இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாள் பக்தி முயற்சிகள்

எப்பொழுதும் கன்னியான மகா பரிசுத்த மரியா யுடையவும், அர்ச்சிஷ்டவர்களுடையவும் மன்றாட்டை விசுவாசிகள் கேட்பதோடு, அர்ச்சியசிஷ்டவர்களின் அருளிக் கங்களை வணங்கவும், அதனால் அவர்களுடைய புனிதத் திலும், புண்ணியங்களிலும் பங்கடையவும் வேண்டும். 
- நீசே பொதுச்சங்கம்

அர்ச். பிலோமினம்மாளுக்கு நவநாள் சிந்தனைகள் 

முதல் நாள் 

(ஒவ்வொரு நாள் சிந்தனைக்குபின் ஜெபம், பிரார்த்தனை சேர்த்துக் கொள்ளவும்)

அர்ச். பிலோமினம்மாள் உலகத்தில்தான் வாழ்ந்தாள். அவள் அரச குமாரியானதால் எல்லா உலக செல்வங்களின் நடுவில் இருந்தாள். ஆயினும், அவற்றில் எந்தப் பற்றும் அவள் வைக்கவில்லை. ஆண்டவருக்காக அவற்றை இழக் கவும் தயங்கவில்லை. ஆதலால் ஆண்டவர் அவளை மகிமைப்படுத்தி இப்பிந்திய காலங்களில் ஆன்மாக்களைத் தம்மிடம் வழிநடத்தும் பொறுப்பளித்துள்ளார்.

என்னிடம் உலகப்பற்று, உறவினர் பற்று, சினேகிதர் பற்று இருக்கிறதா? ஆண்டவருக்கு விருப்பமில்லாத எந்தப் பாசத்தினாலாவது நான் கட்டுண்டிருக்கிறேனா? இவை களை விட்டுவிட்டு ஆண்டவரின் அன்பை முழுமையாக அடைய அர்ச். பிலோமினம்மாளிடம் மன்றாட வேண்டும். 
(சிந்தனை....)

இரண்டாவது நாள்

எனக்கு கிடைக்கிற ஞான உதவிகள் பல, அக்காலத் தில் அர்ச். பிலோமினம்மாளுக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அவள் ஜெபத்தினாலும், ஆண்டவரை நேசித்ததி னாலும், அர்ச்சியசிஷ்டதனம் அடையும் வழியை அறிந் திருந்தாள். சேசுவையும், மாதாவையும் நேசிப்பதிலேயே எல்லா ஞான மார்க்கமும் அடங்கியிருக்கின்றது. இந்த தேவ அன்பிற்கு எதிரான எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதிலே வீர வைராக்கியம் விளங்குகிறது. இதற்குத் தேவையான மனத்திடத்தை அர்ச். பிலோமினம்மாளிடம் கேட்போமாக.
( சிந்தனை....) 

மூன்றாவது நாள்

அர்ச். பிலோமினம்மாள் தன் 5 வயதில் புது நன்மை வாங்கியபோதே சேசுவுக்கு சொந்தமாயிருக்க விரும்பி னாள். தன் 11-வது வயதில் தன்னை அவருக்கே முழு காணிக்கை ஆக்கினாள். தன் கன்னிமை வாக்குறுதியை அவருக்குக் கொடுத்தாள். இந்த கன்னி விரதத்தை அவள் எவ்வளவு மதித்தாளென்றால், உரோமை சாம்ராஜ்யத்தின் பேரரசியாகும் உலகின் பெரிய மகிமையைக் கூட அவள் நிராகரித்தாள். யாரும் படாத சித்திரவதைகளைத் தாங் கினாள்.   இவ்வாறு மோட்ச அரசின் முடியைப் பெற்றாள்.

சேசுவுக்கும், மாதாவுக்கும் மிகப் பிரியமான கன்னிமையை நான் எப்படி மதிக்கிறேன்? முஞ்ஞானோ ஊரிலும் அநேக கிராமங்கள், பட்டணங்களிலும் பிலோமினா கன்னியர் என்று வீட்டுக் கன்னியர்கள் இருந் தார்கள். எந்த அளவிற்கு அவர்கள் கடவுளை நேசித்திருக்க வேண்டும். கன்னிமையின் மகிமையை இவ்வுலகம் அறியாது. சேசுவை மாத்திரம் நேசிப்பதே கன்னிமை. அர்ச். பிலோமி னம்மாள் இதில் என்னை வழிநடத்த மன்றாடுவேன். அவள் ஆண்டவருடைய சித்தத்தை எனக்கு வெளிப்படுத்துவாள்.
( சிந்தனை..........) 

நான்காவது நாள்

ஒருவனது சரீர சுகமும் சுயவிருப்பமும் பாதிக்கப் படாத வரையிலும், அவன் தேவனுடைய பாதையில் நடப் பது எளிது. ஆனால் இவ்விரண்டில் எதுவும் பாதிக்கப்பட் டால் அப்பொழுதுதான் தெரியும், அவன் எந்த அளவுக்கு ஆண்டவரை நேசிக்கிறான் என்று. சிறு வயதினளான அர்ச். பிலோமினம்மாள் பெரியோரையும் பிரமிக்கச் செய்யும் வகையில் தன் சுயவிருப்பத்தை விட்டு சேசுவின் விருப்பத் தையே ஏற்று, அதற்காக அவள் சரீரத்தில் விவரிக்க முடியாத வேதனைகளைப் பட்டாள். தன்னுடைய சுயவிருப்பத்தை, ¼சுசுவின் விருப்பத்திற்காக விட்டுக் கொடுக்கவும், மோட் சத்திற்காகப் பூமியில் துன்ப வேதனைப்படவும் தயங்கா திருக்கவும் பெரும் வரத்தை அர்ச். பிலோமினம்மாளிடம் கேட்டு மன்றாட வேண்டும். 
( சிந்தனை..........) 

ஐந்தாவது நாள்:

துன்பங்களை நீடித்து அனுபவிப்பதற்கு ஒரு விசேஷ தேவ உதவி வேண்டும். பிதாவே என் சித்தப்படி அல்ல. உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும் என்று சேசு தேவ சித்தத்துக்குப் பணிந்தார். மாதாவும் இதோ ஆண்டவரு டைய அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்று கூறி, சேசுவின் தாயாக இருப்பதிலுள்ள சிலுவைகளையெல்லாம் ஏற்றார்கள். இவர்களின் பிரதி பிம்பம் போல் அர்ச். பிலோமினம்மாள் தன் இளம் வயதிலே சித்திரவேதனை மரணத்தை ஏற்றுக்கொண்டாள். அதனால் சர்வேசுரன் நித்திய காலமும் அவளை மகிமைப் படுத்துகிறார். நாம் நல்ல கிறீஸ்தவர்களாக இருப்பதற்குத் தேவைப்படும் சிலுவைகளை ஏற்றுக்கொள்ள தேவையான உதவியை அர்ச். பிலோமினம்மாளிடம் கேட்போம். 
 ( சிந்தனை..........) 

ஆறாவது நாள்

அர்ச். பிலோமினம்மாள் பட்ட கொடிய பாடுகளில் சேசுவும் மாதாவும் அவளைத் தனியே கைவிட்டுவிடவில்லை. அவள் 36 நாள் சிறையில் வாடியபோது, மாதா சேசு பாலனுடன் அவளுக்குக் காட்சியளித்து அவளைத் தேற்றினார்கள். அவள் கசையடிபட்டு சாகக் கிடந்தபோதும், அம்புகளால் எய்யப் பட்டு மரண அவஸ்தைப்பட்டபோதும் இரண்டு தடவை களிலும் ஆண்டவர் தம் சம்மனசுக்களை அனுப்பி அவளைக் குணப்படுத்தினார். நங்கூரம் கழுத்தில் கட்டப்பட்டு, தைபர் நதியில் அவள் எறியப்பட்டபோது அவளைக் காப்பாற்றினார்.
இதுபோலவே நமக்கும் ஆண்டவர் செய்வார். நம் துன்பங்கள் நம்மை மேற்கொள்ள விடமாட்டார். இந்த உறுதியான நம்பிக்கையை அர்ச். பிலோமினம்மாளிடம் நாம் கேட்க வேண்டும். 
( சிந்தனை..........)

ஏழாம் நாள்

தாயாகிய திருச்சபை உலகத்தில் தன் விருப்பக் கனி ஒன்றை மோட்சத்திற்குக் கொடுத்தது. அர்ச். பிலோமினம் மாளே அது. இந்தக் கனி மோட்சத்திலும் மிகவும் விரும்பப் பட்ட கனியாயிற்று. அவளுடைய சிறு வயதும், அவளு டைய தூய கன்னிமையின் உயர்வும் அவள் ஆண்டவர் மேல் கொண்டிருந்த அளவில்லா அன்பும் அவள் அடைந்த வேதசாட்சிய வேதனைகளின் நறுமணமும் அவளை மோட் சத்தின் அலங்காரமாக ஆக்கின. திருச்சபை மோட்சத்திற் களித்த இச்சிறந்த பரிசுக்கு மோட்சம் என்ன பதிலளித்தது?
இந்தக் கனி திருச்சபையின் இறுதிக்காலத்திற்கென சேமித்து வைக்கப்பட்டது. இக்காலத்திலுள்ள நமக்கென தரப்பட்டுள்ளது. விசுவாசம் எண்ணற்ற வேதசாட்சிகளால் வளர்ந்தபோது விளைந்த இந்த விசுவாசக் கனி, விசுவாசம் தளர்ந்து மறுதலிக்கப்படுகிற இந்நாட்களில் தரப்பட்டு, அற்புதங்களால் அறியப்பட்டு அவளது முன்மாதிரிகையால் நம் விசுவாசம் வளர்க்கப்படுகிறது. அர்ச். பிலோமினம்மா ளின் வரலாற்றையும் வீரவைராக்கிய தேவ சிநேகத்தையும், அவள் ஆண்டவருக்காகப் பட்ட பாடுகளையும் நாமும் கண்டு பாவித்து, மரியாயின் மாசற்ற இருதய வெற்றியாகிய திருச் சபையின் திரும்பி வருதலுக்காக, ஜெபமாலை, உத்தரியத் தின் வழியாக நம்மையே அர்ச். பிலோமினம்மாளிடமும், நம் தேவ தாயிடமும் முழுவதும் அர்ப்பணிப்போமாக.
(சிந்தனை...........)

எட்டாம் நாள்

தியோக்கிளேஷியன் மன்னன் இன்றைய இச்சை விரும்பும் உலகிற்கு ஒரு உதாரணம். புனித கன்னியான பிலோமினம்மாளின் மாசற்ற அழகைக் கண்டு அவன் இச்சித்தான். அவளைத் தனக்குச் சொந்தமாக்க முயன்றான். ஆனால் எல்லாம் வல்ல கடவுளே அக்கன்னியின் சொந்தக் காரராக இருந்ததை அந்த அஞ்ஞானி அறியவில்லை. அவளைக் குரூர சித்திரவதைப்படுத்திக் கொன்றான். அதிலும் தளராத கன்னி பிலோமினம்மாள், இன்றைய திருச்சபையின் கன்னியருக்கு ஒரு பெரிய பாடமாயிருக் கிறாள். இக்காலத்தில் கன்னியர் பலரும் தங்களை முழுமை யாகக் கடவுளுக்கு கொடுக்க அஞ்சுகிறார்கள். கடவுளுக் கும் உலகக் கவர்ச்சிகளுக்கும் இடையே தத்தளிக்கிறார்கள். இதனால் சிலர் தங்கள் தேவ அழைப்பையே இழக் கிறார்கள். கன்னியர் வாழ்வு உலகிற்கடுத்த வாழ்வல்ல. அது கடவுளிடம் மட்டும் நெருங்கும் வாழ்வு. கடவுளிட மும், உலகத்திடமும் பழகிக்கொண்டே கன்னியர் வாழ்வு வாழ முடியாது. இதை கன்னியர்கள் நன்கு உணர்ந்து தங்கள் நடை, உடை பாவனைகளைக் கடவுளுக்கு மட்டுமே உரியதாக அமைத்துக் கொள்ளும்படி நாம் அர்ச். பிலோமினம்மாளிடம் மன்றாடுவோம்.
(சிந்தனை...........)

ஒன்பதாம் நாள்

அர்ச். பிலோமினம்மாள் பாப்புமார்களுக்கும், மேற்றிராணிமார்களுக்கும், குருக்களுக்கும் நல்ல தோழி என்று சொல்லப்படுகிறது. அவர்களின் நன்மாதிரிகையாக அவள் விளங்குகிறாள். மெய்யான குருத்துவம் பெற்றவர்கள், அப்பத்தை பாவ உலகிற்காக கையளிக்கப்பட்ட சேசுவின் திருச்சரீரமாகவும், இரசத்தை சிலுவையிலே சிந்தப்பட்ட அவருடைய பரிகார இரத்தமாகவும் மாற்று கிறார்கள் - பலி செலுத்துகிறார்கள். ஆனால் இன்று குருத் துவமும், பலி பூசையும் பல மாற்றங்களையும், அவசங்கை களையும் அடைந்துள்ளன. சேசுவின் அசல் பிரதியான அர்ச். பிலோமினம்மாள் எப்படிப் பலியானாள் என்பதைக் குருக்கள் நினைக்க வேண்டும். குருத்துவத்தின் மகிமை யையும், பரிகார வல்லமையையும் அவள் திருச்சபை யெங்கும் துலங்கச் செய்வாள். எல்லாக் குருக்களையும் அவளுடைய பாதுகாப்பில் ஒப்படைத்து அவர்களுக்காக நாம் மன்றாடுவோம். 
(சிந்தனை ..............)

அர்ச். பிலோமினம்மாளுக்கு ஜெபங்கள்

பிலோமினம்மாளுக்கு எதுவும் மறுக்கப்படுவதில்லை. 

ஜெபம்

அர்ச்சிஷ்ட பிலோமினம்மாளே! வேதசாட்சியான கன்னிகையே! சர்வேசுரன் அனந்த புதுமைகளால் உம்மை மகிமைப்படுத்துகிறாரே! கிறீஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசர், உம்மை வாழும் ஜெபமாலைக்கும், மரியாயின் பிள்ளை களுக்கும், இளையோருக்கும் பாதுகாவலியாக நியமித்துள்ளாரே. உம்முடையதைப் போன்ற பரிசுத்தமான குரல் மறுக்கப்பட முடியாதென்றும், உமது உதவியில் நம்பிக்கை கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளதென்றும் மோட்சத்திலிருந்து தெளிவாக எங்களுக்குக் காண்பியும். சேசுகிறீஸ்துவுக்கு மரணத்திலும் பிரமாணிக்கமாயிருக்கும் வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தாரும். நாங்கள் கேட்கிற இவ்விசேஷ மன்றாட்டையும் எங்களுக்கு அருள் வீராக.

“என் பிள்ளைகளே! அர்ச். பிலோமினம்மாள் கடவு ளிடம் பெரும் மகிமை அடைந்திருக்கிறாள். அவள் வீர வைராக்கியமான வேதசாட்சியத்தை ஏற்றுக்கொண்டதில் அவளிடம் விளங்கிய கன்னிமையாலும், தாராள குணத்தா லும் எந்த அளவிற்கு அவள் பிரியப்பட்டாளென்றால், நமக்காக அவரிடம் அவள் எதைக் கேட்டாலும் கடவுள் அதை மறுக்கமாட்டார்'' என்றுரைக்கிறார் அர்ச். வியான்னி அருளப்பர் (கூரேதார்ஸ்).

வாழும் ஜெபமாலை நிறுவனரான முத்திப்பேறு பெற்ற பவுலின் ஜாரிகோ கூறுவது: “பிலோமினம்மாள் என்னும் இப்பெரிய அர்ச்சியசிஷ்டவளிடம் முழு நம்பிக்கை வையுங்கள்; நீங்கள் கேட்பதையெல்லாம் அவள் பெற்றுத் தருவாள்.”