இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். மரிய வியான்னி அருளப்பரால் இயற்றப்பட்ட அர்ச். பிலோமினம்மாள் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்.

கிறீஸ்துவே கிருபையாயிரும்.

சுவாமி கிருபையாயிரும்.

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட் டருளும்.

பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திரித்துவமாகிய ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

 கன்னியர்களின் இராக்கினியான அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிறப்பிலிருந்தே அபரிமிதமான வரப்பிரசாதங்களால் நிரப்பப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிமரியாயை உத்தம விதமாயக் கண்டு பாவித்த அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியரின் முன்மாதிரிகையான அர்ச். பிலோமி னம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மிக உத்தம தாழ்ச்சியின் கூடமான அர்ச். பிலோமினம் மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடவுளின் மகிமைக்காகப் பற்றியெறியும் ஆவல் கொண்டவளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுவின் அன்புக்குப் பலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திடத்திற்கும் நீடித்து நிலைத்தலுக்கும் முன் மாதிரிகையான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த கற்பின் வெல்லமுடியாத வீரமுதல்வியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மிகுந்த வீர வைராக்கியமான புண்ணியங்களின் பிரதிபலிப் பான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாதனைகளின் எதிரே உறுதியும் துணிச்சலும் கொண்டவ ளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய மணவாளரைப் போல் கசைகளால் அடிக்கப் பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அம்பு மழையால் குத்தித் துளைக்கப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விலங்கிடப்பட்டிருக்கையில் கடவுளின் தாயால் ஆறதலளிக்கப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிறைச்சாலையிலே அற்புதமாகக் குணமாக்கப்பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய வாதைகளிலே சம்மனசுக்களால் தேற்றப் பட்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அரச சிம்மாசனத்தின் மாட்சியை விடக் கொடிய வேதனை களையும் மரணத்தையும் தெரிந்துகொண்ட அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய வேதசாட்சியத்தைக் கண்டவர்களை மனந்திரும்பிய அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய கொலைஞர்களின் கோபாவேசத்தை சலிப்புறச் செய்த அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாசற்றவர்களின் பாதுகாப்பாளியான அர்ச். பிலோமினம் மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இளைஞர்களின் பாதுகாவலியான அர்ச். பிலோமினம் மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நிர்பாக்கியர்களின் அடைக்கலமான அர்ச். பிலோமினம் மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நோயாளிகளுக்கும் பலவீனர்களுக்கும் ஆரோக்கியமான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போராடும் திருச்சபையின் புதிய ஒளியான அர்ச். பிலோமி னம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் அவபக்தியை வெட்கமுறச் செய்கிறவளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசிகளின் விசுவாசத்தையும், தைரியத்தையும் தூண்டியெழுப்புகிறவளான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய நாமம் மோட்சத்தில் மகிமைப்படவும் நரகத்தில் அஞ்சப்படவும் வரம் பெற்ற அர்ச். பிலோமி னம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மிகவும் சிறந்த புதுமைகளால் பெரும் பெயர் பெற்ற அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனிடத்தில் வல்லமை பெற்ற அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகிமையில் அரசாளும் அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரியாயின் பிள்ளைகளின் பாதுகாவலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாழும் ஜெபமாலைக்குப் பாதுகாவலியான அர்ச். பிலோமினம்மாளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே. சேசுவே எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே. சேசுவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே. சேசுவே எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முதல்: நாங்கள் சேசு கிறீஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்குப் பாத்திரவான்களாகத் தக்கதாக

பதில் : மகா பெரிய அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக

எங்களாண்டவராகிய தேவனே! தனது உன்னத மான பரிசுத்ததனத்தினாலும், எல்லாப் புண்ணியங்களின் அனுசாரத்தாலும் உமது பார்வையில் எப்பொழுதும் பிரிய முள்ளவளாயிருக்கிற கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாளின் வேண்டுதலால் எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களுக்குத் தேவையாயிருக்கிற எல்லா வரப் பிரசாதங்களையும் (விரும்பிய வரத்தைச் சொல்லவும்) தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.