பாவசங்கீர்த்தனத்தைப் பற்றி ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினர் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி...

பாவசங்கீர்த்தனத்தில் தங்களுக்கு விசுவாச மில்லாவிட்டாலும், அதன் அற்புதமான நற்பயனைப் பற்றி மிகத் தெளிவான, துல்லியமான கருத்துக்களைக் கொண் டுள்ள ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினரை நாம் அடிக்கடி சந்திக்கிறோம்.

இன்னும் சில பதித, பிரிவினை சபையினர், பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற தங்கள் ஆசை யாலேயே சத்திய கத்தோலிக்கத் திருச்சபையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சில உதாரணங்களை நாம் பார்ப்போம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், ப்ரொட்டெஸ் டாண்ட் சபையினரில் பலர் கத்தோலிக்கர்களுக்கு எதிராகக் கொண்டிருந்த பகையுணர்வானது, மதவெறி என்னும் உச்ச நிலையை எட்டியிருந்தபோது, இங்கிலாந்தின் மாகாணம் ஒன்றில் அர்ச். சாமிநாதர் சபை மடம் ஒன்று ஸ்தாபிக்கப் பட்டது. அந்த மாகாணத்தில் வசித்தவர்களில் பெரும் பான்மையானவர்கள் ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினர் தான். அங்கிருந்த வெகு சில கத்தோலிக்கர்கள் அடங்கிய சிறுபான்மை சமூகம்தான் அங்கிருந்த மிகவும் தாழ்த்தப் பட்ட சமூகமாக இருந்தது.

அங்கிருந்த ப்ரொட்டெஸ்டாண்ட் போதகர் ஓர் உள்ளூர்ப் பிரமுகராக இருந்தார். தமது “பங்கில்'' வந்து குடியேறியிருந்த அந்த ஏழைக் கத்தோலிக்கத் துறவிகள் மட்டில் அவருக்குக் கொஞ்சம் கூட இரக்கமோ, நட்புணர்வோ இருக்கவில்லை.

நிலைமை இப்படியிருக்க, ஒரு நாள் காலையில் சகோதரர் போர்ட்டர் என்பவர் அவரிடம் வந்து, சங். திரு. பர்ட்டன் என்ற அந்த ப்ரொட்டஸ்டாண்ட் போதகர் அவரிடம் பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று சொன்ன போது, அந்த மடத்துத் தலைவரால் அதை நம்பவே முடிய வில்லை. ஆகவே திரு பர்ட்டனின் இந்த எதிர்பாராத வருகைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்வதற்காக அவர் வரவேற்பறைக்கு விரைந்து சென்றார்.

நம் மடத்துத் தலைவர் புன்னகைத்தபடி அவரை வரவேற்ற போதும், அந்த போதகர் தமது இறுக்கமான தன்மையை சற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை.

எடுத்த எடுப்பிலேயே அந்த போதகர் மடத்து அதிபரிடம், “என் வேலைக்காரர்கள் செய்யும் வேலையில் எனக்கு திருப்தியில்லை. ஆகவே நான் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக இல்லை'' என்று பேசத் தொடங்கினார்.

மடாதிபதிக்கு ஆச்சரியம்! “ஆனால், நண்பரே, இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? உம் வேலைக்காரர் களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஆனாலும் இதைப் பற்றி என்னிடம் பேசுவதால் என்னை நீர் கெளரவப்படுத்து கிறீர், என்மீது உமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்து கிறீர் என்பதால், நான் உமக்கு ஒன்று சொல்வேன்: உமக்கு ஊழியம் செய்யும் அந்த ஏழை மக்களுக்கு நீர் சம்பளம் தர மறுப்பது நியாயமற்ற செயலாகவே எனக்குத் தோன்று கிறது'' என்றார் அவர்.

“நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை'' என்று இடைமறித்தார் போதகர். “என் வேலைக்காரர்கள் கத்தோ லிக்கர்கள். ஆனாலும் அவர்கள் பாவசங்கீர்த்தனமே செய்வதில்லை. நான் ஏன் ப்ரொட்டெஸ்டாண்ட் ஆட்களுக்குப் பதிலாக, கத்தோலிக்கர்களை என் வீட்டில் வேலைக்கு வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்? ஏனெனில் அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஒழுங்காக பாவசங்கீர்த்தனம் செய்து வருகிற கத்தோலிக்கர்கள் நேர்மையும், நல்ல நடத்தையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். அவர்கள் என்னை ஏமாற்ற மாட் டார்கள்!

“அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள் என்றால், என் பணத்தை அவர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள், என்னிடம் மோசமான வார்த்தைகளைப் பேச மாட்டார்கள், மாறாக தங்கள் மனசாட்சிக்குப் பயந்து தங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். திருடுவது, மற்றவர்களுக்கு அநீதி செய்வது, தன் வேலைகளை மோசமான முறையில் செய்வது, இன்னும் இதுபோன்ற பல பாவங்களையும், குறைகளையும் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லும் கடமை கத்தோலிக்கர்களுக்கு இருக்கிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் கத்தோலிக்கர்களை என் வீட்டில் வேலைக்கு வைத் திருக்கிறேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து பாவசங்கீர்த் தனம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அவர்களை வேலைக்கு சேர்த்திருக்கிறேன். நான் உம்மைக் காண வந்த காரணமும் இதுதான். தயவு செய்து, நீர் வந்து அவர்களைக் கண்டியும். அவர்களும் உமது மந்தையின் ஒரு பாகம்தான்.''

இப்படிச் சொல்லி விட்டு, ஒரு கணமும் தாமதிக் காமல் அவர் விடைபெற்றுச் சென்று விட்டார்.

சுவாமி தாமஸ் அந்த போதகர் கேட்டுக் கொண்ட படியே செய்தார், அவர் பாவசங்கீர்த்தனம் செய்யத் தவறிய அந்த ஊழியர்களைக் கடிந்து கொண்டார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. தங்கள் ப்ரொட்டஸ்டாண்ட் எஜமானனின் இந்த எதிர்பாராத செயலைக் கேள்விப்பட்ட அந்த வேலையாட்களும், நம் குருவைப் போலவே அதிசயித்துப் போனார்கள்.

“இப்பிரபஞ்சத்தின் மக்கள் ஒளியின் மக்களிலும் தங்கள் சந்ததியிலே அதிக விவேகமுள்ளவர்களாயிருக் கிறார்கள்'' (லூக்.16:8) என்ற நம் தெய்வீக எஜமானரின் ஞானமிக்க வார்த்தைகளை இந்த நிகழ்ச்சி நமக்கு நினை வூட்டுகிறது.

நாம் இங்கு விவரித்துள்ள இந்த சம்பவம் ஏதோ அத்தி பூத்தாற்போல அபூர்வமாக நடந்த ஒரு நிகழ்ச்சி அல்ல. இதே போன்ற பல நிகழ்ச்சிகள் நம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒழுங்காகப் பாவசங்கீர்த்தனம் செய்யும் கத்தோலிக்க வேலையாட்கள் நம்பத் தகுந்தவர்கள் என்ற எளிய காரணத்திற்காகவே ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினர் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வது சர்வ சாதாரணமாக எங்கும் நடக்கிற காரியமாக இருக்கிறது. இன்னும் பல பிரிவினை சபையினர் தங்கள் குழந்தைகளைக் கத்தோலிக்க ஆசிரியர்களிடம் ஒப்படைப்பதும், கத்தோலிக்கக் கல்லூரிகளுக்கு அவர்களை அனுப்புவதும் இதே காரணத்திற்காகத்தான்.

பிரிவினை சபையினர் இப்படி நினைக்கும் அதே நேரத்தில், பெயரளவுக்குக் கத்தோலிக்கர்களாக இருக்கும் சிலர் இதற்கு நேர்மாறாக நடந்து கொள்வது நமக்கு வருத்தத்தையே அளிக்கிறது. இவர்கள் தங்கள் ஊழியர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யத் தேவையான நேரமும், அனுமதியும் தர மறுக்கிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் வேலையின் அளவு குறைகிறது, அவர்கள் தங்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்றெல்லாம் இவர்கள் முட்டாள் தனமாக நினைக்கிறார்கள். ஊழியர்கள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை வாங்குவது, அவர்கள் இன்னும் நல்ல முறையில் பிரமாணிக்கத்தோடு வேலை செய்வார்கள் என்பதற்கான உத்தரவாதமாக இருக் கிறது என்பதை இவர்கள் எப்போதுதான் புரிந்து கொள் வார்கள்?