நாம் நம்மை நம்பவில்லை; தேவன் பேரில் மாத்திரம் முழு நம்பிக்கை வைக்கிறோமென்பதை அறியுமுறை

அங்காரி தான் தன்னை நம்பவில்லையென்றும், சர்வேசுரன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறதாகவும் எண்ணுவான். ஆனால், அவனிடத்தில் அந்தப் புண்ணியம் அற்பமாகிலும் இல்லையென்பது, அவன் ஒரு குற்றத்தில் விழும்போது நமக்குத் தெளிவாய்த் தெரிய வரும்.

அதெப்படியென்றால், அச்சமயங்களில் அவன்கலங்கிக் கஸ்திப் படுவான்; அவன் தேவன் மீது நம்பிக்கை வைக்கவில்லை, தன்னைத் தானே நம்பினானென்பதற்கு இதுவே திருஷ்டாந்தம். அவன் தன்னை நம்பாவிட்டால் அவன் கஸ்திப்படுவதேன்? அவனுடைய கலக்கமே. அவன் சர்வேசுரன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு அறி குறி.

தன்னை எள்ளளவும் நம்பாமல் தேவன் மீது முழு நம்பிக்கை வைக் கிறவன், யாதோர் பாவத்தைக் கட்டிக்கொள்வானாகில், அதற்காக அவன் வீணான கலக்கப்படான். அதனால் அவனுக்கு அற்பக் கஸ்தி முதலாய் இராது. நடந்த குற்றந் தன் பலவீனத்தினாலும், தேவன் மீது முழு நம்பிக்கை வையாத்தினாலும் சம்பவித்ததென்று உறுதியா யிருப்பான். அவன் ஒரு பாவத்தில் விழுவதே, அவன் தன் பலத்தை நம்பக்கூடாது,

சர்வ வல்லபமுள்ள சர்வேசுரனுடைய இரக்கத்திற்கும், உதவிக்குமாத்திரங் காத்திருக்க வேண்டுமென்பதை அவனுக்குக் கற்பிக்கும். அதனால் அவன் தன் பாவத்தை முழுதும் அருவருப்பான்; அதற்குக் காரணமாயிருந்த தன் துர் அப்பியாச ஆசாபாசங்களை வெ றுப்பான்; தேவனுக்கு வருத்தம் வருவித்ததை முன்னிட்டு மாத்திரம் மிகவுஞ் சஞ்சலப்படுவான்; அவனுடைய துயர், துக்கம் விமரிசையுள் ளவையாதலால், செய்யவேண்டிய கிருத்தியங்களை யெல்லாஞ் தவறாமற் செய்து, மரணபரியந்தம் தன் சத்துருக்களை எதிர்த்து வழிநடப்பான்.

புண்ணிய வேஷந் தரித்திருப்பவர்களோ, அவர்கள் ஒரு குற் றத்தில் விழுந்தவுடனே ஆத்தும் குருவைத் தேடிச் சம்பவித்த குறையை அவரிடத்திற் சொல்லிக் காட்டுவார்கள். செய்த பாவத் திற்கு மன்னிப்பு அடைந்து, இனி தவறாதபடி எச்சரிக்கையாகத் திவ்விய நற்கருணை வாங்குவது உத்தமமான காரியமானாலும், அவர் கள் இவ்வளவு தீவிரப்படுவது, தங்கள் சுயப் பட்சத்திலிருந்து உற் பத்தியாகிற வருத்தத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதல்லாமல் வேறல்ல. நான் சொல்லப்போவதை இவர்கள், தக்கவிதமாய்த் தியா னிக்கும்படிச் சர்வேசுரன் விசேஷ கிருபை செய்தருள்வாராக.