இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்னையின் ஆரோபணம்

சின்ன ஆசியாவிலுள்ள கால்சீதன் என்னும் இடத்தில் கி. பி. 451-ம் ஆண்டில் திருச்சபையின் பேர்பெற்ற பொதுச் சங்கம் ஒன்று நடைபெற்றது. திருச்சபையின் பிதாக்கள் திரளான பேர் அங்கு கூடி யிருந்தனர். ரோமைச் சக்கரவர்த்தி மார்சியன் கூட் டத்தினுள் நுழைந்தார். பிதாக்களிடம் அவர் ஒரு காரியம் கேட்டார்: “கடவுளுடைய மாதாவின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அத் திரு உடலுக்கென்று ஓர் அழகிய ஆலயம் அமைக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்த மாசற்ற உடலே உலகில் மிக விலையேறப்பெற்ற அர்ச் சியசிஷ்ட பண்டம். ஆதலின் ஒரு பெரிய தேவாலயம் அதற்குத் தோத்திரமாக எழுப்பப்படுதல் நியாயமே. மரியன்னையின் மாசற்ற உடலை நீங்கள் கண்டு பிடித் துக் கொடுப்பீர்களானால், நான் அதை ஓர் தங்கப் பேழையில் வைத்து முத்திரையிட்டு, விலையேறப் பெற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின்கீழ் அதை வைப்பேன். வணக்கத்துக்குரிய பிதாக்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், ஒரு காலத் தில், மாம்சமான கடவுளின் வார்த்தையானவருடைய உறைவிடமாயிருந்த அந்த சரீரத்தைக் கண்டுபிடியுங் கள்'' என சக்கரவர்த்தி மன்றாடினார்.

கூட்டத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். இரா யப்பர் சின்னப்பர் இவர்களுடைய உடல்கள் எங்கு இருந்தன என அவர்கள் அறிவார்கள். கொன்ஸ்தாந் தின் சக்கரவர்த்தியின் தாயான ஹெலேனா கண்டு பிடித்த கிறிஸ்துநாதருடைய சிலுவை இருந்த இடம் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்தவ மறையின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட வேதசாட்சிகள் கன்னியர் இவர்களுடைய எலும்புகள் அழகியபெட்டி களிலும் ஆயிரக்கணக்கான பீடங்களிலும் இருந்தன.

ஆனால் எந்தப் பட்டணமாவது, எந்த மேற்றிராசனக் கோவிலாவது, திருக்ஷேத்திரமாவது தேவயன்னை யின் உடல் தன்னிடம் இருந்ததாக பாராட்டவில்லை.

ஜெருசலேம் நகர் மேற்றிராணியாரான (புனித) யுவெனால் கூட்டத்தின் மத்தியில் எழுந்து நின்றார். மரியம்மாளின் மரணத்துக்குப்பின் நிகழ்ந்ததை, ஜெருசலேம் கிறிஸ்துவர்கள் தலைமுறை தலைமுறை யாய் அறிந்து வந்ததை யுவெனால் எடுத்துரைத்தார். அந்தச் சபையிலிருந்த பிதாக்களுக்கு அந்த வரலாறு ஏற்கனவே தெரியும்; ஆனால் சக்கரவர்த்தி ஆவலுடன் வரலாற்றுக்குச் செவி சாய்த்தார்.

ஆதாமுடைய பிள்ளைகள் யாவரும் சாகவேண்டும். அந்த நேரம் தேவதாய்க்கு அணுகி வந்தது. அவளு டைய மகன் இறந்தார். இப்பொழுது மரியம்மாள் அந்த நேரத்தை எதிர்பார்த்து படுக்கையில் இருந் தாள்.

பாவமே மனிதனை உருக்குலைத்து சீரழிப்பது. தேவதாயோ தன் வாழ்வின் இறுதிக் கட்டத்திலும் வெகு அழகுடனிருந்தாள்.

வேதம் போதிப்பதற்காக உலகின் பல திசைக்கும் சென்றிருந்த அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தங்கள் அரசியின் மரணப் படுக்கை யண்டை வந்து சேர்ந்தனர். கிறிஸ்துநாதருடைய மரணத்துக்குப்பின் அவளை விடாது பின் சென்ற அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியின் வருகைக்குப் பின், அவளை அருளப்பருடைய பராமரிப்பில் விட்டு, பிரிந்தனர். ஆனால் எப்பொழுதுமே அவள் அவர்களு டைய தாய், அரசி, துயரத்தில் அவர்களது திடம்.

கிறிஸ்துநாதருடைய தூதர்களான அப்போஸ்த லர்கள் கிறிஸ்துநாதருடைய மாதா தன் மகனிடம் போகுமுன் அவளைப் பார்க்க வேண்டுமென்று வந்தார் கள். யேசுவுக்கு எத்தனையோ செய்திகள் சொல்லி அனுப்பினார்கள்.

அமைதியாய் யாதொரு அவஸ்தையுமின்றி அன்னை உயிர் விட்டாள். கிறிஸ்துநாதருடைய முய் பத்து மூன்று வருட மறைந்த வாழ்க்கையைப்பம் இனி அவள் வாயிலிருந்து ஒன்றும் கேட்க முடியாது உலகத்தை அவரிடம் கொண்டுசேர்ப்பதில் அவளிடம் ஆலோசனைகளைக் கேட்க முடியாது. இது அவர் களுக்கு விசனத்தைக் கொடுத்தது.

கிறிஸ்து நாதரின்றி மரியன்னைக்கு உலகம் வெம் மனாகக் காணப்பட்டதென அப்போஸ்தலர்கள் அமி வார்கள். சற்பிரசாதத்தில் அவர் இருந்த போதிலும் நேரில் பார்ப்பதற்குச் சமானமாகுமா? அவர் பரலோ கத்துக்கு எழுந்த பிற்பாடு, அவருடன் தான் ஒன்று சேர அவர் எப்பொழுது அழைப்பாரென அவள் பொறுமையாய்க் காத்திருந்தாள். வாழ்நாள் முழு துமே அவள் அவரது அழைப்புக்கும் விருப்பங்களும் கும் இணங்கி வந்தவளல்லவா? இப்பொழுதும் அவரு டைய அழைப்பை, மரணத்தை பொறுமையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனள்.

கடைசியாக அது வந்தது. அச்சத்துடன் நோய் கப்படும் வெற்றியாளனைப்போலல்ல, ஆனால் விடுதலை செய்பவனைப்போல் அது வந்தது. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அப்போஸ்தலர்கள் ஒரு விதத்தில் மகிழ்ந்தனர். அவளை அழைத்துச் செல்ல வந்த தன் மகனுடன் மாமரி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தாள்.

அந்த நாட்டில் இறப்பவர்களது சடலங்களை கெடு நேரம் வைத்திருப்பதில்லை. அப்போஸ்தலர்கள் தங் கள் அன்னையின் சடலத்தைத் தூக்கிச் சென்று கல் லறையில் வைத்தனர். அடக்கச் சடங்கின் போது அவர்கள் தாங்கள் பங்கு பற்றாத இன்னொரு அடக்கம் தைப் பற்றி நினைத்தனர். கல்வாரியிலிருந்து அரிமத் தியா சூசையின் கல்லறைக்குச் சென்ற அந்த சுற்றுப் பிரகாரத்தைப்பற்றி அன்னை அவர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தாள். அந்நியரால் அவர் அடக் கம் செய்யப்படுகையில் தாங்கள் மறைந்திருந்ததைப் பற்றி அப்போஸ்தலர் வெட்கி துக்கித்தனர். பெரிய வெள்ளிக் கிழமை செய்த அந்தத் தவறுக்குப் பரிகார மாயிருக்கும்படி, அவரது தாயாரை பரிவுடன் அடக் கம் செய்தனர்.

வழக்கம்போல் தோமையார் பிந்தி வந்தார். முக் கியமான சம்பவங்களுக்கெல்லாம் அவர் பிந்தித்தான் வருவார் போலும். ஆனால் அவர் பிந்தியது நமக்கு நல்லதாயிற்று. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அப் போஸ்தலர்கள் முதன் முறை சந்தித்தபோது தோமை யார் அங்கு இல்லை. கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந் தார் என்பதை முதலில் சந்தேகித்தார். பின் அதை நாம் உண்மை என ஏற்றுக்கொள்வதற்கான நிபந்த னைகளை விதித்தார். கடைசியாக தம் விரல்களை கிறிஸ்துநாதருடைய காயங்களிலும், கரத்தை அவ ரது விலாவிலும் வைத்தார். யேசு உயிர்த்தெழுந் தார் என்பதற்கு நல்ல அத்தாட்சி தந்ததற்காக நாம் தோமையாருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

மாமரி இறந்தபோதும் அவர் பிந்திப் போனார். அடக்கத்துக்கு முன் அவர் வந்திருப்பாரானால் அன்னை கல்லறையிலிருந்து மோட்சத்துக்கு எடுக்கப் பட்டதை நாம் அறியாதிருக்கலாம்.

"அன்னையின் அந்தியகாலத்தில் நான் இங்கு வர முடியவில்லை. அவளது திரு முகத்தையாவது நான் பார்க்கவேண்டும். எல்லோரும் என்னுடன் வாருங் கள். கல்லைப் புரட்டிப் பார்த்துவிட்டு வருவோம் " என வற்புறுத்தினார். அந்த இனிய முகத்தை இன் னொரு முறை பார்க்க அப்போஸ்தலர்களுக்கு பெரும் ஆவல். தோமையாருடன் போய், கல்லறையை மூடி யிருந்த கல்லைப் புரட்டினார்கள். உடலைக் காணோம். எவரும் அதைத் திருடியிருக்க மாட்டார்கள், அது நிச்சயம். தன் மகனைப்போலவே, தாயும் சரீரத்துடன் மோட்சம் சேர்ந்தாள் என தீர்மானித்தனர்.

கல்லறை வெறுமனாயிருந்தது. அவளது சடலம் இருந்த இடத்தில் அழகிய மலர்கள் காணப்பட்டன, மரண நாற்றம் அங்கு இல்லை. மலர்களின் மணமும் பரலோக வாசனையுமே வீசின.

உயிர்த்த யேசு தம் மாதாவையும் தம்முடன் இருக்கும்படி எடுத்துக்கொண்டார். கிறிஸ்துநாத ருடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி குறுகியது. கிறிஸ்துநாதருடைய உடலைச் சுமந்தவளுடைய உடல் மீது சாவு பெற்ற வெற்றி நீடிக்க முடியாத வெற்றி. மாமரி பூமியிலிருந்து பரகதிக்கு எடுத்துக் கொள்ளப் பட்டாள்.

வெறுமனாயிருந்த கல்லறையருகில் அப்போஸ் தலர்கள் முழந்தாளிட்டு, தாயையும் மகனையும் ஒருங்கே கொண்டிருந்த மோட்சத்தை நோக்கினார் கள். பின் மன மகிழ்வுடன் வீடு திரும்பினர்.

அன்றிலிருந்து கிறிஸ்தவ உலகம் மரியாயின் உடலுக்காக தேடி அலைந்ததில்லை. அது தன் தூய ஆத்துமத்துடன் ஒன்றித்து கடவுளருகில் இருந்தது என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

புனித யுவெனால், சக்கரவர்த்தி மார்ஸியனுக்கும் அவரது அழகிய மனைவி புல்க்கேரியாவுக்கும் கால்ஸீ தனில் கூடிய பொதுச் சங்கத்தில் இருந்த திருச் சபையின் பிதாக்களுக்கும் எடுத்துரைத்த வரலாறு இது தான். யாவரும் முழுத் திருப்தியுடன் தலை குனிந்து தங்கள் அங்கீகாரத்தை வெளியிட்டனர்.