இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஸ்துதியர்களுடைய இராக்கினியே!

திருச்சபையின் ஆரம்பத்தில் உரோமைச் சக்கரவர்த்திகள் கத்தோலிக்க வேதத்தை வேரோடு அழித்து விட முயன்றனர்; கிறீஸ்தவர்கள் பிடிபட்டு வாதிக்கப்பட் டனர். அவர்களில் சில கோழைகள் வேதனைகளுக்கு அஞ்சி தங்கள் விசுவாசத்தை மறுதலித்தனர். இவர்கள் “விசுவாசத்தில் வழுவியோர்” (Apostates) எனப்படுவர். 

ஆனால் வேதத்தை மறுதலிக்க மறுத்த விசுவாசிகள் பலர் தீக்கும், வாளுக்கும் இரையாகி தங்கள் இரத்தத்தைச் சிந்தி விசுவாசத்திற்காக உயிர் நீத்தனர். இவர்கள் வேத சாட்சிகள் என்று போற்றப்படுகின்றனர் என்பதை முந்திய புகழில் கூறினோம். வேறு அநேக விசுவாசிகள் சிறைச் சாலைகளில் இடப்பட்டு, அடிமைகளைப் போல் கொடூரமாய் நடத்தப்பட்டு, தங்கள் சிறைவாசத்திலேயே மரித்தனர். 

இவ்விதமாகக் கொடிய கஷ்டங்களை அனுபவித்து, அசையாக் கற்பாறையென தங்கள் விசுவாசத்தில் கடைசிவரை நிலைத்து நின்றவர்கள் “ஸ்துதியர்கள்” (Confessors: விசுவாச அறிக்கை செய்தோர்) என்று அழைக்கப்பட்டனர்.

நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்துதியர் என்ற இச்சொல்லின் பொருள் மாற்றமடைந்தது; அதாவது, தங்கள் நாவன்மையாலும், எழுத்து வன்மை யாலும் வேத சத்தியங்களைத் தெளிவுற மக்களுக்கு எடுத்தோதி, புண்ணியங்கள் பல பயின்று, நற்கிரிகைகள் பல செய்து, இவ்விதமாய் சர்வேசுரனுக்கு உகந்த வாழ்க்கை நடத்தி வந்தோர், அவர்களது மரணத்திற்குப் பின் விசுவாசிகளால் ஆசார வணக்கத்துடன் போற்றப்பட்டு, ஸ்துதியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

நம் காலத்திலோவெனில், ஸ்துதியர் என்னும் சொல், வேதசாட்சிகளாய் மரிக்காமல், புண்ணியம் நிறைந்த வாழ்வு வாழ்ந்து, தேவசிநேகத்தில் மரித்து, திருச்சபையால் அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுக்கப்படும் ஆண்பாலாரான அர்ச்சியசிஷ்டவர்களை மாத்திரம் குறித்து நிற்கின்றது.

மாமரி அன்னை இத்தகைய அர்ச்சியசிஷ்டவர் களுடையவும் இராக்கினி என்பதைக் காட்டவே, “ஸ்துதி யர்களுடைய இராக்கினியே” என திருச்சபை அவர்களைப் போற்றுகின்றது. பரிசுத்த கன்னிமாமரி கன்னியருடைய வழிகாட்டி மட்டுமல்ல, வேதசாட்சிகளின் முன்மாதிரிகை மட்டுமல்ல, ஆனால் புண்ணியத்தில் சிறப்புற்று ஜீவிப் போர் யாவருக்கும் அவர்கள் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இக்கூற்று, மாமரி அன்னையின் விசுவாசம் (29-ம் புகழ்), தேவசிநேகம் (35-ம் புகழ்), துன்பங்களிடையே பொறுமை (38-ம் புகழ்) என்ற பல்வேறு புண்ணியங்களைப் பற்றி ஆராய்ந்தபோது எடுத்துரைத்தவற்றின் சுருக்கம் எனலாம்.

நமதாண்டவரிடம் விளங்கிய சகல புண்ணியங் களும் அவர்களிடம் எவ்விதம் பிரதிபலிக்கின்றன என்ப தைக் காட்டவே திருச்சபை அவர்களை “தர்மத்தினுடைய கண்ணாடியே” என அழைக்கிறதென்று கூறினோம்; ஸ்துதியரிடமும் கிறீஸ்துநாதரில் விளங்கிய புண்ணியங்கள் ஓரளவு பிரதிலித்தது உண்மை. ஆனால் மாமரி அன்னையோ ஒரு தனி சிருஷ்டி (Pure Creature), கிறீஸ்துநாதரின் புண்ணியங்களை எவ்வளவு சம்பூரணமாய்ப் பிரதிபலிக்கக் கூடுமோ, அவ்வளவு சம்பூரணமாய்ப் பிரதிபலித்தார்கள்.

வேத முறைப்படி ஒழுகுதல் ஸ்துதியரின் வாழ்க் கையில் ஓர் முக்கிய அம்சம். தேவதாய் வேதமுறைமைக்கு ஏற்ப நடந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் பல உண்டு. குழந்தையுடனிருந்தும், அரசனின் ஆணைக்குப் பணிந்து பெத்லகேமுக்குப் புறப்படுகிறார்கள்; தனக்குச் சுத்திகரச் சடங்கு அவசியமில்லை என்பதை நன்கறிந்தும் வேத முறைமைப்படி, மற்ற யூதத் தாய்மார்களைப் போல் அச்சடங்கை நிறைவேற்ற தேவாலயம் செல்லுகிறார்கள். பாஸ்குப் பண்டிகை கொண்டாட, சேசு பாலனோடும், சூசையப்பரோடும் ஒவ்வொரு வருடமும் ஜெருசலேமுக்கு ஏறிச் செல்லுகிறார்கள்.

பிறமதத்தினரிடையேயும், வேத விரோதிகள் மத்தி யிலும் வாழ நேரிட்ட போதிலும், அவர்களுடைய கேலி பரிகாசங்களினால், அவர்கள் வருவிக்கும் இடையூறுகளி னால் மனத் தளர்ச்சியுற்றுப் பின்வாங்காது, முகத்தாட் சணியமின்றி (ழஷ்மிஜுலிற்மி ஜுற்துழிஐ reவிஸ்ரீeஉமி) வேத முறைமைப்படி நடப்பதும், மெய்யங் கடவுளைப் போற்றி வழிபடுவதும், ஸ்துதியரிடம் விளங்க வேண்டிய முக்கியமான புண்ணியங் களில் ஒன்று. தேவமாதாவின் வாழ்க்கை வரலாற்றை ஆதிமுதல் அந்தம் வரை நோக்கின், முகத்தாட்சணியம் அற்பமேனுமின்றி தனது திவ்விய குமாரன் சேசுவின் கடவுள் தன்மைக்கு சாட்சி கூறும் முறையில் நடந்தார்கள் என்பது தெளிவாக விளங்கும். உதாரணமாக, சிலுவை சுமந்து கல்வாரி மலை ஏகும் தன் செல்வப் புதல்வனைப் பின்செல்லுவதால் தனக்குக் கிடைப்பது அவமானமே என்று அறிந்தும், அதைப் பொருட்படுத்தாது, சேசுவைப் பின்பற்றிச் செல்லுகிறார்கள்.

நாமும் நம் மாதாவைப் பின்பற்றி முகத்தாட்சணி யத்தை அறவேயொழித்து, நாம் கிறீஸ்து இராஜாவின் பிரஜைகள் என்பதை என்றும் எவ்விடத்தும் வெளிப்படுத் துவோம். கடவுள் இல்லையென்றும், வேதம் வெறும் பித்தலாட்டம் என்றும் பிதற்றும் வேத விரோதிகளுக்கு முன் நம் வெற்றிச் சின்னமாகிய சிலுவைக் கொடியை உயர்த்திப் பிடித்து வேத விசுவாசத்துக்கு சாட்சி சொல்லு வோம். உண்மைக் கடவுளுக்காக உயிரைக் கொடுக்க நேரிடினும், அதற்குத் தயங்காதிருக்கும் இரும்பு உள்ளம் படைப்போம். மலை மேலிட்ட தீபமென நமது வேத விசுவாச ஒளி மனிதர் முன்பாக பிரகாசிக்கட்டும். “இருளி லும், மரணத்தின் நிழலிலும்” இருப்பவர்கள் அவ்வொளியைக் கண்டடைந்து உய்யட்டும். அப்போதுதான், “மனிதர் முன்பாக என்னை அறிக்கையிடுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவின் முன்பாக அறிக்கை யிடுவேன்” (மத். 10:32) என்ற நமதாண்டவரின் வாக்குத் தத்தத்திற்குப் பாத்திரவான்கள் ஆவோம்.

“அன்னையே, சகல காரியங்களிலும் நீர் பரிசுத்த ருக்குத் துதி தந்தீர்; மகிமையின் வார்த்தையால் உந்நத கடவுளைப் புகழ்ந்தீர்” (சர்வப்பிர. 47:9). நாங்களும் உம்மைப் பின்பற்றி நாங்கள் செய்யும் சகல காரியங்களி லும் சர்வேசுரனைத் துதி செய்யவும், எங்கள் போதனை யால், முக்கியமாக, எங்கள் நன்மாதிரிகையால் வேத விசுவாசத்துக்கு என்றும் சாட்சி சொல்லவும் வேண்டிய வரத்தை எங்களுக்கு அடைந்து தந்தருளும். “மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரமண்டலங்களிலிருக் கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக் கடவது” (மத். 5:16) என்ற உமது திருக்குமாரனின் அமுத வசனத்தை அட்சரம் பிசகாமல் நிறைவேற்றும் வரத்தையும் எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும் தாயே.


ஸ்துதியர்களுடைய இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!