எதற்காக இந்தத் தண்டனையின் எச்சரிப்பு பற்றி இங்கு எழுதுகிறோம்?

திருச்சபையின் சத்தியங்களுக்கும் போதனைக்கும் மாறுபடாமலும், பாவிகளை மனந்திருப்புவதற்கு ஏதுவாகவும் அநேக பக்தியுள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள எச்சரிப்புகளை நாமும் அறிந்திருப்பது நல்லதல்லவா? 

எந்தத் தண்டனை அறிவிப்பும் நிபந்தனைக்கு உட்பட்டிருப்பதால், அதை அறிந்து நம்மால் இயன்ற அளவு ஜெப தவ பரிகாரத்தில் ஈடுபடுவது நல்லதல்லவா? 

அறிவிக்கப்பட்டிருக்கிற எச்சரிப்பை எதிர்கொள்ள நம்மைத் தயாரிக்காமல் இருப்பதை விட நம்மைத் தயாரித்து அதற்கு ஆயத்தமாயிருப்பது நல்லதல்லவா? 

அப்படியே எச்சரிப்போ, தண்டனையோ எதுவும் வராமல் இரக்கமுள்ள ஆண்டவரால் ரத்துச் செய்யப்பட்டால், அப்படி நடக்க நாமும் உதவினோம் என்ற பேறுபலன் நமக்குக் கிடைப்பது நல்லதல்லவா? 

எச்சரிப்பு வந்து விட்டால் நாம் அதற்கு ஆயத்தமாயிருந்து ஆண்டவரின் இரக்கத்தை அடைவது மிகவும் நல்லதல்லவா? 

எச்சரிப்பு வந்த பிறகும் மனிதன் உடனே மனந் திரும்பாவிட்டால், தாங்க முடியாத தண்டனை வருமாதலால், அதிலிருந்து நாம் காப்பாற்றப்படுவது நல்லதல்லவா? 

எச்சரிப்பும், தண்டனையும் வராதபடி தங்களையே பலியாக்கும் பரிகார ஆன்மாக்களாய் நாம் இருப்பது மாதாவின் பிள்ளைகளுடையவும், மாதா அப்போஸ்தலர்களுடையவும் கடமையல்லவா? 

அதற்கு நம் நித்திய சன்மானமும், அளவிட முடியாததாக இருக்குமே!