இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சிருஷ்டிப்பின் பொருள்!

கடவுள் தம் தெய்வீக சுபாவத்தில் மனிதனுக்குப் பங்கு கொடுக்கும்படியாக மனிதனை உண்டாக்கினார்.

முதல் மனிதனும் மனுஷியும் ஆதியாகமம் 1:3-ல் கூறியுள்ளபடி இஷ்டப்பிரசாத நிலையில் படைக்கப்பட்டார்கள். அதாவது கடவுளின் அன்புறவில் இருந்தார்கள். ஆயினும் அவர்களிடம் சுயாதீன சித்தம் இருந்தது. கடவுளின் தெய்வீக நீதியின்படி அவர்கள் “பரிசோதிக்கப்படுவது” தகுதியாயிருந்தது. பரிசோதிக்கப்பட்டு தங்கள் சுய விருப்பப்படி கடவுளைத் தாங்களாகவே தெரிந்தெடுக்கவோ அல்லது அவரை விட்டு விடவோ அவர்களுக்கு உரிமை இருந்தது ஏற்புடையதே.

இந்த ஏற்பாடுதான் உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு வழியாயிற்று. இதன் மூலமாகவே, இதன் நேரடி விளைவாக கடவுளுடைய மனிதாவதாரமும், கல்வாரி மரணமும் நடைபெறலாயிற்று.

நமது ஆதிப் பெற்றோர்கள் கடவுளை எதிர்த்து நின்றதும், அதனால் மிகவும் பயங்கர ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டதும் சரித்திர சம்பவங்களாகும்.

இந்த ஆதாம் ஏவாளின் முதல் எதிர்ப்பு ஒரு தொடர் சங்கிலி போல் இன்னும் அநேக எதிர்ப்புகளுக்குக் காரணமாயிற்று. தேவ சிநேகம் மனித உள்ளத்தில் அணைந்து போன உடனேயே அவனுடைய சரீரம் அவன் புத்திக்கு எதிராகப் புரட்சி செய்யத் துவக்கிற்று. சகல சிருஷ்டிப் பொருட்களுமே மனிதனுக்கு எதிராய் எழும்பின. பாவத் துக்கு முன் அவை மனிதனுக்குக் கீழ்ப்பட்டிருந்தன. எல்லாச் சிருஷ்டி களையும் ஒன்றாக ஐக்கியப் படுத்தி வைத்திருந்தது தேவ அன்பு ஒன்றே. மனிதனிடம் இத்தேவ அன்பு, ஒழுங்குத் திட்டத்தைக் கொடுத்திருந்தது. தேவ அன்பு மனிதனை மனிதனோடு அன்பில் இணைத்து வைத்திருந்தது. எல்லாப் படைப்புகளையும் இதே தேவ அன்பு சர்வேசுரனோடு இணைத்துக் கொண்டிருந்தது.

இத்தெய்வீக அன்பு அகன்ற உடனே அமைதியாயிருந்த ஒழுங்குத் திட்டம் உலைந்து விட்டது. இப்போது மனிதன் தன் இயல்பாகவே புரட்சிக்காரனாகி விட்டான். எல்லா அதிகாரத்தையும் எதிர்ப்பவனானான். படைப்புப் பொருட்களும் கூட ஒன்றோடொன்று சண்டையிடும் பான்மையைப் பெற்றன. அறிவு கூறிய ஒழுங்குக் கட்டுப்பாடுகளை மனிதன் எதிர்த்தான். அப்புறம் அதைத் தூர விட்டெறிந்தான். பிற மனிதனுடைய நலனைப் பற்றி சற்றும் கருதாமல் மனித சுபாவத்தின் ஒவ்வொரு ஆசையும் தாகமும் தன் சுயநல விருப்ப நிறைவேற்றத்தையே நாடித் திரியலாயிற்று.

மனிதன் ஆதி நீதி நிலையில் இருந்தபோது, அவனுடைய மேற் புலன்களிலிருந்து கீழ்ப்புலன்களுக்குப் பரம ஆனந்தம் பொங்கிப் பாய்ந்து வழிந்து கொண்டிருந்தது. இந்நிலை பாவத்தால் திடீரென நின்று போயிற்று. மனிதனுடைய புலன்கள் அவனுள்ளிருக்கும் மேற்புலன்களை நோக்கி இந்த ஆனந்தத்தைத் தேடி ஏங்கிக் கதறு கின்றன. ஆனால் அது கிடைப்பதில்லை.

இவ்வளவு நாளும் (பாவத்திற்கு முன்) தெளிந்த மோட்சமா யிருந்த மனித மனதில் அறியாமை என்னும் இருண்ட மேகம் வந்து குவிந்து கொண்டது. ஐம்புலன்களோ பகிரங்கமாக அவனுடைய அறிவுக்கெதிராக எழும்பி நிற்கின்றன. தன்னுடைய திசை தவறிய இந்த ஆசைகளுக்கு நேர்மாறான உண்மைகளைச் சிந்திப்பதற்குக் கூட மனிதன் எரிச்சலும் சங்கடமும் படத் துவக்கினான். தப்பறை மீதும், தீமையானவற்றின் மீதும் அவனுக்கு நாட்டம் ஏற்பட்டது. வன்செயலுக்கும், இரத்தப் பழிக்கும் அவன் இப்போது தயாராகி நிற்கிறான். மானிட சரித்திரம் வருத்தத்துடன் சாட்சி பகரும் கொடுமை களையும் அடக்குமுறைகளையும் செய்யக்கூடியவனாக மாறி விட்டான் மனிதன்.

மனிதன் புரிந்த பாவத்துக்கு நேரடித் தண்டனையாக பல ஆக்கினைகள் அவனுக்குக் கொடுக்கப்பட்டன. முதல் ஆக்கினை சாவு. பூமியின் தூசியிலிருந்து உருவாக்கப்பட்டவன் சாவில் அதே தூசிக்கே திரும்ப வேண்டும். இரண்டாவது ஆக்கினை உழைப்பு. “உன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு நீ உன் உணவை உண்பாய்” (ஆதி.3:19).

ஏவாள் வேதனையோடு மக்களை பெற்றெடுப்பாள் என்றும், தன் கணவனின் கட்டுப்பாட்டுக்குள் ஆயுள் முழுவதும் இருப்பாள் என்றும் கூறப்பட்டது (ஆதி 3:16).

திருச்சபையின் போதனைப்படி, ஆதாமின் பாவத்தால் மனுக் குலம் முழுவதும் அதன் தலைவனோடு அவமானத்துக்கு உள்ளாகி விட்டது--கிறீஸ்துவின் அன்னை கன்னிமாமரி நீங்கலாக.

சிலர் ஆதாமின் பாவத்தால் நேர்ந்த தீய விளைவுகள், சுபாவத்துக்கு மேலான வரங்களாகிய சாகாமை, கல்லா அறிவு, முழுமை முதலியவைகளை ஆதாம் கொண்டிருந்தாரே, அவைகளை அவருடைய சந்ததியாராகிய நாம் இழந்தது அநீதி என்று வாதிடுகிறார்கள் என்று நாம் அறிவோம்.

தற்கால மனிதன் என்ன கேட்கிறான்: நான் செய்யாத ஒரு பாவத்துக்கு நான் ஏன் தண்டனைப்பட வேண்டும் என்று.

இந்தக் கேள்விக்குக் கடவுள் முன்கூட்டியே பதிலையும் தயாரித்து, இந்த அநீதி என்று கருதப்படுகிறதற்கும் மிக மேலாகவே அதற்கு வெகுமானத்தையும் வைத்துள்ளார்.

ஆதாமின் பாவம் கனமானது. அந்த மீறுதல் அளவற்ற சர்வேசுர னுக்கு எதிராய்ச் செய்யப்பட்டது. ஆகவே அதன் பளு அளவற்றது. எனவே எந்த ஒரு மனிதனாலும் இந்தத் துரோகத்திற்குத் தகுந்த ஈடு செய்ய இயலாது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கடவுள் தம் சொந்த நீதிக்குத் தாமே கட்டுப்பட்டவராய் இருக்கின்றார் என்பதை நாம் அறிய வேண்டும்.

இந்த தெய்வீக நீதி எவ்வளவு அகோரமுள்ள நுட்பம் வாய்ந்த நீதியாயிருந்ததென்றால், பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய கடவுளே மனிதனாக வந்து தம்மையே பலியிட்டு தெய்வ நீதிக்குரிய அளவற்ற பரிகாரம் செய்ய வேண்டியதா யிருந்தது.


ஆச்சரியத்துக்குரிய கடவுளின் மனிதாவதாரம்

மானிட இரட்சண்யம் இவ்வகையாய் நிறைவேற வேண்டும் என்பது அறிவுக்கு மிகவும் ஏற்புடையது என்று ஜஸ்டின், இரெனெயுஸ், தெர்த்துல்லியன் போன்ற சாஸ்திரிகள் யாவருமே குறிப்பிடு கிறார்கள்.

மனித சுபாவத்தைக் கெடுத்து அவசங்கைப்படுத்துவதற்காக ஆதாம் தன் பாவத்தைத் தன் சந்ததியாருக்குள் பரவ விடுவது போல, இரட்சகராகி கிறீஸ்து தமது தெய்வீகப் பேறுபலன்களை இதே மனித சுபாவத்தை மீண்டும் பரிசுத்தப்படுத்துவதற்காக நமக்கு அளிக்கிறார். அது மட்டுமல்ல, ஏதேன் தோட்டத்தில் இருந்த சுபாவத்திற்குரிய மகிழ்ச்சியைக் காட்டிலும் மிக மேலான நிலைக்கு இச்சுபாவத்தை உயர்த்துகிறார். முதன்முதலில், தவறி விழுந்த மனித ஆள் ஞானஸ்நானத்தில் கிறீஸ்துவின் உயிரைப் பெற்று மீட்படைகிறான். அதன் பின் படிப்படியாக அவனுடைய சுபாவமும், கிறீஸ்தவ வாழ்வின் திருத்தச் சட்டங்களாலும், தேவ இஷ்டப்பிரசாதம் ஆத்துமத்தில் அதிகரிக்கப்படுவதாலும் மீட்படைகிறது. இந்த சுபாவத்தின் இரட்சிப்பானது மனிதனுடைய சுதந்திர சுயாதீன விருப்பத்தால் செய்யப்படும் முயற்சியினால் நிறைவேறுகிறது. இம்முயற்சி கடவுளின் வரப்பிரசாத உதவியினால் சாத்தியமாகிறது. ஆனால் சுபாவ விடுதலையின் முழுமை நிறைவு இங்கு சாத்தியமில்லை. “சாவாய்” என்ற வாக்கும், முயற்சி செய்து அறிவைப் பெறும் நிலையும் மாறுவ தில்லை.

ஆதாமின் பாவத்தால் விளைந்த தீவினையில் நாம் எல்லோரும் பங்கு பெறுகிறோம். ஆனால் மற்ற மனிதர்களுடைய பாவத்தில் நாம் பங்கடைவதில்லை.

இது போலவே, நாம் விரும்பினால் கிறீஸ்துநாதருடைய பேறு பலன்களில் பங்கடையலாம். ஆனால் மனிதர்களுடைய பலன்களில் (அதாவது அவர்கள் அடைகிற தேவ இஷ்டப்பிரசாதத்தில்) நாம் பங்கடைவதற்குரிய விதமாய் அது கொடுக்கப்படும் தன்மையுள்ளதா யில்லை. மற்ற மனிதர்களுடைய பரிகாரப் பலன்கள், வேண்டுதல் பலன்கள் இவைகளில் நாம் பங்கு பெறலாம்.

ஆதாமுக்குப் பதிலாக கிறீஸ்துநாதர் மனுக்குலத்தின் புதிய தலைவராக, புதிய ஆதாமாக வந்தார்.

மாமரி, வேதசாஸ்திரிகளான நம் பிதாப்பிதாக்கள சுட்டிக் காட்டுவது போல, புதிய ஏவாளாயிருக்கிறார்கள்.

ஏவாள், மனுக்குல வீழ்ச்சியில் ஆதாமோடு முழு முறையில் பங்கெடுத்தாள். மாமரி மனுக்குல இரட்சிப்பில்--மனுக்குலம் கடவுளோடு மீண்டும் அன்புறவு கொள்வதில்--முழு முறையில் துணை நின்றாள். மரியாயின் கீழ்ப்படிதல் ஏவாளின் கீழ்ப்படியாமையை நிவிர்த்தி செய்தது. கிறீஸ்துவின் கீழ்ப்படிதல் ஆதாமின் கீழ்ப்படி யாமையை அழித்து விட்டது.

ஆயினும் கிறீஸ்துநாதருடைய கீழ்ப்படிதல் இல்லாமல் மரியாயின் கீழ்ப்படிதல் மட்டும் மனுக்குலத்தை ஒருபோதும் இரட்சித் திருக்க முடியாது. அதுபோலவே ஏவாளின் கீழ்ப்படியாமை மட்டும் மனுக்குலத்தைக் கெடுத்திருக்க முடியாது. ஏனென்றால், ஏவாளின் பாவமல்ல, ஆதாமின் பாவமே மனுக்குலம் தன் ஆதி பரிசுத்த நிலையை இழந்ததின் காரணம்.


கிறீஸ்து நம் சகோதரர்

இரட்சிப்பின் வேதசாஸ்திரம் எந்த அடிப்படையில் அமைந் துள்ளதென்றால், கிறீஸ்துநாதர் உண்மையாகவே நமது சகோதரர்-- நமது பிரதிநிதி, கடவுளின் சமுகத்தில் மனுக்குலத்தின் பதிலாளாக இருந்து, மனுப் பேசக் கூடியவர் என்ற உண்மையில்தான். இதை அவர் எங்ஙனம் நிறைவேற்ற முடிகிறதென்றால், மாமரி அவருக்குக் கொடுத்த மனித சுபாத்தினிமித்தமே. கபிரியேல் அதிதூதர் வந்து அவர்களிடம் மங்கள மொழி கூறியபோது, அவர்கள் சுயமாய் இணங்கி, தன் சுதந்திரமாய் அளித்த சம்மதத்தால் இது நடைபெற்றது. கிறீஸ்துநாதர் கடவுள் என்ற முறையில் கொண்டிருந்த வரப் பிரசாதங்களை மானிடருக்கு இரட்சிப்பின் மூலமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு, அவர் முதன் முதலில் ஒரு மனிதனாக, மானிடரின் இரத்த உறவுள்ள சகோதரனாக இருக்க வேண்டியது அவசியமாய் இருந்தது.

நாம் கடவுளின் முன்னிலையில் கிறீஸ்துநாதருடைய பேறுபலன் களை அணிந்தவர்களாய் நிற்கிறோம். இதுவே மீட்பின் கருப் பொருள்.

கிறீஸ்து புதிய ஆதாமாயிருக்கிறார். நாம் அவரில் புதிய மனுக் குலமாக (இரட்சிக்கப்பட்டவர்களாக) இருக்கிறோம்.

மாமரி புதிய ஏவாளாயிருக்கிறார்கள். நாம் அவர்களில் புதிய மனுக்குலமாக இருக்கிறோம்.

ஆதாமின் பாவம் ஒரு இருண்ட கறை போல் மனுக்குலம் முழுவதும் பரவி ஓடிக் கொண்டிருப்பதாலேயே நாம் சுயநல ஆங்கார நெறி தவறிய குணங்களுடன் பிறக்கின்றோம்.

கிறீஸ்துவின் பேறுபலன்கள் (ஏற்றுக்கொள்பவர்களுக்கு உதவும் தன்மையோடு) மனுக்குலம் முழுவதும் இந்த இருண்ட கறையைப் போக்கி அழிக்கும் வல்லமையோடும், மானிடர் யாவரையும் உயர்த்தும் தன்மையோடும், தெய்வீக மகிமைப் பிரதாப பிரசன்னத்தை மலரச் செய்யும் சக்தியோடும் பரவி ஓடி வருகிறது.

அர்ச். லூயிஸ் தெ மோன்போர்ட் என்பவர் இந்த உண்மையை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திக் கூறுகிறார். அவர் கூறுவது: ஆதாமின் கேடு மனிதர்களுக்குள் எப்படிப் புக முடிந்ததோ, அப்படியே கிறீஸ்துவின் பேறுபலன்களும் மனிதர்களுக்குள் புகுந்து பாயும் தன்மை கொண்டவை. ஆகவே ஆதாமில் பழுதுபட்ட மனுக்குலம் கிறீஸ்துவில் அதிலிருந்து விடுபட்டதாயிற்று என்கிறார்.

ஆனால் ஏவாள் செய்த கேடு பற்றி என்ன கூறுவது? அவளே ஆதி மனிதன் தவறுவதற்கு முதல் காரணமாயிருந்தவள். ஒரு மறை நிகழ்ச்சியினால் அவள் புரிந்த கேடு ஆதாமுள் புகுந்து அவன் வழியாக மனுக்குலம் முழுவதையும் மாசுபடுத்தியது. அவளில் பெண்குலமே அவள் பாவத்தைச் சுமந்து நிற்கிறது (ஆதி. 3:16).

இதை விவரித்துக் கூறும்போது இந்த அர்ச்சியசிஷ்டவர் தம்மையே மிஞ்சி உயர்ந்து உரைக்கிறார்: மாமரி தன் மக்களுக்குத் தன் பேறுபலன்களையும், புண்ணியங்களையும் பரிமாறுகிறார்கள். அவர்கள் இவ்வுலக வாழ்வை முடித்தபோது, தன் மக்களுக்கு இவைகளை வழங்கிச் சென்றார்கள். எனவே மாமரிக்கு வசீகரம் செய்து ஒப்புக்கொடுக்கப்பட்ட அவர்களுடைய ஊழியர்கள் நித்திய பிதாவின் சமுகத்தில், “இரட்டை ஆடை” அணிந்தவர்களாய் நிற்பார்கள் (பழ.31:21). அதாவது சேசுவின் பேறுபலன்களாலும், அவருடைய அன்னையாம் மாமரியின் புண்ணியங்களாலும். அர்ச். லூயிஸ் இவ்வாறு கூறுவது மிகப் பொருத்தமாயுள்ளது.

மாமரியின் எல்லா மகிமை உரிமைப் பேறுகளும் கடவுளிட மிருந்தே வருகின்றன. அவர்களைப் புகழும் எந்தப் புகழ்ச்சியும் கடவுளின் மகத்துவத்துக்குச் சற்றேனும் குறைபாடாகாது.


மானிடர் ஒருவருக்கொருவர் சகோதரர்

எவ்வித தடையுமின்றி எல்லா மனிதரும் உண்மையாகவே சகோதரர்களாயிருக்கிறார்கள். ஓர் உண்மையான கிறிஸ்தவன் எல்லா மனிதர்களையம் மரியாதையுடன் கடவுளின் மக்களாகவே பாவித்து நடத்த வேண்டும்.

மனிதர்கள் யாவருடையவும் உண்மையான உடன்பிறந்த சகோதரர் கிறீஸ்துவே. இதனாலேயே அவர் தம் சகோதரர்களாகிய நமக்காகப் பாடுபட்டு நம்மை மீட்டு உயர்த்தியுள்ளார்.

இந்த ஐக்கிய மனப்பான்மை, மனிதர்கள் ஒருவர் ஒருவரை நேசித்து நடத்துவதற்குரிய நல்ல காரணமாயிருக்கிறது. இக்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்கும் பகையும் இனவெறியும், மனித ஆள் என்று மதிக்காத தன்மையும், தனியொரு மனிதனுக்கு மதிப்பே அற்று வரும் நிலையும் உள்ள இக்காலத்தில் மனிதர் யாவரும் கிறீஸ்துவில் சகோதரர்கள் என்ற உண்மை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

உலகத்தை இறுதி நாளில் தாம் எப்படி நீதி விசாரிப்பார் என்று அர்ச். மத்தேயு சுவிசேஷத்தில் கிறீஸ்துநாதர் தெளிவாக இவ்வுண்மை பற்றிக் குறிப்பிடுகிறார்:

“மிகவும் சிறியவர்களாகிய இந்த என் சகோதரர்களுக்கு நீங்கள் இவற்றைச் செய்த போதெல்லாம், அதை எனக்கே செய்தீர்கள்” (மத்.25:40).


தயவு செய்து கீழ்வரும் குறிப்பைப் படிக்கவும்.

சில வாசகர்கள் மனிதன் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டான் என்று கூறுவது பிடிக்காமல் மனிதன் பரிணாமத்தால் தோன்றினான் என்ற யூகத்தைத் தழுவியிருக்கக் கூடும்.

பரிணாம வாதம் மிஞ்சிய பட்டம் ஒரு யூகமேயன்றி, வேறு இல்லை என்பதை எந்த ஒரு தரமுள்ள விஞ்ஞானியும் ஒப்புக் கொள்கிறான். பரிணாம யூகம் நாளுக்கு நாள் போலியாகவே கருதப் பட்டு வருகிறது.

150 வருடங்களுக்கு முன் டார்வின் தன் பரிணாமக் கொள்கையை வெளியிட்டார். “நுrஷ்ஆஷ்ஐ லிக்ஷூ றீஸ்ரீeஉஷ்eவி” என்ற பெயரில் வந்த அவருடைய யூகநூல் அப்போது மானிட வர்க்கம் தோன்றிய முறையைக் கண்டுபிடித்துக் கூறிவிட்டதாய்ப் புகழப்பட்டது. ஆயினும் உடற்கூறு நிபுணர்களும், புதைபொருள் ஆராய்ச்சிக்காரும் இந்தப் பரிணாம வாதத்திற்கு எட்டாமல் போன--அறுந்துபோன சங்கிலித் தொடர்பை (துஷ்விவிஷ்ஐஆ யிஷ்ஐவ) இயன்ற மட்டும் தேடினார்கள். இதுவரை அறுந்த சங்கிலியின் ஒரு கண்ணி கூட அகப்படவில்லை. லாமார்க், டார்வின், தெவிரியஸ் மற்றும் பலரால் பரிணாமம் எப்படி இயங்குகிறதென்று பல யூகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்றுகூட நடைமுறைக்கு ஒவ்வாது என்று கைவிடப்பட்டாயிற்று. பொனோர், ரோஸ்ட்லன்ட் போன்ற முன்னாள் பரிணாமவாதிகள் கூட அது போலி என்றும், “வயது வந்தோர்க்குரிய யூகக் கதை” என்றும் ஒதுக்கி விட்டார்கள்.

“றீஉஷ்eஐஉe லிக்ஷூ வீலிdழிதீ ழிஐd மிஜுe Prலிணுயிeதுவி லிக்ஷூ றூeஐeவிஷ்வி” என்ற தம் நூலில் பாட்ரிக் ஓக்கானல் என்ற விஞ்ஞானியும் (இவர் ஒரு குரு) இன்னும் பலரும், “இந்த நூற்றாண்டின் உண்மையான விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள், திருச்சபை மனித சிருஷ்டிப்பைப் பற்றிப் பாரம்பரியமாகப் போதித்து வருவதே உண்மையானது என்று கொள்ளத் தகுந்த சான்றுகளாய் உள்ளன” என்று கூறுகிறார்கள். குறிப்பாக ஆதாம் ஏவாள் உண்டாக்கப்பட்ட முறை இதற்கு மிகவும் பொருந்துவதாயுள்ளது என்றும், அதன் மூலம் மானிட குலம் ஒன்றே, மக்கள் யாவரும் சகோதரர்கள், ஒரே தகப்பனிடத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

பரிணாம வாதம் மதிப்புக்குரிய விஞ்ஞானிகள் கருத்துப்படி ஒரு வெறும் யூகமாயிருக்க, அது ஒரு விஞ்ஞான உண்மை என்று எவ்வாறு இவ்வளவு தூரம் பரவியது? 

இதன் காரணம் இதுவே: இருளின் சக்திகள் கிறீஸ்தவத்தை ஏளனம் செய்யும்படி செய்த மாபெரும் ஏமாற்று சதித் திட்டமே பரிணாம வாதம். வேதாகமப் புத்தகத்தைப் பழிப்பதற்கு இவர்கள் கையாண்ட ஆயுதம் இது. ஆனால் உண்மையே பெரிது. அது ஒருபோதும் அழியாது. அது நிலைபெற்றே தீரும். இந்த நீண்டகால இருட்டு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.