இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா நம் இருதயங்களின் அரசி

37. நான் இப்பொழுது கூறியவற்றிலிருந்து முடிவுகள் சில கொள்ளப்பட வேண்டியுள்ளன:

முதலாவது: தெரிந்து கொள்ளப்பட்ட ஆன்மாக்களின் மீது மிகப் பரந்த உரிமையை மாதா கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், அங்ஙனமில்லாவிடில், பிதாவின் ஆணைப்படி அந்த ஆன்மாக்களில் அவர்கள் தன் உறைவிடத்தை அமைத்துக் கொண்டிருக்க முடியாது. அவ் வான்மாக்களின் தாயாயிருந்து அவர்களை உருவாக்கி உணவூட்டி நித்திய வாழ்வுக்கு அவர்களைப் பயின்றெடுக்க முடியாது. 

அவ்வான்மாக்களை சேசு கிறிஸ்துவிலும் சேசு கிறீஸ்துவை அவ்வான்மாக்களிலும் உருவாகச் செய்து அவர் களைத் தனது சொந்த உடமையாகவும் தன் வம்ச உரிமை யாகவும் கொண்டிருக்க இயலாது. ஆன்மாக்களின் இரு தயங்களில் தன் புண்ணியங்களின் வேர்களை இறக்க இயலாது. பரிசுத்த ஆவியின் எல்லா வரப்பிரசாத அலுவல் களிலும் இணை பிரியா துணையாக அவருடன் இருக்க இயலாது ............. உந்த கடவுளின் தனியொரு வரத்தினால் இவ்வான்மாக்களின் மீது உரிமையும் ஆளுமையும் மாமரி கொண்டிராவிட்டால் இவை எதையும் அவர்களால் செய்ய இயலாது என்று மீண்டும் கூறுகிறேன். 

சர்வேசுரன் தமது ஏக பேறானவரும் சுபாவப்படி தம் திருச்சுதனானவர் மீதும் மாதாவுக்கு அதிகாரமளித்ததினிமித்தம் தமது சுவீகார மக்கள் மீதும் அதிகாரமளித்துள்ளார். அவர்களுடைய சரீரங்கள் மீது மட்டுமல்ல - அது மிகக் குறைந்த அதிகார மன்றோ - அவர்களுடைய ஆன்மாக்கள் மீதும் அதிகாரம் அளித்துள்ளார்.

38. சேசு கிறீஸ்து தம் சுபாவப்படியும் தம் வெற்றி யினிமித்தமும் ஆன்மாக்களின் அரசராயிருப்பது போல் மாதா வரப்பிரசாதத்தினால் பரலோக பூலோக அரசியா யிருக்கிறார்கள். "கடவுளின் அரசு உங்களுக்குள்ளேயே இருக்கிறது'' என்ற வார்த்தைகளுக்கொப்ப, சேசு கிறீஸ்து வின் இராச்சியம் பிரதமமாக மனிதனின் இருதயத்தில் அல்லது அவனுடைய அந்தரங்கத்தில் இருப்பது போலவே மாதாவின் இராச்சியம் மனிதனின் அந்தரங்கத்திலேயே - அதாவது அவன் ஆன்மாவிலே உள்ளது. காணப்படும் சிருஷ்டிகளில் மகிமையடைவதைவிட மாதா ஆன்மாக்களில் தான் முக்கியமாகவும் அதிகமாகவும் தன் திருக்குமாரனுடன் மகிமையடைகிறார்கள். இதனால் அர்ச்சிஷ்டவர்கள் அழைப் பது போல் நாமும் மரியாயை நம் இருதயங்களின் அரசி என அழைக்கலாம்.

இரண்டாவது பயன்: மனிதர்கள் தங்கள் இறுதிக் கதியை அடைவதற்கு மாதா தேவைப்படுகிறார்கள்.

39, இரண்டாவதாக, கடவுள் சித்தங்கொண்டுள்ளபடி மாதா கடவுளுக்குத் தேவையாயிருப்பதால் மனிதர்கள் தங்கள் இறுதிக் கதியை அடைவதில் அதைவிட அதிக தேவை யாக மாதா இருக்கிறார்கள் என்ற முடிவையும் நாம் கொள்ள வேண்டும். எனவே, மரியாயின் மீது பக்தி என்பது ஏதோ தேவைக்கு மேற்பட்டது போலவும் அது மற்றப் பக்திகளை விட அதிக தேவை இல்லாதது போலவும் கருதி மாதா மீது பக்தியை மற்ற அர்ச்சிஷ்டவர்கள் மீதுள்ள பக்தியுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது.