தொடக்கக் குறிப்புகள்!

5. என் பிரியமுள்ள வாசகரே, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல் பெற்ற வார்த்தைகளோடு என் எளிய வார்த்தைகளை ஒன்று கலக்க நான் விரும்பவில்லை. என்றாலும் ஒரு சில குறிப்புகளைத் தர நான் துணிகிறேன்:

1. மிகுந்த மகத்துவப் பேரொளியையும், உன்னதத் தன்மை யையும், மகிமையையும் கொண்டுள்ள நித்திய ஞானமானவர் எவ்வளவு மென்மையுள்ளவராகவும், மனதைக் கவரக் கூடியவ ராகவும், நாம் எளிதாக நெருங்கிச் செல்லக் கூடியவராகவும் இருக்கிறார். மனிதர்கள் தம்மிடம் வர அவர் அழைக்கிறார். ஏனெனில் மகிழ்ச்சியின் வழியை அவர்களுக்குக் கற்பிக்க அவர் விரும்புகிறார். அவர் என்றென்றும் அவர்களைத் தேடிக்கொண் டிருக்கிறார். ஒரு புன்னகையோடு அவர்களை எப்போதும் வரவேற்கிறார். அநேக முறை தம் ஆசீர்வாதங்களை அவர்கள் மீது பொழிகிறார், ஆயிரம் வழிகளில் அவர்களது தேவைகளை முன் கூட்டியே சந்திக்கிறார். தம் நட்பின் சாட்சியங்களை அவர் களுக்குத் தருமாறு அவர்களுடைய வாசலருகிலேயே காத் திருக்கும் அளவுக்கும் அவர் செல்கிறார்.

இவ்வளவு மென்மையோடு ஆட்கொள்ள வருபவரை நேசிக்க மறுக்கும் அளவுக்கு இருதயமற்றவன் யார் இருக்க முடியும்?

6. 2. செல்வந்தர்களும், பலவான்களும் நித்திய ஞானமான வரை நேசிக்காவிடில், அவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரிய வர்கள் ! அவர் அவர்களுக்குத் தரும் எச்சரிக்கைகள் எவ்வளவு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன! மனித வார்த்தைகளில் எடுத்துரைக்கப்பட இயலாத அளவுக்கு அவை அச்சம் தருபவை யாக இருக்கின்றன : ''அவர் பயங்கரமான உக்கிரத்தோடும், திடீரெனவும் உங்கள் முகங்களுக்குத் தம்மைத் தாமே காண்பிப் பார்..... பிறர் மட்டில் அதிகாரம் பண்ணுகிறவர்களே கடினமாய் நடுத்தீர்க்கப்படுவார்கள்.... பலவான்களோ பலமாய்த் தண்டிக்கப் படுவார்கள்..... அதிக பலவான்களுக்கோ அதிகமான தண்டனை விதிக்கப்படும்" (ஞான . 6:6,7,9).

இந்த வார்த்தைகளோடு, அவர் மனிதனான பிறகு கூறிய பின் வரும் வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்: "ஐசுவரிய வான்களே (செல்வந்தர்களே), உங்களுக்கு ஐயோ கேடு; ஏனெனில் நீங்கள் உங்கள் ஆறுதலையடைந்திருக்கிறீர்கள்" (லூக். 6:24)..... 'ஐசுவரியவான் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைகிறது அதிக எளிதாயிருக்கிறது" (மத் 19:24).

தேவ ஞானமானவர் பூமியிலிருக்கையில், அவர் எவ்வளவு அடிக்கடி இந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் என்றால், மூன்று சுவிசேஷகர்கள் சிறு மாற்ற மும் இன்றி இந்த வார்த்தைகளை அப்படியே எழுதி வைத்திருக் கிறார்கள். இந்த வார்த்தைகள் செல்வந்தர்களை அழுது புலம்பும் படி செய்ய வேண்டும் : "ஐசுவரியவான்களே, உங்கள் மேல் வரப்போகிற நிர்ப்பந்தங்களை நினைத்து, இப்போது புலம்பி அழுங்கள்" (யாக.5 : 1).

ஆனால் ஐயோ! அவர்கள் இவ்வுலகிலேயே ஆறுதலடைந் திருக்கிறார்களே! (லூக். 6:24). அவர்கள் தாங்கள் அனுபவித்து மகிழும் செல்வங்களாலும் இன்பங்களாலும் கட்டுண்டவர் களைப் போலும், தங்கள் சிரசுகளுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிற தீமைகளைக் காண முடியாத குருடர்களாகவும் இருக்கிறார்களே! 7. 3. தேவ ஞானமானவரைப் பற்றி, தாம் ஒரு துல்லியமான, நேர்மையான விளக்கத்தைத் தருவதாக சாலமோன் வாக்களிக் கிறார். காய்மகாரமோ, அகங்காரமோ - இரண்டுமே நேசத்திற்கு எதிரானவை - பரலோகத்தால் தமக்கு அனுப்பப்பட்ட இந்த அறிவை மக்கள் அறியச் செய்ய விடாதபடி தம்மைத் தடுக்க முடியாது என்றும், இந்த அறிவில் எவனும் தம்மை விஞ்சவோ, தமக்கு சமமாயிருக்கவோ கூடும் என்ற அச்சம் தமக்குக் கொஞ்ச மும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த மாபெரும் மனிதரின் மாதிரிகையைப் பின்பற்றி, நித்திய ஞானமானவரின் மனித அவதாரத்திற்கு முன்னும், மனித அவதாரத்தின் போதும், அதற்குப் பின்னும் நான் அவரைச் சித்தரித்துக் காட்டப் போகிறேன். நாம் எவ்வழியில் அவரை நிலையான விதத்தில் சொந்தமாகக் கொண்டிருக்க முடியும் என்றும் நான் காட்டுவேன்.

ஆனால் சாலமோனின் ஆழ்ந்த அறிவோ, அக ஒளிகளோ என்னிடம் இல்லை என்பதால், ஆங்காரத்தையும், காய்மகாரத் தையும் விட என் திறமையின்மை மற்றும் அறியாமை பற்றியே நான் அதிகமாக பயப்படுகிறேன்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...