வேலை செய்ய மாட்டேன்!

ஒரு காலத்தில் ஆப்பிரிக்க மக்களை ஆடுமாடு களைப் பிடிப்பது போல் பிடித்து அடிமைகளாக அவர்களை விற்பார்கள். அடிமைகளை விற்கும் இடத் தில் ஜோ நின்று கொண்டிருந்தான். ஏலம் போடும் நேரத்துக்காகக் காத்திருந்தான். அவன் நன்கு வளர்ந்தவன். நல்ல தேகக் கட்டுடையவன், பலமும் சுகமும் படைத்தவன். எனினும் அவனது முகத்தில் கோபமும் பிடிவாதமும் தோன்றி, அவனது உள்ளத் தின் உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன.

அவனுடைய எஜமான் இறந்தான்; ஆதலின் அவனையும் அவனுடன் இருந்த அடிமைகளையும் சந்தையில் விற்கக் கொண்டுவந்தார்கள்; உயர்ந்த விலை தருகிறவனுக்கு விற்கப்படுவார்கள். ஜோ இதை வெறுத்தான். ஆடுமாடுகளை விற்பதைப் போல் மானிடரை விற்க அனுமதித்த தேசச் சட்டத்தை அவன் வெறுத்தான். சந்தையில் விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருக்கும் தாழ்மையை வெறுத்தான். எரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருந்த அவனது உள்ளத்தில் ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. அதன்படி நடப்பதாக உறுதி செய்தான். தன்னை விலைக்கு வாங்கப் போகிற புதிய எஜமானனுக்காக வேலை செய்யப் போவதில்லை என்று தீர்மானித்தான்.

சிறிது பின் அவனது பேரைக் கூப்பிட்டார்கள். "ஜோ, பலம் வாய்ந்தவன், நல்ல சுகமுள்ளவன். கடின உழைப்பாளி.... என்றாலும் " என ஏலம் கூறு பவன் அவனை வர்ணித்தான்.

"நான் வேலை செய்யப் போவதில்லை,'' என ஜோ கத்தினான். அவன் சொன்னதை ஏலம் கூறியவன் சட்டைபண்ணவில்லை. அவனது வயது, உயரம், நிறை முதலிய விபரங்களை அவன் எடுத்துக் கூறிக் கொண்டே போனான். இறுதியாக, “யாருக்கு வேண் டும்?" எனக் கேட்டான்.

யாரோ ஒருவர் அவனை விலைக்குக் கேட்டார். “நான் வேலை செய்யமாட்டேன்'' என ஜோ சத்த மாய்ச் சொன்னான். யாரும் அதைப் பொருட்படுத்த வில்லை. ஏல விலை உயர்ந்து கொண்டே சென்றது. தன்னை இவ்வளவு உயர்ந்த விலைக்குக் கேட்கிறார்களே என ஜோ அதிசயித்தான். தான் இத்தனை விலையுயர்ந் தவன் என அவன் ஒரு பொழுதும், கனவில் முதலாய் நினைக்கவில்லை. விலை ஏறிக்கொண்டே இருந்தது. நேரமான பின் ஏலம் கேட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இரண்டு மூன்று பேர்கள் மாத்திரம் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனை எப்படியாவது வாங்க ஒருவர் தீர்மானித்திருந்த தாகக் காணப்பட்டார். அவர் வெற்றி பெற்றார். உச்ச கிரயம் வந்தது. ஜோ அவருக்கு விற்கப் பட்டான்.

அவனுடைய புதிய எஜமான் ஜோ நின்ற இடத் துக்கு வந்தார். ''நான் வேலை செய்யமாட்டேன். நீங்கள் என்னை அடிக்கலாம், என்றாலும் நான் வேலை செய்யப்போவதில்லை. ஏற்கெனவே சொல்லிவிட் டேன்'' என ஜோ கூறினான். புதிய எஜமான் ஒன் றும் பேசவில்லை. அவர் அவனைத் தம் வாகனத் துக்கு அழைத்துப் போனார். வீடு போய்ச் சேருமள வும் "நான் வேலை செய்யமாட்டேன்'' என ஜோ சொல்லிக்கொண்டிருந்தான்.

வீடு போய்ச் சேர்ந்தார்கள். வழக்கமாக அடி மைகளை அழைத்துப் போகும் அசுத்தமான இடத் துக்கு அவனை எஜமான் கொண்டு போகவில்லை. நேர்த்தியான ஒரு சிறு வீட்டுக்கு அவர் அவனை அழைத்துப் போய், “ஜோ, நீ எங்களுடன் இருக்கும் வரை, இது உன் இல்லமாயிருக்கும்'' என்றார். “எனக்கா இந்த வீடு?" என ஜோ ஆச்சரியத்துடன் கேட்டான், "நன்றி, எனினும் நான் வேலை செய்ய மாட்டேன்'' என்றான்.

நீ வேலை செய்ய வேண்டியதில்லை. உனக்குப் பிரியமான காலமெல்லாம் நீ இங்கு வாழலாம்.'' என எஜமான் மொழிந்தார். "ஐயா, என்னை வேலை செய்ய வைக்கப்போவதில்லையா!'' என ஜோ அதிச யத்துடன் கேட்டதும், எஜமான், “ஓ இல்லை, இல்லை, உனக்கு விடுதலை தரவே உன்னை நான் விலைக்கு வாங்கினேன்'' என்றார்.

ஜோ அவர் முன் முழந்தாளிட்டு, “எஜமானே, என்னை விடுவிக்கவா போகிறீர்கள்! உங்களுக்குத் தக்க நன்றி நான் எவ்விதம் செலுத்த முடியும்? மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் நான் உங்களுக்கு சேவை செய்வேன். நீங்கள் சொல்வதையெல்லாம் செய்வேன்'' என்றான்.

அன்றிலிருந்து ஜோ தன் புதிய எஜமானுக்குப் பிரமாணிக்கத்துடனும் நேசத்துடனும் சேவை செய்தான். அவனைப் போன்ற நல்ல வேலையாளை எஜமான் இதுவரை கண்டதில்லை.

இந்த நல்ல எஜமான் ஜோவுக்குச் செய்ததை யேசு நமக்குச் செய்திருக்கிறார். நாம் பாவச் சங்கிலி யால் கட்டப்பட்டு விடுதலையடைய வழியறியாமல், பாவக்குழப்பம் நிறை உள்ளத்துடன் சந்தையில் நிற் பதை யேசு கண்டார். நம்மை விடுவிக்க தம்மிடம் இருந்ததையெல்லாம் கொடுத்தார். "அழிவுள்ள பொன்னாலும் வெள்ளியாலும் நீங்கள் இரட்சிக்கப் படவில்லை; ஆனால் கிறிஸ்துநாதருடைய விலையேறப் பெற்ற இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்'' என வேத புத்தகம் கூறுகிறது. (இரா. 1/18, 19)

இத்தனை உயர்ந்த விலை நமக்காகக் கொடுக்கப் பட்டிருப்பதால் நாம் செய்ய வேண்டியதென்ன? அந்த விலை கொடுத்தவரிடம் நாம் என்ன சொல்ல வேண்டும்? “யேசுவே, நேச எஜமானே, என் வாழ் நாளெல்லாம் உம்மை நேசிப்பேன், உமக்குச் சேவை செய்வேன்'' எனச் சொல்வோமாக.