இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சாவு

நாம் கடவுளிடமிருந்து வந்தோம், நாம் கடவு ளுக்குச் சொந்தமானவர்கள்; திரும்பவும் நாம் கடவு ளிடம் போய்க்கொண்டிருக்கிறோம். ஒன்றில் அவர் நம்மை ஏற்றுக் கொள்வார், அல்லது புறக்கணிப் பார். அவர் நம்மை ஏற்றுக் கொள்வதும் புறக்கணிப் பதும் நம் கையில் இருக்கிறது. நாம் கடவுளிடம் திரும்பப் போய்ச் சேரு முன் நாம் சாகவேண்டும். என் மட்டிலும் இவை யாவும் உண்மையே. நான் சாவேன்.

நான் நேசிக்கும் ஒருவர் சாகிறார். துயரம் என் உள்ளத்தை நிரப்புகிறது. எல்லாம் இருளாய்த் தோன்றுகிறது. புனித அகுஸ்தீனுடைய நண்பர் ஒருவர் இறந்தார். அதைப் பற்றி அவர் பேசுகை யில், “இந்தத் துயரமானது அந்தகாரத்தைப் போல் என் உள்ளத்தில் விழுந்தது, நான் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கு சாவையே பார்த்தேன்'' என அவர் சொன்னதை நானும் சொல்லலாம்.

புனித போனிபாஸ் என்பவர் ஜெர்மனி நாட்டின் அப்போஸ்தலர். இங்கிலாந்தில் அவர் புனித ஆசீர் வாதப்பர் சபைச் சந்நியாசியாயிருக்கையில் வின் பிரிட் என அழைக்கப்பட்டார். பின் பாப்பானவர் அவரை மேற்றிராணியாராக்கி, போனிபாஸ் என் னும் பேரை அவருக்குக் கொடுத்தார். அந்தப் பேருக்கு அர்த்தம் “நன்மை செய்கிறவர்' என்பதே. ஒரு நாள் அவர் செத்துக் கிடந்தார். அவர் மனந் திருப்பச் சென்றவர்களே அவரைக் கொன்று போட் டார்கள். அவரது கையில் ஒரு புத்தகம் இருந்தது. அதன் தாள்களில் அவரது இரத்தம் படிந்திருந்தது. அந்தப் புத்தகத்தை எழுதியவர் புனித அம்புரோஸ். "சாவின் நலன்கள்'' என்பதே அப்புத்தகத்தின் பெயர். அர்ச்சியசிஷ்டர்கள் இவ்விதமே வாழ்ந்தார்கள். சாவின் நினைவு எப்பொழுதும் அவர்கள் கண் முன் இருந்தது. சாவுக்காக அவர்கள் எப்பொழுதும் காத்திருந்தார்கள். சாவு வந்தபொழுது அவர்கள் தயாராயிருந்தார்கள். கடவுளுடன் அந்நியோன்னிய ஐக்கியமாய் நான் எப்பொழுதும் வாழவேண்டும்; அப்படியானால் சாவு வந்ததும் கடவுளுடன் இன் னும் அதிக ஐக்கியமாவேன். சாவுக்காகக் காத்தி ருந்து ஒரு போதும் சலித்துப் போகமாட்டேன். “எவ்வித சாவுக்கும் நான் நல்வரவு கூறுவேன். ஏனெனில் சாவு பரலோக இராச்சியத்தை எனக்கு வாங்கித் தருகிறது. கிறிஸ்து நாதர், அவருடைய அர்ச்சியசிஷ்டர்கள், சம்மனசுக்கள் ஆகியோருடன் நான் உறவு கொள்ளச் செய்கிறது'' என சின்ன ஆசியாவில் வேதசாட்சியான புனித லெயோ சொன் னதைப் போல் நானும் சாவைப் பற்றி நினைப்பேன்.

ரோமாபுரியில் ஒரு பெண் வசித்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் நல்ல வழியில் நடக்க வில்லை. அவள் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டாள். நல்ல வழியில் நடக்கும்படி அவனை மன்றாடினாள். அவன் இணங்கவில்லை. அந்தக் காலத்தில் ரோமாபுரி யில் புனித பிலிப் நேரி என்னும் பெரியார் ஒருவர் வசித்து வந்தார். அவரை எல்லோரும் நேசித்தார் கள். அவரைப்போய்ப் பார்க்கும்படி தாய் மகனை ஏவினாள். அவன் போக மறுத்தான். மகனது குணம் தாய்க்கு நன்றாய்த் தெரியும். தான் மிகத் தைரிய சாலி, எதற்கும், யாருக்குமே, அஞ்சாதவன் என அவன் தன்னைக் கருதிவந்தான். ஒருநாள் அவள் தன் பகனை நோக்கி ''ஓஹோ, நீ பிலிப் சுவாமியாருக்குப் பயப்படுகிறாயா? அதனால் தான் அவரைப் பார்க்க மாட்டேன் என்கிறாய். போனால் எங்கே உன்னை மனந் திருப்பி விடுகிறாரோ எனப் பயப்படுகிறாய்'' என்றாள்.

அவள் நினைத்தபடியே நடந்தது. தான் அவ ரைப் பார்க்கப் போவதாக அவன் கூறினான். அன்று மாலையில் பிலிப் நேரியாரிடம் சென்றான். அவருக்கு மாலைவந்தனம் சொல்லி, "நான் உங்களுக்கு அஞ்ச வில்லை என என் தாய்க்குக் காண்பிக்கும்படியே வந் தேன்'' என்று மொழிந்து விட்டு, போகப் புறப்பட் டான் பிலிப் சுவாமியார் அவனைப் பார்த்து “ஏனப்பா, இவ்வளவு அவசரப்படுகிறாய்? சற்று உட் கார்ந்து பேசிவிட்டுப் போகலாகாதா?" என்றார் வாலிபன் மறுத்தான். “தம்பி, நீ மிகத் தைரியசாலி யாயிற்றே. எனக்கு ஓர் உபகாரம் செய். இன்று நீ போய் குடிப்பாய், நடனமாடுவாய், சூதாடுவாய்; இவையெல்லாம் முடித்து பல பாவங்களைச் செய்து விட்டு நடுச்சாமத்தில் வீட்டுக்குப் போவாயல்லவா? போனதும் நான்கு மெழுகு திரிகளைப் பற்றவைத்து உன் கட்டிலின் கால்களில் வை. பின் படுத்துக் கொண்டு உன் கரங்களை நெஞ்சின் மீது வைத்து “இன்றிரவு நான் சாகலாம், செத்தால் நான் நேரே நரகத்துக்குப் போவேன்'' என மூன்று முறை சத்த மாய் நிறுத்திச் சொல்'' என்றார். le

அந்த வாலிபன் தைரியசாலி. சுவாமியார் சொன்னதைச் செய்வது அவ்வளவு கடினமல்ல. அவ்வி தமே செய்வதாக வாக்களித்தான்.

அன்றிரவை அவன் பசாசுக்கு மகிழ்ச்சி தரும் வழிகளிற் செலவழித்து விட்டு, நடுச்சாமத்தில் தன் வீட்டுக்குப் போனான். வெளிச்சத்தை அணைத்து விட்டு நான்கு மெழுகுதிரிகளைக் கொளுத்தி கட்டிலின் கால்களில் வைத்து, படுத்தான். பெட்டியில் பிரே தத்தை வைப்பது போல் கால்களைவைத்து கரங்களைக் குவித்து மும்முறை சொல்வதாக வாக்களித்த வார்த் தைகளைச் சொல்லத் தொடங்கினான். முதன் முறை சொல்லி விட்டான். சொல்கையில் பயமாயிருந்தது. ஏனெனில் இருட்டில் நான்கு மெழுகுதிரிகள் தந்த வெளிச்சத்தில் அவனது குரல் கல்லறையிலிருந்து வந்த குரல் போல் இருந்தது. இரண்டாம் முறை சொல்கையில் அவனிடம் ஓர் அபூர்வ உணர்ச்சி ஏற் பட்டது. மூன்றாம் முறை அதைச் சொல்லத் தொடங் கியதும் குளிர்ந்த வியர்வை அவனது உடலிலிருந்து வர ஆரம்பித்தது. “இன்றிரவு நான் சாகலாம், செத் தால்...” என்றதும், பயம் அவனை ஆட்கொண்டது. படுக்கையிலிருந்து குதித்தெழுந்தான். வீட்டைவிட்டு வெளியேறி, பிலிப் சுவாமியார் வசித்த வீட்டை நோக்கி ஓடினான். அவன் கதவைத் தட்ட இருந்த சமயத்தில் கதவு திறக்கப்பட்டது. பிலிப் சுவா மியார் அவன் முன் நின்றார். “சுவாமி, நான் சாகப்போகி றேன், என் பாவசங்கீர்த்தனத்தைக் கேளுங்கள்'' என சத்தமாய்க் கூவினான். "தம்பி, உள்ளே வா, முழந்தாளிடு. நான் உனக்காகக் காத்திருந்தேன்'' என குரு பட்சமாய் மொழிந்தார்.

ஒரு காரியத்தை ஒருபோதுமே நான் செய்யமாட் டேன். “இன்றிரவு நான் சாகலாம். செத்தால் நேரே நரகத்துக்குப் போவேன்'' என்று நான் சொல்லக் கூடிய நிலையில் இருந்தால் நான் படுக்கமாட்டேன். நான் சாவான பாவத்துடன் இருந்தால், என் பாவசங் கீர்த்தனத்க்ை கேட்கக்கூடிய குரு அகப்படாவிட்டால் நான் முழந்தாளிட்டு திரும்பத் திரும்ப உத்தம மனஸ் தாப முயற்சி செய்து, கூடிய சீக்கிரம் நான் பாவசங் கீர்த்தனம் செய்து எல்லாவற்றையும் குருவிடம் சொல்வதாக, கடவுளுக்கு நான் வாக்களிப்பேன். நான் இரவில் படுக்கைக்குப் போகையில் மார்பில் கைகளைக் குவித்து, "இன்றிரவு நான் சாகலாம். செத் தால் நேரே மோட்சம் போவேன்'? என நான் உறுதி யுடன் சொல்லக்கூடியவனாயிருக்க ஆசிக்கிறேன். அவ் விதம் சொல்லக்கூடியவண்ணம் நான் வாழ்வேன்.

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ மனிதர் சாகிறார்கள்! ஒவ்வொரு வினாடியும் இருவர் சாகிறார்கள். ஒரு மணி நேரத்தில் 7200 பேர், ஒரு நாளில் 172800 பேர். ஆண்டுதோறும் ஆறு கோடிப் பேர். ஒரு நாள் நானும் இவர்களில் ஒருவனாயிருப் பேன். நான் நினைப்பதைவிட அதிக சீக்கிரமாய் அந்த நாள் வரலாம்.

நான் சாகவேண்டும் எப்பொழுதும் சாவுக்குத் தயாராயிருக்க வேண்டும் என்பதை நான் என் நினை வில் வைத்திருப்பேன்.

நான் ஒரு நாள் சாகவேண்டும். சாவுக்கு எப் பொழுதும் தயாராயிருக்க வேண்டும். இதை நான் எப்பொழுதும் நினைவிலிருத்த வேண்டும் இத்தாலியா நாட்டில் பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் துன்மார்க்கத்தில் தன் வாழ் நாளைச் செலவழித்தான். வயதானதும் அவன் தன் வாழ்க்கையைச் சீர்திருத் தத் தீர்மானித்தான். அதற்கு அவன் தன் வாழ் நாளில் கட்டிக்கொண்ட சகல பாவங்களையும் வெளிப் படுத்த வேண்டும்; புது வாழ்வு வாழவேண்டும். அவன் பல கொடிய பாவங்களைச் செய்திருந்த மையால் பாப்பானவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அவர் மாத்திரமே தன் பாவங்களை யெல் லாம் மன்னிக்கக் கூடியவர் என அவன் நினைத்தான். அது தவறு. அதிகாரம் பெற்ற எந்தக் குருவும் பாவங் களை மன்னிக்கலாம். அவன் ரோமாபுரிக்குப் போய் பாப்பானவரைக் கண்டான். தன் பாவங்களுக்காக துக்கித்து, இனி நல்வாழ்க்கை நடத்துவதாகத் தெரி வித்து, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான். அவன் அநேக பெரிய பாவங்களை செய்திருந்தமையால் அவன் ஆறு மாதமாக ஒவ்வொரு நாளும் ஒரு சந்தியாய் இருக்க வேண்டும் என்ற தபசை பாப்பானவர் கொடுத்தார். “பரிசுத்த பிதாவே, எனக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கின்றன: ஒருசந்தி பிடிப்பது முடியாத காரியம். தயவு செய்து வேறொரு அப ராதத்தைக் கொடுங்கள்'' என பாவி மொழிந்தான். ஆறுமாதகாலமாக ஒவ்வொரு நாளும் பூசைக்குப் போகும்படி பாப்பானவர் சொன்னார். "பரிசுத்த தந்தையே, நான் வியாபாரி: பல வேலைகள் இருக் இன்றன. இரவில் படுக்கைக்குச் செல்ல மணி ஒன்றாகிவிடும். அனு தினம் பூசை காண்பது முடி யாத காரியம்'' என அவன் சொல்லி விட்டான். ஒவ்வொரு நாள் இரவிலும் புதிய ஏற்பாட்டில் ஓர் அதிகாரத்தை வாசிக்கும்படி பாப்பானவர் சொன் னார். என் கண்கள் பலவீனமானவை, இரவில் வாசித் தால் தலை நோவு வருகிறதே, தயவு செய்து வேறொரு தபசைக் கொடுங்கள்'' எனப் பாவி கெஞ்சிக் கேட் டான். பின் பாப்பானவர் ஓர் அழகிய மோதிரத்தை அவனுக்குக் கொடுத்தார். அதில் (Memento mori) என்னும் இரு வார்த்தைகள் செதுக்கப்பட்டிருந்தன. அந்த வார்த்தைகளின் பொருள் “நீ சாகவேண்டும் என்பதை நினைத்துக் கொள்.'' பாப்பானவர் அவனை நோக்கி “நீ சாகும் வரை இந்த மோதிரத்தைத் தரித் திருக்க வேண்டும். அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் காலையில் வாசித்து சற்று நேரம் அவற்றைப் பற்றிச் சிந்திப்பாயாக'' என்றார். அவ்விதமே செய்வதாக அவன் வாக்களித் தான். அவ்விதமே செய்தான். அதன் பலன் என்ன? அன்றிலிருந்து அவன் அதிக தபசு செய்தான், அதிகமாக ஜெபித்தான். ஒவ்வொரு நாளும் பூசைக் குச் சென்றான். ஒவ்வொரு நாளும் புதிய ஏற்பாட்டை வாசித்தான். சாவைப்பற்றி சிந்தித்த பின் எல்லா வற்றிற்கும் அவனுக்கு நேரம் கிடைத்தது. சாவைப் பற்றி நினைப்பது எல்லோருக்குமே நல்லது.

ஒருவர் பாப்பரசரைப் பார்க்கப் போயிருந்தார் வத்திக்கானிலுள்ள மிகப் பெரும் திரவியத்தை அந்த மனிதருக்குக் காண்பிக்கும்படி பாப்பானவர் அவரை அழைத்துப் போனார். அவர் காண்பித்தது பாப்பான வரது உருவமே. அது மெழுகால் செய்யப்பட்டிரும் தது. அதற்கு பாப்பானவரது உடைகளைத் தரிப்பித் திருந்தது. இறந்த பின் பாப்பானவரது சடலத்தை எப்படி பெட்டியில் கிடத்துவார்களோ அதே நிலை யில் உருவம் கிடத்தப்பட்டிருந்தது. “நண்பரே, முக் கியமான காரியங்களைப்பற்றி நான் தீர்மானிக்க வேண்டியிருந்தால் இந்த உருவத்தினருகே நான் வந்து என்னிடம் பின்வரும் கேள்வியைக் கேட்கி றேன்:- "இவ்விதம் நான் கிடத்தப்படும் நேரம் ஒரு நாள் வரும். அந்நேரத்தில் நான் இப்பொழுது தீர்ப் பளிக்க வேண்டியிருக்கும் விஷயத்தைப் பற்றி என்ன தீர்ப்பளிக்க ஆசிப்பேன்?" இவ்வித சிந்தனை எனக்கு வெகு உதவியாயிருந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பங் களில் நான் செய்த முடிவுகளைப்பற்றி நான் விசனித் ததில்லை எனப் பாப்பானவர் சொன்னார். பாவ சோதனை வருகிறது. இந்த வினாடியில் நான் சாக நேரிட்டால் இந்தப் பாவத்தை செய்வேனா என யோசித்துப் பார்.

நாத்தான் தீர்க்கதரிசி தாவீதரசனை அணுகி, ஒரு பணக்காரனைப்பற்றிச் சொன்னார். அந்தப் பணக் காரனிடம் அநேக ஆடுகள் இருந்தன. அவனுடைய அண்டை வீட்டுக்காரனிடம் ஒரே ஒரு ஆடு இருந் தது பணக்காரனுக்கு ஒரு விருந்தாளி வந்தான். உடனே பணக்காரன் அண்டை வீட்டுக்காரனிட மிருந்த ஆட்டைப் பறித்து, அதைக் கொன்று விருந் தாளியை உபசரித்தான். இதைக் கேட்டதும் தாவீதரசன் கடுங் கோபம் கொண்டு “இவ்விதம் செய் தவன் சாகவேண்டும்'' என்றார். அப்பொழுது நாத் தான் தாவீதை நோக்கி ''நீரே அந்த மனிதர்'' என்றார்.

ஒரு கோவிலில் மக்கள் கூடியிருக்கிறார்கள். குருவானவர் பிரசங்க பீடத்தில் நிற்கிறார். "இங்கு இருப்போரில் ஒருவன் சாகப்போகிறான்; மற்றெல் லோரும் சாகா வரம் பெற்றவர்கள்'' என குரு சொல் லுகிறார் என்று வைத்துக்கொள் வோம். ''சாகப் போகிறவன் நானா?'' என ஒவ்வொருவனும் கேட்கிறான். குருவானவர் சொல்லப்போகும் பதிலை நான் கவலையுடன் எதிர்நோக்கியிருக்கையில் அவர் என் பெயரைச் சொல்லி, “இவன் இன்று சாகப்போகி றான்'' என்கிறார். எல்லோரும் என்னை அனுதாபத் துடன் நோக்குகிறார்கள். அதன்பின் அவர்கள் என் னைக் கவனிக்கிறார்கள். நினைவினால், வார்த்தையினால், அல்லது செய்கையினால் நான் பாவம் செய்வேனானால், அவர்கள் "இவன் சீக்கிரம் சாகவேண்டும் என்பதை நினைப்பதில்லையா? ஏன் இவன் எச்சரிக்கையின்றி நடக்கிறான்? சீக்கிரம் எல்லாவற்றையும் விட்டுப்போக வேண்டிய இவன், அற்ப இன்பத்துக்காக கடவுளது கட்டளைகளை ஏன் மீறுகிறான்? தான் சாகம் போவதை இவன் மறந்துபோனானா?" என்கின்றனர்.

காயீன் தன் தம்பியான ஆபேலுக்கு விரோத மாக எழும்பி, அவனை வயல்வெளியில் கொன்றான். ஆபேலின் பிரேதத்தை ஆதாமும் ஏவாளும் பார்த் தார்கள். அதன் பொருள் அவர்களுக்கு விளங்க வில்லை. கடைசியாக விளங்கியது. கடவுளுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்ததால் அவர்கள் சாவார் கள். மண்ணிலிருந்து வந்த அவர்கள் மண்ணுக்குத் திரும்புவார்கள் என கடவுள் சொன்னது அவர்களது நினைவுக்கு வந்தது. எல்லோரும் சாகவேண்டும். இது நிச்சயம். சாவு வரும் நேரம் நிச்சயமல்ல. என் வாழ் வில் அதி முக்கியமானது சாவு. எனக்கு வர இருக் கும் நித்தியம் அதைப் பொருத்தது. இறைவ னுடைய நண்பனாய் நான் சாவேனா? அல்லது எதிரி யாய்ச் சாவேனா? ஆதலின் நான் பின் வரும் கேள்வி களைக் கேட்பேன்; “சாவு என்றால் என்ன? நான் சாக வேண்டுமா? நான் சீக்கிரம் சாவேனா? நான் எப் பொழுது சாவேன்? எங்கு நான் சாவேன்? எப்படி நான் சாவேன்? இன்று நான் சாகலாம், செத்தால் கடவுளின் இரக்கத்தால் நேரே மோட்சம் போவேன்'' என நான் சொல்லக்கூடுமானால் நான் எப்பொழுது இறந்தாலும், எங்கு இறந்தாலும், எப்படி இறந்தா லும் பரவாயில்லை.

சாவு மெதுவாய் வருவதில்லை என நானறிவேன். அநேகர் நினையாதநேரத்தில் சாவு வருகிறது. எல்லோ ருக்கும் சாவு வருகிறது. பிந்தி வருகிறது அல்லது சீக்கிரம் வருகிறது. அநேகமாய் சீக்கிரமே வருகிறது. திடீரென வருகிறது. ஒரு நாள் குரு ஒருவர் தியானப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். "சாவைப்பற்றி யும், சாவுக்கு நாம் எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும் என்றும் இப்பொழுது உங்களுக்கு எடுத் துச் சொன்னேன். சாவு எந்த நேரத்திலும் வரலாம். ஒருவேளை இன்றிரவே வரலாம், நாளை தீர்வையைப் பற்றிப் பேசுவேன்'' என அவர் கூறி பீடத்தின் பக்கமாய்த் திரும்பினார்: கீழே விழுந்து செத்தார். தியானம் பிரசங்கித்துக் கொண்டிருந்த ஒரு குரு ஒரு நாள் இரவு சாவைப் பற்றிப் பிரசங்கித்தார். மறு நாட் காலையில் தியானப் பிரசங்கத்தைக் கேட்கும் படி மக்கள் கோவிலுக்கு வந்தார்கள். தியானப் பிரசங்கியாரது பிரேதம் கோவிலில் கிடத்தப்பட்டி ருந்தது. அவரது உதடுகள் மூடப்பட்டிருந்த போதி லும் மரணத்தைப் பற்றி அவை மிகு வாய்ச்சாலகத் துடன் பேசின. அந்த பிரசங்கத்தை மக்கள் ஒரு போதும் மறக்கவில்லை. லண்டனில் ஒரு குரு பிரசங் கித்துக் கொண்டிருந்தார். “வாழ்நாள் வெகு விலையே றப்பெற்றது. ஏனெனில் நம் கிரியைகளின் கணக்கை ஒப்பிக்கும்படி கடவுள் எந்த நிமிடத்தில் நம்மை அழைப்பாரோ தெரியாது'' என அவர் சொல்கையில் உயிர் விட்டார். ஒரு மனிதன் தன் இதயத்தைப் பரி சோதிக்கும்படி தூரத்திலிருந்த ஒரு வைத்தியரைப் பார்க்கும்படி போனான். டாக்டரைக் கண்டு பேசி யாயிற்று. "நல்ல செய்தி! என் இதயத்தைப் பற்றி பயப்பட அவசியம் இல்லை என டாக்டர் சொல்கிறார். இன்னும் அநேக வருடங்கள் வாழ்வேன் என்றறிந்து நான் மகிழ்கிறேன்'' என அவன் தன் மனைவிக்கு எழு தினான். அந்தக் கடிதம் அனுப்பப் படவே இல்லை. மறு நாட் காலையில் அவன் தன் படுக்கையில் செத் துக்கிடப்பதை அவர்கள் கண்டார்கள்.

என் சொற்ப வாழ்நாளில் இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், சாவுக்குத் தயாராய் எப்பொழுதும் நான் வாழவேண்டும். கல்ல றைக்கல் ஒன்றில் எழுதப்பட்டிருப்பதை, கல்லறைத் தோட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேனாக: “இப்பக்கமாய் நடந்து செல்லும் பாவி! நீ இப்பொழுது இருப்பது போல் ஒரு காலத்தில்

நான் இருந்தேன். நான் இப்பொழுது இருப்பது போல் நீ ஒருநாள்

இருப்பாய். சாவுக்குத் தயார் செய்; என்னைப் பின் செல்''

எப்பொழுதும் நான் கடவுளுடைய நண்பனாய் அவரது வரப்பிரசாதத்தில் வாழவேண்டும். கடவுளு டன் சேர்ந்து வாழ்வேன். சாவுக்காகக் காத்திருப் பேன். புனித சாள்ஸ் பொரொமெயோ என்பவர் நேரப்போக்குக்காக சில குருக்களுடன் ஏதோ விளை யாடிக் கொண்டிருந்தார். “இன்னும் சில வினாடி நேரம் மாத்திரமே நீங்கள் உயிருடனிருப்பீர்கள் என உங்களுக்கு அறிவிக்கப்பட்டால், நீங்கள் அந்த நேரத்தில் என்ன செய்வீர்கள்?'' என ஒருவர் அவர் களிடம் கேட்டார். “பாவப் பொறுத்தல் ஆசீர்வாதம் பெறும்படி என் ஆத்தும குருவிடம் ஓடுவேன்.'' என ஒரு குரு கூறினார். ''நான் கோவிலுக்கு உடனே ஓடி திவ்விய நற்கருணைப் பேழைக்குமுன் முழந்தாளிடு வேன்'' என்று இன்னொருவர் சொன்னார். "நான் முழந்தாளிட்டு உருக்கமான மனஸ்தாப முயற்சிகள் செய்வேன்'' என்றார் மூன்றாம் ஒருவர். ''நான் விளையாடிக்கொண்டே இருப்பேன். கடவுளுக்காக நான் விளையாடுகிறேன். என் ஆத்துமம் கடவுள் முன் போக எப்பொழுதும் தயாராயிருக்கிறது'' என புனித சாள்ஸ் சொன்னார்.

சிலர் சாவை அரிவாளும் கையுமாய்ச் சித்தரித் திருக்கிறார்கள்; அது சரியன்று. சாவை சாவியும் கையுமாய்ச் சித்தரிக்க வேண்டும். சுவாரெஸ் என் னும் குரு சாகையில் அருகில் நின்றோரைப் பார்த்து "சாவு இவ்வளவு இனிமையளிக்கும் என நினைக்கவே இல்லை'' என்றார். கர்தினால் வைஸ்மன் மரணப்படுக் கையில் இருக்கையில் தம்மைச் சுற்றிலும் நின்ற குருக்களை நோக்கி, "முதன் முறையாக விடுமுறைக்கு வீட்டுக்குப் போகும் பள்ளிக்கூடத்துச் சிறுவனைப் போல் நான் உணர்கிறேன்'' எனக் கூறினார். நானும் சாவை இவ்விதமே நோக்கவேண்டும். கடவுள் வசிக் கும் தம் சொந்த வீட்டுக்குப் போவதே சாவு. அந்த நாளை பயங்கரமான நாளாக நான் கருதமாட்டேன். நான் நேசிக்கும் நாட்டை விட்டு நான் போவது உண் மையே. அந்த நாடு இந்த நாட்டை விட அதிகப் பிரியமானது. என்னை விட்டுப் பிரிந்தவர்களுடன் நான் சேரப்போகிறேன்.

சாவைப்பற்றி இவ்விதமே நான் கருதவேண்டும். “நான் மரித்து கிறிஸ்துநாதருடன் இருக்க விரும்புகி றேன்'' என நான் புனித சின்னப்பருடன் சேர்ந்து கூறுவேன். இந்த ஆசை என் இதயத்தை அதிக மதிகமாக நிரப்ப வேண்டும். ஓர் அர்ச்சியசிஷ்டருக்கு அவர் உயிர் வாழ இன்னும் எட்டு நாட்களிருப்ப தாக அறிக்கப்பட்டது. உடனே அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்து, "ஓ என் தாயே, என்னோடு அக மகிழுங்கள், நான் உயிர் வாழ இன்னும் எட்டு நாட் களே இருக்கின்றன. என்னிடம் சொல்லப்பட்டவை களைப்பற்றி நான் மகிழ்கிறேன். கர்த்தருடைய இல்லத்தினுள் நான் பிரவேசிக்கப் போகிறேன் என அவர் தம் தாய்க்கு எழுதினார்.

மரம் வெட்டி வீழ்த்தப்படுவதைப் பார்க்க எனக்கு சகிப்பதில்லை. கடவுள் மாத்திரமே மரத்தை உண்டாக்க முடியும். மரம் கீழே விழுந்த இடத்தி லேயே கிடக்கிறது. விழுந்த இடத்தில் அசையாமற் கிடக்கும். “மரம் தெற்கே விழுந்தாலும், வடக்கே விழுந்தாலும் விழுந்த இடத்தில் தானே கிடக்கும்.''

(சங்க . 11/3) மரம் நித்தியத்துக்கும் வாழவேண்டிய ஒரு பொருளல்ல. ஆதலின் அது எப்படியாவது ஒருநாள் சாகவேண்டும். நானும் ஒரு நாள் சாகவேண்டும்; ஏனெனில் என் உடல் அழிந்துபோகக்கூடியது.

மரம் விழுந்த இடத்தில் கிடக்கிறது; ஏனெனில் அது தானாக அசைய முடியாது. நான் சாகும்போது என் ஆத்துமம் என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் நித்தியத்துக்கும் இருக்கும். சாவுக்குப் பின் என் ஆத்துமம் மாறமுடியாது.

பெரிய மரங்கள் விழுவதை நான் பார்த்திருக் கிறேன். சிலர் அதைப் பார்த்து விசனிக்கிறார்கள். சிறு மரங்கள் சத்தமின்றி தரையில் விழுகின் றன. பெரிய மரங்களும், சிறிய மரங்களும் எப்படியாவது ஒருநாள் விழும். பெரிய மரங்களும், சிறிய மரங்களும் அசையாமற் கிடக்கும். இது சாவை எனக்கு நினைப் பூட்டுகிறது. எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் சாவின் முன் அதெல்லாம் ஒன்றுமில் லாமைக்குச் சமானம்.

சாவு அனைத்தினின்றும் என்னை அகற்றும். இது நிச்சயம். இது பாவத்தின் தண்டனை. உலகத்தி லேயே மிக நிச்சயமானது சாவு.

சாவானது சகல பொருட்களினின்றும் என்னை விரைவாகப் பிரிக்கும். நான் நெடுநாள் வாழப்போகிற நினைக்கிறேன். சுகமாக்க முடியாத நோயின் முன் னும், சாவின் முன்னிலையிலும் அநேகர் நெடுநாள் வாழ்வை எதிர்பார்க்கிறார்கள். அநேகருக்கு சாவு திடீ ரென வருகிறது.

சாவானது அனைத்தினின்றும் தந்திரமாக என் னைப் பிரிக்கிறது. என் சாவின் நேரம் என்னிடமி ருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிக்க நிச்சயமான ஒன்று, அதே நேரத்தில் மிக்க அநிச்சய மாயிருப்பது ஆச்சரியமே. அது ஏனோ தெரியவில்லை. அது ஓர் எச்சரிப்பாகும். நான் எப்பொழுதும் தயா ராயிருக்கவேண்டும். உடனே நான் அதற்குத் தயா ரிக்கவேண்டும். இது எனக்குப் பெரும் ஆறுதலாயி ருக்கும். மன அமைதியையும் அளிக்கும். சாவுக்கு உடனே தயாரிப்பேன். அப்படியானால் கடவுளுக்குச் சித்தமான அந்த நேரம் வருகையில் நான் கண்ணை மூடுவேன். நித்திய மோட்சத்தில் கண் விழிப்பேன்.

இவ்வுலகின் சகல பொருட்களினின்றும் சாவு என்னைப் பிரிக்கும். செத்தபின் நான் உலகுக்குப் பயனற்றவன். உலகம் எனக்குப் பயனற்றது. பிரே தத்தால் உலகத்துக்கு என்ன பயன்? அது முற்றி லும் பயனற்றது. அநேகரை அது அச்சுறுத்துகி றது. பிரேதத்துக்கு எதுவும் உதவி செய்ய முடி யாது. கலை அதற்கு உதவியளிக்க முடியாது. மருந்து உதவியளிக்க முடியாது. பிறர் அதற்கு ஆறு தலளிக்க முடியாது. அதன் பழைய நண்பர்களின் நன்மனது அதற்கு எவ்வித மகிழ்ச்சியும் அளிக்க முடி யாது'. நான் சாகையில் என் பதவி, என் பொருட் கள், என் செல்வாக்கு, என் நண்பர்கள், என் உற வினர் ஆகியோர் என்னிடம் விடைபெற்றுக்கொள் வார்கள். சரீரம் முதலாய் ஆத்து மத்தினின்று பிரிக் கப்படுகிறது. ஆதலின் என் சரீரத்துக்கு நான் செய் வதைவிட ஆத்துமத்துக்கு அதிகமாய்ச் செய்வேன். 

ஏனெனில் ஆத்துமத்துக்குச் செய்வதைவிட, சரீரத் துக்கு அதிகமாய்ச்செய்கிறவன் சாவு வந்ததும் எல் லாவற்றையும் இழக்கப்போகிறான். உலகில் பெரும் பாலான மனிதர் தங்கள் நடத்தையால் சொல்வ தென்ன? “நன்றாய் உண்போம், குடிப்போம்; ஏனெனில் நாளை நாம் சாகப்போகிறோம்'' என்று அவர்கள் சொல்லி இன்ப சுகங்களில் காலத்தைக் கழிக்க முயல்கிறார்கள். ஆனால் நித்தியரான ஒருவர் என்ன சொல்லுகிறார்? ''பலிக்காக மந்தை போல் அவர்களை ஒருமிக்கச் சேர்த்து கொலை நாளுக்கென்று அவைகளைத் தயாரியும்'' என்கிறார். (ஏரே. 12/3)

இதெல்லாம் அதிமுக்கியமானது. ஒரு மனிதன் சாகுந்தறுவாயிலிருந்தான். அருகில் நின்ற குருவான வரை அவன் கவலையுடன் நோக்கி, ''சுவாமி, நான் நாளை எங்கே இருப்பேன்?'' என்றான். அந்தக் குரு வானவர், "நாளை நீ அநேகமாய் நெருப்பில் கிடப்பாய். கடவுளது இரக்கத்தால் நீ உத்தரிக்கிற ஸ்தல நெருப் பில் கிடப்பாய். என்றாலும் அதுவும் நெருப்பே " என பதிலளித்தார். உடனே அந்த மனிதன் விம்மி விம்மி அழுதுகொண்டு, ''ஒரு சிறு குண்டூசி குத்திவிட்டால் கதறியழுகிற நான் நெருப்பின் வேதனையை எவ்விதம் சகிக்கப்போகிறேன்? இன்று நேர்த்தியான துணிக ளால் மூடப்பட்டிருக்கும் நான் நாளை நெருப்பில் எரி யப்போகிறேனே" என்றான்.

உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளினின்று தப்பிக்கும் வண்ணம் நான் வாழவேண்டும். நெடுநாள் அங்கு வேக நேரிடாதபடியாவது நான் பார்த்துக் கொள்ள வேண்டும். சாவானது பாவத்தின் விளைவு என்றாலும் சாவைப்பற்றிச் சிந்தித்தால் பாவம் தடுக் கப்பட்டு அழிக்கப்படும் என புனித அகுஸ்தீன் கூறுகிறார்.

நான் கடவுளுக்காக வாழவேண்டும். கடவுளுக் காக மாத்திரமே வாழவேண்டும். அவ்விதம் நான் வாழாது போவேனானால் நடப்பதென்ன?

சாவின் கடைசி அவஸ்தை வரும். முகம் வெளுக் கும். கண்பார்வை மங்கும், செவியும் மந்தமடையும்; குருவானவர் சத்தமாய்ப் பேசவேண்டி நேரிடுகிறது. உதடுகள் கறுக்கின்றன. நெஞ்சு விம்முகிறது. கடைசிக் கண்ணீர்த் துளி வருகிறது. ஆசீர்வதிக் கப்பட்ட மெழுகுதிரியை குரு நோயாளியின் கரங் களில் வைத்து திருச்சபையின் ஜெபங்களைத் தொடங் குகிறார். “கிறிஸ்தவ ஆத்துமமே, இந்த உலகத்தை விட்டுப் புறப்படு. இந்த உலகம் இனி உன்னுடைய தல்ல'' என்கிறார். சாகக்கிடப்பவன் இதைக் கேட் டதும் தன் உள்ளத்தில், "ஓ கடவுளே, இங்கிருந்து நான் எங்கே செல்வேன்?" என்கிறான். பின் குரு தொடர்ந்து, ''உன்னை உண்டாக்கிய பிதாவின் நாமத் தினால்'' என்பார்.

''ஆம், கடவுள் என்னை உண்டாக்கியது உண் மையே. ஆனால் கடவுள் என்ன நோக்கத்துக்காக என்னை உண்டாக்கினாரோ அந்த நோக்கத்தை நான் நிறைவேற்றவில்லையே'' என நோயாளி சிந்திப்பான்.

குரு;"ஜீவியந்தரான கடவுளுடைய குமாரனும் உனக்காகப் பாடுபட்டவருமான யேசுக்கிறிஸ்துவின் நாமத்தினால்'' என்பார்.

நோயாளி; ''ஆம், அவர் எனக்காகப் பாடுபட் டார். ஆனால் அவருடைய இரத்தத்தை நான் சரிவர பயன்படுத்தவில்லையே'' என்பான்.

குரு; ''உன்னை அர்ச்சித்த பரிசுத்த ஆவியின் நாமத்தினால்'' என்பார்.

நோயாளி; "பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனு டைய ஏவுதல்களுடன் நான் ஒத்துழைக்கவில்லையே'' என்பான்.

குரு; "ஆத்துமமே, உடலை விட்டுப் புறப்படு. சம்மனசுக்களின் கூட்டம் உன்னை எற்றுக்கொள்வ தாக'' என்பார்.

நோயாளி; ''சம்மனசுக்களின் கூட்டத்திற்குப் பதிலாக பசாசுகளின் கூட்டம் என்னை எதிர்கொண் டழைக்குமோ?' என்பான்.

ஜெபத்தின் எஞ்சிய பாகத்தைக் குரு சொல்கை யில் சாகக்கிடப்பவன் பரிதாபத்துக்குக்குரிய தோற்ற மளிப்பான். கண்கள் உருளுகின்றன. விட்டு விட்டு சுவாசிக்கிறான். அவன் இன்னும் உயிருடனிருக்கி ரானா எனச் சந்தேகிக்கும் குரு, “யேசுவே, யேசுவே'' எனச் சத்தமாய்ச் சொல்கிறார். கடைசி மூச்சுவிட்டு நோயாளி மரிக்கிறான். அநேக வருடங்கள் தன் ஆத் துமத்தைப்பற்றி நினையாமல் வாழ்ந்தவன், ஒரு போதுமே சாகா தவன் போல், ஜீவித்தவன் இவ் விதம் மரிக்கிறான். ஓ! என் இரக்கமுள்ள சர்வே சுரா, என் மேல் இரக்கமாயிரும். அறிவுள்ள மனிதன், இதையெல்லாம் அறிந்தவன், இதைத் தன் கண் களால் பார்த்தவன் அல்லது கேட்டவன், உலகத்தை விட்டு விலகி தன்னை முழுதும் கடவுளுக்குக் கையளி யாதிருப்பது சாத்தியமா? எல்லோரும் இவ்விதம் இறப்பதில்லை என நான் அறிவேன். நாம் நினையாத வழிகளில் சாவு வருகிறது. நான் ஒவ்வொரு நாளும் இரவில் படுத்ததும் மார்பில் கரங்களை வைத்து "இந்த நிலையில் நான் என் பிரேதப் பெட்டியில் கிடப் பேன், சீக்கிரம் கிடப்பேன்" எனச் சொல்வது பெரும் நன்மை பயக்கும். ஒருநாள் வரும், அன்று இரவை நீ பார்க்கப் போவதில்லை. ஓர் இரவு வரும், மறுநாட் காலையை நீ பார்க்கமாட்டாய்'' என்னும் தோமாஸ் அக்கெம்பிஸ் சொல்லும் வார்த்தைகளை அடிக்கடி நான் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சாவினின்று நான் தப்பிக்க முடியாது. காம்பிரே நகர் அதிமேற்றிராணியாரான வில்லியம் என்பவர் தம் அறையில் “ஒன்றுமில்லாமையிலிருந்து ஜீவியம், ஜீவியத்திலிருந்து மரணம், மரணத்திலிருந்து நித்தியம் " என் பெரிய எழுத்துக்களில் எழுதி வைத் திருந்தார். இது உண்மை என நான் நன்கு அறிந்த போதிலும், மனித வாழ்க்கையில் அதி முக்கிய காரிய மான நல்ல மரணமடைவதைப் பற்றி மாத்திரம் நான் கவலைப்படுவதில்லை. மற்ற எல்லாவற்றைப் பற்றியும் அலுவலாயிருக்கிறேன். சாவு எனக்கு இனிமையானதாகும்படி நான் செய்யப் போகிறேன். தண்ணீர் தன்னிலே இனிமையானதல்ல, கசப்பா னதுமல்ல; அத்துடன் சேரும்பொருளினால் இனிமை யானதாகவோ, கசப்பானதாகவோ மாறுகிறது. அதே போல் துஷ்டர்களுக்கு சாவு மிகப் பயங்கர மானது. நீதிமான்களுக்கு மிக இனிமையானது.

சாவானது காரியங்களைத் தீர்த்து வைக்கிறது. நான் இறக்கையில் பல பொருட்களை விட்டுச் செல் கிறேன். அவை யாரைச் சேரும் என சாவு தீர்ப்ப ளிக்கும். என் உடல் இருக்கிறது. அது எங்கிருந்து மண்ணோடு மண்ணாகும் என் சாவு தீர்ப்பளிக்கும். என் பெயர் இருக்கிறது. மனிதர் அதை மகிமைப் படுத்துவார்களோ அல்லது சீக்கிரம் அதை மறந்து போவார்களோ என சாவு தீர்ப்பளிக்கும்.

மறு உலகத்துக்கு நான் என்னுடன் எடுத்துச் செல்லக்கூடியவற்வைப் பற்றியும் சாவு தீர்ப்பளிக் கும். என் நல்ல செய்கைகளும் கெட்ட செய்கை களும் என்னுடன் வரும். “அவர்களது கிரியைகள் தொடருகின்றன'' (காட்சி 14 | 13)

சர்வ நீதியுள்ள ஒருவரது நீதித் தீர்ப்பாசனத் தின் முன் என் ஆத்துமம் போய் நிற்க வேண்டும். உடனே தீர்ப்புக் கூறப்படும். அந்த தீர்ப்பிற்கு மேல் தீர்ப்பு கிடையாது. நித்திய சம்பாவனை அல்லது நித்திய தண்டனை. மரம் எங்கே விழுகிறதோ அங் கேயே கிடக்கும். ஒருவன் எப்படிச் சாகிறானோ அவ் விதமே தீர்ப்பு.

சாவின் மகிழ்ச்சிகளைப் பற்றியும் நான் நினைத் துப்பார்ப்பேன். சீஸியா என்னும் இடத்தில் ஒரு சந்நியாசியார் இருந்தார். அவர் அர்ச்சியசிஷ்டராக வாழ்ந்தார். அர்ச்சியசிஷ்டராக மரித்தார். அவரது படுக்கையைச் சுற்றி அநேக சந்நியாசிகள் நின்றார் கள். தங்கள் உற்ற நண்பரும் நேச ஆசிரியருமான அவர் சாகப்போகிறாரே என்று சந்நியாசிகள் யாவரும் அழுது கொண்டிருந்தார்கள். மரணப் படுக்கையில் இருந்தவர் திடீரென சிரிக்கத் தொடங்கினார். தம் மைச் சுற்றிலும் நோக்கினார். அவர்கள் இன்னும் அழுது கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவர் சத்தமாய் சிரித்தார். சந்நியாசிகள் ஆச்சரியத் துடன், ''ஏன் சிரிக்கிறார்? இது சிரிக்க வேண்டிய நேரமா? நாங்கள் உங்களை நினைத்து அழுகிறோம், நீங்கள் சிரிக்கிறீர்கள். இது ஏன்?" என்றனர். சாகக் கிடந்தவர் மகிழ்ச்சி நிறைமுகத்துடன் பதிலளித்தார். 

"நான் மூன்று காரணங்களை முன்னிட்டு சிரிக்கிறேன் என்றறிந்து கொள்ளுங்கள் : 

1. சாவை நினைத்து நீங்கள் இவ்வளவு பயப்படுகிறீர்களே என நினைத்து சிரிக்கிறேன். 

2. சாவுக்கு நீங்கள் யாவரும் தயாரித்தும் நீங்கள் அழுவதைப் பற்றி நான் சிரிக்கிறேன். 

3. இந்த நீச உலகத்தின் உழைப்புகளுக்குப் பின் கடைசியாக நான் நித்திய இளைப்பாற்றிக்குப் போவ தைப் பற்றி நான் சிரித்து மகிழ்கிறேன்.'' 

இதைப் போன்ற காரணங்களை முன்னிட்டு வாழ்வின் இறுதி யில் நீதிமான்கள் யாவரும் மகிழ்கிறார்கள். சாவை நினைத்து நான் மகிழ்வேன். எப்பொழுதும் நான் கட வுளின் அன்பிலும் வரப்பிரசாதத்திலும் வாழ்ந்து, அதே நிலையிலும் வரப்பிரசாதத்திலும் வாழ்ந்து அதே நிலையில் இறந்தால் சாவானது இனிமையா யிருக்கும். என் சொந்த வீடாகிய கடவுளுடைய இல்லத்துக்குப் போவதே சாவு.

பயை புனித ஜெர்த் துருத் கடைசி மரண அவஸ்தை யில் இருந்தபோது நடந்ததை நான் சிந்திக்கையில் எனக்கு ஆறுதல் ஏற்படுகிறது. அவள் கரங்களில் கர்த்தர் பாடுபட்ட சுரூபம் இருந்தது. ஆனந்தக் கண்ணீர் சிந்தி தன் உள்ளத்தை தன் இரட்சகருக்குத் திறந்தாள். தன்னிடமிருந்த சொற்பப்பலத்தையெல் லாம் அவள் திரட்டிச் சேர்த்து, மிக உருக்கமாக பேசவுடன் பேசத் தொடங்கினாள். அவளது அன் பைக் கண்ட இரட்சகர் உடனே அவளுக்கு சன்மான மளித்தார். சிலுவையுடன் அறையப்பட்டிருந்த தன் கரங்களை அவர் அகற்றி தம் விலாவைக் கரங்களால் திறந்தார். அதில் அவள் நுழையும்படி அழைத்தாப் போலிருந்தது. ஆண்டவருடைய திரு இருதயத்தை நோக்கிக்கொண்டே அவள் இன்பமாய் உயிர்விட் டாள். அந்தத் திரு இருதயத்தில் அவள் மோட்சத் தின் முன் சுவையைக் கண்டாள். இவ்விதம் பாக்கிய மாக மரித்த பல பரிசுத்தவான்களைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். முதல் வனவாசியான புனித சின்னப்பர் முழந்தாளிட்டு கரங்களை மார்பில் வைத்து பரலோகத்தை நோக்கியவராய், கடவுளை வாழ்த்திக்கொண்டே உயிர்விட்டார். கடைசி மரண அவஸ்தையிலிருந்த புனித தேவ அருளப்பர் படுக் கையை விட்டு இறங்கி, முழந்தாளிட்டு, சிலுவையை வணங்கி, அதை அரவணைத்துக்கொண்டு தம் ஆத் துமத்தைக் கடவுளிடம் ஒப்படைத்தார். உயிர் விட்ட பின்னரும் அவர் சிலுவையை அரவணைத்தவராய் முழந்தாளிட்டிருந்தார். இவ்வித பாக்கியமான மர ணம் அநேகமாய் எனக்குக் கிட்டாது. என்றாலும் இவ்விதம் இறக்க நான ஆசிக்கிறேன். 

புனித பிரான்சிஸ் பவுல் என்பவர் தாம் சாகப் போகும் நேரத்தை முன்னதாகவே அறிந்து தம்மைச் சிலுவையில் கிடத்தி, கிறிஸ்து நாதரது பாடுகளைப் பற்றி சத்தமாய் வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின் பாடுபட்ட சுரூபத்தை அன்புடன் அரவணைத்து மார்புடன் சேர்த்து, ''உமது கரங்களில். ஓ ஆண்ட வரே, என் ஆத்துமத்தை ஒப்படைக்கிறேன்'' என பலமுறை சொல்லி பெரிய வெள்ளிக்கிழமையன்று சரியாக பிற்பகல் மூன்று மணிக்கு எவ்வித வேதனையு மின்றி மிகு மகிழ்ச்சியுடன் உயிர் விட்டார். நானும் இவ்விதம் இறக்க விரும்புகிறேன். புனித ஜாண் பிஷர் என்னும் கர்தினால் எட்டாவது ஹென்ரியால் சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார். ஏனெனில் அவர் திருச்சபைக்குத் துரோகம் செய்ய மறுத்தார். அவர் சிறையை விட்டு கொலைக்களத்துக்குப் போகையில் அவரால் நடக்க முடியவில்லை. கம்பை உபயோகித் துக்கொண்டு வெகு சிரமத்துடன் நடந்து சென்றார், அவர் கொல்லப்படவிருந்த இடத்தைக் கண்டதும் அவர் எவ்வளவு ஆனந்தமடைந்தாரென்றால் கம்பைத் தூர எறிந்துவிட்டு, “என் பாதங்களே, வாருங்கள். கடைசி அடிகளை எடுத்து வையுங்கள். அதன் பின் உடலானது மகிமை பொருந்திய மரணமடையும். ஆத்துமம் பரகதிக்குப் போகும்' என்றார். நானும் நீதிமான்களைப்போல் சாவேனாக.

சாவுக்கு நான் அஞ்சமாட்டேன். “நான் வாழ் நாளில் செய்துள்ள பயங்கரத்துக்குரிய காரியங்களைத் தவிர வேறெதைப்பற்றியும் சாவு நேரத்தில் அஞ்ச வேண்டியதில்லை' என புனித அம்புரோஸ் சொல் கிறார். பயங்கரத்துக்குரிய காரியங்களை நான் செய் திருந்தால் அவற்றிற்குப் பரிகாரம் செய்வேன். இனி அவற்றைச் செய்யமாட்டேன். நான் நல்லவனாக வாழ்ந்தால் துர்ச் சாவு எனக்கு வராது. ஆத்துமம் உடலினின்று அகல்வது மரணம் என்று நாம் சொன்னபோதிலும், அது மரணத்தின் நிழலே, சாவின் தோற்றமே. ஆத்துமம் கடவுளை விட்டு அகன் றால் அதுவே சாவு, உண்மையான சாவு.

புனித குனகுந்தாவின் பத்தாவான புனித ஹென்ரி என்பவரது சரித்திரத்தில் ஒரு வரலாறு! சொல்லப்பட்டிருக்கிறது. புனித உல்வ்சார் என்பவ ரது கல்லறையில் அவர் ஜெபித்துக் கொண்டிருக் கையில் ஒரு காட்சி கண்டார். காட்சியில் அவர் ஒரு கரத்தைப் பார்த்தார். அந்தக் கரமானது சுவரில் Post Six என்னும் இலத்தீன் வார்த்தைகள் இரண்டை எழுதியது. அவற்றின் பொருள் “ஆறுக்குப் பின்''. ஆறு நாட்களுக்குப் பின் நான் சாவேன் என கடவுள் என்னை எச்சரிக்கிறார் என அவர் தமக் குட் சொல்லிக் கொண்டு, சாவுக்குத் தம்மைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஆறு நாட்கள் முடிந்தன. அவர் நல்ல சுகத்துடனிருந்தார். ஆறு வாரங்களுக் குப் பின் நான் சாகலாம் என அவர் நினைத்து அதிக மாய் ஜெபித்தார். பெரும் தபசு முயற்சிகளைச் செய் தார். எல்லாச் செய்கைகளையும் சுத்த கருத்துடன் செய்து வந்தார். ஆறு வாரங்கள் முடிந்தன. எவ்வித நோயின் குறியும் காணப்படவில்லை. ஆறு ஆண்டு களுக்குப் பின் நான் சாவது கடவுளுடைய சித்தமே என அவர் கருதி, சகல புண்ணியங்களையும் அனு சரித்து அர்ச்சியசிஷ்டர் என்ற பேர் பெற்றார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் அவர் சக்கரவர்த்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாவுக்கு தயாராயிருக்கும் படி அவர் எப்பொழுதும் புண்ணியவானாய் வாழ்ந்து பாக்கியமாய் இறந்தார்.

யேசு மரி சூசை! இப்பொழுதும் என் கடைசி அவஸ்தையிலும் எனக்கு நீங்கள் உதவியாயிருப்பீர் களாக என்று நான் அடிக்கடி சொல்லி வருவேனாக.