இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சியால் நாம் கடவுளுடைய ஊழியத்திற்கு நம்மை முழுதுமாகக் கையளிக்கிறோம்.

தன்னை மரியாயின் கரங்கள் வழியாக சேசு கிறீஸ்துவுக்குக் கையளிப்பதன் உயர்வு இங்கு கூறப்படுகிறது.

135. கடவுளின் ஊழியத்தில் இருப்பதைப் போல் உயர்வுள்ள ஒரு நிலையை இவ்வுலகில் நாம் நினைத்துப் பார்கக முடியாது. கடவுளுடைய ஊழியரில் மிகத் தாழ் வான ஒருவன் கூ... உலகத்திலுள்ள எல்லா அரசர்கள் சக்கரவர்த்திகளையும் விட--அவ்வரசர்களும் சக்கரவர்த்தி களும் கடவுளின் ஊழியராயும் இருந்தால் தவிர- அதிக செல்வந்தனும் அதிக வல்லமையுள்ளவனும் சிறநத வனுமாயிருக்கிறான். அப்படியானால், தன்னால் முடிந்த மட்டும், எவ்வித தடையுமின்றி, தன்னை முழுவதும் முற்றிலுமாக கடவுள் பணிக்கு அர்ப்பணித்த பிரமாணிக்க முள்ள உத்தம ஊழியனுடைய செல்வமும் வல்லமை யும் சிறப்பும் எத்தகையதாயிருக்க வேண்டும்! மரியா யின் கரங்கள் வழியாக, மரியாயிடமாய், அரசர்க்கரசரு டைய பணிக்குத் தன்னை முற்றும் முழுவதுமாகக் கையளித்து தனக்கென எதையும் வைத்திராத சேசுவின் பிரமாணிக்கமும் அன்புமுடைய ஒருவன் இத்தகைய வனாக இருக்கிறான். அவன் இவ்வுலகின் பொன் எல்லா வற்றையும் விட, வான மண்டல அழகு அத்தனையை யும்விட அதிக மதிப்புடையவனாயிருக்கிறான்.

136. நமதாண்டவருடையவும் நம் தேவ அன்னை யுடையவும் மகிமைக்கென துறவற சபைகளும் பக்தி சபைகளும் ஊழியர் சபைகளும் பல உள்ளன. இவை கத்தோலிக்க உலகமெங்கும் எவ்வளவோ நற்பணிகளை ஆற்றி வருகின்றன. ஆயினும் இவை நம்முடைய எல்லா வற்றையும் முற்றும் முழுவதுமாக எவ்வித ஓதுக்கலு மின்றி கையளித்துக் கொடுத்துவிடும்படி செய்வதில்லை. ஏனென்றால் இச்சபைகள் சில குறிப்பிட்ட செயல்பாடு களையும் முயற்சிகளையும் தங்கள் உறுப்பினர் கடமை யாகச் செய்யவேண்டும் என்று தான் விதிக்கின்றன. அவை போக மற்றச்செயல்களையும் முயற்சிகளையும் தங்கள் மீதி நேரத்தையும் தங்கள் விருப்பப்படி உப யோகித்துக்கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படும் பக்தி முயற்சி என்ன செய் கிறதென்றால், நம்முடைய நினைவுகள் வார்த்தைகள் செயல்கள் அனைத்தையும், நம் துன்பம் யாவற்றையும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணப்பொழுதையும் எவ் வித ஓதுக்கலுமின்றி சேசுவுக்கும் மாதாவுக்கும் அர்ப் பணித்து விடுமாறு செய்கிறது. இம்முறைப்படி நாம் விழித்திருந்தாலும் உறக்கத்திலிருந்தாலும், உணவு உண்டாலும் பானம் பருகினாலும் பெரும் அலுவல் களைப் புரிந்தாலும் மிகச் சிறு வேலைகளைச் செய்தாலும் நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் நாம் என் னென்ன செய்கிறோமோ அத்தனையும் இக்கையளித்தல் மூலம் சேசுவுக்கெனவும் மாதாவுக்கெனவுமே செய்யப் படுகின்றன என்று நாம் எப்போதும் உண்மையுடன் கூற முடியும். வேணுமென்று விரும்பி இக்கருத்தை நாம் மாற்றிக் கொண்டால் தவிர அவை அங்ஙனமே இருக் கும். எவ்வளவு ஆறுதலானது இது!

137. ஏற்கெனவே நாம் கூறியுள்ளபடி (எண் 110) நாம் மிக நல்ல நோக்கத்தோடு செய்யும் செயல் களிலும் கூட, அதை நாம் செய்கிறோம்'' என்று உரிமை பாராட்டும் தன்மை , நம்மை அறியாமலேயே நுழைந்து விடாமல் எளிதில் தடுப்பதற்கு இந்தப்பக்தி முயற்சியைத் தவிர வேறு எதுவுமில்லை. நம்மை நேசிக் கும் சேசுவால் இத்தனி வரப்பிரசாதம் நமக்கு அளிக் கப்படுகிறது. நம்முடைய நற்கிரியைகளின் முழுப் பலனையும் மரியாயின் கரங்கள் வழியாக அவரிடம் ஓப்பிக்கிறோம் அல்லவா! இந்த சுய நலமற்ற வீர வைராக்கியமான செயலுக்கு வெகுமதியாக அதை சேசு நமக்கு அளிக்கிறார். காலத்துக்குட்பட்டும் அழியக் கூடியனவாக இருக்கும் புறக்காரியங்களைக் கூட தம் மீது கொண்ட அன்பிற்காக விட்டுவிடுகிறவர்களுக்கு, இவ்வுலகத்திலேயே அவர் நூறு மடங்கு கொடுக்கிறார் (மத். 19:29). அப்படியானால் அவருக்கெனத் தங்கள் உள்ளரங்க ஞான நலன்களையெல்லாம் தியாகம் செய் கிறவர்களுக்கு அவர் அளிக்கும் நூறு மடங்கு'' என் பது எத்தகையதாயிருக்கும்!

138. நம் மிகச் சிறந்த அன்பர் சேசு. அவர் தம்மை முழுதும் யாதொரு ஓதுக்கீடுமின்றி, ஆன்மா, சரீரம், புண்ணியங்கள், வரப்பிரசாதங்கள், பேறு பலன்கள் யாவற்றுடனும் நமக்குத் தந்துள்ளார், அர்ச். பெர்னார்ட் கூறுவது போல், "சேசு தன்னை முழுதும் என்னை கொடுத்து வாங்கியுள்ளார்.'' எனவே இதற்கு நன்றியாக நம்மால் கொடுக்க முடிந்த யாவற்றை யும் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பது சாதாரண நியாயமல்லவா? அவர் தான் முதலில் மனத்தாராள மாக இருந்தார். நாம் பதிலுக்கு மனத்தாராளமுள்ள வர்களாக இருப்போம். மேலும் நம் வாழ் நாளிலும் நம் மரண வேளையிலும் நித்தியகாலமாகவும் அவர் இதற்கு மேலும் தாராளமுள்ளவர் என்பதைக் கண்டு கொள்வோம். "தாராளமுள்ளவர்களுக்கு அவர் தாராள முள்ளவராயிருக்கிறார்.''

தருமத்தினுடையே கண்ணாடியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.