இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாள் இரத்தத்தில் நிகழும் புதுமைகள்

தன் வேதசாட்சியப் பிள்ளைகளைப் பற்றி சத்தியத் திருச்சபை எப்போதுமே மிகவும் பெருமை கொண்டாடி வருகிறது. அவர்களுக்குரிய மரியாதையை அளிப்பதில் மிகக் கவனம் செலுத்துகிறது. 1668ம் ஆண்டில் திருப் பலன்கள் மற்றும் திருப்பண்டங்களின் திருச்சங்கம் (ளீலிஐஆre ஆழிமிஷ்லிஐ க்ஷூலிr ணூஐdற்யிஆeஐஉeவி ழிஐd யூeயிஷ்உவி) ஒரு வேதசாட்சியின் திருப்பண்டங்களை நிச்சயிக்கிற பெரிய அடையாளமாக அவர் அடக்கம் செய்யப்பட்ட பெட்டிக்குள் வைக்கப் படும் இரத்தக் கிண்ணத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. இந்தத் தீர்மானத்தை அதே சங்கம் 1863-ல் புதுப்பித்தது.

ஆதிக் கிறீஸ்தவர்கள், வேதத்துக்காக உயிரையும் கொடுக்குமளவிற்கு விசுவாசம் பெற்றிருந்த வேதசாட்சிகள் மீது மிகத் தீவிரப்பற்றுடையவர்களாயிருந்தனர். தங்கள் வீட்டாரிலோ அல்லது உறவினரிலோ வேதசாட்சிகளாய்க் கொல்லப்பட்டவர்களை தங்கள் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யும் வாய்ப்புக் கிடைப்பதை பெரிய ஆறுத லும், துணையுமாகக் கருதினர். அடக்கப் பெட்டிக்குள் அவர்களின் இரத்தத்தை ஆம்புல்லா என்று அழைக்கப்பட்ட சிறு கிண்ணத்தில் சேகரித்து வைப்பார்கள். வேதசாட்சியின் இரத்தத்தால் அக்கிண்ணங்கள் அர்ச் சிப்புப் பெற்றதாகக் கருதினார்கள். சுரங்கக் கல்லறை களில் அகழ்ந்தெடுத்த அத்தகைய இரத்தக் கிண்ணங்கள் ஆண்டு தோறும் தபசு காலத்தில் திருப்பாடுகளின் வாரத்தின் வியாழக்கிழமையன்று மக்களின் வணக்கத்திற்கு வைக்கப் படும். பெரும்பாலும் இக்கிண்ணங்கள் உருண்டை வடிவமாய் இரண்டு கைப்பிடிகளைக் கொண்டிருக்கும்.

இரத்தக் கிண்ணமும் வெற்றிக்குருத்தின் வரைபடமும் ஒரு கல்லறையில் காணப்பட்டால், அது ஒரு வேதசாட்சி யின் கல்லறை என்பதன் தப்பாத அடையாளமாக எண்ணப் பட்டது.

அர்ச். பிலோமினம்மாளின் கல்லறையில் இவை குறை யின்றிக் காணப்பட்டன. அத்துடன் அவள் பெயரும் எழுதப் பட்டிருந்தது. அவளது இளம் எலும்புக்கூடு ஒடிவு முறிவு இல்லாமல் முழுமையாயிருந்தது. அவள் தலையின் பின்புற அடிப்பாகம் சிதைப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் இரத்தச் சிமிழ் காணப்பட்டது. அது சற்று உடைந்திருந்தது. அதனுள் இரண்டு சிவந்த மர நிற சாம்பல் போல் இரத்தம் உதிர்ந்து உறைந்திருந்தது. இதை ஒரு கண்ணாடி படிகக் கிண்ணத் துக்குள் மாற்றிய உடனே நாம் முன்பு குறிப்பிட்டபடி அதிசயங்கள் நிகழ ஆரம்பித்தன. பிரகாசமான நவரத்தினங் களும், வெள்ளி தங்கத் துண்டுகளும் மகிமையுடன் துலங்கிக் காணப்பட்டன! அங்கிருந்த வேதசாஸ்திரிகளுக்கு இப்புதுமை பிலோமினம்மாள் அர்ச்சியசிஷ்டவள் என்று ஆண்டவரே சாட்சி பகர்வதாயிருந்தது. ஆம்! அதில் எந்த சந்தேகமும் இல்லை! இது நடந்தது 1802ம் ஆண்டு மே 25ம் தேதி.

இம்மாபெரும் அற்புத அதிசயம் திருச்சபையின் அதிகாரிகளுக்கு அர்ச்சியசிஷ்டவர்களுக்கு மத்தியில் ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியிருப்பதை உறுதிப்படுத்தியது. கர்தினால் ரூபோ ஷில்லா என்பவர் பகிரங்க சாட்சியாக இப்படிக் கூறினார்: “அவளது இரத்தம் அநேக பிரகாச மான பல நிறங்களுள்ள இரத்தினக் கற்களாகவும், தங்கம் வெள்ளியாகவும் மாறியதை நாங்கள் கண்டோம்” ஞான மொழியில் வெள்ளி விசுவாசத்தையும், தங்கம் தேவ சிநேகத்தையும், இரத்தினங்கள் புண்ணியங்களையும் குறிக்கும் என்பது நம் கவனத்திற்குரியது. 

45 ஆண்டுகளுக்குப்பின் இதே அதிசயத்தைக் கண்டார் இரட்சகர் சபைக் குருவாய், பிரசங்கிப்பதில் மிகவும் பெயர் பெற்றிருந்த கர்தினால் விக்டர் அகஸ்டின் தே ஷாம்ப்ஸ் என்பவர். 1847-ல் முஞ்ஞானோ அர்ச். பிலோமினம்மாளின் இரத்தத்தின் திருத்தலத்தில் இதை அவர் நேரில் கண்டார். அவர் தம் சாட்சியத்தை எழுதிக் கொடுத்துள்ளார். “எத்தகைய மகிழ்ச்சியுடன் அந்த இரத்தக் கிண்ணத்தை நான் பார்த் தேன் என்று சொல்ல அவசியமா? அந்த இரத்தம் அடங்கிய கிண்ணம் கன்னிமை மேலுள்ள அன்பிற்காக - அன்பின் கன்னிமைக்காகச் சிந்தப்பட்ட இரத்தமாயிருக்கிறது... அது காண்பதற்கே திகைக்க வைக்கிற ஒன்றாயிருக்கிறது! அதைப் பற்றி நான் முன்பு வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அதை என் கண்களாலேயே கண்டுகொண்டேன்'' என்று ஆச்சரியம் மேலிட எழுதினார்.

லிஸ்பன் நகர் சங். பவுல் சலைவன் சுவாமி, அர்ச். சாமிநாதர் சபையைச் சேர்ந்தவர். இவர் 1909ம் ஆண்டு முஞ்ஞானோ அர்ச். பிலோமினம்மாள் சேத்திரத்தில் திருயாத்ரீகராகச் சென்று, அநேக நாள் தங்கியிருந்தார். அவர் அர்ச். பிலோமினம்மாளைப் பற்றி எழுதிய புத்தகத் திலும், தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களிலும் அச்சேத்திரத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றித் திறந்து எழுதியிருக்கிறார். அர்ச். பிலோமினம்மாளின் இரத்தத்தைப் பற்றி அவர் கூறும்போது உலகிற்சிறந்த ஆச்சரியத்தின் முன்பாக தாம் இருந்ததை உணர்ந்ததாகச் சொல்கிறார். அவர் அந்த இரத்தத்தின் சிமிழை உள்ளங் கையில் வைத்துப் பார்ப்பது போல் அவ்வளவு தெளிவாகக் காண முடிந்தது என்கிறார். மேலும் அவர் கூறுவது. “இவ்விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை 30 முதல் 40 தடவை பரிசீலிக்க எனக்கு மகிழ்ச்சிகரமான வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு தடவையும் அந்த இரத்தம் மிக ஆச்சரியமான முறையில் மாற்றமடைந்ததைக் கண்டேன். எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி அது நிகழ்ந்தது. இரத் தினக் கற்கள், மாணிக்கங்கள், மரகதக் கற்கள், தங்கத் துண்டுகள், வெள்ளிப் பொடிகள் அந்த இரத்தத்துடன் கலந்து காணப்பட்டன. அந்தப் படிகச் சிமிழை நாம் குலுக் கினால் மறுபடியும் அவை தோன்றின. ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், தெளிவாக மாற்றங்கள் நிகழ்ந்தன.''

இக்குருவானவர் சில சமயம் இரத்தினங்களுக்குப் பதிலாக கறுப்புத் துண்டுகள் அதில் காணப்படும் என்கிறார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு அவை ஒரு முன்னெச்சரிக்கை யாக அல்லது வரவிருக்கும் துன்பங்களைத் தாங்கும்படி ஜெபிக்க அவர்களைத் தூண்டுவதாக இருந்ததாவும் கூறு கிறார். முத். 9-ம் பத்திநாதர் பாப்பரசர் இந்த அதிசய இரத்தத்தை வணங்கியபொழுது இதே கறுப்புத் துண்டுகள் காணப்பட்டன. அவருடைய 30 ஆண்டு ஞான ஆட்சியில் அவருக்கு நேரிட்ட பெரும் துன்பங்களை அவை முன்னறி வித்தன. 

முஞ்ஞானோவில் அர்ச். பிலோமினம்மாளின் இரத்த திருப்பண்டத்தைப் பாதுகாக்கிற அர்ச். வின்சென்ட் தெ பவுலின் பிறர்சிநேக சபைக் கன்னியர்கள் அந்த இரத்தத் தில் நடைபெறும் எல்லாப் புதுமைகளையும் அறிந்து வைத் துள்ளார்கள். சில சமயங்களில் இரத்தினங்கள் தோன்றும். மாணிக்கங்கள், மரகதங்களைவிட ஒளி வீசியும், மரக தங்கள் மாணிக்கங்களைவிட ஒளிவீசியும் காணப்படும். இந்த வானவில்லின் வர்ண ஜாலம் வரவர அதிகரித்து சூரியனே அதற்குள் உதிப்பது போலாகுமட்டும் பிரகாசம் கூடிக்கொண்டே வரும் என்று அந்த சகோதரிகள் கூறு கிறார்கள். 

ஒரே ஒரு தடவைதான் அந்த இரத்தம் படிகச் சிமிழி லிருந்து முற்றிலும் மறைந்துள்ளது. அப்படி அது மறைந் ததைக் கண்டு அங்கு கூடியிருந்த திருயாத்ரீகர்கள் நடு நடுங்கிப் போனார்கள். அதன் காரணத்தை மிகப் பிந்தித் தான் அவர்கள் கண்டுணர்ந்தார்கள். விசுவாசத்தை மறுதலித்து விட்ட ஒரு குருவானவர் அங்கே நிகழும் அற்புதத்தைப் பரிகசிப்பதற்காக வந்திருக்கிறார். அவர் வந்ததும் இரத்தம் காணாமல் போயிற்று. விவரமறியாத மக்கள் கலவரமடைந்தனர். அந்தக் குரு மனம் குழம்பி அங்கே நிற்க முடியாமல் திரும்பிப் போய்விட்டார். அவர் போனதும் மீண்டும் இரத்தம் சிமிழுக்குள் திரும்பியது. சிலநாள் வெளி யில் காணப்பட்ட அளவில். மனந்திரும்பாதவராகவே அகால மரணமடைந்தார். அவர் வந்தபோது இரத்தம் காணாமல் மறைந்தது அர்ச். பிலோமினம்மாள் அந்தக் குரு வுக்குக் கொடுத்த இறுதி எச்சரிப்பும், மனந்திரும்பும்படி கொடுத்த கடைசி அழைப்புமாக இருந்திருக்க வேண்டும்.