உரோமை பிரஸில்லா சுரங்கக் கல்லறையில் அர்ச். பிலோமினம்மாளைப் பற்றிக் கண்டறியப்பட்ட உண்மை களும், அதில் பொறிக்கப்பட்டிருந்த சின்னங்கள் வழியாக வெளிப்படும் உண்மைகளும் நிகழ்ச்சிகளும், அவளின் எண் ணற்ற புதுமைகளும் எல்லாம் சேர்ந்து அவளைப் பற்றிய ஒரு சிறு வரலாற்றை ஏற்கெனவே உருவாக்கியுள்ளன என்று கண்டோம். ஆயினும் அவளது பிறப்பு, வளர்ப்பு, அவளது வேதசாட்சியத்தின் அடிப்படைக் காரணம், அது நடந்த முறை என்பன போன்ற அநேக விவரங்கள் நமக்கு எட்ட வில்லை. இந்தக் குறையை அவளே தீர்த்து வைக்க மூன்று நபர்களுக்கு அதை மூன்று தனி வெளிப்படுத்தல்களாகக் கொடுத்திருக்கிறாள். அவற்றின் விவரங்கள், பிலோமினம் மாளின் அருளிக்கங்களை முஞ்ஞானோவுக்குக் கொண்டு சென்ற சங். லூஸியாவின் பிரான்ஸிஸ்கோ சுவாமி அவர் களாலேயே 1832ல் ஒரு சிறு நூலாக எழுதப்பட்டுள்ளன. அவற்றை இனி பார்ப்போம்.