இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வெளி ஆசாரப் பக்தர்கள்

96. மரியாயின் மீது தங்கள் பக்தியை வெளி ஆசா ரச் சடங்குகளில் கொண்டிருப்பவர்கள் வெளி ஆசாரப் பக்தர்கள். மாதா பக்தியின் வெளி ஆசாரங்கள் மீது மட்டுமே இவர்களுக்கு விருப்பம் உள்ளது. இதன் கார ணம் இவர்களிடம் உள்ளுணர்தல் இல்லை. இவர்கள் பல ஜெபமாலைகளை வெகு வேகமாகச் சொல்வார்கள். கவனமில்லாமல் பல பலி பூசைகள் காண்பார்கள் அன்னையின் பவனிகளில் பக்தியின்றிக் கலந்து கொள் வார்கள். தங்கள் வாழ்க்கையைத் திருத்தாமலே எல்லா மாதா சபைகளிலும் சேர்ந்திருப்பார்கள். தங்கள் ஆசா பாசங்களைக் கட்டுப்படுத்தமாட்டார்கள். இம் மகா பரி சுத்த கன்னிகையின் புண்ணியங்களைக் கண்டு பாவிக்க மாட்டார்கள். புலன்களுக்கு எட்டக் கூடியவைகளைத் தான் விரும்புவார்கள். இவர்களுக்கு உருப்படியான பக்திக் காரியங்கள் மீது விருப்பம் கிடையாது. இவர்கள் தாங்கள் செய்யும் பக்திக் காரியங்களில் இனிமையை உணராவிட்டால் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று நினைக்கிறார்கள். குழப்பமடைந்து எல்லாவற்றை யும் கைவிடுகிறார்கள். அல்லது விரும்பினால் செய்வதும் விரும்பாவிட்டால் விட்டுவிடுவதுமாக இருக்கிறார்கள். இவ் வெளி ஆசாரப் பக்தர்களால் உலகமே நிரம்பி யிருக்கிறது. செப வாழ்வில் இருப்பவர்களைக் குறை கூறுகிறவர்கள் இவர்களைப் போல் வேறு யாருமே இல்லை. செப வாழ்வு வாழ்கிறவர்கள் உள்ளரங்க பக்தியே இன்றியமையாதது என அதை மிக முயன்று அடைய முயற்சிக்கின்றனர்; உண்மைப் பக்தியுடன் எப்பொழு தும் இணைந்து செல்லும் வெளி அடையாளங்களையும் அவர்கள் கைநெகிழ்வதில்லை.