எருதும், வண்டிகளும், ஆணிகளும்!

1876 செப்டம்பர் மாதத்தில் (ட்யூரின்) லான்ஸோவில் நடந்த தியானங்களில் ஒன்றில், 250 பேர் பங்குபெற்றனர். அவர்கள் சலேசிய சபையினரும், நவசந்நியாசிகளும், துறவற ஆயத்தக்காரர்களும் ஆவர். தியானத்தின் முடிவில், (பதினெட்டுப் பேர் தற்காலிக வார்த்தைப்பாடுகளும், பதினெட்டுப் பேர் நிரந்தர வார்த்தைப்பாடுகளுமாக) முப்பத்தாறு பேர் துறவற வார்த்தைப்பாடுகள் தந்து, டொன் போஸ்கோவை மகிழ்வித்தார்கள்.

தியானத்தின் நினைவுப் பரிசாக, டொன் போஸ்கோ ஓர் அடையாளக் கனவை விவரித்தார். அது வரைக்கும் அவர் சொன்ன வற்றிலேயே மிகவும் அதிக போதனைகளைக் கொண்ட கனவுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.

சுவாமி லெமாய்ன் டொன் போஸ்கோ பேசப் பேச குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அதன்பின் அவர் அவற்றை விரிவாக எழுதி, டொன் போஸ்கோவிடம் அதைக் காட்ட, அவர் டொன் லெமாய்னின் கையெழுத்துப் பிரதியில் சில சிறு மாற்றங் ளைச் செய்தார்.

தெளிவு கருதி, நாம் இந்த வர்ணனையை நான்கு பாகங் களாகப் பிரித்திருக்கிறோம். 

பாகம் 1 : கர்ச்சிக்கும் எருதும், தாழ்ச்சியும்

பாகம் 2 : காட்டுத்தனமான எருதுகளும், திவ்விய நற்கருணையும்

பாகம் 3 : சலேசிய சபையின் எதிர்கால வெற்றிகளும், அவற்றை அடைவதற்கான நிபந்தனைகளும்

பாகம் 4 : சபையின் செழிப்பான வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி எதிர்க்கப்பட வேண்டிய தீமைகள்