இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம்மிடமிருக்கும் தீமைகள் யாவற்றையும் நாம் நீக்கிவிட வேண்டும்

78. நம்மிடம் இருக்கும் தீமையின் வேரினால் நம்முடைய மிகச் சிறந்த கிரியைகளும் பொதுவாக அசுத்தமடைந்து விடுகின்றன. தெள்ளிய சுத்தமான நீரை துர் நாற்றம் வீசும் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால். அல்லது முன்பிருந்த ஒரு திராட்சை இரசத்தால் கெட்டுப் போயிருக்கும் ஒரு சித்தையில் வேறு நல்ல இரசத்தை ஊற்றினால் இத் தெள்ளிய நீரும் நல்ல இரசமும் கெட்டுப்போகின்றன: அந்தக் கெட்ட வாடையை எளிதாக அடைந்துவிடுகின்றன. அதைப்போலவே, ஜென்மப் பாவத்தாலும் கர்மப் பாவத்தாலும் அசுத்தமடைந்துள்ள நம் ஆன்மா என்னும் பாத்திரத்துள் கடவுள் தமது வரப்பிரசாதங்கள் என்னும் பரலோக தண்ணீரையோ அல்லது தமது அன்பென்னும் இனிய இரசத்தையோ ஊற்றும்போது பொதுவாக அவருடைய கொடைகள் கெட்டுவிடுகின்றன. 

பாவத்தால் நம்மில் தங்கி நிற்கும் கெட்டுப்போன அடிமண்டியாலும், தீய புளிக்காரத்தாலும் கறைப்பட்டு விடுகின்றன. நாம் செய்யும் மிக உந்நத புண்ணிய முயற்சிகளும் இந்தத் தீய விளைவுகளால் பாதிக்கப்படுகின்றன. எனவே சேசு கிறீஸ்துவுடன் ஐக்கியம் கொள்வதால் மட்டுமே கிட்டும் உத்தமதனத்தைத் தேடும்போது, நம்மிடம் தீமையாயிருப்பவற்றை யெல்லாம் நீக்கி விடுவது மிக மிக அவசியமாகிறது. இல்லாவிடில் அளவற்ற பரிசுத் தரும் நமதான் மாவில் ஒரு மிகச்சிறிய கறையைக் கூட அளவற்ற முறையில் வெறுக்கிறவருமான நமதாண்டவர் தம் சமூகத்திலிருந்து நம்மைத் தள்ளி விடுவார். தம்முடன் நம்மை இணைத்துக் கொள்ள மாட்டார்.

79. நம்மிடமுள்ள சுயபற்றைக் களைந்து விடுவதற்கு, முதன் முதலில் நாம் நம் கெட்டுப்போன சுபாவத்தை பரி, சுத்த ஆவியின் ஒளியால் உணர்ந்திருக்கவேண்டும். நம் ஈடேற்றத்திற்கு உபயோகமுள்ள எதையும் நம்மால் செய்ய இயலாது என்பதையும் எல்லாக் காரியங்களிலும் நமக்கிருக் கும் பலவீனத்தையும், எப்போதும் நம்மிடமுள்ள நிலையாமையையும். எந்த அருளைப் பெறவும் நாம் தகுதியில்லை என் பதையும், எப்பொழுதும் நம்மோடிருக்கும் நம் பாவத் தன்மையையும் நாம் முழுவதும் நன்றாக உணர்ந்திருத்தல் வேண்டும். பிசைந்த மாவினுள் வைக்கப்படும் புளிக்காரம் எப்படி அந்த மாவைப் புளிப்பேற்றி, பொங்கச் செய்து தன் நிலை கெடும்படி செய்துவிடுகிறதோ அதைப்போலவே நம் ஆதிப் பெற்றோரின் பாவம் நம் ஒவ்வொருவரையும், ஏறக் குறைய முழுவதும் கெடுத்து, புளிப்பேறச் செய்து, (அகந்தையால்) பொங்கச் செய்து, மோசமாக்கி விட்டது. நாம் கட்டிக் கொண்ட கர்மப் பாவங்கள் - அவை சாவான பாவமோ அற்பப் பாவமோ - அவை மன்னிக்கப்பட்டிருந் தாலும், நம் ஆசாபாசத்தையும் பலவீனத்தையும் நம் நிலையாமையையும் நம் கேட்டையும் அதிகப்படுத்தி நம் ஆன்மாவில் தீமையின் ஒரு விளைவை தங்கச்செய்துவிடுகின்றன.

நம் உடல்கள். எவ்வளவு கெட்டுப் போயிற் றென்றால் பரிசுத்த ஆவி அவற்றை பாவச் சரீரம் என்று அழைக்கிறார் (ரோம. 6:6; சங். 50;7). நம் சரீரங்கள் பாவத்தில் உற்பவித்து பாவத்தில் வளர்க்கப்பட்டவை. அவற்றிற்கு பாவம் செய்ய மட்டுமே கூடும். ஆயிரம் நோய் களுக்கு அவை உட்படுகின்றன. நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. அவற்றிற்குக் கிடைத்தது வியாதி யும் அழுகும் தன்மையும் புழுவும் தான்.

சரீரத்துடன் இணைக்கப்பட்ட நம் ஆன்மா எவ்வ ளவு மாமிச சார்புடையதாகி விட்டதென்றால் அது மாமிசமென்றே அழைக்கப்படுகிறது. "மாமிசமெல்லாம் கெட்டுப் போயிற்று" (ஆதி 6:12). நம்முடையது என்று நாம் சொல்லிக் கொள்ளக் கூடியதெல்லாம் அகந்தையும். ஞானக் குருட்டாட்டமும், இருதயக் கடினமும், ஆன்ம பலவீனமும், நிலையாமையும். ஆசாபாசமும், எதிர்த்தெ ழும் புலனுணர்வும், உடல் நோயும்தான். நம் சுபா வத்திலேயே நாம் மயில் பறவையிலும் அதிக அகந் தையுடையவர்கள். நில வண்டுகளை விட அதிகமாய் இந் நில உலகைச் சார்ந்திருப்பவர்கள். வெள்ளாடுகளிலும் அதிக ஆபாசமுள்ளவர்கள். பாம்புகளைவிட அதிக வஞ் சனையுள்ளவர்கள். பன்றிகளைவிட அதிக போஜனப் பிரியர் கள். புலிகளை விட அதிக கொடியவர்கள், ஆமைகளை விட அதிக சோம்பேறிகள். நாணலைவிட அதிக பல வீனர்கள். காற்றாடியைவிட அதிக நிலை தடுமாறக் கூடி யவர்கள். நம்மிடம் உள்ளதெல்லாம் பாவமும் ஒன்று மில்லாமையும்தான். கடவுளின் கோபமும் நரகத்தின் நித்தியமும்தான் நாம் சம்பாதித்தவை (அர்ச். மோன் போர்ட் இங்கு , வரப்பிரசாத உதவியில்லா மல் பரலோகத்திற்குரிய எதையும் செய்ய முடியாத நம் பலவீன சுபாவத்தைப் பற்றிப் பேசுகிறார்.).

80. இது இங்ஙனமிருக்க. நமதாண்டவர், யார் யார் தன்னைப் பின் செல்ல விரும்புகிறார்களோ அவர் கள் தங்களைத் தானே பரித்தியாகம் செய்துவிட வேண்டும் என்றும், தன் சொந்த உயிரைப் பகைக்க வேண் டும் என்றும், இன்னும் தங்கள் உயிரை நேசிப்பவர் கள் அதை இழப்பார்கள் தங்கள் உயிரைப் பகைப்ப வர்கள் அதைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்றும் கூறியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? (அரு. 12, 25). காரணமில்லாமல் கட்டளையிடாத நித்திய ஞானமானவர் நம்மை நாமே பகைக்கும்படி கட்டளையிடுவது ஏனென் றால், நாம் பகைக்கப்பட மிகவும் தகுதியுடையவர்களா யிருக்கிறோம். கடவுளைப் போல் நேசிக்கப்படத் தகுந் தது யாருமில்லை. நம்மைப்போல் பகைக்கப்படத் தகுந் ததும் வேறு எதுவுமில்லை.

81. இரண்டாவது, ' தான்” என்னும் உணர்வை விட்டு நாம் நீங்க வேண்டுமானால், ஒவ்வொரு நாளும் நமக்கே நாம் இறந்தாக வேண்டும். அதாவது, நம் ஆன்ம புலன்களின் செயல்பாடுகளையும் சரீரப் புலன் களையும் மறுக்க வேண்டும். நாம் எதையும் காணாதவர் களைப் போல் பார்க்க வேண்டும், எதையும் கேளாதவர் களைப் போல் கேட்க வேண்டும். இவ்வுலக பொருட் களை உபயோகியாதவர்களைப் போல் அவற்றை உப யோகிக்க வேண்டும். (1 கொ. 7. 29-30). அர்ச். சின்னப் பர் இதையே "தினமும் உயிரை விடுகிறேன்', (1 கொரி. 15 : 31) என்கிறார். "கோதுமை மணி நிலத்தில் விழுந்து மடியாவிட்டால் அது தனியே இருக்கிறது. எந்த நற்பலனையும் அது கொடுப்பதில்லை” (அரு. 12:24-25) நமக்கு நாம் சாகாமலும், மிகப்புனிதமான நம் பக்தி முயற்சிகள் இந்த அவசியமான, பலன் விளைவிக்கும் மரணத்துக்கு நம்மைக் கொண்டு வராமலும் இருந்தால், நாம் ஒரு நற்பலனையும் கொடுக்கமாட்டோம். நம் பக்தி முயற்சிகள் யாவும் நமக்குப் பயனற்றுப் போகும். நம் நற்செயல்கள் எல்லாம் சுயநலத்தாலும் சுய விருப்பத் தாலும் கறைபட்டுவிடும். நாம் செய்யும் மிகச் சிறந்த செயல்களையும் நம் மிகப் பெரும் பரித்தியாகங்களையும் கடவுள் அருவருப்பாகக் காண்பார். இதன் விளைவாக நம் மரண சமயத்தில் எந்தப் பேறுபலனும் புண்ணி யமும் நம்மிடம் இல்லாதிருக்கக் காண்போம். தங்களுக்குத்தானே மரித்து, சேசு கிறீஸ்துவுடன் கடவுளில் மறைந்த வாழ்வுடைய ஆன்மாக்களுக்கு மட்டுமே அளிக் கப்படும் தூய அன்பின் ஒரு பொறிகூட நம்மிடம் இல்லை என்று அப்போது காண்போம். 

82 மூன்றாவது. மரியாயின் பக்தி முயற்சிகளுள், எது அதிக நிச்சயமாக நமக்கு நாமே இறக்கும்படி செய் யுமோ, அந்தப் பக்தி முயற்சியே மிகச் சிறந்தது என் றும், அதிக அர்ச்சிப்பைத் தருவது என்றும் நாம் கொள்ள வேண்டும். ஏனென்றால் மின்னுவதெல்லாம் பொன் - என்றும் தித்திப்பதெல்லாம் தேன் என்றும் எண்ணக் கூடாது. செய்வதற்கு எளிதாயும் பெருந் தொகையானவர்களால் கைக்கொள்ளப்படுவதாயும் இருக் கிறவைகள் அதிக அர்ச்சிப்பைத் தரும் என கருதக் கூடாது. இயற்கையிலே சில இரகசியங்கள் உள்ளன. அவை சில காரியங்களைத் துரிதமாயும் குறைந்த செய லிலும் எளிதாயும் செய்ய நமக்கு உதவுகின்றன. அது போலவே வரப்பிரசாத முறையிலும் சுபாவத்துக்கு மேலான காரியங்களை துரிதமாயும் இனிமையுடனும் எளிதாகவும் செய்ய நமக்கு உதவும் இரகசியங்கள் உள் ளன. சுயத்தை அழித்தல், கடவுளால் நம்மை நிறைத் தல், உத்தம தனம் அடைதல் ஆகிய காரியங்களை நாம் இவ்வாறு எளிதில் அடைய முடியும்.

நான் எடுத்துரைக்க விரும்பும் பக்தி முயற்சி அத் தகைய இரகசிய உதவிகளுள் ஒன்றாகும். இது பெரும் பான்மையான கிறீஸ்தவர்களுக்குத் தெரியாது. பக்தியுள்ளோரில் கொஞ்சப் பேர் இதை அறிவார்கள். இதை மதித்து அனுசரிப்பவர்கள் அதிலும் கொஞ்சமாகவே உள்ளனர். இந்தப் பக்தி முயற்சியை இனி கூறத் தொடங்குகிறேன் மேற்கூறிய மூன்றாம் உண்மையின் தொடர்பான நாலாவது உண்மையைக் கூறி ஆரம்பிக்கிறேன்.