இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உத்தமமான பக்தி முயற்சியைத் தெரிந்துகொள்ளுங்கள்

118. இத்தனையும் நான் கூறிய பின், யாதொரு தயக் கமுமின்றி இன்னொன்றையும் கூறுவேன் --அதாவது: அர்ச். கன்னிமாமரி மீது பக்தியைப் பற்றிய ஏறக்குறைய எல்லாப் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். சமீப காலத்தில் புனிதமுடைய அறிவுடையோரிடம் நெருங்கி உரையாடி யிருக்கிறேன். ஆனால் நமதன்னைக்குச் செய்யப் படுகிறவை களில் நான் கூறப்போகும் பக்தி முயற்சியைப் போல் கடவுளுக்கென அதிக பரித்தியாகத்தைக் கொண்டதும் தான் என்பதையும் தன்னலத்தையும் நம்மிடமிருந்து அதி கம் நீக்குவதும், வரப்பிரசாதத்தை நம்மிலும் நம்மை வரப்பிரசாதத்திலும் அதிக உண்மையுடன் நிலைக்கச்செய் வதும், சேசு கிறீஸ்துவுடன் நம்மை அதிக உத்தமமாக வும் எளிதாகவும் ஒன்றிக்கச் செய்வதும், கடைசியாக, கடவுளுக்கு அதிக மகிமையளிப்பதும் ஆன்மாவை அதிகம் அர்ச்சிப்பதும் நம் அயலாருக்கு அதிக உதவியளிப்பது மான ஒரு பக்தி முயற்சியை நான் எங்குமே கண்டதில்லை

119. இப்பக்தி முயற்சியில் மிக முக்கியமானது, அது ஆன்மாவில் ஏற்படுத்தும் உள்ளரங்க நிலையேயாகும். ஆகவே எல்லாரும் ஒரே சீராய் இதனைக் கண்டுணர இயலாது சிலர்- ஏன், மிகப் பெரும்பாலானவர்கள் - வெளிப்புறத்தி லேயே நின்று விடுவார்கள். அதற்கு மேல் செல்லமாட் டார்கள். வெகு சிலர்-உள்ளரங்கத்திற்குள் நுழைந்து செல்வார்கள். ஆனல் முதல் படியை மட்டுமே எட்டிப் பிடிப்பார்கள். இரண்டாம் படியை யார் அடைவார்கள்? முடிவில் அதிலே நிலையாக யார் நிலைத்திருப்பார்கள்? சேசு கிறீஸ்துவின் ஆவியானவர் யாருக்கு இந்த இரகசியத்தை வெளிப்படுத்துவாரோ அவனே அவ்வாறு நிலைபெறுவான். பிரமாணிக்கமுள்ள அந்த ஆன்மாவை தேவ ஆவியான வரே வழி நடத்துவார். அங்கே அந்த ஆன்மாவை புண் ணியத்திலிருந்து புண்ணியத்திற்கும், வரப்பிரசாதத்திலி ருந்து வரப்பிரசாதத்திற்கும், ஒளியிலிருந்து ஒளிக்கும் வழி நடத்துவார். இறுதியாய் அது தானே சேசுகிறீஸ்துவாக மாற்றமடையும். பூமியில் தன் வயதின் முழுமையையும் எய்தும். அவருடைய மகிமையையும் மோட்சத்தில் அடையும்.

மாதா மீது உத்தமமான பக்தியின் தன்மை அல்லது சேசு கிறீஸ்துவுக்கு உத்தமமான அர்ப்பணம்


120. நம் எல்லா உத்தமதனமும், சேசுகிறீஸ்துவைப் போல் நாம் ஆகி அவருடன் ஒன்றுபட்டு அவருக்கு அர்ப்பணிக்கப்படுவதில் தான் அடங்கியுள்ளது. எனவே பக்திகளிலெல்லாம் மிகச் சிறந்தது எதுவாயிருக்குமென் றால், நம்மை சேசுகிறீஸ்துவைப் போல் ஆக்கி அவருடன் நம்மை ஒன்றாக்கி அவருக்கு நம்மை அர்ப்பணம் செய்யும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது தெளிவு. இனி, சிருஷ்டிகளிலெல்லாம் மிகச்சிறந்த முறையில் சேசு கிறீஸ் துவைப் போல் இருப்பது பரி. கன்னிமரியாயே இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால். கிறீஸ்துவின் அன்னையான மரியாயின் மீது உள்ள பக்தியே மற்றப் பக்திகளையெல்லாம் விட ஒரு ஆன்மாவை அவரைப் போல் ஆக்கி அவருக்கு அதனை அர்ப்பணம் செய்கின்றது. ஒரு ஆன்மா எவ்வளவுக் கதிகமாய் மாதாவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கதிகமாய் சேசு கிறீஸ்துவுக்கு அர்ப்பபணமாக் கப்படுகிறது. ஆகவே சேசு கிறீஸ்துவுக்கு உத்தமவிதமாய் தன்னை முழுவதும் மாதாவுக்கு அர்ப்பணிப்பதேயாகும். அர்ப்பணிக்கப்படுதல் என் ஒல் உத்தம விதமாம் நான் கற்றுத் தரும் பக்தி இதுவே. வேறு வார்த்தைகளில் கூறினால் அது நம் ஞானஸ்நான வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதேயாகும்.