வேளாங்கண்ணித் திருத்தல பசிலிக்காவின் சார்பாக பரிசுத்த தந்தை வழங்கியுள்ள பலன்கள் :

1. வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையின் பசிலிக்காவைத் தரிசிக்கும் திரு யாத்திரீகர் மரியன்னையின் திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு நாளும் பரிபூரண பலன் அடையலாம். இதை அடைய அவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்து, திவ்விய நன்மை உட்கொள்வதோடு, பாப்பரசரின் கருத்துகளுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும்.

2. ' திருநாள்', 'நினைவு' என்றுள்ள நாட்களில்கூட அந்த நாட்களின் திருப்பலிக்குப் பதிலாக, மரியன்னையின் திருப்பலி செய்ய அனுமதி உண்டு. இந்த திருப்பலி மரியன்னை பெயரால் உள்ள எந்தத் திருப்பலியாகவும் இருக்கலாம்.

3. வேளாங்கண்ணித் தூய ஆரோக்கிய அன்னையின் சிறுதர பசிலிக்கா உரோமையில் உள்ள 'St. Mary Major', என்னும் மரியன்னையின் உயர்தர பசிலிக்காவோடு இணைக்கப் பட்டுள்ளது. எனவே அக்கோவிலைத் தரிசிப்போர்க்கு அருளப்படும் அருள் வரங்களில் சிலவற்றை இந்த பசிலிக்காவைத் தரிசிப்போரும் பெறுவர்.