முஞ்ஞானோ ஊரிலிருந்து தூரமான ஒரு குக்கிராமத்தில் ஒரு பெண் பிரசவ வேதனையிலிருந்தாள். அசந்தர்ப்பத்தினால் அவள் தனியே இருந்தாள். அவளுக்கு உதவி செய்ய அருகில் யாருமில்லை.
அப்போது ஒரு இளம் நங்கை அங்கு வந்தாள். “அம்மா உங்களுக்கு நான் ஏதும் உதவி செய்யட்டுமா?'' என்று கேட்டாள். அவளுடைய பிரசன்னமே அந்த பெண்ணின் வேதனைகளையெல்லாம் நீக்கியது.
அந்தச் சிறு பெண் போகப் புறப்பட்டபோது “அம்மா, உன் பெயரென்ன?'' என்ற இவள் கேட்க ""என் பெயர் பிலோமினா. என்னை முஞ்ஞானோ பிலோமினா என்று சொல்வார்கள்'' என்று பதில் சொல்லிப் போய் விட்டாள்.
அர்ச். பிலோமினம்மாளின் வரவும். போக்கும் எவ்வளவு எளிமையாக இருந்தது என்றால் அந்தப் பெண் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை.
அர்ச். பிலோமினம்மாளின் அருளிக்கம் உரோமையிலிருந்து முஞ்ஞானோவுக்கு வந்திருப்பதை அவள் அறிந்தாள்.
உடனே அவள் அர்ச். பிலோமினம்மாள் சேத்திரத்துக்குப் புறப்பட்டுச் சென்றாள்.
அங்கே அர்ச்சியசிஷ்டவளின் உருவத்தைக் கண்டதும் ஆச்சரியத்தோடு “இவள்தான் எனக்கு உதவி செய்தவள்!” என்று கத்தினாள்.