இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நற்கருணை உட்கொள்ளும் போது

267. பூசையில் பரலோக மந்திரம் முடிந்து சேசு உன்னிடம் வரும் நேரம் நெருங்கும் போது அவரிடம் “ஆண்டவரே தேவரீர் என் உள்ளத்தில் வர நான் தகுதி யற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் ஆன்மா குணமடையும்" என்று மும்முறை சொல்.

நித்திய பிதாவிடம் நீ முதல் தடவையாகச் சொல்வது போல் சொல். உனது தீய எண்ணங்களாலும் இவ்வளவு நல்ல தந்தைக்கு நன்றியற்றதனத்தாலும் நீ அவர் திருக் குமாரன் சேசுவை உட்கொள்ளத் தகுதியாயில்லை. ஆனால் இதோ அவருடைய அடிமையான மாதா எல்லாக் காரி யங்களையும் உனக்காகச் செய்து உனக்குப் பரம பிதா வின் மீது நல்ல நம்பிக்கையையும் உறுதியையும் உள் ளத்தில் எழுப்புவதாகக் கூறு. 'ஏனென்றால் ஆண்டவரே நீர் என்னை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினீர்'' (சங். 4, 9] 

268. சுதனிடம் இவ்வாறு கூறு. 'ஆண்டவரே தேவ ரீர் என் உள்ளத்தில் வர நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் ஆன்மா குண மடையும்". நீ உன்னுடைய உபயோகமற்ற கேடுற்ற வார்த்தைகளாலும் அவருடைய ஊழியத்தில் நீ பிர மாணிக்கமற்று இருந்ததாலும் அவரை உட்கொள்ளத் தகுதியற்றவன் என்று சொல். இப்படி இருந்தும் நீ அவருடைய இரக்கத்தை மன்றாடு. ஏனென்றால் நீ அவரை அவருக்கும் உனக்கும் அன்னையான மரியாயின் வீட்டிற்கு அழைக்கிறாய். அவர் அதைத் தன் உறைவிட மாக்கும் வரை அவரை நீ விடவும் மாட்டாய், என்று கூறு. [உந். சங். 3, 4). அவருடைய இளைப்பாற்றியின் இடத்திற்குஅவருடைய அர்ச்சிக்கப்பட்ட பேழைக்குள் - அவர் எழுந்து வரும்படி மன்றாடு [சங், 131, 8]. ஏசாவைப் போல் நீ உன் சொந்தப் பேறு பலன்களிலும் பலத்திலும் தயாரிப் பிலும் நம்பிக்கை வையாமல், ரபேக்காளின் அன்புக் கரி சனத்தில் யாக்கோபு நம்பிக்கை கொண்டது போல் நீயும் உன் அன்புமிகும் அன்னையான மரியாயிடமே உன் நம் பிக்கையைக் கொண்டிருப்பதாகக் கூறு.

269. பரிசுத்த ஆவியிடம் இவ்வாறு பேசு: 'ஆண் டவரே தேவரீர் என் உள்ளத்தில் வர நான் தகுதியற் றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் ஆன்மா குணமடையும்''. உன்னுடைய வெது வெதுப் பினாலும் உன் செயல்களின் தீமையாலும் அவருடைய ஏவுதல்களை நீ எதிர்த்ததினாலும் அவருடைய தனிச் சிறந்த அன்பின் செயல்பாட்டை நீ பெற்றுக் கொள்ளத் தகுதியற்றுள்ளாய் என்று சொல். ஆனால் உன் நம்பிக் கையாயிருப்பது அவருடைய பிரமாணிக்கமுள்ள பத்தினி யான மாதாவே. அர்ச். பெர்னார்டுடன் சேர்ந்து நீயும் : "மரியாயே என் மிகப் பெரும் நம்பிக்கை. மரியாயே என் நம்பிக்கையின் ஏக காரணம்" என்று கூறு. (De Aquaeductu) இப்படிக் கூட நீ அவரிடம் மன்றாடலாம்: மீண்டும் ஒரு முறை பரிசுத்த ஆவி தம் இணைபிரியா பத்தினியின் மீது நிழலிட வேண்டும் என்று. மரியாயின் உள்ளம் என்றும் போல் தூயதாகவே உள்ளது என்றும் அவர்கள் இருதயம் என்றும் போல் பற்றி எரிகிறதாகவே இருக்கிறது என்றும் சொல். அவர் உன் ஆன்மாவினுள் வராவிட்டால் சேசுவோ மாதாவோ உன்னிடம் உற வாக மாட்டார்கள் என்றும் அவர்கள் உன் உள்ளத்தில் தங்கமாட்டார்கள் என்றும் கூறு. .