இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் மீது உண்மைப் பக்தி - பதிப்புரை.

பதிப்புரை :

''மரியாயின் மீது உண்மைப் பக்தி '' என்னும் இந்நூல் மாதாவின் அப்போஸ்தலரான அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் (1716) என்பவரால் எழுதப்பட்ட அற்புத தீர்க்கதரிசன நூல்.

''மரியாயின் சுவிசேஷம் என்று இந்நூல் அழைக்கப்படுகிறது. நமதாண்டவரின் சுவிசேஷத்தையும் அதைப்பின் செல்கிறவர்களையும் பகைத்துத் துன்புறுத்தும் பசாசு இந்த மரியாயின் சுவிசேஷத்தையும் அதைப் பின் செல்கிறவர்களையும் இம்சிக்க எழுந்து நிற்கும் என எதிர்பார்க்கலாம். மரியாயின் சுவிசேஷப்படி நடப்பதற்குத் தூண்டப்படுகிறவன், மரியாயின் வழியாக, எளிதாக, விரைவாக, நிச்சயமாக, பாதுகாப்பாக சேசுகிறீஸ்துவை வந்து அடைந்து இரட்சிப்படைகிறான். அர்ச்சிப்பையும் அடைவான்.

இதைப் பற்றி அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் விவரிக்கிறார்.

பசாசினால் மரியாயின் பிள்ளைகளை எதுவுமே செய்ய இயலாது. அது மரியாயின் பாதத்தின் கீழ் மிதிக்கப்பட்டு விட்டது. அதிக பட்சம் அது மாதாவினுடையவும் அவர்கள் பிள்ளைகளுடையவும் குதிங்காலைத் தீண்ட முயலவே இயலும் (ஆதி. 3 : 15).

"மாதாவுக்கு அன்பின் அடிமையாதல்" என்னும் தொன்மை வாய்ந்த மறைந்த ஒரு அரிய பக்தி முயற்சியை அர்ச். லூயிஸ் இப்புத்தகத்தின் மகுடமாகக் கூறி யுள்ளார், மாதாவை உண்மையான அன்போடு நேசிக்கிறவர்கள் அதன் பொருளை உணர்ந்து அதைக் கைக் கொள்ள பரிசுத்த ஆவி தூண்டி துணை புரிவார் என இவர் உரைத்துள்ளார். உத்தமதானம் அடையும் நிச்சயமான எளிய வழி இப்பக்தி முயற்சியாகும்.

- பதிப்பிப்போர்.
மாதா பிறந்த திருநாள்
8-9-2002.