இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வியாகுல அன்னை

சாவு தன்னை அணுகி வருகிறதென்று உணர்ந்த தோபியாஸ் தம் மகனை அழைத்து, பல புத்திமதிகள் கூறினார். அவைகளில் ஒன்று, “உன் தாய் உயிர் வாழும் நாளெல்லாம் அவளைச் சங்கித்து வரக்கட வாய். அவள் உனக்காகப் பட்ட அவதிகளையும் ஆபத்துக்குள்ளானதையும் ஞாபகத்தில் வைத்திரு" என்பது. மரியம்மாள் நம் பரலோக மாதா, நம் ஆத் துமங்களின் அன்னை, நம் இரட்சணியத்துக்காக அவள் பட்ட துயரங்களையும் வேதனைகளையும் நாம் மறக்கக்கூடாது, அவைகளை மதிக்கவேண்டும், அனு தாபம் கொள்ள வேண்டும், அடிக்கடி அவைகளைப் பற்றி நினைக்க வேண்டும். இது அவளுக்கு மிகவும் விருப்பமானது. “மானிடரில் எவராவது என்மீது அனுதாபம் கொள்ளுகின்றனரா? என்று தேடிப் பார்க்கிறேன். ஐயோ, ஒருசிலரையே நான் காண்கி றேன். அநேகர் என்னை மறந்தாலும், நீயாவது என் மகளே, என்னை மறந்து போகாதே. நான் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்'' என தேவதாய் புனித பிரிஜித்தம்மாளுக்கு ஒரு முறை கூறினாள்.

பரிசுத்தவானான 9-ம் பத்திநாத பாப்பானவர் இரட்சகருடைய கொடிய பாடுகள் மேலும் தேவ தாயின் வியாகுலங்கள் மேலும் அதிக பக்தி கொண் டிருந்தார்; இப் பத்தியால் அநேக பாவிகளை மனந் திருப்பியிருக்கிறார். வியாகுல அன்னைக்குச் தோத் திரமாக எழுதப்பட்ட ஒருவேண்டு தலை 1847-ம் ஆண் டில் அவர் அங்கீகரித்தார். "வியாகுலங்களினால் நிறைந்த மரியாயே, வாழ்க. சிலுவையிலறையப்பட் டவர் உம்முடனே. பெண்களுக்குள் இரங்கத்தக்கவர் நீரே; உம்முடைய திருவயிற்றின் கனியாகிய யேசு வும் இரங்கத்தக்கவராமே. புனித மரியாயே, சிலு வையிலறையப்பட்டவருடைய மாதாவே, உம்முடைய மகனைச் சிலுவையிலறைந்த எங்களுக்கு இப்பொழு தும் எங்கள் மரண நேரத்திலும் மனஸ்தாபக் கண் ணீர் சிந்தும் வரம் பெற்றுத் தந்தருளும், ஆமென்.''

துயரப்படுவோரைத் தேற்றும் வரத்தை வியா குல அன்னை பெற்றிருக்கிறாள். கடவுளுடைய மக்கள் கல்வாரியின் வழியாகவே மோட்சம் சேர வேண்டும். வியாகுல அன்னையுடன் நாம் செல்வோமானால், வழி நடப்பது எளிது; தைரியமாய்ப் போர் செய்து, பொறுமையுடனும் விடா மகிழ்ச்சியுடனும் துன்பத் தைச் சசிப்போம்; ஏனெனில் தன் திரு மகனுடைய பாடுகளையும் மரணத்தையும் மாத்திரமல்ல, அந்தப் பாடுகளால் அவர் அடைந்த வெற்றியையும் இன்பத் தையும் மகிமையையும் நமக்கு ஓர் மாதிரியாகக் காண்பிக்கிறாள்.

துன்ப துயர வேளைகளில் நாம் கோபப்படு கிறோம், மனமடிந்து முறையிடுகிறோம். அன்னையின் வியாகுலங்களை நம் மனதில் பதியச் செய்வோமானால், கடவுள் நம் தோள் மேல் பாரச் சிலுவைகளை வைக் கும்போது அந்த அன்னை நமக்கு உதவியாயிருப்பாள், சிலுவையைப் பொறுமையுடனும் பலன் தரும் வண் ணமும் சுமக்க திடம் பெற்றுத் தருவாள்.

இங்கிலாந்தை மனந்திருப்ப ஏற்படுத்தப்பட்ட ஜெப அப்போஸ்தல சபை வியாகுல அன்னையின் பாதுகாவலிலேயே இருந்தது. இதன் பயனாக, ஆண் டுதோறும் பத்தாயிரத்துக்கு மேலான புரோட்டெஸ் டாண்டார் கத்தோலிக்க மறையிற் சேர்ந்து வருகின் றனர்.

வியாகுல மாதா பத்தி நல்ல மரணத்துக்கு சிறந்த முஸ்திப்பாகும். சிலுவையில் தொங்கிய யேசு வின் அருகில் நின்ற தேவதாய் யேசுவுக்கு ஆறுத லாய் இருந்தமையால், எல்லா மனிதருக்கும், விசேஷ மாக மரணத் தறுமாயிலிருப்பவர்களுக்கும் தாயாகும் வரம் பெற்றாள்.

“சாகும் தறுவாயிலிருப்பவர்களுக்காக நீ விசேஷ விதமாய் வேண்டிக்கொள்வாயாக, ஏனெனில் அவர் களுடைய வேதனை அதிகம், அவர்கள் பெரும் ஆபத் தான நிலையிலிருக்கிறார்கள்'' என அக்ரேதா நகர் மரி யம்மாளுக்கு தேவ அன்னை ஒருமுறை கூறினாள். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிடமும் பாவிகள் பலர் சாக இருக்கின்றனர்; இன்னும் சில வினாடிகள் தான் இருக்கின்றன; அதற்குள் அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்புப் பெறாவிடில், நித்திய நரகத்தில் விழுவார்கள் நல் வாழ்க்கை நடத்தியவர்களும் கடைசிநேரத்தில் போர் செய்ய வேண்டி நேரிடலாம். பசாசின் தந்திரங்களும், பழைய பாவங்களின் நினைவும் தேவ இஷ்டப்பிரசா தத்துடன் இருக்கிறோமோ இல்லையோ என்ற சந்தே கமும், மரணத்துக்குப்பின் வர இருக்கும் வாழ்வின் நினைவும் அவர்களைப் பயத்துக்குள்ளாக்குகின்றன. ஆனால் வியாகுல அன்னைமேல் பத்தி கொண்டிருக்கி றவன் கை விடப்படமாட்டான். நரகத்தில் விழாத படி கணக்கிடமுடியாத ஆத்துமங்களை கடைசி நேரத் தில் தேவதாய் காப்பாற்றியிருக்கிறாள்.

1897-ல் மரித்த தோமினிக்கா கிளாரா என்னும் கன்னி உயிரோடிருக்கையில் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பலரைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற வள். ஒரு பெண் தன் வரலாற்றை அவளிடம் கூறி னாள்: “நான் துஷ்ட வாழ்க்கை நடத்தியவள். வியா குல மாதா மீது நான் கொண்டிருந்த பத்தியே என் னைக் காப்பாற்றியது. அவளுக்குத் தோத்திரமாகச் செய்யப்படும் சிறு செய்கையும் சம்பாவனை பெறாமற் போகாது. வியாகுல அன்னையின் உருவத்தை நான் பார்க்கும்போதெல்லாம் ஏழு முறை அருள் நிறை மந்திரம் சொல்லிவந்தேன். பத்தியினாலல்ல, வெறும் வழக்கத்தினால் அவ்விதம் செய்தேன், இதன் பலனாக நான் சாகக் கிடக்கையில், அவள் தன் வியாகுலங்களை என் கண் முன் கொணர்ந்ததுமன்றி, என் பாவங் களுக்காக நான் வெகு துயரப்படும்படி செய்து, என் சகல அக்கிரமங்களுக்கும் மன்னிப்புப் பெற்றுக் கொடுத்தாள். நான் பட்ட துயர மிகுதியினால் என் பாவங்களுக்கு உரிய அநித்திய தண்டனையில் பெரும் பகுதியும் மன்னிக்கப்பட்டது. உத்தரிக்கிற ஸ் தலத் துக்கும் தேவதாய் வந்து வேதனையின் உக்கிரத்தை குறைத்தாள். நான் செய்த பாவங்களில் இருப்பதிலொன்று முதலாய்ச் செய்யாதவர்களில் பலர் நரகத் தில் விழுந்திருக்கின்றனர். கடைசி நேரத்தில் தேவ தாய் எனக்கு உதவி செய்திராவிட்டால், நானும் நித் திய கேட்டுக்குள்ளாகியிருப்பேன்" என்றாள்,

வியாகுலத் தாயின் மேல் பக்தி கொண்டிருந்தவர் கள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு அரிதாய்ச் செல்கிறார் கள், சென்றாலும் சொற்ப காலமே அங்கு இருக்கிறார் கள் என்றும் அந்தக் கன்னிக்கு அறிவிக்கப்பட்டது.

ஜெபம் உமது தேவ நீதிக்குப் பரிகாரமாக, ஓ! ஆண்ட வரே, உமது மாதாவும் எங்கள் தாயுமான மாமரி சிலுவையினடியில் நிற்கையில் சம்பாதித்த பேறு பலன்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

நீர் எங்கள் பாவங்களைப் பாராட்டுவீராகில், ஓ ஆண்டவரே, உமக்கு முன்பாக நிர்வாகம் செய்கிறவன் யார்?

(மேற்கூறிய ஒப்புக்கொடுத்தல் மன்றாட்டினால் பல உதவிகள் கிடைத்திருக்கின்றன.)