இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வாழும் ஜெபமாலையில் சேருவது எப்படி?

ஒருவர் (அது நீங்களாகவே இருக்கலாம்) தன்னுடன் 14 பேரைச் சேர்க்க வேண்டும். இப்பதினைந்து பேரும் ஜெப மாலையின் 15 தேவ இரகசியங்களையும், ஆளுக்கொன்றாக தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு அந்த தேவ இரகசி யத்தை தியானித்தப்படி ஒரு பர. 10 அரு. திரி சொல்லி ஓ என் சேசுவே.... என்ற செபத்தையும் சொல்லி மாதாவின் மாசற்ற இருதய வெற்றிக்காக அர்ப்பணிக்க வேண்டும். 

நீங்கள் ஏற்கெனவே சேர்ந்திருந்தால், மேலும் 15 பேரைத் தன்னுடன் சேர்க்க உழைக்கிறவர் வாழும் ஜெபமாலை ஊக்குவிப்பாளர் ஆவார். இவர் மற்றவர்கள் தவறாமல் தங்கள் 10 மணியை ஜெபிக்கும்படி நினைவூட்ட வேண்டும்.

வாழும் ஜெபமாலை உறுப்பினர்கள் உலகளாவிய இந்த இயக்கத்திற்கு தாங்கள் மனமுவந்து உதவி, பரிசுத்த கன்னிமாமரியின் ஆதரவை பெறுவீர்களாக! 


அர்ச். பிலோமினம்மாளுக்கு மூன்று திருநாட்கள்

திருவழிபாட்டுத் திருநாள் - ஆகஸ்ட் 11

பிலோமினம்மாள் பிறந்தநாள் - ஜனவரி 10

திருப்பண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட திருநாள் - மே 25


இறுதிகால அப்போஸ்தலர்களின் தலைவி!

நமது தேவதாயும் சம்மனசுக்களின் இராக்கினியுமான பரிசுத்த கன்னிமாமரி அப்போஸ்தலர்களின் அரசியாகவும் இருக்கிறார்கள். சகல அர்ச்சிஷ்டவர்களுக்கும் இராக்கினி அவர்களே. அவர்களால் மேலாக நேசிக்கப்படுகிற சின்னக்கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாள் இவ்விறுதிக்கால அப்போஸ்தலர்களின் ஜெபமாலை உத்தரிய பரிகாரப் போர்ப்படையாகிய உலகளாவிய வாழும் ஜெபமாலைத் தளபதியாக விளங்குகிறாள். திருச்சபையால் அப்பணிக்குத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறாள். 

அவள் வாழ்ந்து வேதசாட்சியானது ஆதி 3-ஆம் நூற்றாண்டு. அவள் மாதாவின் பேரணியை நடத்த அழைக்கப்பட்டிருப்பது இவ்விறுதிக்கால மூன்று நூற்றாண்டுகள்: 3-ம் நூற் றாண்டில் சிந்தப்பட்ட அவளுடைய புனித இரத்தம் கடவுளால் மகிமை பெறுவது பிந்திய 3 நூற்றாண்டுகளில்! இதிலே தேவ திட்டம் வெளியாகிறது. மாதாவின் மாசற்ற இருதய வெற்றியை நடத்துபவள் அர்ச். பிலோமினம்மாள் என நாம் திட்டமாய்க் கூறலாம். பிந்திய கால அப்போஸ்தலர்களின் தலைவி பிலோமினம்மாளே ! 

இப்புத்தகம் அச்சிட்டு வெளியிட உதவிய சகோ. ஜெரால்டு ரூபன் (வந்தவாசி) அவர்களை நன்றியோடு பாராட்டுகின்றோம்; ஜெபிக்கிறோம். 


M. தனராஜ் ரொட்ரிக்ஸ்

தேசிய ஊக்குவிப்பாளர், 

வாழும் செபமாலை தேசிய மையம்,

4, பவனந்தியார் 5-வது குறுக்குத் தெரு,

காமராஜபுரம், சென்னை - 600 073.