இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாள் பரிகாரப் பக்தியின் முன்மாதிரிகை

இரத்தம் சிந்தப்படாமல் பாவமன்னிப்பில்லை ( எபி. 9:22) கல்வாரியில் சேசு சிந்திய திரு இரத்தம் நம் பாவப் பரிகாரமாயிருந்தது. சேசுவின் திரு இரத்தத்தின்மீது பக்தி பாவப் பரிகாரத்துக்கு அவசியமானது. மரியாயின் மாசற்ற இருதய பரிகாரப் பக்தியே இன்று உலகம் காப்பாற்றப்படு வதற்கு அனுசரிக்கப்பட வேண்டிய பக்தி என்பதை பாத்திமா செய்தி வழியாக நாம் அறிகிறோம். அப்படியென்றால் சேசுவின் திரு இரத்தமே, மரியாயின் மாசற்ற இருதயத் துக்குப் பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஆதாரமாயிருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.

சேசுவின் இரத்தத்துடன், திருச்சபையின் எண்ணற்ற வேதசாட்சிகளின் இரத்தமும் இணைந்து, உலகின் பாவப் பரிகாரத்தை நிறைவேற்றுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறீஸ்துவின் பாடுகளில் குறைவாயிருப்பதை அவரது வேதசாட்சிகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் நிறை வாக்குவதாக அர்ச். சின்னப்பர் (கொலோ.1:24) கூறுகிறார். அந்த முறையில் அர்ச். பிலோமினம்மாள் சிந்திய இரத்தம் நிச்சயமாக உலகின் பாவப் பரிகாரமாக இருக்கிறது. அதிலும் அவளுடைய பாடுகளும், சேசுவின் பாடுகளுக்கு அதிகம் ஒத்திருந்தன. அவள் தன் கன்னிமையைக் காப்பாற்றவே இரத்தத்தைச் சிந்தினாள். ஆதி பெற்றோர் ஆங்காரத்தால் கீழ்ப்படிய மறுத்து சரீர பாவத்தில் விழுந்தார்கள். இந்நாட் களிலும் ஆங்காரமும் இச்சையுமே உலகத்தை நிரப்பி நிற்கின்றன. இவ்விரண்டு பாவங்களுமே மற்றெல்லாப் பாவங் களுக்கும் காரணமாக இருக்கின்றன. இவற்றிற்குப் பரிகாரம் செய்யவே சேசு சிலுவை மரணமட்டும் தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து தம் சரீரத்தில் எல்லையில்லா வேதனைப்பட்டு, இரத்தத்தை எல்லாம் சிந்தி மரித்தார். அவரது சாயலாயிருக்கிற வேதசாட்சிகளும் அவ்வாறே கீழ்ப்படிதலோடு நிறைவேற்றினார்கள். அர்ச்சியசிஷ்டவர் களில் மேலான இடத்தில் தன் மணவாளர் தன்னை வைத்தார் என்று அர்ச். பிலோமினம்மாள் தன் சுயசரிதையில் வெளிப்படுத்தியிருக்கிறாள். அதோடு அவளது இரத்தத்தில் எத்தகைய அற்புதங்களை ஆண்டவர் நிறைவேற்றுகிறார் என்பதைப் பார்க்கும் போது, இந்தச் சின்ன வேதசாட்சியை, ஆண்டவர் ஒரு விசேஷ திட்ட நிறைவேற்றத்திற்காக இப்பிந்திய காலங்களில் வெளிப் படுத்துகிறார் என்றே தெரிகிறது.

பரிகாரம் ஒன்றே தேவைப்படுகிற, பாவம் நிறைந்த இவ்விறுதிக் காலங்களில், அர்ச். பிலோமினம்மாளின் இரத் தத்தின் மகிமை நம் அனைவரையும் பாவ பரிகாரத்திற்கு அழைக்கிறது. ஆகவே நாம் அர்ச். பிலோமினம்மாளை நம் பரிகார முன்மாதிரிகையாகக் கொண்டு அவள் செய்தது போல் நாமும் நம் உயிரையோ சுகத்தையோ பாராமல் நம்மை முழுவதும் பரிகாரப் பலிப் பொருளாக ஒப்புக் கொடுக்க முன்வர வேண்டும். இப்படி யார் முன்வருவார்கள்? அவர்களே பிலோமினாவின் சின்ன சகோதரிகள்.