இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிஷமான சேசுவின் திவ்விய இருதயம்!

“என்னைப் பின்செல்லுகிறவன், இருளில் நடவான்” என்று நம் இரட்சகர் மொழிந்திருக்கிறார் (அரு. 7:12).

நம் இரட்சகர் உலகின் ஒளியாக இருக்கிறார். சத்தியத்தைக் கொண்டு நம்மை ஒளிர்விப்பது அவர் இந்த உலகத்திற்குள் வந்ததன் காரணங்களுள் ஒன்றாக இருந்தது. தப்பறை மற்றும் அறியாமையின் இருள் மனிதர்களை மிக எளிதாக ஏமாற்ற முடிந்த பசாசின் அடிமைகளாக அவர்களை ஆக்கியிருந்தது. கடவுளைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும், மோட்சத்தை அடைவதன் வழியைப் பற்றியும் மனிதன் மிகக் கொஞ்சமாகவே அறிந்திருக்கிற போது, உலக காரியங்கள் மதிப்புள்ளவை என்றும், நேசிக்கப்படத் தகுதியானவை என்றும் அவன் எண்ணத் தொடங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அத்தகைய ஒரு தவறு ஆத்துமத்திற்குப் பேரிடராக இருக்கிறது. உலகின் ஒளியாகிய நம் இரட்சகர், எல்லாவற்றிற்கும் முன்பாக, அந்த விஷயத்தில் நமக்கு ஞான வெளிச்சம் தந்தார். பரலோகக் காரியங்கள், நித்திய காரியங்கள் மட்டுமே கவனிக்கப்படத் தகுதியுள்ளவையாக இருக்கின்றன. உலகக் காரியங்களை நாம் நேசிக்கக் கூடாது என்றாலோ, அவற்றைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்றாலோ, நம் தேவைகளைப் பற்றி என்ன சொல்வது? உணவு, உடை, இருப்பிடம் ஆகிய வாழ்வின் தேவைகளைப் பற்றி நாம் கவலையாயிருக்க வேண்டுமா? இல்லை! அந்தக் காரியங்கள் கூட நம் மனங்களுக்கு கலக்கம் தரக் கூடாது. அஞ்ஞானிகள்தான் இவற்றையெல்லாம் தேடுகிறார்கள், “இந்தக் காரியங்கள் எல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகப் பிதா அறிந்திருக்கிறார்” என்று நம் ஆண்டவர் கூறினார். அவர் மதிப்பில்லாத புல்லைப் பேரழகால் உடுத்தவும், தகுதியற்ற பறவைகளையும், மிருகங்களையும் போஷிக்கவும் போதுமான தாராளமும், போதுமான வல்லமையும் உள்ளவராக இருப்பதால், நாம் கடவுளின் இராச்சியத்தையும், அவருடைய நீதியையும் தேடுவதாக நமக்கு அவசியமான ஒரேயொரு அலுவலைச் செய்ய மட்டும் முன்வருவோமென்றால், அதாவது, சேசுவுக்கு ஊழியம் செய்யவும், அவரை மகிழ்விக்கவும் அதனால் பரிசுத்தமடையவும் நாம் முயலுவோமென்றால், நம்மை உடுத்தவும், உண்பிக்கவும் அவர் எவ்வளவு அதிக விருப்பமுள்ளவராக இருப்பார்! இதை நாம் செய்வோமென்றால், நம் பிதாவாகிய சர்வேசுரன் நம் இவ்வுலகத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார். எனவே, நாம் தேவையில் இருப்பதன் காரணம், நாம் நன்கு உண்பிக்கப்படாமலும், உடுத்தப்படாமலும் இருப்பதன் காரணம் கெட்ட நேரங்களோ, அல்லது ஏதாவது தற்செயலான நிகழ்வோ அல்ல, மாறாக, அந்த அவசியமான ஒரேயொரு காரியத்தை நாம் செய்யவில்லை என்பது மட்டும்தான். இங்கேதான் ஞானமுள்ளது! உண்மையில் இதுவே ஜீவியத்தின் ஞானமாக இருக்கிறது - ஒவ்வொரு உலகக் காரியத்தையும், ஒவ்வொரு உலகக் கவலையையும், ஒவ்வொரு உலக மகிழ்ச்சியையும் தகுதியற்றவையென்றும், பயனற்றவை என்றும் நிந்தித்து வெறுப்பது, ஏனென்றால் அவை உண்மையாகவே அப்படித்தான் இருக்கின்றன. தகுதியுள்ளவையாக இருப்பது குழந்தைகளையும், மூடர்களையும் கவர்கின்ற பளபளப்புள்ள பொம்மைகள் அல்ல, மாறாக, பரலோகத்திலிருந்து வருகிற உண்மையான பணம்தான். ஒரு குழந்தை நூறு டாலர் நோட்டிற்குப் பதிலாக, பளபளக்கிற வெள்ளி டாலரையே தேர்ந்து கொள்ளும் என்பதால், அது அறியாமையில் இருக்கிறது என்று கருதப்படுகிறது. இவை இரண்டிற்கும் உள்ள மதிப்பு வித்தியாசத்தைப் பற்றி அந்தக் குழந்தைக்கு யாராவது ஒரு நண்பன் விளக்கிக் கூறியிருந்தால், அது வித்தியாசமாகத் தேர்ந்து கொண்டிருக்கும். ஆகவே வாழ்வில் எது மதிப்புள்ளது என்றும் எது வெறும் போலி என்றும் கடவுள் நமக்கு விளக்கியிருக்கிறார். நாம் அவர் சொல்வதைக் கேட்டு, நம் மூடத்தனமான, குழந்தைத்தனமுள்ள விருப்பு, வெறுப்புகளைப் பின்பற்றாதிருப்போம். உலகத்தை விட்டு நீங்கி, அவருடைய மணவாளிகளாக அவரைப் பின்செல்வதன் மதிப்பை நமக்குச் சொல்லும்படி, அவர் நம்மிடம் இவ்வளவு கருணையுள்ளவராக இருந்துள்ளது பற்றி நம் ஆண்டவருக்கு நாம் நன்றி கூறுவோம்; தேவத் திரவிய அனுமானங்களில் அவர் நமக்கு என்ன தருகிறார் என்பது பற்றி நமக்குக் கூறியுள்ளதற்காக அவருக்கு நன்றி கூறுவோம். விசேஷமாக அவர் திவ்ய நன்மை வழியாக தம்மையே நமக்குத் தந்ததற்காகவும், பரிசுத்த வேதாகமத்தின் ஒரு முழு அத்தியாயத்தைக் கொண்டு அதன் மதிப்பை விளக்குவதற்காகவும் இன்றிரவு அவருக்கு நாம் நன்றி கூறுவோம்.

நம் இரட்சகரின் வார்த்தைகள் ஞானமும், அறிவும் நிறைந்தவை என்பதால், அவற்றைக் கற்றுக் கொள்ள நாம் மிகுந்த ஆவலுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் ஆண்டவரின் வார்த்தைகளில் ஒரு சிலவற்றை மட்டும் கொண்டுள்ள, அல்லது அவற்றில் எதையும் கொண்டிராத ஒரு தியானப் புத்தகத்தை நாம் எடுக்கும்போது, வைக்கோலாக மதித்து, அதை வீசியெறிந்து விடுவோம். மனித ஞானத்திற்காக நேரத்தை வீணாக்க முடியாத அளவுக்கு அது மிகவும் விலையேறப் பெற்றது. நம் தெய்வீக இரட்சகரின் அற்புதமான வார்த்தைகளை விளக்குகிற புத்தகங்களை நாம் நேசிக்க வேண்டும். கிறீஸ்துநாதர் அநுச்சாரம் ஓர் அற்புதமான புத்தகமாகும். மெஸ்க்லருடைய கிறீஸ்துநாதரின் ஜீவியம் என்னும் புத்தகம் கிறீஸ்துநாதரின் வார்த்தைகள் மற்றும் செயல்களின் விளக்கமாகக் கருதப்படலாம். கிறீஸ்துநாதரின் செயல்களும் கூட பிரசங்கங்கள்தான். உண்மையில், அவருடைய செயல்கள் அவருடைய வார்த்தைகளை விட அதிக சத்தமாகப் பேசுகின்றன - ஒரு பழமொழியின்படி, ஓ என் நண்பர்களே, நம் இரட்சகரின் வார்த்தைகளை நேசியுங்கள்: “நீ பரிசுத்த வேதாகமங்களை நேசித்தால், மாமிச பலவீனங்களை நேசிக்க மாட்டீர்கள்” என்றார் அர்ச். ஜெரோம். இதன் காரணம் அப்பட்டமானது. கடவுளின் வார்த்தைகள் நமக்கு ஞானத்தைத் தருகின்றன. பாவிகள் மூடர்களாக இருக்கிறார்கள். திடமான ஞான வாசகத்தின் போஷிப்பிற்கான உன் சுவையை நீ இழக்கும்போது, எச்சரிக்கை! பன்றிகளுக்குரிய கோதுகளை நீ உண்ணத் தொடங்குவதற்கு நீண்ட காலம் ஆகாது! கடவுளின் வார்த்தைகள் உன் செவிகளுக்கு இனியும் இனிய இசையாக இல்லாமல் போகும்போது, எச்சரிக்கை! நீ வழுக்குகிற பாதையில் இருக்கிறாய்! ஓ, கடவுளே, உம் பரிசுத்த வார்த்தைகளின் மீதான சுவையை எங்களுக்குத் தந்நதருளும்! எங்களை உண்மையாகவே ஞானமுள்ளவர்களாக்கும்.


ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிஷமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!