துகொள்ளலாம். கேளுங்கள் என்று மட்டும் சொல்லியிருந்தால் அது போதுமானதாக இருந்திருக்கலாம்; ஆனால் அப்படியில்லை. பிச்சை கிடைக்கும் வரை விடாமல் கேட்டுக் கொண்டும், கெஞ்சிக் கொண்டும், கதவைத் தட்டிக்கொண்டும் இருக்கும் பிச்சைக்காரர்களை ஜெபத்தில் நாம் பின்பற்ற வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். ஆனால் குறிப்பாக இறுதி நிலைமை வரம் தொடர்ச்சியான ஜெபத்தாலன்றி நாம் பெற்றுக்கொள்ள முடியாத வரப்பிரசாதமாக இருக்கிறது. இந்த நிலைமை வரமாகிய வரப்பிரசாதத்திற்கு நாம் தகுதி பெற முடியாது. ஆனால், அர்ச். அகுஸ்தினார் கூறுவது போல, ஒரு குறிப்பிட்ட முறையில் இதற்கு நாம் தகுதி பெறலாம். ""இந்தக் கொடையைத் தாழ்ச்சியோடு திரும்பத் திரும்ப ஜெபிப்பதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ள முடியும்'' என்று இந்தப் பரிசுத்த வேதபாரகர் கூறுகிறார். அப்படி யிருக்க, நாம் இரட்சிக்கப்பட விரும்பினால் எப்போதும் ஜெபிப்போமாக, ஜெபிப்பதை ஒருபோதும் நிறுத்தி விடாதிருப்போமாக. பாவசங்கீர்த்தன குருக்களும் ஆசிரியர்களும், ஆத்துமங்களின் இரட்சணியத்தை ஆசித்துத் தேடுகிறார்கள் என்றால், அவர்கள் தங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்பவர்களை, அல்லது தாங்கள் சொல்வதைக் கேட்பவர்களை ஜெபிக்கும்படி வற்புறுத்துவதை நிறுத்தி விடவே கூடாது. மேலும், அர்ச். பெர்னார்டின் அறிவுரைக்கு ஒத்தபடி, நாம் எப்போதும் மாமரியின் பரிந்து பேசுதலில் தஞ்சமடைவோம். ""நாம் வரப்பிரசாதத்தைக் கேட்போம், அதை மரியாயின் வழியாகக் கேட்போம்; ஏனெனில் அவர்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களது ஜெபம் பலனற்றுப் போக முடியாது'' என்று அவர் கூறுகிறார்.

ஓ என் தேவனே, நீர் ஏற்கனவே என்னை மன்னித்து விட்டீர் என்றுநான் நம்புகிறேன்; ஆயினும் என் எதிரிகள் என் மரணம் வரை என்னை எதிர்த்துப் போராடுவதை நிறுத்தப் போவதில்லை. நீர் எனக்கு உதவி செய்யாவிடில், நான் உம்மை மீண்டும் இழந்து போவேன். ஆ! சேசுநாதரின் பேறுபலன்களின் வழியாக, நான் பரிசுத்த நிலைமை வரத்தை மன்றாடிக் கேட்கிறேன். இதே வரத்தை தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருக்கும் அனைவருக்காகவும் நான் மன்றாடிக் கேட்கிறேன். நான் இந்த நிலைமை வரத்தை உம்மிடம் தொடர்ந்து கேட்பேன் என்றால், அதை நீர் எனக்குத் தந்தருள்வீர் என்ற உமது வாக்குத்தத்தத்தில் நான் முழு நம்பிக்கை வைக்கிறேன். ஆயினும் என் சோதனைகளில் உம்மிடம் தஞ்சமடைதை நான் அசட்டை செய்து, அதனால் பாவத்தில் மீண்டும் விழுந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன். ஆகவே, ஜெபத்தை இனி ஒருபோதும் அசட்டை செய்யாதிருக்கத் தேவையான வரத்தை உம்மிடம் கேட்கி¼ன். நான் மீண்டும் பாவத்தில் விழும் ஆபத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களில், உமக்கு என்னை ஒப்புக்கொடுத்து, சேசு மரியாயின் மகா பரிசுத்த திருப்பெயர்களின் உதவியை மன்றாட எனக்கு அருள்வீராக. ஓ என் தேவனே, இதுவே என் நோக்கம், உமது வரப்பிரசாத உதவியோடு இதை நான் செய்வேன் என்று நம்புகிறேன். சேசுநாதரின் நிமித்தமாக நான் சொல்வதற்கு செவிசாய்த்தருளும். ஓ மரியாயே, என் மாதாவே, கடவுளை இழந்து போகும் எல்லா ஆபத்துக்களிலும், உங்களிடமும், உங்கள் திருமகனிடமும் நான் அடைக்கலம் புகும் வரப்பிரசாதத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள்.