இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யூதித் பாட்டி

ஏழை வயோதிபர்களுக்கென்று கட்டப்பட்டிருந்த விடுதியின் கோவிலில் பீடத்திலிருந்த வாடா விளக்கு மங்கலாய் எரிந்து சிநேக கைதிக்கு காவல் புரிந்து கொண்டிருந்தது. இருள் பரவியிருந்த அந்த நேரத்தில் அங்கு வேறு வெளிச்சமே இல்லை. புதிதாக அன்று வந்த இஸபெல் சகோதரி அமைதியாக கோவிலையடைந்து, முழந்தாளிட்டு சில வினாடிநேரம் ஜெபித்தார்கள். தனியே இருப்பதாக நினைத்த இஸ பெல் சகோதரியின் கண்கள் இருளிற் பார்க்கப் பழ கிய பின்னரே வேறு ஓர் ஆளும் அங்கிருப்பதாக உணர்ந்தாள். பீடத்தின் அருகில் ஒரு மூலையில் அந்த உருவம் குனிந்திருந்தது. அவள் கிழவி. முழந் தாளிட்டிருந்தாள். ஜெபத்தில் அவள் ஆழ்ந்திருந் தனள். எல்லோரும் நித்திரைக்குச் செல்லவேண்டும் என்றறிவிக்கும் மணியடிக்கும்வரை அவள் முழந்தா ளிட்டிருந்தாள். மணியடித்ததும் மெதுவாகவும் சிர மத்துடனும் எழுந்து, திருப் பேழையை கடைசி முறையாக அன்புடன் நோக்கிவிட்டு, அமைதியாக அவள் கோவிலைவிட்டு வெளியேறினாள்.

இஸபெல் சகோதரி அநேக ஆண்டுகளாக பல் வேறு மடங்களில் இருந்து ஏழை வயோதிபர்களைக் கண்காணித்து வந்தவள். திவ்விய நற்கருணைப் பேழைக்குமுன் நெடுநேரம் செலவழித்த பல பக்தி யுள்ள வயோதிபர்களை அவள் அறிவாள். புது இடத் திற்கு வந்த நாளிலிருந்து அந்தக் கிழவிமேல் அவளுக் கிருந்த மதிப்பு அதிகரித்தது. கிழவி அநேகமாய் எப்போதும் கோவிலிலேயே இருந்தாள். மறைந் திருந்த தன் கடவுளையும் இரட்சகரைச் சந்திக்கும்படி இரவிலும் பகலிலும் இடையிடையே இஸபெல் சகோதரி கோவிலுக்குப் போவாள். அந்தச் சமயங் களிலெல்லாம் கிழவி கோவிலில் இருப்பாள். நாள டைவில், சகோதரி கோவிலுக்கு வந்ததும் முதலில் தேவ நற்கருணைப் பேழையை நோக்கிவிட்டு, உடனே கிழவியின் வழக்கமான இடத்தையே நோக்குவாள். கிழவியின் பார்வை நற்கருணைப் பேழைக் கதவின் மேல் இருக்கும். கையில் ஜெபமாலை பிடித்திருப் பாள்.

அந்தக் கிழவி யாரென இஸபெல் சகோதரி ஒரு நாள் விசாரித்தாள். "அவளுடைய பெயர் யூதித் மர்பி. அவளுடைய கணவனும் மூன்று ஆண் மக்க ளும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல் கண்டு இறந்தார்கள். அதிலிருந்து அவள் இங்கு வந்து வசிக்கிறாள். வெகு பத்தியுள்ளவள்'' என ரோஸ் சகோதரி மொழிந்தாள்.

''சகோதரி, நான் அந்தப் பாட்டியுடன் பேச ஆசிக்கிறேன். திருநாமத்தைச் சொல்லும்போதெல் லாம் அவள் தலைகுனிகிறாள். அதிலிருந்து அவள் ஜெபமாலையை வெகு விரைவாகச் சொல்கிறாள் என நினைக்கிறேன். அவ்வளவு விரைவாகச் சொல்லக் கூடாது. இதைப்பற்றி பாட்டியிடம் நான் சொல்லப் போகிறேன்'' என இஸபெல் கூறியதும், “சொல்லுங் கள். அவளைப்போல் ஜெபிக்கும் வரத்தை உங்களுக் குத் தரும்படி ஆண்டவரை மன்றாடுங்கள்'' என ரோஸ் சகோதரி சொல்லிச் சென்றாள்.

மறுநாள் இஸபெல் சகோதரி முழந்தாளிட்டி ருந்த கிழவியை அணுகி, ''பாட்டி, ஜெபமாலையா சொல்கிறாய்?” என்றாள். அவள் ஒன்றும் பதிலளிக்க வில்லை. தலையை வெறுமனே அசைத்தாள். "அருள் நிறை மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கி றாயா?" என்று கேட்டபோது, இல்லை என்று காட்ட அவள் தன் தலையை அசைத்தாளேயொழிய வார்த் தையொன்றும் வெளி வரவில்லை. தான் பேசுவது அவளுக்குப் பிரியமில்லையாக்கும் என நினைத்து சகோதரி புறப்பட்டுப் போகையில் "தயவுசெய்து எனக்காகவும் ஜெபி" என்றாள்.

காலையிலிருந்து இரவு வரை யாதொரு உதவியும் இன்றி முழந்தாளிட்டிருப்பது எளிதல்ல. நான் ஒரு மணி நேரம் முழந்தாளிலிருக்குமுன் உடலெல்லாம் நோகிறது. கிழவியோ பலமணி நேரமாக அசையாமல் பார்வையை வேறெங்கும் திருப்பாமல் முழந்தாளிட்டு ஜெபிக்கிறாளே என இஸபெல் சகோதரி ஆச்சரியப் பட்டாள். யூதித் இராப்பகலாய் யேசுவிடம் என்ன சொல்கிறாள் என சிந்தித்துப் பார்த்தாள். ஒருநாள் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது. திவ்வியநற் கருணை ஆசீர்வாதத்திற்கு முன் சகோதரி கோவிலுக் குப் போன போது கிழவி பேசியது என்ன என்றறிய அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

கிழவி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் வழக்கமாக முழந்தாளிடும் இடத்திற்குச் சமீபமாகக் கிடந்த திரைக்குப்பின் சகோதரி போய் முழந்தாளிட் டார்கள். சில நிமிடங்களுக்குப்பின் யூதித் பாட்டி வந் தாள். தான் மாத்திரம் கோவிலில் தனியே இருப்ப தாக அவள் நினைத்துக் கொண்டு முழந்தாளிட்டு, தரையை முத்திசெய்து, “யேசுவே, இதோ நான் திரும்பவும் வந்து விட்டேன்'' என்றாள். பிறகு, வழக்க மான தன் ஆராதனைக் கீதத்தை அவள் ஆரம்பித்து “ஓ அழகிய யேசுவே, கோடானு கோடிமுறை உமக்கு வாழ்த்துதல் உண்டாகக்கடவது'' என்னும் ஜெபத் தைப் பத்து முறை, ஐம்பது முறை, நூறு முறை சொல்லி தன் ஜெபமாலை மணிகளை உருட்டிக் கொண்டு சென்றாள். யாராவது கோவிலினுள் நுழைந்தால், தன் குரலைத் தாழ்த்திக் கொள்வாள். தனியே விடப்பட்டிருப்பதாக உணர்ந்ததும், சிறிது சத்தமாய்ச் சொல்வாள்.

திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் முடிந்தபின்னும் யூதித் பாட்டி அங்கிருந்தாள். படுக்கைக்குச் செல்ல வேண்டிய நேரமாயிற்று என்று அறிவிக்கும் மணி அடித்ததும் அவள் எழுந்து திவ்விய நற்கருணைப் பேழையை நேசத்துடன் நோக்கி “யேசுவே, என் கண்மணியே, நான் போய் வருகிறேன். மல்லமோன் ஊரினளான யூதித் மர்பி கிழவியை மறந்துபோகாதே யும். யேசுவே, இரவு வந்தனம். அதிகாலையில் உம்மிடம் திரும்பிவருவேன்'' என்றனள். பின் அவள் மெது வாகக் கதவை நோக்கி, “யேசுவே, இன்னொருமுறை பெரிய மாலை வந்தனம்” என்று மொழிந்தாள்.

இஸபெல் சகோதரி கடைசியாக உண்மையை அறிந்தாள். கிழவி யேசுவை நேசித்தாள். யேசு பீடத் தில் மறைந்து வசித்தபோதிலும், தன் கண்முன் அவர் உயிருடனிருப்பதாக அவள் நினைத்து நடந்தாள் என்பதை சகோதரி அறிந்தனள்.

மாதங்கள் பல கடந்தன. ஓரிரவு படுக்கைக்குச் சகலரையும் அழைக்கும் மணி அடித்தாயிற்று. யூதித் பாட்டி படுக்கையறைக்குச் செல்லவில்லை. கோவி லுக்கு எல்லோரும் விரைந்தார்கள். அவள் ஒரு மூலை யிற் சுருட்டி மடக்கி அறிவின்றிக் கிடந்தாள். யேசு அவளைத் தம்மிடம் அழைத்துக்கொண்டார் என எல் லோரும் கருதினார்கள். அவளைத் தரையிலிருந்து எழுப்புகையில் இன்னும் உயிர் இருந்தது. ஆஸ்பத் திரிக்கு அவளைத் தூக்கிச் சென்றார்கள். அறிவு வந் தது. தான் பிரமாணிக்கமாய்ச் சேவித்து வந்த யேசு வைக் கடைசி முறையாக பரலோக பிரயாணத்தின் வழித்துணையாக உட்கொண்டாள். அவள் வியாதி யாய்ப் படுத்திருக்கையிலும் ஒரே ஜெபம்: “ஓ அழகிய யேசுவே, உமக்கு கோடானுகோடி வாழ்த்துதல். மல்லமோன் ஊரினளான யூதித் மர்பி கிழவியை மறந்துவிடாதேயும். யேசுவே, கண்மணியே, போய் வருகிறேன். அதிகாலையில் உம்மிடம் திரும்பி வரு வேன்'' என ஓயாது சொல்லிக்கொண்டிருந்தாள். ஆம், அவள் சொன்னது போல் அதிகாலையில் அவள் அவரிடம் திரும்பினாள். பரிசுத்தவான்களுடன் சேர்ந்து நித்தியத்துக்கும் அவரை வாழ்த்தும்படி மறுநாள் அதிகாலையில் அவளுடைய ஆத்துமம் பறந்து சென்றது.