இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - அரசியல் மோசடிகள்!

உலகம் இருண்டு கிடக்கிறது. ஒருபுறம் நாகரீகமடைந்த சமூகம் நொறுங்கி விடும் ஆபத்து. மறுபுறம் அணு ஆயுதங்களால் எல்லாமே அழிந்துபோகக் கூடிய சூழ்நிலை. இதற்குக் காரணம் என்னவென்று அறிவது அவசியமல்லவா? ஒரு நோய் குணமாக்கப் படுமுன் நோய் இன்னதுதான் என்று திட்டமாக அறியப்பட வேண்டும். உலகின் தற்போதைய நிலை, சரியான முறையில் ஆராய்ந்து அறியப் படாத வரையிலும் முன்னேறுவதற்கு நம்பிக்கை இல்லை. ஆன்மீக உணர்வு மிகப் பரவலாக அற்றுப் போனது இதற்கோர் பெரிய காரணம் என்று இதுவரை பார்த்தோம். இனி இந்த ஆன்மீக உணர்வு அற்றுப் போனதினால் அரசியல் துறையில் ஏற்பட்டுள்ள விளைவுகளை ஆராய்வோம்.

தெய்வப் பற்றற்ற அரசாங்கங்களின் கண்மூடிய போக்கு, குற்றமற்ற மக்கள் லட்சம் லட்சமாக செத்து மடிவதற்குக் காரணமா யிருந்துள்ளது. இந்தக் கண்மூடிய போக்கின் காரணம் என்னவென்றால் மக்களின் ஆன்மீக உயிர் வறண்டு போய்விட்டதேயாகும்.

திருச்சபைத் தலைவர்களான பாப்பரசர்கள் தேவ ஏவுதல் பெற்றவர்களாய், அரசியல் விஷயம் என்று கருதப்படுகிறவைகளில் சரியான வழிகாட்டுதலைச் செய்து வந்துள்ளார்கள். இவைகள் அரசியல் சம்பந்தப்பட்டவை போலத் தோன்றினாலும், உண்மையான ஆன்மீகப் பொருளுடையவைகளாயிருக்கின்றன. பாப்புமார்களின் ஆலோசனைகளைக் கிறீஸ்தவ நாடுகளின் தலைவர்கள் செவி கொடாமல் விட்டதனால் ஐரோப்பா இரத்தத்தால் நனைந்தது: சரித்திரத்திலேயே இந்த நூற்றாண்டுதான் மிகவும் வன்முறைகளுக்குப் பெயர் போனதாயிற்று.

9-ம் பத்திநாதர் பாப்பரசரிலிருந்து, பல பாப்பரசர்கள் மார்ஸிய கம்யூனிஸம் மகா கொடியது என்று கண்டனம் செய்தே வந்திருக் கிறார்கள்.

பாப்பரசர்களின் மிகவும் உருக்கமான ஆலோசனைகளுக்கு எதிராகக் கிறீஸ்தவ நாட்டுத் தலைவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியை அங்கீகரித்து வந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களுக்குச் செய்யத் தகாத மரியாதைகளைச் செய்து வந்துள்ளார்கள். நாகரீக உலகையே அடிமைப்படுத்தி அழிக்கக் கூடிய உரிமைகளையும், அதிகாரத்தையும் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு இவர்கள் கொடுத்து வந்திருக் கிறார்கள்.

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்றும், ஆக்ரமிப்பாளன் என்றும், ரஷ்ய மக்களின் பகைவன் என்றும் கம்யூனிஸ்ட்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள். அப்படி இருந்தும், ஸ்டாலின்தான் ரஷ்யாவின் உண்மையான ஆளுநன் என்று கிறீஸ்தவ ஐரோப்பா ஒப்புக் கொண்டதே! இதுவும், ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வந்த சதிகாரக் கும்பல் ரஷ்யாவிலும், உலகமெங்கும் கிறீஸ்தவ விசுவாசத் தையும் கடவுள் நம்பிக்கையையும் அழித்து விட கங்கணம் கட்டியிருந்த போது!

1924-ம் ஆண்டிற்குள் அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் ஆட்சியை நியாயமானது என்று ஒப்புக் கொண்டு விட்டன! இதற்கு முக்கியக் காரணம் வியாபார நோக்கம்! 1933-ல் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஸ்டாலினை ரஷ்யாவின் நியாயமான அதிகாரியாக ஏற்றுக் கொண்ட அதே சமயத்தில் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா? ரஷ்யாவில் குலாக்கர்கள் என்ற பெருந்தொகையான விவசாயிகள் அவனுடைய பறிமுதல் கொள்கையை எதிர்த்ததனால் அவர்கள் அனைவரையும் உணவு இன்றி பட்டினியால் மடிய வைத்துக் கொண்டிருந்தான்! கிராவ் யஷங்கோ என்ற நம்பகமானவர் கொடுக்கும் தகவல்படி அந்தக் கொடுமையில் பட்டினியால் மடிந்தவர்கள் இரண்டு கோடி குலாக்கர்கள்! அவர்கள் இவ்வாறு ஆகாரமின்றி வதைபட்டுச் சாக வேண்டுமென்று திட்டமிட்டு ஏற்பாடு செய்தவன் ஸ்டாலின்!

தன்னை ரஷ்யாவின் அதிகாரி என்று அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஏற்றுக்கொண்டது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய சாதகமாயிற்று. பழிகார கொலைகார சதித்திட்டம், நியாயமாய் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது! அரசாங்க உறவு முறைகள் ஆரம்பமாயின. இதிலிருந்து மார்க்ஸீய கம்யூனிஸ்ட் விஷக் கிருமிகள் உலகெல்லாம் பரவ வழிவகுக்கப்பட்டு விட்டது. இதிலெல்லாம் மிகவும் கேடாயிருந்தது எதுவென்றால், இந்தக் கிறீஸ்தவ நாடுகள் கடவுளையே இவ்வாறு மறுதலித்து விட்டதுதான்!

தற்காலத்திய அரசியல் புரட்சிப் பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஆரம்பித்து வைத்ததே மேற்கூறிய கடவுள் மறுதலிப்புதான் என்று எண்பித்துக் காட்ட முடியும். இதுவே இப்போது உலகில் நடைபெற்று வரும் அரசியல் மோசடிகளின் முதல் படியாகும்.

இவ்வரசியல் மோசடிகளினால் உலகம் மிகவும் இன்னல் படுகிறது. எண்ணிக்கையை மீறிய தொகையினரான மக்கள் உயிரிழந் துள்ளார்கள். ஆயினும் இந்தக் கண்மூடித்தனமான போக்கு எங்குமே திருந்தியதாக இல்லை. அது திருந்தவும் செய்யாது, மனிதர்கள் ஜெபிக்கத் துவக்கும் வரையிலும்.

மதப் பற்றற்ற அரசாங்கங்களுக்கு பாப்பரசர்கள் பல பெரிய நிருபங்களின் மூலமும் உரைகள் மூலமாகவும் கம்யூனிஸத்துடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி வந்துள்ளார்கள். 13-ம் சிங்கராயர் என்ற பாப்பரசர் தமது “புயியிeஆஷ்ழிஐஉe மிலி மிஜுe யூeஸ்ரீற்ணுயிஷ்உ” 

(குடியரசுக்குப் பிரமாணிக்கமாயிருத்தல்), “ளீஜுrஷ்விமிஷ்ழிஐ ளீலிஐவிமிஷ்மிற்மிஷ்லிஐ லிக்ஷூ றீமிழிமிeவி” (கிறீஸ்தவ தேச சட்டங்கள்) என்ற நிருபங்கள் மூலம் கம்யூனிஸம் புகுத்திய ஆபத்தான புதிய கொள்கையைக் கண்டனம் செய்தார். 1937-ம் ஆண்டு, பாப்பரசர் 11-ம் பத்திநாதர், “கம்யூனிஸம் தன் இயல்பிலேயே தீயது; கிறீஸ்தவ சமூகத்தின் மீது ஒரு சிறு கவலையேனும் உள்ள எவரும் கம்யூனிஸத்தோடோ, அல்லது அதன் சார்பான எந்த ஒரு முயற்சியுடனோ ஒத்துழைக்கவே கூடாது!” என்று “நாஸ்திக கம்யூனிசம்” என்ற நிருபத்தில் கூறினார்.

“குடியரசுக்குப் பிரமாணிக்கமாயிருத்தல்” என்ற நிருபம் 1892-ம் ஆண்டில் 13-ம் சிங்கராயரால் வெளியிடப்பட்டது.

கடவுள் நம்பிக்கையே இல்லாத மனிதர்கள் அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றி மதத்தை வேரோடு அழிக்க முயன்று கொண்டிருந்ததை இந்தப் பாப்பரசர் அறிந்திருந்தார். அவ்வித மனிதர்கள் என்ன நியாயமான அதிகாரம் கொண்டிருப்பார்கள்? இன்று கம்யூனிஸ்ட் நாடுகளை ஆளுகிறவர்கள் என்ன நியாயமான அதிகாரம் கொண்டிருக்கிறார்கள்?

13-ம் சிங்கராயர், ஒரு சட்டம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் கூறினார். தேச சட்டம் என்பது அறிவுக்கு அடங்கியதும், மக்களின் நலனுக்காகப் பிரகடனப்படுத்தப்படுவதுமான ஓர் ஒழுங்கு என்று அவர் குறிப்பிட்டார். அதே பாப்பரசர் உடனே, கடவுளுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் எதிரான எந்தச் சட்டமும் சட்டமாக்கப்படக் கூடாது அது ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நாடு எப்பொழுது கடவுளுக்குரியதை அவருக்குக் கொடுக்க மறுக்குமோ, அப்போதே அது அந்நாட்டு மக்களுக்கு உரியவைகளையும் மனிதர்கள் என்ற முறையில் அவர்களுக்குக் கொடுக்கத் தவறிவிடும். 

பாப்பரசர் 13-ம் சிங்கராயர் இருபதாம் நூற்றாண்டைக் கெளவிப் பிடிக்கக் காத்திருந்த தீமைகளை நன்கு முன்னறிந்திருந்தார். ஆகவே அவர் கூறினார்: “ஒரு நாடு, தான் எதற்காக இயங்க வேண்டுமோ, அந்த முதல் குறிக்கோளை விட்டு விட்டால் அது முடிவில் தனக்கே பொய்யாகி, தான் இருப்பதன் நோக்கத்தையே மறுத்து விடும். அந்த நோக்கம் சர்வேசுரன்தான்... ஆகவே அந்நாட்டு எல்லா மக்களும் முயன்று, தங்கள் நாட்டில் தெய்வ உணர்வு நிலைத் திருக்கும்படி முயற்சிக்க வேண்டும், அதைப் பாதுகாத்து வர வேண்டும். எக்காரணத்தினாலாவது இயற்கையினுடையவும், சரித்திரத்தினுடையவும் அனுபவங்களை மீறி ஒரு நாஸ்திகக் கருத்து உட்புகுந்து, சமூகத்திலிருந்து கடவுளை வெளியேற்றி நல்லொழுக்கங்களை மனித உள்ளங்களிலிருந்து அகற்றி விட முயன்றால், அப்படி நேரிட்டு விடாதபடி எல்லா மக்களும் அதை எதிர்த்து கடவுள் பற்றைக் காக்க வேண்டும்.” 

மீண்டும் “கிறீஸ்தவ தேச சட்டங்கள்” என்ற தம் நிருபத்தில், “கடவுள் இல்லையென்பது போல் நடந்து கொள்வது ஒரு பகிரங்கக் குற்றமாகும். இயற்கையும் மனித அறிவும் ஒவ்வொரு மனிதனும் பக்தியுடன் கடவுளைப் பரிசுத்தமாய் வழிபட வேணடும் என்று வற்புறுத்துகின்றன. ஏனென்றால் நாம்அவருக்குச் சொந்தமானவர்கள். அவரிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள். இதே நியதியால் மக்கள் சமூகத்தையும் கட்டுப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

இவ்விஷயத்தில் மனிதனுடைய உரிமைகள், பறிக்கக் கூடாத முறையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பறிக்கக் கூடாத உரிமை என்றால், இவ்வுலகில் எந்த அதிகாரமும் அதை எடுத்துக் கொள்ள முடியாது. இந்த உரிமை மனிதன் என்ற முறையில் மனித ஆளுக்குச் சொந்தமான உரிமை. மனித சுபாவத்திலேயே உட்பட்ட உரிமை கடவுளாலேயே அளிக்கப்பட்ட உரிமை.

1776 ஜூலை 4-ம் நாளன்று பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்க உரிமை சாசனம் இவ்வாறு ஆரம்பிக்கிறது. “கீழ்வரும் உண்மைகள் தம்மில்தாமே (எடுத்துக் கூறப்பட வேண்டிய அவசி மில்லாமல்) தெளிவாகத் துலங்குகின்றன. அதாவது: எல்லா மனிதரும் சம உரிமையுள்ளவர்களாகவே படைக்கப்படுகிறார்கள். சிருஷ்டிகர் அவர்களுக்குச் சில மறுக்கப்பட முடியாத உரிமைகளைக் கொடுத் திருக்கிறார். இவற்றுள் உயிர், மகிழ்வுடன் வாழ உரிமை, அதைத் தேடிக் கொள்ளும் உரிமை. இந்த உயிரைப் பாதுகாக்க மக்களிடையே அரசாங்கங்கள் நிறுவப்படுகின்றன; ஆளப் படுவோரின் நியாயமான சம்மதத்தைப் பெற்று இவை இயங்க வேண்டும். எந்த அரசாவது இதற்கு எதிராய்ச் செயல்படுமாயின், அந்த அரசை மாற்றவோ நீக்கி விடவோ மக்களுக்கு உரிமை உண்டு.” 

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் சதித் திட்டத்தால் வந்த ஆட்சியை நியாயமான ஆட்சி என்று அமெரிக்கா ஏற்றுக் கொண்டதினால், ரஷ்ய மக்களின் மேற்கண்ட உரிமையைப் பறித்துக் கொள்ள அமெரிக்கா உதவியது. சதிகாரர்கள் தங்கள் ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ள உதவியது.

ரஷ்யத் தலைவர்கள் மேற்குறிக்கப்பட்ட பறிக்க முடியாத உரிமைகள் மனிதனுக்கு உண்டு என்பதே தங்களுக்குத் தெரியாதது போல் நடித்தார்கள். இப்போது கம்யூனிஸ்ட்களுக்கு இவ்வித மனித உரிமைகள் இருப்பதே தெரியாது. கம்யூனிசம் எதற்காகத்தான் இபபொழுது இருக்கிறது? மனிதனுடைய இந்த அடிப்படை உரிமை களைப் பறிப்பதற்குத்தான். அதாவது மனிதன் கடவுளைப் பரிசுத்தமாய் நீதியிலும் உண்மையிலும் வழிபடும் உரிமையைப் பிடுங்குவதற் காகவே.

ரஷ்ய மக்களால் எதுவுமே செய்து கொள்ள இயலாது. கம்யூனிஸ்ட்களின் ஒற்றர் படைகள், எங்கும் அலையும் இரகசியப் போலிஸ் படை இவைகளால் அம்மக்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்கக் கூட இயலாத நிலையில் உள்ளார்கள்.

இப்படிப்பட்ட சதித் திட்டத்தால் வந்த ஒரு அரசாங்கத்திற்கு ராஜீய உறவுகள் போன்ற உதவிகளைச் செய்ததனால் அதைச் செய்த கிறீஸ்தவ நாடுகள் அந்த கம்யூனிஸ்ட்களின் கொடிய பழி பாவங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கின்றன அல்லவா?

இந்த அநீதச் செயல் எவ்வளவு கொடியதென்பதற்கு ரஷ்யாவில் அதற்குப் பிறந்து பாய்ந்தோடிய இரத்த ஆறுகள் சாட்சி சொல்லும். ஏனெனில் இந்த ராஜீய உறவுகளும், அங்கீகாரமும் கொலை பாதகனான ஸ்டாலினை அதிகார பீடத்தில் ஸ்திரப்படுத்தின.

உலகமெங்கிலுமுள்ள நாடுகளிலும், விஷயமறியாத தேசத் தலைவர்கள் கம்யூனிஸ்ட் ரஷ்யாவுக்கு அளித்த ராஜீய உறவு முறையான ஆதரவான வழியாக, கம்யூனிஸ்ட்கள் தங்கள் விஷத்தை எல்லா நாடு களிலும் பரப்பி வருகிறார்கள்.

1969-ல் “டெய்லி டெலகிராப்” என்ற பத்திரிகையில் அனாட்டால் குஷ்நட்ஷேவ் என்பவர் எழுதி வந்த கட்டுரைகளைப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும். சோவியத் பிரதிநிதிகளாக பிற நாடுகளில் தங்கியிருப்பவர்கள் சோவியத் மக்களின் பிரதிநிதிகள் அல்ல!

சோ லோன் என்ற கிரேக்க ஞானி கி.மு. 600 ஆண்டுகளுக்கு முன் எழுதியபடி, “காயப்பட்டவனைப்போலவே காயப்படாதவனும் மனம் வேகும் நிலை ஏற்பட்டால், ஜனநாயகம் காக்கப்படும்.” 

லட்சோப லட்சம் குற்றமற்ற மக்கள் இன்று கம்யூனிஸத்தினால் ரஷ்யாவிலும், சீனாவிலும், வியட்னாமிலும் கொலை செய்யப்படுவ தைக் கண்டும் மனம் வெந்தவர்கள் எத்தனை பேர்! இப்படிக் கொலை செய்யப்பட்டவர்கள், நினைப்பாரின்றி, அழுவாரின்றி, அப்படியே மண்ணுக்குள் புதைக்கப்பட்டுப் போகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாரையும் நாம் இறுதி நீதித் தீர்ப்பின் நாளிலே சந்திப்போம். இந்த அநீத அட்டூழியங்களெல்லாம் நீதியுள்ள கடவுளாலே தீர்க்கப்படும்.

இந்த உண்மைகளெல்லாம் வெளியாக்கப்படும் இந்நேரம் கம்யூனிஸ்ட்கள் கையில் எப்படிப்பட்ட பயங்கர ஆயுதங்கள் இருக்கின் றனவென்றால், நாகரீக உலகை முழுவதும் அழித்துவிடக் கூடியதும், ரஷ்ய மக்களையுமே ஒழித்துக் கட்டக் கூடியதுமான சக்தியுள்ள அழிவுக் கருவிகள் அவர்களிடம் உள்ளன.

இந்த பயங்கரமான சந்தர்ப்பத்திற்குத் தக்க பதில் யாரிடம் உண்டு?

சோவியத் கம்யூனிஸ்ட்களை எதிர்த்து நின்று போராடவா? அது உலகத்தையே அழிக்கும் மடமைச் செயலாகும். நாம் செய்ய வேண்டியது கடவுளை நோக்கித் திரும்புவது ஒன்றுதான். 

நம்பக் கூடிய தகவல்கள் கூறுகிறபடி, ரஷ்ய கம்யூனிஸம் அதன் உள்ளிருந்தே அழிக்கப்பட முடியும் என்று தெரிகிறது. இந்த முறைப்படி அது அழிவுறும்படியாக நாம் உழைக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும்.

கடவுளால் யாவும் கூடும். ரஷ்யாவின் ஹைட்ரஜன் குண்டுகளி லிருந்தும் அவர் நம்மைப் பாதுகாக்க முடியும். ஆனால் நாம் அதற்கு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

நம்மை இந்நிலைக்குக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்தது நம் அரசியல் தலைவர்கள்தான்.

நாமே தெரிந்தெடுத்து அனுப்பிய நம் தலைவர்களே நம்மை அச்சுறுத்தும் இந்தச் சூழ்நிலையை உருவாக விட்டார்கள்.

பாப்பரசர்களின் ஆலோசனைகளை நாம் கேட்டு நடந் திருந்தால், எவ்வளவோ நன்றாயிருந்திருப்போம். “வானத்தின் ஒளி” என்று அழைக்கப்பட்ட 13-ம் சிங்கராயர் பாப்பரசரின் ஞான அறிவுரையைப் பின்சென்று நடந்திருந்தால் உலகத்தில் இப்போதுள்ள அநேக துயரங்களையும் இரத்தம் சிந்துதலையும் நாம் தவிர்த்திருக்க முடியும்.