இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஒரு சிறந்த உத்தம நிலைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மாதா மீது பக்தி அதிக தேவையாயிருக்கிறது

43. இரட்சண்யமடைவதற்கே மாதா மீது பக்தி எல்லா மனிதருக்கும் தேவையானதென்றால், ஒரு சிறந்த உத்தம நிலைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அது இன்னும் அதிக தேவையாயிருக்கிறது. பரிசுத்த கன்னி மரியாயுடன் ஒரு மிக ஆழ்ந்த ஐக்கியமில்லாமலும் அவர்களின் உதவியில் அதிகமான ஊன்றுதல் இல்லாமலுமிருக்கிற யாரும் நம் தாண்டவருடன் அந்நியோந்நிய ஐக்கியத்தைக் கொள்ளவும் பரிசுத்த ஆவிக்கு உத்தமமான முறையில் உண்மையுடனிருக் கவும் முடியுமென்று நான் நினைக்கவில்லை.

44. வேறு எந்த ஒரு சிருஷ்டியின் உதவியுமில்லாமல் கடவுளிடம் கிருபை பெற்றது மாமரி மட்டுமே (லூக், 1:30) அதுமுதல் கடவுளிடம் கிருபை பெற்றவர்கள் யாவரும் மரியாயின் வழியாகவே பெற்றுள்ளனர். இன்னும் வர இருக்கிறவர்களும் மரியாயின் வழியாகவே கிருபை பெறு வார்கள். கபிரியேல் அதிதூதரால் மாதா வாழ்த்தப்பட்டபோதே வரப்பிரசாதத்தால் நிறைந்திருந்தார்கள் (லூக் 1:35) பரிசுத்த ஆவி அவர்களை நிழலிட்டபோது அவரால் அருளில் நிறைந்து மிகுந்திருந்தார்கள் (லூக். 1:35). இந்த இரட் டிப்பு அருள் நிறைவை நாளுக்கு நாள், விநா டிக்கு விநாடி மாதா எவ்வளவு அதிகரித்தார்களென்றால், சிந்தனைக்கு எட்டாத எல்லையற்ற வரப்பிரசாத அளவை அவர்கள் அடைந்தார்கள். இது எந்த அளவிற்கென்றால், உந்தரான சர்வேசுரன் தன் திரவியங்களுக்கெல்லாம் மரியாயை காவலியாக நியமித்தார், தான் விரும்புகிற எவரையும் வரப்பிரசாதத்தில் உயர்த்தி மேம்படச் செய்து செல்வந்தராக்கக்கூடிய தனிச் சிறந்த விநியோகியாகவும் மரியாயை ஏற்படுத்தினார். மாதா, தான் விரும்பும் யாரை யும் பரலோகத்திற்குச் செல்லும் ஒடுக்கமான பாதையில் வைக்கவும், தன் விருப்பப்படி யாரையும் எவ்வித எதிர்ப் பையும் தாண்டி அந்த ஒடுக்கமான ஜீவிய வாசல் வழியாகக் கொண்டு வந்து அரச அரியாசனத்தையும் மகுடத்தையும் செங்கோலையும் அவர்களுக்குக் கொடுக்கவும் கடவுள் நிய மித்தார். சேசு, எங்கும் எப்பொழுதும் மரியாயின் குமார னும் கனியுமாகவே இருக்கிறார். மரியாயும் ஜீவியக் கனி யைத் தரும் உண்மையான மரமாகவும் அக்கனியை உற் பத்தி செய்யும் உண்மையான அன்னையுமாகவே இருக் கிறார்கள் (இந்நூல் எண் 33 காண்க)........

45. தேவ அன்பின் திரவிய சாலைகளின் திறவுகோல்களை சர்வேசுரன் மரியாயிடம் மட்டுமே கொடுத்துள்ளார். (உந். சங். 1:3) உத்தமதனத்தின் மிக உந்ந்த இரகசிய வழி களில் செல்லவும், மற்றவர்களையும் இவ்வழிகளில் நடத்தி வரவும் மரியாயிக்கு மட்டுமே இறைவன் சக்தியைக் கொடுத் திருக்கிறார். நிலை தவறிய ஏவாளின் பரிதாபத்துக்குரிய பிள்ளைகள் அந்த சிங்காரத் தோப்புக்குள் வரவும் அங்கு இறைவனுடன் மகிழ்ந்து உலாவவும், அவர்களுடைய எதிரிகளிடமிருந்து பத்திரமாய் மறைந்திருக்கவும், ஜீவியத் தருவிலும் நன்மை தீமையறிவிக்கும் மரங்களிலும் மரண பயமின்றி மகிழ்ச்சியுடன் கனி அருந்தவும், அங்கு மிகுதி யுடன் பொங்கிப் பாயும் அழகிய பரலோகச் சுனைகளில் ஏராளமாகப் பருகவும் செய்வது மாதா மட்டுமே. அப்படிக் கூட அல்ல. ஏனெனில் மாதா தானே அந்த சிங்காரத் தோப்பாகவும், ஆதாம் ஏவாள் துரத்தப்பட்டு விட்டுச் சென்ற புனித கன்னிப் பூமியாகவும் இருப்பதால் தனக்கு விருப்பமானவர்களை மட்டுமே அர்ச்சிஷ்டவர்களாக்கும் பொருட்டு அவர்களைத் தன்னிடம் ஏற்றுக்கொள்கிறார்கள்,

46. ''மக்களுள் செல்வரெல்லாம்'' (சங். 44 : 13) என்ற பரிசுத்த ஆவியின் வார்த்தைகளையே எடுத்துக்கொள்வோம்: அர்ச். பெர்னார்ட் என்பவர் இவ்வார்த்தைகளை விளக்குகை யில், மக்களுள் செல்வந்தராயிருப்பவர்கள் எல்லாரும் ஒவ் வொரு காலந்தோறும், அதிலும் குறிப்பாக உலக முடிவு நெருங்கி வரும்போது, உமது திருமுகத்தை நோக்கி மன்றாடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது, அருளிலும் புண்ணியத்திலும், மிகுந்த செல்வந்தராயிருக்கும் மிகப் பெரிய அர்ச்சிஷ்டவர்கள் தேவ அன்னையிடம் மன்றாடுவதி லும் தாங்கள் பின்பற்றும் உத்தம் மாதிரிகையாக தங்களுக்கு உதவி செய்யும் மிக வலிமையுள்ள துணையாகவும் மரியா யைக் கொண்டிருப்பதிலும் மிக ஊக்கமுடையவர்களா யிருப்பார்கள்.

47. இவைகள் முக்கியமாக உலக முடிவு நெருங்கி வரும்போது நடைபெறும் என்று நான் கூறியுள்ளேன் --- அதுவும் விரைவிலேயே. ஏனென்றால் உந்தரான இறை வனும் அவர் திரு அன்னையும் தங்களுக்கென மிகப்பெரும் புனிதர்களை எழுப்பவிருக்கிறார்கள். சங். தேரென்டி வரலாறு எழுதியுள்ள ஒரு புனித ஆன்மாவுக்கு வெளிப்படுத்தப்பட்டி ருப்பது போல், (இப் புனிதையின் பெயர் மரிய வாலீஸ். அர்ச், யூட் அருளப்பர் இவளுக்கு ஆன்ம குருவாயிருந்தார்.) லீபானின் கேதுரு மரங்கள் சிறு குத்துச் செடிகளை விட உயர்ந்து மேலெழுந்து நிற்பது போல இப் புனிதர்கள் அர்ச்சிஷ்டதனத்தில் ஏறக்குறைய மற்றெல்லா ரையும்விட உயர்ந்து நிற்பார்கள்.

48. வரப்பிரசாதமும் ஆன்ம தாகமும் நிறைந்தவர் களான இப்பெரும் ஆன்மாக்கள், எப்பக்கத்திலிருந்தும் எழுந்துவரும் கடவுளின் பகைவர்களை எதிர்த்து நிற்பதற் கென தெரிந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் பரிசுத்த கன்னிமாமரி மீது தலை சிறந்த பக்தி பூண்டிருப்பார்கள். மரியாயின் ஒளியால் வெளிச்சம் பெறுவார்கள். அவர் களின் அமுதால் உணவூட்டப் பெறுவார்கள். அவ்வன்னை யின் கருத்தால் நடத்தப்படுவார்கள். அவர்களின் கரத்தால் தாங்கப்படுவார்கள். மரியாயின் ஆதரவால் பாதுகாக்கப் படுவார்கள். இதனால் அவர்கள் ஒரு கையால் போரிட்டு மறுகையால் கட்டி எழுப்புவார்கள். ஒரு கையினால் அவர்கள் பதிதரையும் அவர்களுடைய பதிதங்களையும் பிரிவினைக்காரரையும் அவர்களுடைய பிரிவினைக் கொள்கை ளையும், விக்கிரக ஆராதனைக்காரரையும் அவர்களுடைய விக்கிரக ஆராதனையையும், பாவிகளையும் அவர்களுடைய துர்க்குணத்தையும் எதிர்த்துப் போராடி வென்று நசுக்கி விடுவார்கள். இன்னொரு கையினால் அவர்கள் கன்னிமரி என்னும் உண்மையான சாலமோனின் ஆலயத்தையும், தேவ இரகசியமமைந்த கடவுளின் நகரத்தையும் கட்டி யெழுப்புவார்கள். வேத பிதாக்களால் சாலமோனின் ஆலய மென்றும் கடவுளின் நகர் என்றும் அழைக்கப்படுவது கன்னிமாமரிதான். அப்புனிதர்கள் தங்கள் சொல்லாலும் முன்மாதிரிகையாலும் எல்லா மாந்தரையும் அக்கன்னிகை மீது உண்மையான பக்தி கொள்ளச் செய்வார்கள். இதனால் அவர்களுக்கு அநேக எதிரிகள் ஏற்பட்டாலும், ஏராளமான வெற்றிகளும் கிடைக்கும். சர்வேசுரனுக்கு மட்டுமே மிகுந்த மகிமையும் உண்டாகும். தாம் வாழ்ந்த நூற்றாண் டின் தலைசிறந்த அப்போஸ்தலராயிருந்த அர்ச். வின்சென்ட் பெரர் என்பவருக்கு இவை சர்வேசுரனால் வெளிப்படுத்தப் பட்டன அவரே தான் எழுதிய ஒரு நூலில் இது பற்றிப் போதிய அளவு குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

58 - வது சங்கீதத்திலும் இதுவே முன்னுரைக்கப்பட்டது போல் தோன்றுகிறது : யாக்கோபையும் உலகத்தின் எல்லைகளையும் ஆண்டவரே அரசாள்வார் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் மாலை நேரத்தில் திரும்பி வருவார்கள். நாய்களைப் போல் பசியுறுவார்கள். நகரத் தைச் சுற்றி ஆகாரத்திற்காக அலைவார்கள்...... உலக முடிவில் மனிதர்களின் மனந்திரும்புதலைத் தேடி நீதியின் மேல் அவர்கள் உணரும் பசியை ஆற்றிக் கொள்ளும்படி அலைந்து அவர்கள் சுற்றி வரும் நகரம், பரிசுத்த ஆவியால் கடவுளின் 'திரு நகர்' என அழைக்கப்படும் கன்னிமாமரியேயாம்.