அர்ச். தோமையார் வரலாறு - மலையாளத்தில் தோமையார் வேலை

மலையாள நாட்டில் முக்கிய பட்டணம் கரங்கனூர். ரோமையர், சிரியர், எகிப்தியர் முதலியோர் வாணிபத்திற் காக அங்கு வந்து போவது வழக்கம். அவ்வழியை ஒட்டியே தோமையாரும், இந்திரபட்டணத்து முற்கால அரசனாகிய சாந்தப்பரும், ஹாபானும் இவ்வூர் வந்து அடைந்தனர். 

ஆனால் ஹாபான் வாணிபத்திற்காக வந்தமையால் தனது மரக்கலத்தில் சரக்குகள் ஏற்றிக் கொண்டு திரும்பிவிட்டான். மற்ற இருவரும் ஆன்ம வியாபாரம் கொள்ள வந்தமையால் அவ்வலுவல் முடியு மட்டும் தங்கினார்கள். அவ்வூரில் அக் காலத்தில் யூதரும் இருந்தனர். தோமையார் யூதகுலத்தார் ஆகையால் அவர்கள் வசிக்குமிடத்திற்குப் போனார். 

அங்கு, யூதர் களுக்குத் தலைமையாயிருந்த 'ராபி பாவுல்' அவருக்குத் தங்க இடம் அளித்தான். இச்செய்தியை அறிந்த மற்ற யூதர்களும், வந்த விருந்தினர் இருவரையும் மரியாதையாகப் பாராட்டி ஆதரித்தனர். தங்களின் விருந்தினர், நசரேத் ஊராராகிய இயேசுவின் சீடர்கள் என்று அறிந்ததும் அவர் காட்டிய மதிப்பு அதிகரித்தது. 

ஏனெனில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும், அ வ ரு  ைட ய அப்போஸ்தல ராகிய தோமையார் சிந்துதேசத்தில் செய்துள்ள அற்புதங் களையும் பற்றி முன்னமே அவர்கள் அறிந்துள் ளனர். 'சாபத்' என்னும் ஓய்வு நாளுக்கு அடுத்த தினம் தோமையார் 'ரா பி பா வு 'லோடு 'சின காக்' எனும் யூதர் செபக் கூடத்துக்குப் போனார். 

அங்குள்ள வேதப்புத்தகங்களைக் கையிலெடுத்து இறைவாக்கினர் களின் ஆகமத்தைத் திறந்து, அங்குள்ள வசனங்களால் ஆதாம், அபிரகாம், தாவீது ஆகிய முன்னோர் கள் எதிர்பார்த்திருந்த மெய்யான “மெசியா" இயேசுவே என்று எண்பித்தார். அவர்களோ மெளனத்துடன் கவன மாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர். 

அன்று முதல் ஒவ்வொரு 'சாபத்' நாளிலும் தோமையார் யூ தர் செபக்கூடம் போய், வேத வாக்கியங்களை அவர் களுக்கு விளக்கினார். அதன் பயனாகப் பலர் அவர் போதிப்பதை நம்பினார்கள். 

அவர் களுள் முதன் மையான வர் 'ராபி பா வுல்' எனும் யூதகுருவே. இயேசுபதம் வந்தடைய விரும்பிய அவருக்கும், அவரைப் பின் பற்றிய வேறு பலருக்கும் அப்போஸ்தலர் ஞானஸ்நானங் கொடுத்தார். இந் நன்மையைக் கை நெகிழ விட்ட இதர யூதர்கள், கிறிஸ்தவர்களானோரை ' நசரேயர் ' என்று ஏளனஞ் செய்தார்கள்.