சோதனை நேரத்தில் மாமரியிடம் தஞ்சம்!

 ஜூன் 15, 1943

சேசு கூறுகிறார்:

எங்கள் எதிரி அளவுக்கு மீறி உங்களைத் தொந்தரவு செய்ய முயலும்போது, "சேசுவின் திருத்தாயாராகிய மரியாயே வாழ்க! நான் என்னை உங்களிடம் ஒப்புக்கொடுக்கிறேன்'' என்று சொல்லுங்கள். மரியாயின் திருப்பெயரைக் கேட்டால் பசாசு இன்னும் அதிகமான வெறுப்பை உணர்கிறான், எந்த அளவுக்கென்றால், என் திருப் பெயரைக் கேட்டாலோ, என் திருச்சிலுவையைக் கண்டாலோ, அவன் ஏதும் செய்ய முடியாதவனாக ஆகிறான், ஆனால் ஓராயிரம் வழிகளில் என் விசுவாசிகளில் எனக்குத் தீங்கு செய்ய முயல்கிறான். ஆனால் மரியாயின் திருப்பெயரின் எதிரொலி மட்டுமே போதுமா யிருக்கிறது, அவனை அலறியடித்துக் கொண்டு பறந்தோடும்படி செய்வதற்கு! உலகத்தால் மரியாயை அழைக்க முடிந்தால், அது இரட்சிக்கப்பட்டு விடும்!

இவ்வாறு எங்கள் இருவரின் திருப்பெயர்களையும் ஒன்றாக மன்றாடுவது, எனக்குச் சொந்தமான ஒரு மனிதனின் இருதயத்திற்கு எதிராக சாத்தான் பயன்படுத்தும் ஆயுதங்கள் அனைத்தையும் பயனற்றுப் போகச் செய்ய ஒரு வல்லமையுள்ள வழியாக இருக்கிறது. ஆன்மாக்கள் நாங்களின்றித் தனித்திருக்கும்போது, அவை பலவீனமாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் வரப்பிரசாதத்தில் உள்ள ஆன்மா தனியாக இல்லை. அது கடவுளோடு இருக்கிறது.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...