இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாளும், உலகளாவிய வாழும் ஜெபமாலை இயக்கமும்

 வாழும் ஜெபமாலை என்பதென்ன?

நமதாண்டவர் தமது மானிடப் பிறப்பாலும், பாடுகளாலும், உயிர்ப்பாலும் சம்பாதித்த மனுக்குலத்தின் இரட்சண்யம் ஜெபமாலையின் தேவ இரகசியத் திரு நிகழ்ச்சிகளிலும் அடங்கியுள்ளது. இத்திருநிகழ்ச்சிகள் அனைத்திலும், பரிசுத்த கன்னிமாமரி சேசு கிறீஸ்துவுடன் பிரிக்கக் கூடாத விதமாய் - இணை மீட்பராய் - இணைந் திருந்தார்கள்.

இத்தேவ இரகசியத் திரு நிகழ்ச்சிகளை நம் பாவத்துக்காக மனஸ்தாபத்தோடும், சேசு மாதா மீது அன்போடும் சிந்தித்து ஜெபித்து நம்முடையதாக்கிக் கொள்ளும் அளவிற்கு நாம் இரட்சிக்கப்படுகிறோம். இதனாலேயே, திவ்விய பலிபூசைக்கு அடுத்தப்படியாக ஜெபமாலை முக்கியத்துவம் பெறுகிறது. இதை நன்றாகச் செய்வதற்காக முத். பவுலின் ஜாரிகோ தேவ ஏவுதலுடன் வகுத்துத் தந்த எளிதான வழியே வாழும் ஜெபமாலை. 

இந்த உலகளாவிய இயக்கத்தின் தலைவியாகவும், வழி காட்டியாகவும், பரலோக பாதுகாவலியாகவும் பாப்பரசர் 16ம் கிரகோரியாரால் நியமிக்கப்பட்டிருக்கிறாள் கன்னியும், வேத சாட்சியுமான அர்ச். பிலோமினம்மாள். இப்பிந்திய காலங்களின் பரிபாலகி அவள்.

வாழும் ஜெபமாலையின் குறிக்கோள்: மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றி. அதாவது உலக சமாதான மும் ஆன்மாக்கள் நரகத்தில் விழாமல் காப்பாற்றப் படுவதும். இதை மாதா, பாத்திமா காட்சிகளில் வாக்களித் துள்ளார்கள். “இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும், உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்'' என்று கூறியிருக்கிறார்கள்.

உலகில் சமாதானம் நிலவி ஆன்மாக்கள் சேசு கிறீஸ்துவின் மீட்பை அடைந்துகொள்வதில், வாழும் ஜெப மாலையே இவ்விறுதிக் காலத்தில் உலக சமாதானத் தையும், ஆன்மாக்களின் இரட்சிப்பையும் பெற்றுத்தரும் கருவியாக தரப்பட்டிருக்கிறது.

வாழும் ஜெபமாலையில் உட்படுகிறவர்கள், தங்களை மாதாவுக்கு ஒப்புக்கொடுத்து அவர்களுடன் இணைந்தவர்களாயிருப்பது முக்கியமாகும். ஆதலால், அவர்கள் தங்களை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணம் செய்து அதன் அடையாளமான கார்மெல் உத்தரியத்தை அணிந்திருக்கிறார்கள்.

மேலும் தங்களையும், பிறரையும் ஆண்டவரிடம் அதிகமதிகமாய் மனந்திரும்பும் அருட்கருவியாக இருக்கிற மாதாவின் அற்புத பதக்கத்தையும் வாழும் ஜெபமாலை இயக்கம் மிகவும் ஆதரிக்கிறது. வாழும் ஜெபமாலை, பத்து மணி ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அது “அர்ப்பண பத்து மணி'' என்றும் அழைக்கப்படுகிறது. 

வாழும் ஜெபமாலை இயக்கம் தொடங்கப்பட்ட காரணம்: தளர்ந்த நிலையில் இருந்த பரிசுத்த ஜெபமாலை யின் சிரேஷ்டசபையைப் புதுப்பிக்க வேண்டும் என்ற முத். பவுலின் ஜாரிகோவின் நோக்கமேயாகும். ஜெபமாலை சொல்வது பலருக்கும் பளு வானதாகத் தோன்றக் கூடாது என்று, பத்து மணி ஜெபத்தை பலர் சொல்லி, ஒரு கூட்டாக முழு ஜெபமாலையைச் சொல்ல வைக்கும் கருத்துடன் அது தொடங்கப்பட்டது. ஒருவர் 53 மணி ஜெபமாலையை குறைந்த பட்சமும், முடிந்த மட்டும் 153 மணி கொண்ட முழு ஜெபமாலையைச் சொல்வதே நல்லது என்னும் கருத்தில் எவ்வித மாற்றமு மில்லை. வாழும் ஜெபமாலையின் 10 மணியைச் சொல் வதில் பிரமாணிக்கமாயிருப்பவர்கள், விரைவிலேயே 53 அல்லது 153 மணி ஜெபம் செய்ய முன்னேறி விடுகிறார்கள் என்பது அனுபவ உண்மை. வாழும் ஜெபமாலை இயக்கம் தேவ சித்தத்தால் உருவானது என்பதற்கு அத்தாட்சியாக அது 1832, ஜனவரி 27-ம் நாளில் பாப்பரசரால் அங்கீகரிக் கப்பட்டது. அதுமட்டுமல்ல, அதற்கு ஏராளமான ஞானப் பலன்களும் அளிக்கப்பட்டன. வாழும் ஜெபமாலையின் நோக்கம் பத்து மணி அல்ல! பத்து மணியில் தொடங்கி முழு ஜெபமாலை அனுபவத்துக்குக் கொண்டு செல்வதுதான்.