தமது மனித அவதாரத்திற்கு முன் தேவ ஞானமானவரின் நன்மைத்தனம் மற்றும் இரக்கத்தின் அதிசயங்கள்!

41. ஆதாமுடையவும், அவனுடைய சந்ததியார் அனைவருடையவும் துர்ப்பாக்கிய நிலை நித்திய ஞானமானவரை ஆழமாக நெகிழச் செய்தது. 

தமது மகத்துவத்தின் பாத்திரமாக இருந்தவன் சிதறடிக்கப்பட்டதையும், தமது சாயலாக இருந்தவன் துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டதையும், தமது அதியற்புதப் படைப்பு அழிக்கப்பட்டதையும், இவ்வுலகில் தம் பிரதிநிதியாக இருந்தவன் விழத்தாட்டப்பட்டதையும் கண்டு அவர் ஆழ்ந்த வேதனைக்குள்ளானார்.

மனிதனுடைய பெருமூச்சுகளையும், வேண்டுதல்களையும் அவர் கருணையோடு கேட்டார். 

அவனுடைய நெற்றி வியர்வையையும், அவனது கண்களில் கண்ணீரையும், அவனது இதயத்தின் துக்கத்தையும், ஆத்துமத்தின் வலியையும் அவர் கண்டபோது, மிகுந்த தயாளமுள்ள இரக்கத்தால் அவர் தூண்டப்பட்டார்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...